Add1
logo
தவறான புகைப்படத்தைக் காட்டி சிக்கிக்கொண்ட பாக். தூதர்! || பா.ஜ.க. தேசிய செயற்குழு கூட்டத்தில் 337 எம்.பி.க்கள் பங்கேற்பு || பம்பர் லாட்டரி குலுக்கலில் ஆட்டோ டிரைவருக்கு 10 கோடி பரிசு || ஜெ. மரணம் தொடர்பாக முதல் ஆளாக திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்: ஈஸ்வரன் || காங்கிரஸின் பெருமையை ஐநாவில் பேசிய சுஷ்மா! - நன்றி தெரிவித்த ராகுல்காந்தி || மோடியை கேலிசெய்து வைரலாகும் ஜிமிக்கி கம்மல் பாடல்! || ஜெ. மரணம் குறித்து விசாரிக்க நீதிபதியை உடனடியாக நியமிக்க கோரி ஐகோர்ட்டில் மனு || ஆசிரியர்களுக்கு சீமான் வேண்டுகோள் || வீடியோவை வைத்து பூஜையா செய்யப்போகிறார்கள்: சி.வி.சண்முகம் பேட்டி || ஜெ. மரணம் குறித்து விசாரணை ஆணையம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்: தமிழிசை || ஜெ. மரணம் குறித்த விசாரணைக் கமிஷன் விரைவில் அமைக்கப்படும் –கடம்பூர் ராஜூ || வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ் || மேம்பாலத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர் ||
முக்கிய செய்திகள்
தவறான புகைப்படத்தைக் காட்டி சிக்கிக்கொண்ட பாக். தூதர்!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பாக முதல் ஆளாக திண்டுக்கல் சீனிவாசனை விசாரிக்க வேண்டும்: ஈஸ்வரன்
 ................................................................
ஜெ. மரண மர்மம்: அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்: பாமக
 ................................................................
சட்டப்படி நடந்துகொள்ளாத இத்தகைய மாநில, மத்திய அரசுகள் இருப்பது நாட்டுக்கு நல்லதல்ல: வேல்முருகன்
 ................................................................
ஜெயலலிதா இட்லி சாப்பிட்டது குறித்து திண்டுக்கல் சீனிவாசனின் புதிய விளக்கம்!
 ................................................................
இன்றைய(23.9.2017) டாப் -10 செய்திகள்!
 ................................................................
பசுக்கள் நல கண்காட்சியில் வளர்ச்சி பற்றி மோடி!
 ................................................................
ஜெ.,சிகிச்சையின் போது என் சித்தியையே பார்க்க அனுமதிக்கவில்லை: தினகரன் பேட்டி
 ................................................................
இவருக்கெல்லாம் பதில் சொல்லவே அசிங்கமாக இருக்கிறது: எடப்பாடி மீது தினகரன் தாக்கு
 ................................................................
பேரறிவாளனின் பரோல் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!
 ................................................................
ஆதார் இணைப்பால் மக்கள் பணம் பறிப்போவதை அனுமதிக்கலாமா? ராமதாஸ் கேள்வி
 ................................................................
ஜெ.,வை பார்த்ததாக, இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (10:27 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (21:55 IST)


குடுமி பிடி சண்டையில் தம்பிதுரை – செந்தில்பாலாஜி

தமிழக அரசுக்கு எதிராக முன்னாள் அமைச்சரும் தற்போது அரவாக்குறிச்சி, எம்.எல்.ஏ-வுமான செந்தில்பாலாஜி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி விவகாரத்தை கையில் எடுத்து, போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளார். இதற்காக, அவரது ஒப்புதலுடன் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.



கரூர் அரசு மருத்துவக்கல்லூரி விவகாரத்தில், முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோரிடையே ஏற்பட்ட மோதலால், கல்லூரிக்கான இடம் தேர்வு செய்வதில் குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் தலைமையில், எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி உள்ளிட்டோர், வரும், 24ல், கரூர் தாலுகா முன் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருப்பதாக, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. இது, ஆளுங்கட்சி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் பேசும் போது : கடந்த, 2015ல் செந்தில்பாலாஜியின் பதவிகள் பறிக்கப்பட்ட காலம் முதல், தம்பிதுரை, விஜயபாஸ்கர் ஆகியோருக்கு எதிராக, தொடர்ந்து அவர் செயல்பட்டு வருகிறார். கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரன் மூலம், அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இருக்கும் மாவட்ட செயலாளர் பொறுப்பை பறிக்க முயற்சிகள் மேற்கொண்டார். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தால், அவருக்கு பதவி கிடைக்க வாய்ப்பு குறைந்துவிட்டது.

அதனால், கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி கொடுக்கும் வகையில், வெளிப்படையாக எதிர்ப்பை காட்ட திட்டமிட்டுள்ளார். முதற்கட்டமாக, 'வாங்கல் குப்புச்சிபாளையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி துவங்க வேண்டும்' என்று, எதிர்க்கட்சியை சேர்ந்த காங்., முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன் தலைமையில் நடக்கும் உண்ணாவிரத போராட்டத்தில், செந்தில்பாலாஜியும் பங்கேற்கிறார். இது, விஜயபாஸ்கர், தம்பிதுரைக்கு எதிராக, அவர் நேரடியாக களமிறங்குவது உறுதியாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, வாங்கல் குப்பிச்சிபாளையம் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பெரியசாமி கூறியதாவது: வரும், 24ல், உண்ணாவிரத போராட்டம் சிவசுப்பிரமணியன் தலைமையில் நடக்கும். இதில், செந்தில்பாலஜி பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த, 24ல் உண்ணாவிரத போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், கோவில் திருவிழாவால், 28க்கு மாற்றப்பட்டது. இதற்கு, செந்தில்பாலாஜியின் லெட்டர் பேடில் அனுமதிகோரி, கரூர் டவுன் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் டி.எஸ்.பி., அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

- ஜெ.டி.ஆர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :