Add1
logo
நிலக்கரி ஊழலில் - நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை || அதிமுக 2 அணிகளும் பாஜவின் பினாமி - ஜவாஹிருல்லா குற்றம்சாட்டு || ஓசூரில் யானைகள் விரட்டியடிப்பு || சூறாவளிக்காற்றில் சாய்ந்தது கோயில் கொடிமரம் || குப்வாரா காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் பறிமுதல் || கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு பதிவு || ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் - உ.பி-யில் அமல் || கலைஞரின் வைரவிழா நடக்கும் - கனிமொழி || அதிமுக ஜெ.தீபா எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை அறிக்கை || குடிநீர் மற்றும் சுகாதார வசதி ஏற்படுத்த கோரி கழுகுமலை பேரூராட்சி முன்பு அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் || ப.சிதம்பரம் வெள்ளை உடையில் இருக்கும் கருப்பு உருவம் - எச்.ராஜா விமர்சனம் || மனைவியை கிண்டல் செய்த நண்பனை தட்டிக்கேட்ட கணவனுக்கு கத்திக்குத்து || நான் வெற்றியை கொண்டாடியதும் இல்லை, தோல்வியை கண்டு துவண்டு விடவும் இல்லை - திருமா பேச்சு ||
இந்தியா
நிலக்கரி ஊழலில் - நிலக்கரித்துறை முன்னாள் செயலாளருக்கு 2 ஆண்டு சிறை
.............................................
குப்வாரா காட்டுப்பகுதியில் ஆயுதங்கள் பறிமுதல்
.............................................
கெஜ்ரிவால் மீது அருண் ஜெட்லி அவதூறு வழக்கு பதிவு
.............................................
ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல், டீசல் வழங்கப்படும் - உ.பி-யில் அமல்
.............................................
ரவுடிகளை ஒடுக்க புதுச்சேரியில் போலிசார் ஆயுதங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
.............................................
புதுச்சேரி காவல் நிலையத்தில் கவர்னர் கிரண்பெடி திடீர் ஆய்வு
.............................................
பாகிஸ்தான் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், மாற்றிக்கொள்ளாவிட்டால் மாற்ற வைப்போம்: ராஜ்நாத் சிங்
.............................................
இந்திய கடற்படையினரால் மீட்க்கப்பட்டது, 3 நாட்களுக்கு முன்பு மாயமான மாலத்தீவு கப்பல்
.............................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (16:28 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (16:49 IST)


புற்றுநோய் எனக்கூறி இண்டர்நெட்டில் 
ரு.22 லட்சம் மோசடி செய்த இளம்பெண்!

நம் நாட்டில் இரக்கத்தைப் பெறுவது ஒன்றும் சாதாரண விஷயமல்ல.. யாரிடமேனும் உதவி கேட்க வேண்டுமென்றால், குறைந்த பட்சம் அவர்களின் உணர்வுகளைத் தூண்டினால் போதுமானது. உண்மையாகவே கஷ்டப்படுகிறவர்கள் பலருக்குக் கிடைக்க வேண்டிய உதவிகள் மறுக்கப்பட்டு வரும் சூழலில், தனக்கு புற்றுநோய் இருப்பதாகக் கூறி ஒரு பெண் உலகின் பல பகுதிகளில் இருந்தும் ரூ.22 லட்சத்திற்கும் மேல் நிதி திரட்டி மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

சமியா அப்துல் ஹபீஸ் எனப்படும் 22 வயது பெண் தான் இந்தக் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர். உண்மையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் ஹைதராபாத்-ல் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது அப்பாவைப்  பார்க்க, சவுதி அரேபியாவில் இருந்து வந்தவர் தான் இந்த சமியா.



தனது அப்பாவின் சிகிச்சைக்கான தொகையைக் கட்ட முடியாத நிலையை, அந்த மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் ஒருவரிடம் முறையிட்ட சமியா, இந்தத் திட்டத்தை வகுத்து செயல்படுத்தியும் இருக்கிறார்.

‘கோ ஃப்ண்ட் சமியா’ என்ற முகநூல் பக்கத்தின் மூலம் தனது கைவரிசையைக் காட்டத்துவங்கிய சமியா, இதற்காக போலியான ஆவணங்களைத் தயாரித்து பதிவிட்டவர், தான் மூளை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், இதற்காக ஆகும் மருத்துவச் செலவிற்கான தொகையை நிதியாகத் திரட்டவும் செய்திருக்கிறார்.




சமியாவின் புற்றுநோய்(?) சிகிச்சைக்காக ஆகும் செலுவுக்கு ஹைதராபாத் மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து செப்டம்பர் 2016 முதல் மார்ச் 2017 வரை கிட்டத்தட்ட ரூ.22 லட்சம் வரை, அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டிருந்தது. 

பல நாள் திருடன் ஒருநாள் பிடிபடுவான் என்பதைப் போல, சமியாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கின. அதில் ஒன்றுதான் ரியாத்-ல் உள்ள நகைக் கடையிலும், அழகுநிலையத்திலும் சமியாவைப் பார்த்ததாகக் கிடைத்த தகவல்கள்! உண்மையில் அந்த நாட்களில் சமியா கோமாவில் இருப்பதாக அந்த முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதுமாதிரி பல தடவைகளில் சமியா கையும் களவுமாக சிக்கத் தொடங்கியிருக்க, தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மோசடியின் மூலம் அவர் பெற்றிருந்த நிதியில் ரூ.10 லட்சத்தை தனது அப்பாவின் மருத்துவச் செலவுக்காக பயன்படுத்தியதாக சொல்லும் சமியா, மீதமுள்ள பணத்திற்கான செலவினங்களைத் தெரிவிக்கவில்லை. அவர் தொடங்கியிருந்த அந்த வங்கிக் கணக்கில் வெறும் ரூ.5,000 மட்டுமே இருப்பது தான் கடைசியாக கிடைத்திருக்கும் தகவல்.

மனித வாழ்க்கையின் அன்றாடங்களோடு ஒட்டிப் போன சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை உண்மையென எண்ணி இப்படி உணர்ச்சிவயப்பட்டு நிதி கொடுத்தவர்கள் தான், தங்களுக்கான நீதி வேண்டுமென போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
விந்தை மனிதர்கள்!!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :