Add1
logo
90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆண்டுகள் தண்டனை! || புழல் சிறையில் கைதி தற்கொலை..! || அனந்தபத்மநாபன் நியமனத்திற்கு எதிரான வழக்கு தள்ளுபடி || அழுகும் சின்னவெங்காயம்; கண்டுகொள்ளாத தமிழக அரசு! || மும்பையில் 75 விமானங்கள் ரத்து || இன்றைய TOP -10 நிகழ்வுகள்! || பொருளாதாரத்தை மேம்படுத்தும் புதிய அறிவிப்புகள் விரைவில்...! - அருண் ஜேட்லி || நத்தன் விஸ்வநாதன் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி || முதல்வர் திறக்கும் முன் பீகாரில் உடைந்த புதிதாக கட்டப்பட்ட அணை! || கர்நாடகாவுக்கு எதிராக போராடிய வழக்கு: பி.ஆர்.பாண்டியன் உள்பட 17 பேர் விடுவிப்பு || விவசாயியின் உயிரைக் குடித்த ‘வேட்டை விளையாட்டு!’ || போலிஸ் கண்காணிப்பையும் மீறி கிழிக்கப்படும் அமைச்சர் பதாகைகள் || வீட்டில் கழிவறை கட்டினால் இவ்வளவு மிச்சப்படுத்தலாம்! - யுனிசெப் தகவல் ||
சிறப்பு செய்திகள்
'டிரைவர்' இல்லாத 'டிராக்டர்'!!!
 ................................................................
பஞ்சமி நிலங்களுக்காக போராடிய ஆங்கிலேய அதிகாரி திரமென்ஹீர்!
 ................................................................
யூ-ட்யூபை கலக்கும் ஸ்ருதிஹாசன் குறும்படம் !!!
 ................................................................
நேரு துவங்கினார்... மோடி திறந்தார்...
 ................................................................
அரசாங்க குளறுபடியும் ரேசன் அட்டை காமெடிகளும்!
 ................................................................
தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம்!
 ................................................................
இன்றும் ட்ரெண்டில் பெரியார் !!!
 ................................................................
இதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி...
 ................................................................
என்னது... இவரு என்ஜினியரா???
 ................................................................
அரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ (படங்கள்)
 ................................................................
ஆதார் வாங்கவே ஆதார் கார்டு கேப்பாங்களோ?
 ................................................................
இன்ஜெக்டபிள் கருத்தடை முறை வரமா - சாபமா?
 ................................................................
"சிறையில் பெண்களுக்கு நாப்கின்கள் கூட கொடுப்பதில்லை" - கொந்தளிக்கும் வளர்மதி!
 ................................................................
ஜெயேந்திரர் ஒப்புதல் வாக்குமூலம்!
 ................................................................
நீதிக்கட்சி அரசின் சாதனைகளும், பூசல்களும்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 17, மே 2017 (12:1 IST)
மாற்றம் செய்த நாள் :18, மே 2017 (9:41 IST)




தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்களுக்கு வர வேண்டிய ஓய்வூதியம், பிஎஃப் உள்ளிட்ட பிடித்தங்களின் தொகையான ரூ.7,000கோடியை அரசு செலவு செய்துவிட்டதாகவும், அந்தத் தொகையைத் தரவேண்டியும் கோரிக்கைகள் விடுத்திருந்தனர். இதுகுறித்து தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருடனான தொழிற்சங்கங்களின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததை அடுத்து, முன்னர் அறிவித்திருந்தாற்போல் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் மே-15 முதல் ஈடுபடத் தொடங்கினர். அந்தப் போராட்டம் மீண்டும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலம் நேற்று இரவு வாபஸ் பெறப்பட்டது. அவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் நியாயமானது எனினும், இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாயினர்.

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தொடரப்பட்டிருந்த பொதுநல வழக்கின் படி, போராட்டத்தில் ஈடுபடும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் மீது எஸ்மா சட்டம் பாயும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற மருத்துவர்கள் இடஒதுக்கீடு வேண்டி நடத்திய போராட்டமும் இந்த எஸ்மா சட்டம் பாயும் என்ற அறிவிப்பால்தான் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டமானது பேச்சுவார்த்தையின் மூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக சொல்லப்பட்டாலும், எஸ்மா தான் அதற்கு முக்கியக் காரணமாக இருக்கும்.



என்ன சொல்கிறது எஸ்மா சட்டம்? 

எஸ்மா சட்டம் எனப்படுவது மத்திய அரசால் 1968-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டமாகும். இந்தச் சட்டத்தை என்னதான் மத்திய அரசு கொண்டு வந்தாலும், மாநில அரசிடம்தான் இதற்கான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் அவற்றிற்கு ஏற்றாற்போல் இந்தச் சட்டத்தை வளைத்துவைத்துக் கொண்டு, அதைத் தேவைப்படும் நேரங்களில் செயல்படுத்தியும் இருக்கின்றன.

போராட்டக் காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படையாமல் இருப்பதற்காக இந்தச் சட்டமானது மாநில அரசினால் பயன்படுத்தப்படுகிறது. சேவைத்துறைகளில் தபால், தொலைபேசி உள்ளிட்ட தொலைதொடர்பு துறைகளிலும், சாலை, ரயில், விமானம் போன்ற போக்குவரத்துத் துறைகளிலும், உணவுப் பொருட்கள் பாதுகாப்பு, கொள்முதல் மற்றும் விநியோகம் போன்ற உணவுப் பாதுகாப்புத் துறையிலும் பணிபுரிகின்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலம், பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவையானது பாதிக்கப்படுகிறது. 



இதைக் கட்டுப்படுத்த விதிக்கப்படும் இந்த எஸ்மா சட்டத்தின் மூலம், போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களை வாரண்ட் எதுவும் இல்லாமல் கைது செய்யும் அதிகாரம் காவல்துறையினருக்கு உண்டு. மேலும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தாலோ, தூண்டினாலோ இதே கதி தான். சில சமயங்களில் கூடுதல் நேரம் வேலைபார்க்க மறுத்தால் கூட எஸ்மா சட்டம் பாயலாம். இவ்வாறு போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் பட்சத்தில் ஓராண்டு சிறை தண்டனை அல்லது இரண்டாயிரம் ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

கடந்த 2002-ஆம் ஆண்டு ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 2லட்சம் ஆசிரியர்கள் மற்றும் போக்குவரத்து ஊழியர்கள் ஜெயலலிதாவின் ஒரே கையெழுத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்டனர். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பிறகே அவர்கள் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியிலும் கடந்த 2015-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட 15,000 மருத்துவர்களை எஸ்மா சட்டத்தினைக் காட்டி மிரட்டிதான் போராட்டத்தை நிறுத்தியது டெல்லி அரசு.

2002-ஆம் ஆண்டு ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை, அடுத்ததாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது தோல்வியாக எதிரொலித்தது. தற்போதும் இதே நடவடிக்கையை எடப்பாடி தலைமையிலான அரசு தொடர்ச்சியாக மேற்கொள்ளுமானால், அது தன் தலையில் தானே மண்ணை வாறிப் போடும் கதையாகத் தான் முடியும். நிகழ்கால நடவடிக்கைகள் தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்கிற சாதாரண அரசியலை உணராதவர்களா, சமகால அரசியல்வாதிகள்?

- ச.ப.மதிவாணன்
படங்கள் : அசோக் குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : arasar Country : India Date :5/17/2017 4:11:34 PM
தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை மற்ற இனங்களுக்கு செலவு செய்து விட்டு, ஒய்வு பெற்றவர்களுக்கு கூட உரிய காலத்தில் செட்டில் செய்யாதது நியாயம் இல்லை. இதை எல்லாம் தட்டி கேட்க வேறு என்ன வழி ? நீதி மன்றங்கள் வழங்கும் தீர்ப்பினை காற்றில் பறக்க விடும் அமைச்சர்களையும், அரசையும் எப்போது, எப்படி நீதி மன்றங்கள் கேட்கும் ? வேலை நிறுத்தத்தில் ஈடு படுவோருக்கு மட்டும் தான் எஸ்மாவா ? அரசின் மேல் நடவடிக்கை எடுக்க ஒரு அரசமா கிடையாதா ?