Add1
logo
மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு || நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரிய விசாரணை ஒத்திவைப்பு! || முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க வேலு எழுதிய நூல் வெளியீடு! || டி.எஸ்.பி ஆகிறார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்மான்பிரீத் கவுர்! || கிணற்றை தருவதாக ஓ.பி.எஸ் எங்களை ஏமாற்றி விட்டார்: கிராம மக்கள் ஆவேசம்! || உணவில் பல்லி! காயிதே மில்லத் மாணவிகள் 105 பேருக்கு வாந்தி-மயக்கம்! || ஜெ., நினைவிடம் அமைப்பதற்கு தடைகோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு! || கழிவறை கட்ட வழியில்லாதவர்கள் மனைவியை விற்றுவிடுங்கள்: ஆட்சியரின் சர்ச்சை பேச்சு || விவசாயிகள் உயிருக்கு ஆபத்து என்றால் எச்.ராஜா தான் காரணம்: அய்யாக்கண்ணு || குட்கா ஊழல் ஆதாரத்தை அழித்து தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்கிறது: ராமதாஸ் || சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி! || நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டத்தை ஆதரித்து அறந்தாங்கி மாணவர்கள் போராட்டம் || பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: டிராக்டர் ஓட்டுநர் கைது ||
தமிழகம்
மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
 ................................................................
நீட் தேர்வுக்கு விலக்களிக்க கோரிய விசாரணை ஒத்திவைப்பு!
 ................................................................
முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க வேலு எழுதிய நூல் வெளியீடு!
 ................................................................
கிணற்றை தருவதாக ஓ.பி.எஸ் எங்களை ஏமாற்றி விட்டார்: கிராம மக்கள் ஆவேசம்!
 ................................................................
உணவில் பல்லி! காயிதே மில்லத் மாணவிகள் 105 பேருக்கு வாந்தி-மயக்கம்!
 ................................................................
ஜெ., நினைவிடம் அமைப்பதற்கு தடைகோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!
 ................................................................
சென்னையில் பள்ளி வேன் கவிழ்ந்து மாணவி பலி!
 ................................................................
நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டத்தை ஆதரித்து அறந்தாங்கி மாணவர்கள் போராட்டம்
 ................................................................
பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: டிராக்டர் ஓட்டுநர் கைது
 ................................................................
ஒரு கோடி வரதட்சனை கேட்டு மனைவியை துன்புறுத்திய பி.டெக் பட்டதாரி கைது
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
பள்ளி மாணவர்களிடையே மோதல்: ஒருவர் உயிரிழப்பு: சாலை மறியலால் பதட்டம்
 ................................................................
கொடுங்கையூர் தீ விபத்து: பலி 10ஆக உயர்வு
 ................................................................
கட்டி முடித்தும் திறக்கப்படாத ரெயில்வே மேம்பாலத்தை பாமக திறக்கும்: அன்புமணி
 ................................................................
ரஜினி முதல்–அமைச்சர் ஆனால் மகிழ்ச்சி: நடிகர் தனுஷ் பேட்டி
 ................................................................
முக்கியமான இரண்டு துறைகளை எடப்பாடி வைத்திருப்பது ஏன்: ஈஸ்வரன் கேள்வி
 ................................................................
காயிதே மில்லத் சர்வதேச ஊடகக் கல்வி அகாடமியை நல்லகண்ணு பார்வையிட்டார்
 ................................................................
சிபிஎம் செந்தொண்டர் பயிற்சிமுகாம்
 ................................................................
உங்களோட போராடுவேன்: நெடுவாசலில் விஜயகாந்த் பேச்சு (படங்கள்)
 ................................................................
குண்டர் சட்டம் உள்ளிட்ட கருப்புச் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்:தெகலான் பாகவி
 ................................................................
மேம்பாலத்தில் இருந்து கார் விழுந்து அண்ணன் -தங்கை பலி
 ................................................................
நடிகர் சங்க ஊழலில் கமலுக்கு பங்கு உண்டு :வராகி
 ................................................................
மக்களை தூண்டி விடுவது நல்ல மனிதனுக்கு அழகில்லை: கமல் விவகாரத்தில் ஜே.கே.ரித்தீஷ்
 ................................................................
நீங்கள் கட்ட வேண்டியது 8 முழ சேலை: கமல் ரசிகர்கள் கண்டன சுவரொட்டி
 ................................................................
மனித சங்கிலி போராட்டத்தில் ம.நே.ம.க. பங்கேற்பு: ஜவாஹிருல்லா அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (14:44 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (14:44 IST)


வாருங்கள் வரவேற்கிறோம்... 
ஊட்டியில் உங்களை வரவேற்கும் குரங்குகள் 

கோடை வெய்யில் கொளுத்தி எடுக்கிறது. உங்கள் சாலைகளில் கானல் நீர் கரை புரண்டு ஓடுகிறது. கண்ணுக்குத் தெரியாமல் எரியும் நெருப்பாற்றில் நீங்கள் எரிந்து கொண்டிருப்பதாய் உணர்கிறீர்கள். நீங்கள் எப்போதாவது அமரும் மரங்களின் கீழ் மனிதர்களைப் பார்க்க முடியவில்லை. அம்மரங்களின் இலைகளே மனிதர்களைப் போல கீழே வாடி வதங்கிக் கிடக்கின்றன. நீங்கள் முடிவெடுத்து விட்டீர்கள். ஒரு குளிர் மலைப் பிரதேசமொன்றுக்கு குடும்பத்துடனோ, அல்லது நண்பர்களுடனோ பயணம் செய்ய முடிவெடுத்து விட்டீர்கள். அந்த மலை மலைகளின் ராணியான ஊட்டி என்றே உங்கள் மனம் முடிவு செய்துவிட்டது . 

மேட்டுப்பாளையம் வரை எரிகிறது உங்கள் கார் பயணம். குன்னூர் சாலையா, கோத்தகிரி சாலையா எதைத் தேர்ந்தெடுக்கவென்று யோசீப்பீர்கள். பல வாகனங்கள் கடந்து போகும் குன்னூர் சாலையே உங்களையும் ஈர்க்கிறது. (ஆனால் சில கிலோமீட்டர்களே ஊட்டி செல்ல அதிகமாயினும் அற்புதமான கோத்தகிரி சாலையை அற்பமாய் கை விட்டு விட்டீர்கள்.  பரவாயில்லை). உங்கள் மலைப் பயணம் ஆரம்பமாகி விட்டது.  சில்லென்று வீசும்  பனிக்காற்றில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த உங்கள் உடலை நீங்கள் அப்போது சட்டையைப் போல கழற்றி விடத் தொடங்கி விட்டீர்கள். நீலகிரி உங்களை வரவேற்கிறது என்ற பதாகை உங்களை வரவேற்கும் முன்னரே... வாருங்கள் வரவேற்கிறோம்... என்று சாலையோரத் திட்டுகளில் அமர்ந்து வரவேற்கும் குரங்குகள் கூட்டம் உங்களை ரசிப்புத் தன்மைக்கு கொண்டு வந்து விடுகிறது . வழிப் பயணத்தில் வாய் சும்மா இருக்குமே... என்று நீங்கள் வாங்கி வைத்திருந்த நொறுக்குத் தீனிகளும், வாழைப் பழங்களும் குரங்குகளுக்கு கொடுக்க உங்கள் தாராள மனசு உங்களை உற்சாகப் படுத்துகிறது. காரை விட்டு இறங்கி உங்கள் சுற்றம் சூழ குரங்குகளுக்கு தீனி அளிப்பீர்கள். குரங்குகள் நீங்கள் கொடுப்பதை வாங்கி சாப்பிடும் அழகை அப்போது நீங்கள் சிரித்துக் கொண்டே இரசிக்கிறீர்கள். உங்களில் பலரும்  குரங்குகளுக்கு முன் அமர்ந்து கொண்டு குரங்குகளுடன் செல்பி எடுத்துக் கொள்வீர்கள். பர்கர், க்ரீம் பண் என அளித்து கடைசி நொறுக்குத் தீனியையும் குரங்குகளுக்கு அளித்து விட்டு உங்கள் காருக்கு நீங்கள் திரும்பும் போது... முல்லைக்கு தேர் கொடுத்த பாரியும், குளிரில் நடுங்கும் மயிலுக்குப் போர்வை அளித்த பேகனும் ஏனோ உங்கள் நினைவுக்கு வருவார்கள்.


 
நம்மைப் போலத்தான் அவர்களும் இருந்திருக்கிறார்கள்.. என தங்களுக்குள்ளேயே பெருமைப் பட்டுக்கொண்டு பாரியின் அல்லது பேகனின் குடும்பமாகவே நீங்கள் உங்களை கற்பனை செய்வீர்கள். அப்போது...தன்னிடமுள்ள எல்லாவற்றையும் பிறருக்கு  தானமாய் கொடுத்து விட்டு கதாநாயகன் போகும் போது... உணர்ச்சி ரீதியாய் திரைப்படத்தில் பாடப் படும் பாடலொன்று உங்கள் காதுகளுக்கு மட்டுமே அசரீரியாய்  பின்னணியில் ஒலிக்கும். அந்த இடத்தில் மட்டுமே குரங்குகளின் வள்ளலாய் இருப்பீர்கள். பின் வழி நெடுக அமர்ந்திருக்கும் குரங்குகளை நீங்கள் அலட்சியப் படுத்தும் போது நீங்கள் திரும்பவும் நீங்களாகி விடுவீர்கள்!
 
மலைப் பயணங்கள் மகத்தானவை. மலைகளின் மேல் படர்ந்திருக்கும் பனி உங்களை ஆஹா.. ஓஹோ... என உச்சரிக்க வைக்கிறது . இந்த நீள மலைக்கு பனி ஆடை தைத்த தையல்காரன் எங்கிருக்கிறான். அவன் தைக்க பயன்படுத்திய ஊசி வாளின் முனையைப் போல... அவன் வானின் முனையை ஒடித்தே எடுத்திருக்க வேண்டும்.. என கவிதை பேசுவீர்கள். அப்போதும் உங்களை வரவேற்றுக் கொண்டிருக்கும் குரங்குகள் உங்கள் கவனத்தின் கடைசி இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருக்கும். வழியெங்கும் கொட்டும் சிற்றருவிகள் உங்கள் தலைக்குள் தைலமிட்டு தடவும்.




ஆடம்பர அறைகளை சொந்தமாக்கிக் கொண்டு குதூகலம் இடுவீர்கள். பூங்காக்கள், தொட்ட பெட்டா காட்சி  முனைகள், யூகலிப்டஸ் தைல மணத்திற்கிடையே படகு சவாரி, குதிரை சவாரி, வித வித நிறங்களில் பூக்கள்.. என உங்கள் கொண்டாட்டங்கள் நீளும் போது... கை விடப் பட்ட காதலியின் ஏக்கத்தோடு உங்களைப் பார்த்துக் கொண்டே இருக்கும் குரங்குகள். நீங்கள் கழற்றி விடப்பட்ட காதலனாய் மாறி இருப்பீர்கள். நீங்கள் உங்கள் கொண்டாட்டங்களை முடித்துக் கொண்டு மலை விட்டு மீண்டும் நெருப்பாற்றுக்குள் வரும் போதும், உங்களிடம் எதையாவது வேண்டி சாலையோரத் திட்டுக்களில் அமர்ந்து கொண்டு உங்கள் பிரிவை தாங்க முடியாமல் தவிக்கும் குரங்குகள் மீண்டும் யாரையோ வரவேற்க முடிவெடுத்து நின்றிருக்கும்.
 
உங்கள் சந்தோசம் குரங்கைப் போல மரம் விட்டு மரம் தாண்டுவதைப் போல அடுத்த மரமான உங்கள் அலுவலக பணிகளுக்குள் நீங்கள் சென்றுவிடுவீர்கள். ஆனால், நீங்கள் உங்கள் சந்தோசத்திற்காய் உணவிட்ட குரங்குகள் மலைகளின் ராணியான உதகையில்  ஒரு பிச்சைக்காரனாய் ஆக்கப்பட்டு யார் உணவிடுவார்கள்? எப்போது என்ன கிடைக்கும்?  என தினமும் வருவோரிடமும், போவோரிடமும் ஏங்கி நிற்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஒரு வேளை சோற்றுக்காய் தன் குழந்தை, குட்டிகளோடு சாலையின் சிக்னல்களில் நின்று உங்கள் காரின் கண்ணாடியைத் தட்டி பிச்சை எடுக்கும் பெண்களைப் போலவேதான் தன் குட்டியை மடியில் வைத்துக் கொண்டு மலையோரத்தில் நின்று பிச்சை எடுக்கும் குரங்குகளையும் நாம் உருவாக்கி வைத்து விட்டோம். குட்டி குரங்குகளுக்கும் பிச்சை எடுக்க கற்றுக் கொடுத்துவிட்டோம். குரங்குகளுக்கான உணவை இங்குள்ள காடுகள் வைத்திருக்கின்றன. அந்த உணவைத் தேட விடாமல் சோம்பேறிகளாய் ஆக்கி விட்ட உங்களை எப்படித் தண்டிக்கலாம்? எந்த விதத்தில் தண்டிக்கலாம்? என யோசிக்கும் ஒரு நொடி கூட தேவை இல்லாததுதான்.

நொறுக்குத் தீனிகள் சாப்பிட்டு, அஜீரணக் கோளாறுகள் ஏற்பட்டு, வயிற்று உபாதைகள் தாங்க முடியாமல்  மருத்துவரைப் பார்த்து எத்தனையோ பேர் வைத்தியம் எடுத்துக் கொள்கிறோம் அல்லவா? எண்ணெய்ப் பலகாரங்கள் உண்டு மாரடைப்பு வந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் அல்லவா? ஆனால் உங்களால் கொடுக்கப்படும் உணவுகளை  சாப்பிட்ட குரங்குகள் அஜூரணக் கோளாறு ஏற்பட்டு எந்த உயர் தர சிகிச்சை தரும் டாக்டரிடம் போய் நிற்கும்? சொல்லப் போனால் நமக்கு சந்தோசம் கிடைக்கும் என்றால் எதையும் செய்யத் தயாராய் இருக்கும் மனிதப் புத்தி, இங்கே தங்கள் சந்தோசத்திற்காய் குரங்குகளைக் கொலை செய்து கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். என்ன செய்வது? 
நாட்டின் மிக முக்கியமானவராய் இருந்து மறைந்து போன அந்தப் பெண்மணியும், அவரது சகியும் முதுமலைக்குட் செல்லும் வழியில் குரங்குகளுக்கு உணவிட்டு மகிழ்ந்தார்கள்.. ஒரு மணி நேரத்தை குரங்குகளுடன் செலவிட்டார்கள்.. என பத்திரிக்கை செய்தியைப் படித்து பழகி விட்டவர்கள் தானே நீங்கள்? அதனால் உங்களை ஒன்றும் சொல்ல இயலாததுதான்.
ஒன்றே ஒன்று வேண்டுமானால் நீங்கள் செய்யலாம். உங்களை திருத்திக் கொள்ளலாம். இனி உங்கள் மலைப் பயணங்கள் எங்கு நிகழ்ந்தாலும் சரி..
உங்களை மலையும், பனியும், மழையும், காற்றும் மட்டுமே வரவேற்க வேண்டும். குரங்குகள் அல்ல. நடைபாதை வாசிகள் போல மலை வாழ் ஜீவராசிகளை உண்டாக்காமல் இருப்போம். மொத்தத்தில்  ஒரு மலையை, ஒரு மரத்தை ரசிப்பது போல காட்டு வாழ் உயிரினங்களை ரசித்துவிட்டு கடந்து விடுங்கள். உங்கள் வள்ளல் தன்மைகளை கார் கண்ணாடி தட்டும் மனிதர்களிடம் வைத்து கொள்ளுங்கள்.

கடைசியாய் ஒன்று ...குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்லப்படுவதற்காக குரங்குகளை நீங்கள் மனிதர்களாக்கி விடாதீர்கள் மகா கனம் பொருந்திய மகா சனங்களே.
   
-அருள்குமார், கோவை 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Vivek Date :4/21/2017 3:15:44 PM
Excellent article. Arul has given a very good lesson.