Add1
logo
கமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா? மயில்சாமி பேட்டி || ராம்நாத் கோவிந்த்துக்கு ஸ்டாலின் வாழ்த்து! || தமிழக அமைச்சர்கள், எம்.பிக்கள் பிரதமருடன் சந்திப்பு!(படங்கள்) || நாடாளுமன்ற வளாகத்தில் கிருஷ்ணகிரி எம்.பி. போராட்டம் || முசிறி எம்.எல்.ஏ. மருத்துவமனையில் அனுமதி! || சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு! || மகன்களுக்கு வீடுகட்ட வாங்கிய கடனை கட்டமுடியாததால் தாய் - தந்தை தற்கொலை! || கமல்ஹாசனை விமர்சிக்கும் எந்த அருகதையும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி || மனித சங்கிலியில் திராவிடர் கழகம் பங்கேற்கும்: கி.வீரமணி || கடலூர் கிளை சிறைச்சாலையில் இருந்து விசாரணை கைதி தப்பி ஓட்டம் || சினைமாட்டை அடித்துக் கொன்ற சிறுத்தை-பீதியில் கிராமங்கள்! || முதல்வர் நிகழ்சிக்கு 10,000 மாணவர்ககளை அழைத்து வர உத்தரவு : தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை || சென்னை கோயம்பேட்டில் வரி செலுத்தாத 39 கடைகளுக்கு சீல் ! ||
முக்கிய செய்திகள்
கமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா? மயில்சாமி பேட்டி
 ................................................................
சசிகலாவை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு!
 ................................................................
கமல்ஹாசனை விமர்சிக்கும் எந்த அருகதையும் ‘குதிரை பேர’ அதிமுக அரசுக்கு இல்லை: ஸ்டாலின் பேட்டி
 ................................................................
நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் தேர்வு: 24ம் தேதி பதவியேற்பு
 ................................................................
கமல், திமுகவின் ஊதுகுழல் போன்று செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுகிறது: எச்.ராஜா பேட்டி
 ................................................................
கலைஞனே களத்திற்கு வா! -ஆரூர் தமிழ்நாடன்
 ................................................................
ஸ்டாலின், ஓபிஎஸ், கமல் 3 பேரும் சேர்ந்து கூட்டு வைத்தது போல் தோன்றுகிறது: ஜெயக்குமார்
 ................................................................
தம்பி எச்.ராஜாவோ, தம்பி ஜெயகுமாரோ, நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டதை உணராதவர்கள்: நடிகர் கமல்
 ................................................................
நடிகர் கமல் மீதான விமர்சனத்தை முதல்வர் எடப்பாடி தவிர்த்திருக்கலாம்; நடிகர் விஷால்
 ................................................................
நமது எம்ஜிஆரில் மிஸ் ஆகும் எடப்பாடி: பின்னணி என்ன?
 ................................................................
ஓஎன்ஜிசியால் பாதிப்பு இல்லை: தவறான தகவல்களை நம்ப வேண்டாம்; ஓஎன்ஜிசி அதிகாரிகள் விளக்கம்
 ................................................................
பாழாய்ப்போகும் எம்.ஜி.ஆர். பங்களா!
 ................................................................
உன்னை என்ன செய்கிறேன் பார்? சசிகலா - ரூபா கடும் வாக்குவாதம்!
 ................................................................
செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டி.ராஜேந்தர்
 ................................................................
மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் ஏன்? முதல் அமைச்சர் விளக்கம்
 ................................................................
அதிகாரிகளுக்கு இடையிலான போட்டி காரணமாக சசிகலா மீது புகார் கொடுக்கிறார்கள்: டிடிவி தினகரன்
 ................................................................
மெட்ரோ ரெயில் திட்டம் பூந்தமல்லி வரை நீட்டிப்பு: கோவையிலும் மெட்ரோ ரெயில் திட்டம்: எடப்பாடி பழனிசாமி
 ................................................................
முதுகெலும்பு இல்லாத கோழை: கமலால் முதலமைச்சராக முடியாது –ஹெச்.ராஜா
 ................................................................
குண்டர் சட்டத்தில் மாணவி வளர்மதியை கைது செய்ததில் தவறு இல்லை –சி.வி.சண்முகம்
 ................................................................
புரோ கபடி லீக்கில் சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் விளம்பர தூதர் கமல்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (15:54 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (16:52 IST)




சசிகலா குடும்பம் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டதைத் தொடர்ந்து இரு அணிகளுக்குமிடையே குழு அமைத்து பேச்சுவார்த்தையும் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சில எம்.எல்.ஏ.க்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாகத் தொடர்ந்து செயல்பட்டுவருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஓ.பன்னீர்செல்வத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் எம்எல்ஏ கதிர்காமு, கம்பம் எம்எல்ஏ ஜக்கையன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ தங்கத் தமிழ்செல்வன் ஆகியோர் டிடிவி தினகரன் அணியில் உள்ளனர். ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ தங்கத் தமிழ்செல்வனிடம் ஒரு மினி பேட்டியைத் தொடர்ந்தோம். 
நக்கீரன்:- கட்சியிலிருந்து டிடிவியை ஒதுக்கியிருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி ஆதரவு கொடுத்து வருகிறீர்கள்?

தங்கத் தமிழ்செல்வன்:- கட்சியிலிருந்து ஒன்றும் டிடிவியை ஒதுக்கவில்லை. கட்சியும் ஆட்சியும் உடையக்கூடாது என்பதற்காகப் பெருந்தன்மையோடு டிடிவி ஒதுங்கி இருக்கிறார். அதைப் பாராட்ட வேண்டிய அமைச்சர்கள் எல்லாம் அவரைக் கொச்சைப்படுத்திப் பேசி வருவதுதான் வருத்தமாக இருக்கிறது. நடப்பது சின்னம்மா, டிடிவி ஆசியோடு நடக்கக் கூடிய ஆட்சி! அப்படியிருக்கும்போது டிடிவியை நான் பார்ப்பதும் பேசிவருவதும் தவறில்லை. நான் மட்டுமல்ல மந்திரிகளைத்தவிர, ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களும் டிடிவி பக்கம்தான் இருக்கிறார்கள். என்னைப்போலவே அவர்களும் டிடிவியைப் பார்க்க தினசரி வீட்டுக்கு வந்து, பார்த்துவிட்டுதான் போய்க்கொண்டிருக்கிறார்கள்.
 
நக்கீரன்:- மந்திரிகள் மட்டும் ஏன் டிடிவியைப் புறக்கணித்து வருகிறார்கள்?

தங்கத் தமிழ்செல்வன்:- எல்லாம் பதவி சுகம்தான்! டிடிவியைப் பார்த்தால் பதவி  பறிபோய்விடுமோ என்ற பயஉணர்வோடுதான் இருக்கிறார்கள். அந்தளவுக்கு நன்றி கெட்ட மந்திரிகளாக இருக்கிறார்கள். இந்த மந்திரிகள் எல்லாம் சின்னம்மாவிடமும் டிடிவியிடமும் பயனடைந்தவர்கள். அந்த நன்றியைக்கூட மறந்துவிட்டார்கள். 

நக்கீரன்:- கட்சியிலிருந்து  ஒதுக்கியதால் டிடிவி கவலைப்படுகிறாரா?

தங்கத் தமிழ்செல்வன்:- அதெல்லாம் ஒண்ணுமில்லைங்க. வெளியே எப்படி சிரித்துப் பேசி வருகிறாரோ அதுபோலதான் வீட்டிலேயும் எங்களிடம் சிரித்துப் பேசி வருகிறார். அவரைப் பொருத்தவரை கட்சியும் ஆட்சியும் சிதறாமல், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கவேண்டும் என்பதுதான் விருப்பமேதவிர, ஓ.பி.எஸ் மாதிரி கட்சியை உடைக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருதுளிகூட கிடையாது. 

நக்கீரன்:- இரட்டை இலைக்காக ரூ.60 கோடி டிடிவி பேரம் பேசியதாக டெல்லியைச் சேர்ந்த புரோக்கர் சுகேஷ் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாரே?

தங்கத் தமிழ்செல்வன்:- டிடிவியின்மேல் குற்றச்சாட்டு சொல்லக்கூடிய நபர் பல மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறார். அவரிடம்போய் 60 கோடிக்கு டிடிவி பேரம் பேசி இருக்கிறார் என்பது எந்தவிதத்தில் நியாயம்? அதெல்லாம் நம்பக்கூடியதாகவும் இல்லை. 

நக்கீரன்:- அப்படின்னா டிடிவிக்குத் திடீரென நெருக்கடி வருவதற்கு என்ன காரணம்?

தங்கத் தமிழ்செல்வன்:- எல்லாம் இந்தக் கட்சியை உடைக்க ஓ.பி.எஸ் செய்த வேலைதான். 11எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு இரட்டை இலையவே முடக்கும் அளவுக்கு மோடி சப்போர்ட் ஓ.பி.எஸ்.க்கு இருக்கிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.அதுபோலதான் இப்பவும் தான் பதவிக்கு வரவேண்டும் என்றால் சின்னம்மாவையும் டிடிவியையும் கட்சியிலிருந்து ஒதுக்கவேண்டுமென மோடிக்கு ஓ.பி.எஸ் ப்ரஸர் கொடுத்திருக்கிறார். அதனுடைய நெருக்கடியில்தான் எங்க அமைச்சர்களும் ஒரு பய உணர்வோடு சின்னம்மாவுக்கும் டிடிவிக்கும் எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதன்மூலம் பிஜேபியும் ஓ.பி.எஸ் ஆதரவுடன் தமிழகத்தில் காலூன்ற நினைக்கிறது.
 
நக்கீரன்:- முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியைக் கொண்டுவந்தது சசிகலாவும் தினகரனும் தான். அப்படி இருக்கும்போது அவர்களுக்கு எடப்பாடி விசுவாசம் இல்லாமல்தானே செயல்பட்டு வருகிறார்?

தங்கத் தமிழ்செல்வன்:-அப்படி ஒன்றுமில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எப்பவும் சின்னம்மா, டிடிவிமேல் விசுவாசமாகதான் இருக்கிறார்.ஆனால், மந்திரிகள் பெரும்பாலானோர் பதவிக்காக முதல்வரை மிரட்டுகிறார்கள். அதனாலதான் முதல்வர், அவர்கள் போக்குபோய் அம்மா ஆசியுடன் சின்னம்மா ஆட்சியைத் தொடர்ந்து வழிநடத்த இருக்கிறார்.
 
நக்கீரன்:-சசிகலாவும் டிடிவியும் கட்சியிலிருந்து ஒதுக்கியதில் ‘எனது தர்மயுத்தத்தில் முதல் வெற்றி’ என்று ஓ.பி.எஸ் கூறிவருகிறாரே?

தங்கத் தமிழ்செல்வன்:-உண்மையிலேயேஓ.பி.எஸ் பெரிய மனுஷனே இல்லை. முதல்வர் பதவி இல்லாததால கட்சியவே உடைத்து, இரட்டை இலையவே முடக்கிவிட்டார். அப்படியிருந்தும் சின்னம்மா அறிவுரையின்படி டிடிவி தலைமையில் கட்சியும் ஆட்சியும் நல்ல முறையில்தானே நடைபெற்று வருகிறது. அப்படியிருக்கும்போது திடீரென அரசுக்கு பிஜேபி ஒரு நெருக்கடிய கொடுத்ததால டிடிவி தானே முன்வந்து கட்சியில இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார். அதை இந்த பெரிய மனுஷன் வரவேற்க வேண்டுமேதவிர, தர்மயுத்தத்தில் வெற்றி என்றுகூறுவது அவர்களென்ன கொலையா பண்ணிவிட்டார்கள்?
 
நக்கீரன்:- இரண்டு அணிகளின் பேச்சுவார்த்தைமூலம் ஓ.பி.எஸ் மீண்டும் முதல்வராக பதவி ஏற்கப்போகிறாராமே?

தங்கத் தமிழ்செல்வன்:- ஏங்க எங்களிடம் 122எம்.எல்.ஏ இருக்குறாங்க.எங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார். அப்படியிருக்கும்போது எதற்காக கட்சியை உடைத்து அசிங்கப்படுத்திய ஓ.பி.எஸ்.க்கு மீண்டும் முதல்வர் பதவி எப்படித் தரமுடியும்? அதை ஒருபோதும் மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.ஏதோ எங்கள் ஆட்கள் கொடுக்கிற பதவிய வாங்கிக்கிட்டு ஓ.பி.எஸ் அணி வந்தால் ஏற்றுக்கொள்வோமேதவிர, முதல்வர் பதவியெல்லாம் தரமுடியாது.
 

சந்திப்பு:- சக்தி

matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : pathman Country : Canada Date :4/23/2017 10:01:04 PM
கூவத்தூர் தொடக்கி டெல்கி வரை நடந்த கோல்மால்களில் மட்டும் சுமார் 700 கோடி விளையாடி உள்ளது.மற்ற விடயங்கள் எல்லாம் சேர்த்தால் எத்தனை ஆயிரம் கோடிகளோ? இது அ.தி.மு.க வின் கணக்கு. G2 அலை கற்றை,தயாநிதிமாறனின் தொலைபேசி மோசடி உட்பட தி.மு.க காரர்களின் ஊழல் எத்தனை கோடியோ? இவர்கள் எல்லாம் வட இந்தியர்களா? தமிழனை தமிழன் அழிப்பதுதான் மற்ற இனத்தவர் அழிப்பதை விட மோசம்.
Name : Inthiyan Date :4/23/2017 4:01:21 PM
Ammavin aasiya? Our kilo evvalavu?
Name : guru Country : Canada Date :4/22/2017 5:38:36 PM
சின்னம்மாவின் நன்றி உள்ள நாலு கால்கள் உள்ளதில் ஒன்று.
Name : m.santhanakrishnan Date :4/22/2017 4:37:54 PM
பார்லிமென்ட் எலெக்ஷண்ணில், பிஜேபி சின்னத்தை கேப்டன் பிரசாரம் செயதார். இப்போது பன்னீர் பிஜேபி கால் பதிக்க,நல்ல முயற்சி செய்கிறார் . அதற்கு அவர்க்கு பலன், ஆனால் பிஜேபி வளராது. தமிழன் அழிவான், இதில் மீண்டும் வடஇந்தியர்கள் ஆதிக்கம் தமிழ்நாட்டில் செலுத்துவார்கள்.
Name : Gopendran Date :4/21/2017 9:11:56 PM
ஜெயிலில் உள்ளவர் கட்சியின் தலைவர், குற்றவாளி கூண்டில் நிற்பவர் உப தலைவர். கட்சி உருப்பட்ட மாதிரிதான்.
Name : karikalan1 Country : United Kingdom Date :4/21/2017 6:36:54 PM
அடேங்கப்பா...இவர் சொல்றத பார்த்தா இவர் ஏதோ சகல அதிகாரம் படைத்த சர்வாதிகாரிமாதிரி பேசுறார்....சின்னம்மா சிறையிலே இருக்காங்க ...பிறகு எப்பிடி ஆட்சியை வழிநடத்துவா....குற்றவாளி எப்பிடி ஆட்சி நடத்த முடியும்....இவர் எங்களை இளிச்சவாயன்கள் என்று நினைக்கிறாரா ....விசாரணை வரும் குற்றவாளிகள் மீண்டும் சிறை செல்வார்கள்....உப்பு தின்றால் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும்....