Add1
logo
சி.ஆர்.பி.எப் தலைவர் பதவிக்கு - ராஜிவ் ராய் பட்னாகர் நியமனம் || மின்தடையால் இரவில் இருளில் மூழ்கியது வட சென்னை || நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது || சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறை || எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அறிக்கை || கண்மாய் தூர் வார நிதி திரட்டிய இளைஞர்கள் || தண்ணீரை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. காவல்நிலையத்தினை முற்றுக்கையிட்ட பெண்கள் || அரசு பஸ் - மினி பஸ் ஊழியர்கள். மோதல் போக்குவரத்து பாதிப்பு || கீரமங்கலம் பகுதியில் மின்வெட்டு பயிர்கள் கருகும் அவலம் குடிதண்ணீர் பிரச்சணையும் எழுந்துள்ளது || 2017 - மே 8 அன்று சென்னையில் இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! || சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் இருந்த தாய், மகள் கழுத்தறுத்துக் கொலை || கொட்டப்படும் மனித உறுப்புகள்! குப்பைத் தொட்டியாக மாறும் தமிழகம்! தொல்லையில் எல்லை மக்கள்! || சென்னைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சார்பில் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் (படங்கள்) ||
தமிழகம்
மின்தடையால் இரவில் இருளில் மூழ்கியது வட சென்னை
......................................
நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது
......................................
சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்தவருக்கு 7 ஆண்டு சிறை
......................................
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அறிக்கை
......................................
கண்மாய் தூர் வார நிதி திரட்டிய இளைஞர்கள்
......................................
தண்ணீரை தடுக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை. காவல்நிலையத்தினை முற்றுக்கையிட்ட பெண்கள்
......................................
அரசு பஸ் - மினி பஸ் ஊழியர்கள். மோதல் போக்குவரத்து பாதிப்பு
......................................
கீரமங்கலம் பகுதியில் மின்வெட்டு பயிர்கள் கருகும் அவலம் குடிதண்ணீர் பிரச்சணையும் எழுந்துள்ளது
......................................
2017 - மே 8 அன்று சென்னையில் இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்!
......................................
சென்னை சைதாப்பேட்டையில் வீட்டில் இருந்த தாய், மகள் கழுத்தறுத்துக் கொலை
......................................
சென்னைப் பல்கலைக் கழக ஆசிரியர்கள் சார்பில் கறுப்புச் சட்டை அணிந்து போராட்டம் (படங்கள்)
......................................
அரசு மருத்துவர்கள் 50% இடஒதுக்கீடு ரத்து விவகாரம்: மருத்துவர்கள் கண்டன பேரணி (படங்கள்)
......................................
பூந்தமல்லி அருகே புதிய டாஸ்மாக் கடையை எதிர்த்து பெண்கள் மறியல்! ( படங்கள்
......................................
தமிழக அரசு ஆட்டம் கண்டுள்ளதால், நீட் தேர்வுக்கு ஒத்துப்போகும் நிலையா?-சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி!
......................................
பேச்சுவார்த்தை சுமூகமாக தொடங்கும் - வைத்திலிங்கம்
......................................
மறைமுகமாக எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை - ஜெயக்குமார்
......................................
சவகர் சிறுவர் மன்றம், புதுக்கோட்டையில் கோடைக்கால கலை பயிற்சி முகாம்!
......................................
இயக்குநர் கவுதமன் ஜாமீனில் விடுவிப்பு
......................................
8 மாதமாக சம்பளம் வழங்காததைக் கண்டித்து; விவசாயத் தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்! (படம்)
......................................
கீரமங்கலத்தில் தொடர் மின்வெட்டு; நீரில்லாமல் பயிர்கள் கருகும் அவலம்!
......................................
ஈரோடு; தனது படத்தின் பாடல் குறுந்தகடுகளை மக்களிடம் சேர்க்கும் இயக்குநர் வீ.சேகர் (படம்)
......................................
ஈரோடு; ஒலி மாசு தினம்: மாணவர்கள் விழிப்புணர்வுப் போராட்டம் (படம்)
......................................
ஈரோட்டில் தென்னக ரயில்வே ஊழியர்கள் தொடர் போராட்டம் (படம்)
......................................
கோடை விடுமுறையையொட்டி பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் (படம்)
......................................
சென்னை மாநகர காவல் ஆய்வாளர்கள் 26 பேர் பணியிட மாற்றம்!
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (20:2 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (20:2 IST)


இந்தித் திணிப்பை கைவிடுக!
மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

இந்தி மொழியை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில், அம்மொழியைத் திணிக்க மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கான பரிந்துரைக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

“இந்தி மொழியை தமிழ்நாடு உள்ளிட்ட இந்தி பேசாத மாநில மக்கள் மீது திணிப்பதற்கு மீண்டும் மீண்டும் பாசக அரசு முயற்சித்து வருகிறது. இப்பொழுது ‘சிபிஎஸ்இ’ பள்ளிகளிலும் ‘கேந்திர வித்தியாலய’ பள்ளிகளிலும் இந்தி படிப்பதை கட்டாயமாக்கவேண்டுமென்பதற்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. பாசக அரசின் இந்தி திணிப்பு முயற்சியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது கூட்டாச்சி தத்துவத்திற்கு ஊறுவிளைக்கும் என்பதையும் மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம். 

அலுவல் மொழிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அளித்த பரிந்துரைகளுக்கு இப்போது குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்திருக்கிறார். இந்தியாவில், அமைச்சர்கள், பிரதமர், குடியரசுத் தலைவர் அனைவரும் இந்தி மொழியில்தான் உரையாற்றவேண்டும்; விமானங்களிலும் புகைவண்டி நிலையங்களிலும் இந்தியைத்தான் பயன்படுத்தவேண்டும்; நீதி, நிர்வாகம் போன்றவற்றில் ஆங்கில பயன்பாட்டை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து இந்தியை பயன்படுத்தவேண்டும் என்பவை உள்ளிட்ட பரிந்துரைகளை பாராளுமன்றக் குழு அளித்திருந்தது. பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கவேண்டும் என்பதும் அக்குழுவின் பரிந்துரைகளில் ஒன்றாகும். இப்போது குடியரசுத் தலைவர் இந்த பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பதால் மத்திய அரசு இவற்றை செயல்படுத்தக்கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தி பேசாத மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் இவற்றை நடைமுறைப்படுத்தக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். 

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்திருக்கும் இந்த பரிந்துரைகளை மட்டுமின்றி உச்சநீதிமன்றத்தின் மூலமாகவும் இந்தியை திணிப்பதற்கு பாசக அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக வழக்கு ஒன்றும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இதற்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை அண்ணா ஹஸாரே இயக்கத்தில் இருந்தவரும் தற்போது பாசகவின் செய்தித் தொடர்பாளராக இருப்பவருமான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் அஷ்வின்குமார் உபாத்யாயா தாக்கல் செய்துள்ளார்.

ஆங்கிலம் படிப்பதைவிட இந்தி படிப்பது மனித மூளைக்கு நல்லது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்களென்றும். 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்புவரை இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயம் ஆக்குவதுதான் சமத்துவம்  என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி படிக்காததால் டீ கடைகளிலும், மளிகைக் கடைகளிலும் பொருட்கள் வாங்க கஷ்டப்படுகிறார்கள் எனவும் அந்த மனுவில் கூறியிருக்கிறார்கள். இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாக மத்திய அரசு, அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் யாவும் சேர்க்கப்பட்டுள்ளன. 

இவ்வாறு, குடியரசு தலைவரை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றத்தை பயன்படுத்தியும் இந்தியைத் திணிப்பதற்கு பாசக மேற்கொண்டுவரும் முயற்சி இந்திய ஒருமைப்பாட்டுக்கே உலைவைக்கக்கூடிய ஆபத்தான முயற்சியாகும். எனவே, இந்தி திணிப்புக் கொள்கையை கைவிடுமாறு பாசக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இல்லையேல், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் கண்ட மொழிப்போர்க் களம் மீண்டும் உருவாகும் என்று எச்சரிக்கையோடு சுட்டிக்காட்டுகிறோம்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :