Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
தமிழகம்
பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள்
 ................................................................
விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம்
 ................................................................
மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள்
 ................................................................
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர்
 ................................................................
கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
 ................................................................
வாக்கு சேகரிக்கும் போராட்டம்
 ................................................................
மாட்டு வண்டியில் ஏறி போராட்டம்
 ................................................................
சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி
 ................................................................
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ்
 ................................................................
கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண்
 ................................................................
கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார்
 ................................................................
தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை
 ................................................................
துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது
 ................................................................
பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை
 ................................................................
நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு
 ................................................................
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (22:58 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (22:58 IST)


அண்ணன் என்று புது அபிப்ராயத்தை உண்டாக்கி விட்டார் - சி.வி.சண்முகம்

அன்று இரவு "ஓ.பி.எஸ் துரோகி, துரோகி, துரோகி" என்று நிறுத்தி நிதானமாக எடுத்துரைத்தார் மாண்புமிகு தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம். இப்போ பகலிலேயே "அண்ணன் ஓ.பி.எஸ்" என்று புளகாங்கிதம் அடைந்ததும் சாட்சாத் இதே சி.வி.சண்முகம் தான். இவர் மீது இருந்த பொது அபிப்ராயத்தை அவரே "அன்று இரவு" தகர்த்தெறிந்தார். "இந்தப் பகலில்" புது அபிப்ராயத்தை உண்டாக்கி விட்டார். 

இன்னொருவர் பிரபல மந்திரி உதயக்குமார். "அம்மா தான் தெய்வம். அம்மா இருக்கும் இடமே கோவில்" என்று முழங்கி, செருப்பு போடாமல் அலைந்து, ஜெ-வுக்கே தும்மல் வரவழைத்து பிரபலமானவர். ஜெ மறைவுக்கு பிறகு "சின்னம்மாவே சரணம்" என்று சொல்லி செருப்பு போடாமல் திரிந்தார். அப்போது ஓ.பி.எஸ்ஸை வசைபாடியவர், இப்போது "ஓ.பி.எஸ்ஸை பார்த்து தான் விசுவாசத்தை கற்றுக் கொண்டோம்" என்கிறார்.

இந்த திசைமாறும் காட்சிகள் நடக்கும் போதே, இதற்கு வேட்டு வைக்கும் வகையில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்க.தமிழ்செல்வன் பொருமித் தள்ளியுள்ளார். "ஜெ., இறந்ததற்கு விசாரணை வைத்தால், அப்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் பதில் சொல்ல வேண்டும். வைத்தியம் பார்த்த டாக்டர் பீலே பதில் சொல்ல வேண்டும். பிரதமர் மோடியே பதில் சொல்ல வேண்டும்". பயங்கரமான ஆளு.சொல்லின் செல்வர் நாஞ்சில் சம்பத் வெளுத்து வாங்கி விட்டார். 

"செத்துப் போவேன். தற்கொலை செய்து கொள்வேன். ஓ.பன்னீர்செல்வம் வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமானால் உயிரை மாய்த்துக் கொள்வேன்" என்று சூளுரைத்து ஓ.பன்னீர்செல்வத்தின் தரத்தை சின்னாபின்னாமாக்கி விட்டார். நாஞ்சில் சம்பத், தினகரனை தாங்கிப் பிடிக்கிறார் என்பதை விட ஓ.பி.எஸ்ஸை குதறியதே பிரதானம். முதல் நாள் இரவு "புரட்சித்தலைவரின் சின்னமான, அம்மாவின் சின்னமான இரட்டை இலையை காப்பாற்றவும், அம்மாவின் ஆட்சியைக் காப்பாற்றவும் தினகரனை ஒதுக்கி வைக்கிறோம். ஓ.பி.எஸ்ஸோடு பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று "புன்னகைத்த" அமைச்சர் ஜெயக்குமார், "கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர்கள், கோபுரம் ஏறி வைகுண்டம் போவார்களா?" என அடுத்த நாளே ஓ.பி.எஸ் குறித்து நக்கலடிக்கிறார்.

கலைஞரை சட்டமன்றத்தில் நையாண்டி செய்து, ஜெ-விடம் மந்திரி பதவி வாங்கியவர் விஜயபாஸ்கர். ஜெ சிறைக்கு சென்ற போது, இவர் ஓ.பி.எஸ் காரை விட்டு கீழே இறங்கவில்லை. ஜெ இறந்த பிறகு, ஓ.பி.எஸ் முதல்வரான அடுத்த வாரம், சசிகலா முதல்வராக வேண்டும் என குரல் கொடுத்தார் விஜயபாஸ்கர். சசி சிறைக்கு சென்ற பிறகு, தினகரன் பாக்கெட்டில் இடம் பிடித்தார். 

ஆர்.கே.நகர் தேர்தலை வழிநடத்தி ஓ.பி.எஸ்ஸின் எதிரியானார், அதன் மூலம் பா.ஜ.கவின் எதிரியுமானார். அப்புறம் இவர் வீட்டில் ரெய்டு வந்து, தலைப்புச் செய்தியானார். இப்படிப்பட்டவர், தினகரன் எதிர் குரூப் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு போனார். தினகரனை ஒதுக்கி அவர்கள் கொடுத்த பேட்டியின் போது, தனது டிரேட்மார்க் "அமுல்பேபி சிரிப்போடு" நின்றார். இவர் யார் விசுவாசி என்பதை சி.பி.ஐயே கண்டுபிடிக்க முடியாது என்பது அவரது ஆதரவாளர்களுக்கு பெருமிதம்.கே.சி.வீரமணியும் தமிழக அமைச்சர் தான். வேலூர் மாவட்டத்துக்காரர். திராவிடர் கழக குடும்பத்திலிருந்து வந்தவர். ஜெ., சிறைக்கு சென்ற போது கோவிலில் பூஜை செய்யாத ஒரே அமைச்சர். "நான்கு மாதங்களாக பொதுமக்களையும், கட்சிக்காரர்களையும் சந்திக்க முடியாமல் இருந்தோம்" என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் பணிவும், விசுவாசமும் உலகப் பிரசித்தம். ஜெ., காலில் விழுந்துக் கொண்டிருந்தார். அவர் சிறை சென்ற நேரத்தில் விஸ்வரூபம் எடுத்தார். ஜெ இறந்த போது, மோடியை கட்டிக் கொண்டு அழுதார். சசி பொதுச்செயலாளர் ஆனவுடன், முதலில் காலில் விழுந்தார். முதல்வர் பதவி பறி போகிறது என்றவுடன் தியானம் செய்தார். தற்போது டெல்லி டியூனுக்கு, டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இந்தக் கும்பல் அதிமுகவை காப்பாற்றும் என இன்னும் சில நண்பர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

எஸ்.பி.சேகர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :