Add1
logo
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி || பஸ் கட்டணம் உயர்வு... வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள் || 2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை || விபத்தில் 3 இளைஞர்கள் பலி: சோகத்தில் மூழ்கிய கிராமம் || மீத்தேன் ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்திய விவசாயிகள் || அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் ||
முக்கிய செய்திகள்
நீட் நெருங்குகிறது, பயிற்சி மையம் இல்லை: அரசு பள்ளி மாணவர் கனவு கலைகிறது! அன்புமணி
 ................................................................
2வது நாளாக நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை
 ................................................................
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (17:16 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (17:20 IST)


மணல்கடத்தலை தடுத்ததால் 
20 பேர் திட்டமிட்டு கொலையா?

லாரி மோதி 20 பேர் பலியான சம்பவம், மணல் கடத்தலை தடுத்ததால் கிராம மக்கள் மீது திட்டமிட்டு லாரியை ஏற்றி கொன்றார்களா என்ற பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சித்தூர் மாவட்டம்  முருகரபாளையம் கிராமத்தில் மணல்கடத்தல் பிரச்சனை தொடந்து நடைபெற்று வந்தது.  இதனால் மணல் கடத்தல்காரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.   இந்த மோதலை தொடர்ந்து முருகரபாளையம் கிராம மக்கள் இன்று ஏர்பேடு காவல்நிலையத்திற்கு புகார் கொடுப்பதற்காக வந்திருந்தனர்.   திருப்பதி எஸ்.பி. ஜெயலட்சுமி சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றார்.  

இதையடுத்து ஏர்பேடு போலீசார், புகார் தாரர்களை தவிர மற்றவர்கள் வெளியே நிற்குமாறு சொன்னதால், பொதுமக்கள் ரேணிகுண்டா - காளகஸ்திரி சாலையில்  நின்றிருந்தனர்.  அப்போது மதியம்  2 மணி அளவில்  திருப்பதியில் இருந்து காளஸ்திரி நோக்கி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மின்சார கம்பத்தின் மீது மோதி, அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது.  இதனால் மின்சாரம் பாய்ந்து பொதுமக்கள் மற்றும் கடைக்குள் இருந்தவர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 16க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.    சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிந்த வாகனங்களும் பலத்த சேதமடைந்துள்ளது.  இதனால் ரேணிகுண்டா -காளஸ்திரி சாலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  படுகாயம் அடைந்தவர்கள் அனைவரும் திருப்பதி அரசு பொதுமருத்துவமனையிலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சிம்ஸ் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரி மோதி 20 பேர் பலியான இந்த சம்பவம், மணல் கடத்தலுக்கு எதிராக கிராம மக்கள் புகார் கொடுக்க வந்ததால் அவர்கள் மீது லாரியை ஏற்றி கொன்றுவிட்டதாக அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.  

- தேவேந்திரன்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :