Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி நம் தாய்மடி" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, மே 2017 (1:20 IST)
மாற்றம் செய்த நாள் :18, மே 2017 (9:42 IST)


கச்சிதமாகப் பொருந்திய ‘கள்ளபார்ட்’ வேடம்!
நடிக்கும் போதே உயிரை விட்ட நடராஜன்!

நண்பர் வீட்டில், ‘சித்தாடை கட்டிக்கிட்டு.. சிங்காரம் பண்ணிக்கிட்டு..’ என்ற பாடல் டிவியில் ஒளிபரப்பானது. அந்தப் பாடலில் நடிகர் ஒருவர், படு சுறுசுறுப்பாக நடனம் ஆடினார். இதைப் பார்த்த அந்த வீட்டுச் சிறுவன், தன் தாத்தாவிடம் “இவரு ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுறாரு தாத்தா.. இவரு யாரு?” என்று கேட்டான். தாத்தா அவனிடம் “ஓ.. இவரா? பேரு கள்ளபார்ட் நடராஜன்..” என்றார்.  “அது என்ன கள்ளபார்ட்?” என்று கேட்டான் சிறுவன். பேரனிடம் தாத்தா சிம்பிளாக விவரித்தார். அதைக் கேட்டுவிட்டு, விளையாடச் சென்று விட்டான் அவன். 
பிறகு, பேச்சு திசை மாறியது. நம்மிடம் தாத்தா “சினிமாவுல எத்தனையோ பேரு பெரிசா சாதிச்சிருக்காங்க. பேரும் புகழும் அடைஞ்சிருக்காங்க. சம்பாதிக்கவும் செஞ்சிருக்காங்க. குரூப் டான்ஸுல ஆடுறது, ஏதாச்சும் ஒரு சீன்ல கும்பல்ல ஒருத்தரா நிக்கிறது, அப்புறம் பிரேம்ல ஒண்ணு ரெண்டு டயலாக் பேசுற துணை நடிகரா வந்துட்டுப் போறதுன்னு, ஒப்புக்கு நடிச்சு,  சாகுற வரைக்கும் வயித்துப் பாட்டுக்கே திண்டாடுறவங்களும் இருக்கத்தான் செய்யறாங்க. அவங்களையெல்லாம், யாரும் பெரிசா கண்டுக்கிறதில்ல. கள்ளபார்ட் நடராஜன் அப்படி கிடையாது. 100 படத்துக்கும் மேலேயே நடிச்சிருக்காரு. நடிகர்களில் பலருக்கும் இல்லாத சிறப்பு இவருக்கு உண்டு. நடிச்சிக்கிட்டிருக்கும் போதே அவரு உசிரு பிரிஞ்சிருச்சு. அப்ப அவருக்கு வயசு 70.” என்றார்.  தாத்தா கூறிய  ‘கள்ளபார்ட் நடராஜன்’ என்ற கேரக்டர் நமக்குள் ஆர்வத்தை ஏற்படுத்த, அவர் குறித்த தகவல்களைத் திரட்டினோம். முதலில்  ‘கள்ள பார்ட்’ என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம். 

இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் தமிழ் மொழியின் இணையான கூறுகள் என்பதை முத்தமிழ் என்ற கருத்துக் கோட்பாடு வெளிப்படுத்துகிறது. இயல் என்பது எழுதப்படுவதும் பேசப்படுவதுமாகிய தமிழ் ஆகும். மொழியை இசையுடனும், நாடகத்துடனும் இணைத்துப் பார்க்கும் கண்ணோட்டம் பிற மொழிகளில் கிடையாது. இம்மூன்றுக்கும் தமிழர்கள் தந்த முக்கியத்துவத்தை முத்தமிழ் வெளிப்படுத்துகிறது. சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் போன்றவர்கள் நாடகக் கலைக்கு உயிரூட்டியவர்கள். அப்போது, முதன்மை நடிகர்களை ராஜபார்ட் என்றும், பெண் வேடமிடும் ஆண்களை ஸ்த்ரீ பார்ட் என்றும், எதிர்மறை நாயகர்களை கள்ளபார்ட் என்றும் அழைத்தனர். கள்ளபார்ட் நடராஜன் தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவரது தந்தை ராமலிங்கமும் கள்ளபார்ட் நடிப்பில் புகழ் பெற்றவர். தாயார் பரிபூரணத்தம்மாளும் நாடக நடிகையே. தாயும் தந்தையும் நாடக நடிகர்களாக இருந்ததால், நடராஜனும்  10 வயதிலேயே நாடக நடிகர் ஆனார். 

12 ஆண்டு காலம், நவாப் ராஜமாணிக்கம் நாடகக் குழுவில் நடித்தார். வள்ளி திருமணம், ராமாயணம் போன்ற நாடகங்களில் நடித்தார். கதாநாயகன், பெண் வேடம் என்று பலதரப்பட்ட வேடங்களில் நடித்தாலும், கள்ளபார்ட் வேடங்களில்தான் வெளுத்துக் கட்டினார். அதனால், சாகும் வரையிலும் அவர் பெயரோடு கள்ளபார்ட் என்ற அடைமொழி ஒட்டிக் கொண்டது.  நாடகத்தில் நடித்து வந்த கள்ளபார்ட் நடராஜன்,  சிவாஜி கணேசனின் முதல் படமான பராசக்தி மூலம் 1952-இல் சினிமாவில் அறிமுகம் ஆனார். 1958-இல் பெரியகோவில் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். நாகமலை அழகி என்ற படத்தில் இரட்டை வேடத்திலெல்லாம் நடித்தார். குமுதத்திலும் ‘மாமா..மாமா..மாமா.. ஏம்மா..ஏம்மா..ஏம்மா..’ என்ற பாடலில் வெகு துள்ளலாக ஆடினார்.  வில்லன், குணச்சித்திர வேடங்களில், காட்டுமல்லி, சபாஷ் மீனா, சக்ரவர்த்தி திருமகள், மதுரை வீரன், ராஜா ராணி, கூண்டுக்கிளி, கண்காட்சி, தில்லானா மோகனாம்பாள், ஒளிவிளக்கு, ரிக்ஷாக்காரன், தேவர் மகன் என பல படங்களில் நடித்தார். 

நவராத்திரியில் சிவாஜி கணேசனும், சாவித்திரியும் பாடி ஆடும் ‘தங்க ஜரிகை சேலை’ நாடக மேடை காட்சியை அமைத்துத் தந்தவர் கள்ளபார்ட் தான். நல்ல குரல் வளம் உள்ளவர் என்பதால், டப்பிங் படங்களில் கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்தார். என்.டி.ராமராவ் நடித்த தமிழ்ப் படங்களிலும், தமிழில் டப் செய்யப்பட்ட அவரது தெலுங்குப் படங்களிலும் அவருக்கு குரல் கொடுத்தது கள்ளபார்ட் நடராஜன்தான்.  கள்ளபார்ட் நடராஜன் விஷயத்தில் சுவாரஸ்யமாக நடந்த ஒன்று. 1976-இல் கமல், சுஜாதா நடித்த ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது என்ற படத்தில், ‘ஆண்டவன் இல்லா உலகம் எது? ஆசைகளில்லா இதயம் எது?’ என்ற பாடலில், படகில் காதலியுடன் பாடி நடித்தார். 16 வருடங்கள் கழித்து, 1992-இல் கமல் நடித்து வெளிவந்த தேவர் மகனிலும் ரேவதியின் தந்தையாக நடித்தார். தனது முதல் படமான பராசக்தியில் ஹீரோவாக நடித்த சிவாஜி கணேசனும்,  குணச்சித்திர நடிகராக இவருடன் இதே படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகள் வருவதற்கு முன், சென்னைத் தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார் நடராஜன். பின்னாளில், கே.பாலசந்தரின் ரகுவம்சம் உட்பட 20-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்தார். தமிழக அரசின் கலைமாமணி விருது, நடிகர் சங்கத்தின் கலைச் செல்வம் விருதெல்லாம் பெற்றிருக்கிறார். 1996 மார்ச் 27-ஆம் தேதி, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார் கள்ளபார்ட் நடராஜன். அப்போது, பல்வேறு விதமாக நடித்து காட்டிக்கொண்டிருந்த போது, மயங்கி விழுந்தார். அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.  அந்தக் காலத்திலேயே டப்பாங்குத்து டான்ஸில் பின்னி எடுத்தவர் கள்ளபார்ட் நடராஜன். இன்னும் பலர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கரிக்கோல்ராஜ், பி.எஸ்.வெங்கடாசலம், அய்யா தெரியாதையா ராமாராவ், மாடர்ன் தியேட்டர்ஸ் நடிகர் பக்கிரிசாமி என மறக்க முடியாத பழைய நடிகர்கள் பலர் உள்ளனர். இந்த நேரத்தில் தெருக்கூத்து கலைஞர் ஒருவர் சொன்னது நம் நினைவுக்கு வருகிறது – “கலையையும் கலைஞனையும் மதிக்கத் தெரியாத சமுதாயம் ஒரு நாளும் முன்னேறாது. நல்ல கலையும், நம்பிக்கையோடு வாழ்க்கையை எதிர்கொள்ளும் பண்புகளும்தான் நாம் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டிய சொத்து.”

-சி.என்.இராமகிருஷ்ணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : selvarajan Date :5/19/2017 9:50:09 PM
சிறந்த நடிகர். சக்ரவர்த்தி திருமகள் என்ற படத்தில் எம் ஜி ஆருடன் இயல்பாக நடித்திருப்பார். டப்பாங்குத்து நடனத்தில் இவருக்கு இணை யாருமில்லை என்றே சொல்லலாம். old is gold தான். அவரை நினைவு படுத்திய நக்கீரனுக்கு நன்றி!
Name : P.Maria Joseph Country : Australia Date :5/19/2017 1:08:29 PM
i love this great actor NAKKEERAN has brought to light of this good man. Though he was in cine field many years he never allowed any of his six daughters and two sons ALL children are highly qualified and well positioned. Thanks akkeeran
Name : Mahalingam Country : India Date :5/18/2017 8:49:27 PM
எனக்கு மிக மிக பிடித்த நடிகர் நன்றியில்லா தமிழ் சினிமா இவரின் திறமையய் உபயோகபடுத்தவில்லய்
Name : Mahalingam Country : India Date :5/18/2017 8:49:13 PM
எனக்கு மிக மிக பிடித்த நடிகர் நன்றியில்லா தமிழ் சினிமா இவரின் திறமையய் உபயோகபடுத்தவில்லய்
Name : Justin Jayakumar A Country : United States Date :5/18/2017 5:16:08 PM
நல்ல அருமையான பதிவு. நன்றி நக்கீரன்.
Name : Justin Jayakumar A Country : United States Date :5/18/2017 5:15:36 PM
நல்ல அருமையான பதிவு. நன்றி நக்கீரன்.