Add1
logo
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு! || 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி || நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி || சிரியா வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி! || சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன் || மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம் || செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி || பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு || திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை || சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு || மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள் || மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின! || ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன் ||
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (10:43 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (12:59 IST)


நடிகர் தனுஷ் தங்கள் மகன்தான் என மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கு ரத்து: ஐகோர்ட் கிளை உத்தரவு

நடிகர் தனுஷ் தங்கள் மகன்தான் என மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. 

தனுஷ் தங்கள் மூத்த மகன் எனவும், அவர் மாதம் ரூபாய் 65 ஆயிரம் தர உத்தரவிட வேண்டும் என்று மதுரை மேலூரைச் சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியர் மேலூர் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் தனுஷ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தனுஷின் அங்க அடையாளம் சரி பார்க்கப்பட்ட நிலையில், சான்றிதழ்களில் குளறுபடி இருப்பதால் டி.என்.ஏ. மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கதிரேசன் தம்பதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பான விசாரணைகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தீர்ப்பை இன்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அறிவிப்பதாக தெரிவித்திருந்தது. 

அதன்படி இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தனுஷ் தங்கள் மகன்தான் என மேலூர் தம்பதிகள் தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. 


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : wilson Country : Australia Date :4/22/2017 1:31:03 PM
இது மிக பெரிய பாவம். பாவத்தின் சம்பளம் இன்னும் ஆறு மாத்தில் கிடைக்கும்.அவர்தான் இவர்கள் மகன் என்று சொல்ல பள்ளியில் படித்த மாணவர்களே சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள்.
Name : rajan Date :4/21/2017 1:51:15 PM
சான்றிதழ்களில் குளறுபடி மேலும் லேசர் ட்ரீட்மெண்ட் மூலம் அங்க அடையாளங்களை அழித்துள்ளார் என்று நீதிமன்றம்தான் சொன்னது. இப்போது அவர்களே தள்ளுபடி செய்துள்ளனர். கருவேல மரங்களை அழிக்கவேண்டும் என்பார்கள், அயல்நாட்டு கம்பெனிகள் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் எடுத்துக் கொள்ளலாம் என்று அவர்களே தீர்ப்பும் கூறுவார்கள் இந்த மனுநீதி சோழர்கள்
Name : M.K.LOGANATHAN Date :4/21/2017 12:11:59 PM
தனுஷ் நீதியை விலை பேசி ஏழையை வஞ்சித்து விட்டார்