Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி நம் தாய்மடி" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 16, மே 2017 (19:26 IST)
மாற்றம் செய்த நாள் :17, மே 2017 (17:50 IST)
சமீபத்தில் கொடைக்கானல் அருகே ஒரு பயணத்தில் இருந்தோம். சாலையின் நிலை காரணமாக, கார் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. அதிக மக்கள் நடமாட்டம் இல்லை. சாலையின் எதிர்புறத்தில் ஒரு ஆணும், பெண்ணும் நீண்ட தொலைவில் வந்து கொண்டிருந்தனர். "வடநாட்டு சுற்றுலாப்பயணிகள் நடமாட்டம் அதிகரித்து விட்டது", என்று நண்பர் சொன்னார். வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து தான் சொன்னார். இருவரையும் கார் கடந்தது. அந்தப் பெண்ணின் முகம் மின்னலாய் வெட்டியது. தலைக்கு மேல் போட்டிருந்த துப்பட்டா லேசாக மறைத்தாலும், அந்தக் கண்கள் அடையாளம் காட்டியது.  இருந்தாலும், 'இந்த இடத்தில் அவரா?', என்ற ஐயம். காரைத் திருப்பச் சொன்னேன். அவர்களைக் கடந்து கொஞ்ச தூரம் போய் நிறுத்தி, இறங்கினோம்.நெருங்கி வந்தார்கள். உற்றுப் பார்த்தேன், அவரே தான். திடீரென வழியில் நின்று சிலர் உற்றுப் பார்ப்பதை கவனித்த அந்தப் பெண்ணுக்குத் தயக்கம். உடன் வந்த ஆணும் நடையைத் தளர்த்தினார். புன்னகையோடு பார்த்தேன். அவர் தயக்கத்தோடே பார்த்தார். "If I'm not wrong, you  Irom?", நான் முடிக்கும் முன்பே அவர் 'ஆம்' என்று தலையசைத்தார்.  சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சி தெரிவித்தேன். மணிப்பூர் மாநில அரசினை எதிர்த்து, பதினாறு ஆண்டுகாலம் உண்ணாவிரதம் இருந்த இரும்புப் பெண்மணி "இரோம் ஷர்மிளா" தான் அவர். 

தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் 'ஆயுத சட்டத்தைக்' கொண்டு வந்து, சர்வாதிகார கரம் கொண்டு, கேள்விமுறை இல்லாமல் காக்கை, குருவிகளை சுடுவது போல் அப்பாவிப் பொதுமக்களை சுட்டுத் தள்ளியதை எதிர்த்து தான் உண்ணாவிரதம் இருந்தார் இரோம், தனி ஆளாய். போராளியாக இருந்தவர், பொது வாழ்க்கைக்கு வர எண்ணி, நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மாநில முதல்வரை எதிர்த்துப் போட்டியிட்டார். 90 வாக்குகள் பெற்றார். "போராளிகளுக்கு இது தான் தேர்தல் வெளியில் கிடைக்கும் மரியாதையா?", என தேசிய அளவில் இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

அவரைத் தான் சந்தித்தோம். அவரது போராட்ட வாழ்விற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தேன். கைக்கூப்பி, தலைவணங்கி, கூச்சத்தோடு நன்றி தெரிவித்தார். உயிரைப் பணயம் வைத்து, நீண்ட போராட்டம் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்பதற்கான சிறு அடையாளமும் இல்லை அவரிடத்தில். ஒரு பள்ளி மாணவிக்கான மென்மையோடும், கூச்சத்தோடும் இருந்தார்.

நான் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். உடன் இருந்த 'தேஷ்பாண்டேவை' அறிமுகப்படுத்தினார். இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன், இந்த முறை வாய்ப்பை தவற விட்டேன், என்று சொன்னேன். ஆச்சரியத்தோடு பார்த்தார். "நான் அரசியல்வாதியாக இருந்தாலும், உங்கள் போராட்டத்தை மதிக்கிறேன். அதனால் தான் நிறுத்தி, வாழ்த்து சொல்கிறேன்", என்றேன். தலைவணங்கினார். 

"தேர்தல், தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோல் அல்ல. உங்கள் தியாகம் என்றும் மறக்க இயலாதது. அந்தத் தேர்தல் அனுபவத்தை மறந்து விடுங்கள். தைரியத்தை இழக்காதீர்கள், அதே இரோம் ஷர்மிளாவாகவே செயல்படுங்கள்" என வாழ்த்தினேன். மீண்டும் அதே தலைவணங்கிய கைக்கூப்பல். மெல்லிய குரலில் நன்றி தெரிவித்தார். கண்களில் மாறாத அதே குழந்தைத் தனம்.

தமிழ்நாடு ஒரு விஷயத்தில் வித்தியாசம் தான், போராளிகளை கொண்டாடுவதில். போராளிகளுக்கும் தமிழ்நாடு என்றால் தனி பிரியம் தான்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரத்திற்கு போராடிய போது கட்டமைத்த 'இந்திய தேசிய ராணுவ'த்தில் தமிழர்கள் அதிகம் இடம் பிடித்தனர். பின்னர் தனி ஈழத்திற்கு போராடிய விடுதலைப்புலிகள் உள்ளிட்ட அத்தனைப் போராட்டக் குழுக்களும் இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில், தமிழகத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டனர். அந்தக் காலகட்டத்தில், போராளிகளை தங்கள் வீட்டுப் பிள்ளைகளாகவே கொண்டாடினர் தமிழக மக்கள். இப்போது தமிழகத்திற்கு வந்திருக்கும் போராளி இரோம் ஷர்மிளா. மணிப்பூர் மாநில அரசு தனி மனித உரிமைகளை பறிக்கும் காரியத்தில் இறங்கியது. தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில், "சிறப்பு ஆயுதப் படை சட்டத்தைக்' கொண்டு வந்தது. யாரையும் கேள்வி கேட்காமல், கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ இயலும். உச்சக்கட்டமாக நடந்த கொடூரத்தை இரோம் நேரடியாகப் பார்த்தார். மலோம் கிராமத்தில் பேருந்துக்கு காத்து நின்றார்கள் பொதுமக்கள். திடீரென அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு. அப்பாவி மக்கள் கதற, கதற கொல்லப்பட்டார்கள். இந்த சம்பவம் தான் ஒரு இளம் கவிதாயினியை, கடும் போராளியாக்கியது. ஆம், அப்போது இரோம் யாரும் அறியா ஒரு இளம் கவிஞர்!

இந்த சம்பவத்தைக் கண்டித்தும், சிறப்பு ஆயுதப் படை சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் உண்ணாவிரதம் இருந்தார். அரசு செவி சாய்க்கவில்லை. உண்ணாவிரதம் தொடர்ந்தது. சமூக கோபத்தின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டார் இரோம். தற்கொலைக்கு முயற்சிப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, இரோம் மீது. கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உணவு உட்கொள்ள மறுத்ததால், மூக்கு வழியாக திரவ உணவு செலுத்தப்பட்டது. பதினாறு ஆண்டுகள் சளைக்காமல் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்தார். அரசு அவரை மருத்துவமனையில் சேர்ப்பதும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதும், காவல் நிலையத்திற்கு அழைத்து செல்வதுமாக காலத்தை ஓட்டியது.பதினாறு ஆண்டுகால போராட்டத்திற்கு பலனில்லை. சட்டம் சிறிது தளர்த்தப்பட்டதே ஒழிய, நீக்கப்படவில்லை. போராட்டப் பாதையை மாற்ற தீர்மானித்தார் இரோம். ஜனநாயகப் பாதையில் திரும்பி போராடுவதென முடிவெடுத்தார். அந்த நேரத்தில் மாநில சட்டமன்றத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். ஆனால், இவரது தோல்வியை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. காரணம், அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை. தன் உயிரைப் பணயம் வைத்து எந்த மக்களின் ஜனநாயக உரிமைக்காக போராடினாரோ, அவர்கள் அளித்த வாக்கு 90. அவர் தோல்விக்கு பல காரணங்கள் கூறப்பட்டன. அவர் மூன்று முறை முதல்வராக இருந்தவரை எதிர்த்து போட்டியிட்டார். ஒரு கட்சியை நிறுவியவர், அதன் சார்பாக மூன்று வேட்பாளர்களை மாத்திரமே நிறுத்தினார். இவற்றைக் கூட அரசியல் ரீதியாக ஏற்றுக் கொள்ளலாம். இன்னும் சில காரணங்கள் மனம் புண்படுத்துபவை. அவர் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதுவும் வெளி மாநிலத்துக்காரரை திருமணம் செய்துகொள்வதை அறவே ஏற்றுக் கொள்ளவில்லை. அவரை போராளியாக மாத்திரமே விரும்பினர், அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. இப்படியான காரணங்கள் அவரையும் பாதித்திருக்கலாம். 

மன அமைதி தேடி கேரளா பயணித்தார். தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். அரசியலில் இனி ஈடுபடப் போவதில்லை என அறிவித்தார். ஆனாலும் போராட்டப் பாதையில் தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.

தேர்தல் தோல்வியால் மனம் சங்கடப்பட்டே, மன ஆறுதலுக்காக அவர் இங்கே வந்திருக்க வேண்டும். காலமும், மக்களும் அவருக்கு இந்த சூழலை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால், வரலாறு அவரது போரட்டத்தையும், தியாகத்தையும் மறைக்க இயலாது. ஏதும் உதவி தேவை என்றால் அழையுங்கள் என என் அலைபேசி எண்ணைக் கொடுத்தேன். புன்னகை மாறாமல் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். விடை பெற்றோம். ஒடிசலான அந்த தேகம் தான் பதினாறு ஆண்டுகாலம் உணவே இல்லாமல், போராடியது. தனி மனிதப் போராட்டம் தான், ஆனாலும் தளரவில்லை அவர். அப்படிப்பட்டவரை தான், இந்த தேர்தல் தளர வைத்து விட்டதோ என்று மனம் வருந்துகிறது.இப்போது இரோம் ஷர்மிளாவிடமிருந்து அடுத்த அறிவிப்பு. தமிழ்நாட்டில் வைத்து திருமணம் செய்துகொள்ளப் போவதுதான் அது. தன்னுடன் இருக்கும் நண்பரைத் திருமணம் செய்துகொண்டு கொடைக்கானல் பகுதியில் தங்க இருப்பதாக தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு தமிழ்நாடு அவரைக் கவர்ந்திருக்கும் போலும். அவர் மனதிற்கு இதம் தரும் சூழல் இங்கு அமைந்திருக்க வேண்டும். இது வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என ஏற்கனவே புகழ்பெற்ற பூமி. அதிலும் போராளிகளை மதிக்கும் பூமி. அதுவே அவரை ஈர்த்திருக்கும். எது எப்படியாயினும் அவரது வாழ்வின் அடுத்த அத்தியாயம் அவரது மனக் காயங்களுக்கு மருந்தாய், மகிழ்வாய், மன நிறைவாய் அமைய தமிழகத்தின் சார்பில் வாழ்த்துவோம்.

வாழ்க இரோம் ஷர்மிளா !

எஸ்.எஸ். சிவசங்கர் - முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Justin Jayakumar A Country : United States Date :5/18/2017 3:32:06 PM
பயனுள்ள பதிவு. நன்றி.
Name : N.RAVICHANDRAN Country : United States Date :5/18/2017 11:59:19 AM
"இருவரும்" போராட்ட குணம் உள்ளவர்கள்தான்!. மிகவும் அருமையான சந்திப்பு "அண்ணா"
Name : அப்துல் கரீம் . Country : Indonesia Date :5/18/2017 12:21:22 AM
அண்ணா அருமையான பதிவு இந்தியாவின் இரும்பு பெண் இரோம் ஷர்மிளா
Name : Stanley Date :5/17/2017 3:31:29 PM
மனம் mikavum வலிக்கிறது. பாவம் இந்த பெண். மனிதர்கள் இவ்வளவு சுய நலம் மிக்கவர்களா?