Add1
logo
காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு || கோவில் திருவிழாவில் கலவரம் வெட்டு காயங்களுடன் 10, க்கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதி || இடிதாக்கி பசு மாடு பலி || மதுரையில் இனி உரம் வாங்கவும் ஆதார் கட்டாயம் - ஆட்சியர் உத்தரவு || கல்குவாரி குட்டையில் மூழ்கி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு || பாலிமர் TV ஆசிரியர் மற்றும் செய்தியாளர் மீது போலீசார் வழக்கு || ஆற்றில் குளிக்க சென்ற 14 வயது மாணவன் நீரில் முழ்கி பலி || நீதிமன்ற தீர்ப்பின்படி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்: எடப்பாடி பழனிசாமி || சுகேஷ் கூட்டாளிகள் சொத்துகளை விடுவிக்க இடைக்கால தடை விதிப்பு || சர்வதேச கால்பந்து வீரர் மெஸ்சிக்கு 21 மாதம் சிறை! || நவீன மீன் அங்காடியை திறக்கக் கோரி முற்றுகை போராட்டம் (படம்) || கடலூர் அருகே மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட்கள் தாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் (படங்கள்) || பாஜகவின் சதியை முறியடித்து அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல் ||
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (15:8 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (15:19 IST)


வெர்ஜினியா மாகாணத்தில் பொங்கல் விழா!

40,000-திற்கும் அதிகமாக தமிழ் மக்கள் வாழும் பகுதியான வெர்ஜினியா மாகாணத்தில், அறுவடைத் திருவிழாவான பொங்கல் விழாவை கொண்டாடுவதற்கான அங்கீகாரத்தை அமெரிக்க அரசாங்கம் வழங்கியுள்ளது. 




தீபாவளி பண்டிகைக்கு இத்தகைய அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது பொங்கல் விழா கொண்டாட்டத்திற்கும் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தது அங்கு வசிக்கும் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தீர்மானத்திற்கு அமெரிக்க சட்டசபை பிரதிநிதி டேவிட் புலோவா இந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி ஒப்புதல் அளித்தார். அத்தீர்மானத்தில் வருகிற 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதியிலிருந்து, ஒவ்வொரு வருடமும் அந்த தேதியில் வெர்ஜினியா மாகாணத்தில் பொங்கல் விழா கொண்டாடப்படுமென கூறப்பட்டுள்ளதாக வெர்ஜினியா மாகாணத்தின் வள்ளுவன் தமிழ் அகாடமியின் சட்ட ஆலோசகர் அ.ஸ்ரீஸ்கந்தராஜ் தெரிவித்தார்.

மேலும் பொங்கல் கொண்டாட்டத்திற்கு அரசாங்க விடுமுறை வழங்கப்படமாட்டாது என்றும், வேண்டுமானால் குழந்தைகள் விடுப்பு எடுத்துக் கொள்ளாலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

இதன் மூலம் வெர்ஜினியாவில் வசிக்கும் தமிழ் மக்கள் தங்களுடைய பழமையான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிற மக்களோடு பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என திரு.டேவிட் புலோவா கூறினார்

இது குறித்து வள்ளுவன் தமிழ் அகாடமியின் தலைவர் பாஸ்கர் குமரேசன் கூறுகையில், டேவிட் புலோவாவை அனுகியபோது இந்த தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தார். சட்டசபையில் தாக்கல் செய்த இந்த தீர்மானத்திற்கு மூன்று மாதத்திற்கு பிறகு வெர்ஜினியா மாகாண கவர்னரால் அனுமதி வழங்கப்பட்டது என்றார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :