Add1
logo
7 தமிழர்களை விடுதலை செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது: ராமதாஸ் || பேருந்து கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்: பழனிசாமிக்கு ஸ்டாலின் கடிதம் || இடையில் மூன்று நாட்களில் என்ன நடந்தது? கி.வீரமணி கேள்வி || கல்லூரி மாணவ மாணவிகள் சாலை மறியல் || சிபிஐஎம் மாநிலக்குழு கூட்டம் || உங்களுக்காக காத்திருக்கிறேன்! உடன்பிறப்புகளுக்கு ஸ்டாலின் கடிதம்! || நல்ல பஸ் எப்ப விடுவீங்க... ஆட்சியரிடம் மனு கொடுத்த இளைஞர் || நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் ||
சிறப்பு செய்திகள்
பேருந்து கட்டண உயர்வு, சாமானியனுக்கு சறுக்கல் - கதறும் தமிழகம்
 ................................................................
பெண்கள் சக்தியை புறக்கணிக்கிறதா திமுக?
 ................................................................
அனுமன் பாலம் கட்டுவதை நம்புவோம்!
 ................................................................
பாஜகவுக்கு ஆதரவான பிரகாஷ்காரத் தீர்மானம்?
 ................................................................
"கீழடி நம் தாய்மடி" -சு.வெங்கடேசன்
 ................................................................
அவதூறு பரப்பக் கூடாது:
 ................................................................
42 பேர் கண்தானம், 35 பேர் உடல் உறுப்புதானம்!
 ................................................................
பஸ் கட்டண உயர்வா, கொள்ளையா?
 ................................................................
“இருக்கு; ஆனா இல்ல.. இருக்கு; அதுவே வேற மாதிரி இருக்கு!”
 ................................................................
விளிம்புநிலை மக்களும் இணைந்த விரிவான அணி திரட்டல் தேவை!
 ................................................................
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்!
 ................................................................
உங்கள் முதுகுக்குப் பின்னால்...
 ................................................................
நித்தியானந்தா ஆசிரமத்திலிருந்து இன்னொரு வீடியோ?!
 ................................................................
ஒரு உயிருக்காக 800 நாள் போராட்டம்!
 ................................................................
இசுலாமியர்கள் மீதான இன்னொரு தாக்குதலா?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 15, மே 2017 (21:3 IST)
மாற்றம் செய்த நாள் :20, மே 2017 (12:16 IST)
‘கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள், கவலை இல்லை நீ ஒத்துக்கொள்’ என்ற வாசகம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ, ஐடி என அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு நிச்சயம் சரியாக பொருந்தும். கடந்த சில வருடங்களாக உச்சத்தில் இருக்கும் இந்த ஐடி நிறுவனங்களில் எப்படியாவது வேலையில் சேர்ந்து விடவேண்டும் என்ற முனைப்போடு தான் ஒவ்வொரு ஆண்டும், பட்டப் படிப்பை முடித்து விட்டு கல்லூரிகளில் இருந்து வெளியேறுகிறார்கள் பொறியியல் மற்றும் கணினி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பயின்ற இளைஞர்கள். இதெல்லாம் போக கிடைத்த வேலையை எதற்கு விடுவானே என்ற யோசனையில், இந்த துறையில் இருப்பவர்களும் அதிகம். 
அவர்களுக்கெல்லாம் பரவலாக பரவி வரும் செய்தி ஒன்று நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். அதுதான் கணிசமான எண்ணிக்கையுள்ள ஐடி ஊழியர்களை வேலையிலிருந்து வீட்டிற்கு அனுப்பும் திட்டம். கடந்த ஆண்டிலிருந்தே ஒரு புரளி போல சொல்லப்பட்டு வந்த இந்த செய்திகள், தற்போது உண்மை நிலவரங்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு வாரமாக ஐடி துறையில் பணிபுரியும் எத்தனை ஊழியர்கள் ‘லே ஆஃப்’ செய்யப்படுவார்கள்? என்ற அடிப்படையில் ஒரு சில கணக்குகள் வந்து விழுந்தன. தற்போது ஆண்டொன்றுக்கு 1.75 - 2லட்சம் ஊழியர்கள் வீதம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட 6லட்சம் பேர் ‘லே ஆஃப்’ நடவடிக்கையின் மூலம் வேலையிழப்பார்கள் என்கிறது அந்த செய்தி.  

கடந்த சில ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த பொறியியல் துறையில் பயில்வதற்கு கணிசமான அளவு மாணவர்கள் விரும்புவதில்லை என்றிருக்கும் நிலையில்,  விருப்பமுள்ளவர்களே அந்தத் துறையைத் தேர்ந்தெடுத்து, அதில் சாதிப்பதற்கான வாய்ப்பிருக்கும் போது, இது ஆட்குறைப்பு நடவடிக்கையே இல்லை. எப்படியும் இந்தக் காரணங்களால் ஆட்கள் வெளியேற்றப்பட்ட பின் அந்தப் பணியிடங்களில் புதிய இளமையான ஊழியர்கள் பணியிலமர்த்தப் படுவார்கள். இதுகுறித்து ஐடி தொழிற்சங்கத்தின் தமிழ்மாநிலத் தலைவர் அழகு நம்பி வெல்கினிடம் பேசியபோது, 
லே ஆஃப் நடவடிக்கை குறித்து பரவி வரும் தகவல்களின் உண்மைநிலை என்ன?

அமெரிக்காவின் அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றவுடனேயே, எச்1பி விசாக்களின் மீதான அவரது நடவடிக்கையின் போதுதான் ஐடி நிறுவனங்கள் இதுமாதிரியான நடவடிக்கை எடுக்கப்போவதாக வெளிப்படையாக அறிவிக்கத் தொடங்கின. அதற்கு முன் காலாண்டு நிதி அறிக்கையின் போது, ஐடி நிறுவனங்களின் செயல் அதிகாரிகள் ஐடி ஊழியர்களுக்கு அனுப்பிய செய்தியில், இனி வேலைகளை டிஜிட்டலாக மாற்றப்போகிறோம் என்றிருந்தது. அப்போதே எதிர்பார்த்த ஒன்றுதான் இந்த லே ஆஃப் நடவடிக்கை. ஆனால், இந்த அளவுக்கான ஊழியர்களை வெளியேற்றப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் 40-50% ஊழியர்கள் தாங்கள் பார்க்கும் வேலையிலிருந்து, முற்றிலும் மற்றொரு பிரிவிற்கு மாற்றப்படுவார்கள் என்றொரு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. காலத்திற்கேற்ப எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்த ஐடி நிறுவனங்கள் தான், தற்போது இந்த நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால், ஊழியர்களின் மீது பழிபோட்டு விட்டு அந்த நடவடிக்கையை நேர்மையாக்க பார்க்கிறார்கள். 6லட்சம் என்பது இன்னமும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. 40 லட்சம் பேர் பணிபுரியும் ஒருதுறையில் கண்டிப்பாக அது உயரும்! 

ஐடி துறையில் பணிபுரிபவர்களின் மனநிலை என்னவாக இருக்கிறது? 

ஊழியர்களின் மனநிலையோடு விளையாடுவது தான் ஐடி நிறுவனங்களின் கையிலிருக்கும் ஆயுதம். டிசிஎஸ் 24,000 ஊழியர்களை வெளியேற்றியது தான் அதிகமான ஆட்குறைப்பு நடவடிக்கை. அதன்பிறகு தான் தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான நடவடிக்கையானது எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நிறுவனங்களே ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்த பின், பெரும்பாலான ஊழியர்கள் வேறெங்காவது வேலை தேடலாம் என கிளம்பத் தொடங்கிவிட்டனர். ஊழியர்களை ஒரு அச்சுறுத்தல் மனநிலைக்கு கொண்டுவருவதும், தொந்தரவு செய்து அவர்களை வெளியேற்றுவதையும் செய்வதன் மூலம் அவர்கள் நினைத்த காரியத்தை செய்துமுடிக்கிறார்கள். இதுகுறித்து கலந்துபேசிய போது, ஊழியர்கள் மிகவும் பயந்து போயிருப்பதும், செய்வதறியாது குழம்பிப் போயும் இருப்பதும் தெரிய வந்துள்ளது. 

அரசு தரப்பிலிருந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்? 

அடிப்படையில் அதிக ஊதியம் பெறும் ஊழியர்கள் இங்கு இருப்பதால், எங்களுக்கு எந்தவித கட்டுப்பாடுகள் விதிக்கக் கூடாதெனவும், ஊழியர் சட்டங்கள் குறித்தும் நிறுவனங்களுக்கு கவலையில்லை. எனவேதான், ஊழியர் துறை ஆணையரிடம் எங்கள் குறைகளை முறையிடச் சென்றால், நிறுவனங்களின் பிரதிநிதிகளை அனுப்பி வைப்பதே இல்லை. பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊழியர்கள் பணியிழப்பது குறித்து கவலை இல்லை. இதற்காக அரசு தனி சட்டம் ஒன்றை உருவாக்கித் தரவேண்டும். தமிழகத்தில் இருக்கும் கடைகள் மற்றும் நடைமுறைச் சட்டத்தை ஐடி துறையில் இணைக்க நினைத்தால், நாங்கள் அதிலிருந்து விலக்கு வாங்கியிருக்கிறோம் என்கின்றன நிறுவனங்கள். இதில் பெரும் குழப்பம் இருக்கிறது. இதுகுறித்து தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சரிடம் கேட்டால், “ஐடி நிறுவனங்கள் அப்படிதான் பண்றாங்கப்பா.. நான் என்ன பண்றது” என்கிறார். எனவே, ஊழியர் சட்டங்களில் ஐடி ஊழியர்களுக்கான முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணி பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் தரப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். 

ஐடி தொழிற்சங்கத்தின் எதிர்கால நடவடிக்கை என்னவாக இருக்கும்?

ஐடி நிறுவனங்கள் இருக்கும் தற்போதைய நிலையில், ஆள்சேர்ப்பு குறையும் என்று சொல்லப்படுகிறது. ஐடி நிறுவனங்களில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப் படுகின்றன. ஊழியர்கள் மத்தியில் பயங்கள் உண்டாகின்றன. திடீரென அழைத்து நீ நாளையிலிருந்து வேலைக்கு வரக் கூடாதென சொல்ல முடியாது என்று ஊழியர்களுக்கு, அவர்களது உரிமைகளைப் புரிய வைப்பதை பெரிய நடவடிக்கையாக பார்க்கிறோம். பலதரப்பட்ட துறைகளில் பயின்ற பொறியாளர்களை கூட்டமாக வேலையில் சேர்த்துவிட்டு, காலத்திற்கேற்ப உங்களால் தொழில்நுட்பங்களை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை என்று சொல்வது முறையல்ல. ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களைச் சொல்லித் தந்தால் நிறைய முதலீடு செய்யவேண்டும் என்று நிறுவனங்கள் நினைக்கின்றன. இதனால் நாங்களே கற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்களுக்கு ‘டெக் காரிடார்’ என்ற அமைப்பின் மூலம் புதிய தொழில்நுட்பங்கள் பற்றி பயிற்சி அளிக்கிறோம். ஐடி நிறுவனங்கள் தான் இதற்காக மெனக்கிட வேண்டும். தொழிலாளர்கள் நலனுக்காக நாங்கள் மேலும் பல நடவடிக்கைகளை எடுக்க தயாராக இருக்கிறோம், என்கிறார் உறுதியாக.

ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் 35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளவர்கள் தான் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் மற்றொரு வேலையில் சேர்வதே முடியாத காரியமாக இருக்கும் என்கின்றன நமக்குக் கிடைத்த தகவல்கள். திடீர் திடீரென பீதியைக் கிளப்பும் இந்த அறிவிப்புகளால் தங்களது எதிர்கால நலன் குறித்த கவலையில் பல ஐடி ஊழியர்கள் தவித்து வருகின்றனர். தொழிலாளர் நலனில் அக்கறையில்லாமல், ஊழியர்களை வெளியேற்றி, புதிய இளமையான ஊழியர்களை வேலையில் சேர்ப்பதன் மூலம், முதலீட்டை அதிகரித்துவிடத் துடிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் தான் பெரும்பாலான அரசு துறைகள் மறைமுகமாக செயல்படுகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. சத்யம் சாஃப்ட்ஸ் எனப்படும் ஐடி நிறுவனம் திவாலான போது, பணியிழந்த பல ஊழியர்கள் தற்கொலை நடவடிக்கைகளில் ஈடுபட்டது நினைவிற்கு வருகிறது. நிச்சயம் அப்படி ஒன்று திரும்பவும் நடந்துவிடக்கூடாது. உரிமைக் குரல்கள் ஓங்கி ஒழிக்க வேண்டிய நேரம்.. விழிப்படையுமா உறங்கிக் கிடக்கும் அரசு?

- ச.ப.மதிவாணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : Superusa Country : United States Date :5/25/2017 5:00:12 PM
இந்தியாவில் விலை ஏற்றத்திற்கு , சமுதாய சீர் கேடுகளுக்கு இந்த it கம்பெனிகள் முக்கிய காரணம். மேலும் உங்கள் வேலையை ஏற்றுமதி செய்வீர்களா? அமெரிக்கர்கள் உங்களுக்கு ஏன் தன் வாழ்வாதாரத்தை விட்டு தர வேணும்? தமிழர்கள் பணம் அமெரிக்கா குடுக்க வேணும். ஆனால் விசுவாசத்தை இந்தியாவுக்குத்தான் காட்டி படம் போடுவார்கள். அப்புறம் தமிழ் சங்கம் போய் தமிழ் சினிமா பாடல் பாடி, கை தட்டி தமிழர் என்று பறை சாற்றுவார்கள். அந்தந்த நாடுகள் அவர்கள் வேலையை அவர்களே செய்து கொள்ள வேண்டும்.
Name : Jeeva lenin Date :5/18/2017 9:39:02 AM
Congrates mathi go ahead
Name : murhu Date :5/16/2017 12:07:47 PM
iT துறை ஒரு மாயை...அது எப்போ வேண்டுமானாலும் மறையும்.
Name : iyer Date :5/15/2017 10:06:14 PM
After Independence there was a demand for civil engineers; later mechanical and for some IT. Entrepreneur ships should be cultivated than working as employees; All labour should be respected.one should various skills; this survival of the fiitest