Add1
logo
சிதம்பரத்தில் த.மா.கா. மாநிலதுணை தலைவர் முன்னாள் எம்.பி. ஞானதேசிகன் செய்தியாளர்களிடம் பேச்சு || கி.வீரமணி தலைமையில் 50 பேர் ஜெர்மனி பயணம்;சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா || கள்ளத்தோணியில் கடத்தப்பட்ட 10 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது! || 5 ஆயிரம் வளர்மதிகளை உருவாக்காதே; நெடுவாசல் மக்கள் ஆவேசம் || கேரளாவுக்கு கடத்தப்படும் போதைப் பொருள்; ஜீரோ பாயிண்ட்டில் பிடிபட்டவர்களிடம் விசாரணை(படங்கள்) || ஆள் கடத்தலில் ஈடுபட்ட ரவுடி அமைச்சருக்கு வேண்டியவரா? -கொடைக்கானல் குபீர்! || நீட் எதிர்த்து நடக்கும் மனித சங்கிலியில் திரளாகப் பங்கேற்க கி.வீரமணி அழைப்பு || ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு || போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடியாள் படையுடன் வந்து மிரட்டிய அமைச்சர்! || நடிகர் சங்க கட்டுமானப்பணிக்கு இடைக்காலத் தடை நீக்கம்…! || ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! || காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சிபிஐ ஆர்ப்பாட்டம்! || கல்வி்க் கூடங்களில் வந்தே மாதரம் பாடலை வாரம் ஒரு நாள் பாட உயர்நீதிமன்றம் உத்தரவு ||
முக்கிய செய்திகள்
ஆள் கடத்தலில் ஈடுபட்ட ரவுடி அமைச்சருக்கு வேண்டியவரா? -கொடைக்கானல் குபீர்!
 ................................................................
ஜெர்மனியில் பெரியார் சுயமரியாதை இயக்க பன்னாட்டு மாநாடு
 ................................................................
போலீஸ் ஸ்டேஷனுக்குள் அடியாள் படையுடன் வந்து மிரட்டிய அமைச்சர்!
 ................................................................
கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது!
 ................................................................
ஹெராயின் போதையில் ஹீரோ-ஹீரோயின்!
 ................................................................
எளிய பின்னணியில் பிறந்த எனது பயணம் நெடியது: ராம்நாத் கோவிந்த் உரை..!
 ................................................................
14வது ஜனாதிபதியாக பதவியேற்றார் ராம்நாத் கோவிந்த்
 ................................................................
மந்திரிசபையை மாற்று! அதிகரிக்கும் பதவிக்குரல்!
 ................................................................
உயிருக்கு உலை வைக்கும் ஊட்டச்சத்து மோசடி! சத்யராஜ் மகள் அதிரடி!
 ................................................................
மத்திய அமைச்சராக அதிமுக தலைகள் முயற்சியா?
 ................................................................
முரசொலி பவளவிழாவுக்கு கலைஞர் வருவாரா?
 ................................................................
ஆறுக்குட்டி எம்எல்ஏ அணிமாறியது ஏன்?
 ................................................................
பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் கட்டாயம்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
 ................................................................
தனியார் மருத்துவமனை செவிலியருக்கு அரசுக்கு இணையான ஊதியம் வழங்க அன்புமணி வலியுறுத்தல்!
 ................................................................
தலித் இளைஞர் படுகொலையில் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வேண்டுகோள்
 ................................................................
அதிமுக எம்.எல்.ஏ., தங்கதமிழ்செல்வனை விரட்டி அடித்த ஊர் பொது மக்கள்!
 ................................................................
விவசாயிகள் உயிருக்கு ஆபத்து என்றால் எச்.ராஜா தான் காரணம்: அய்யாக்கண்ணு
 ................................................................
குட்கா ஊழல் ஆதாரத்தை அழித்து தமிழக அரசு தவறுக்கு மேல் தவறு செய்கிறது: ராமதாஸ்
 ................................................................
ஆசிரியர் இடமாறுதலில் பல கோடி ஊழல்! அன்புமணி குற்றச்சாட்டு
 ................................................................
தமிழக அமைச்சர்கள் குழு மீண்டும் டெல்லி பயணம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, ஏப்ரல் 2017 (9:2 IST)
மாற்றம் செய்த நாள் :21, ஏப்ரல் 2017 (9:5 IST)


கஜானாவை காலி செய்ய தலைமைச் செயலகத்தில்  பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக் கேடானது: டி.கே.எஸ் இளங்கோவன்


கஜானாவை காலி செய்ய தலைமைச் செயலகத்தில்  பேச்சுவார்த்தை நடத்துவது வெட்கக் கேடானது என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,

அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து தலைமைச் செயலகம் அதிமுகவின் தலைமைக்கழகமாக மாற்றப்பட்டு வருகிறது. அமைச்சர்களும், அதிகாரிகளும், முதலமைச்சரும் இருந்து மக்கள் பணியாற்ற வேண்டிய இடத்தை அதிமுகவிற்குள் நடக்கும் அரசியல் கூத்துக்களுக்கு பஞ்சாயத்து செய்யவும், அது பற்றி பேச்சுவார்த்தை நடத்தவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், அமைச்சர்களும் பயன்படுத்துவது மிகவும் கண்டனத்திற்குரியது.

தமிழகமே இன்றைக்கு மிகப்பெரிய போராட்டக் களமாக மாறியிருக்கிறது. குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. மதுக்கடைகளை மூடக் கோரி தாய்மார்கள் போராடுகிறார்கள். வறட்சியின் கொடுமையில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். டெல்லியில் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவில்லை. அமைச்சர்கள் கூடிப் பேசவில்லை. ஆனால் ஒன்றாக இணைந்து ஊழல் செய்து விட்டு இப்போது பிரிந்து நிற்கும் இரு ஊழல் அணிகளும் மீண்டும் ஒருங்கிணைந்து அரசு கஜானாவை காலி செய்வதற்கு தலைமைச் செயலகத்தில் சந்திப்பதும், பேச்சுவார்த்தை நடத்துவதும் வெட்கக் கேடானது.

ஏற்கனவே அதிமுக எம்.பி.க்களின் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற போது அதை தலைவர் கலைஞர் அவர்களே கடுமையாக கண்டனம் தெரிவித்தார். ஆனாலும் அதிமுகவினர் அரசியல் நாகரிகங்களையும், அரசியல் சட்ட மாண்புகளையும் குழி தோண்டி புதைத்து விட்டு இது போன்ற கட்சிக் கூட்டங்களை தலைமைச் செயலகத்தில் நடத்துவதை இனிமேல் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி, மக்களவை துணை சபாநாயகராக இருக்கும் தம்பித்துரை அவர்கள் கோட்டைக்கு சென்று முதலமைச்சரை சந்தித்து அதிமுகவிற்குள் நடக்கும் அடிதடிக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபடுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சி பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றால் அதிமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆலோசனை நடத்தலாம். இல்லாவிட்டால் கூவத்தூரில் நட்சத்திர விடுதியில் கூட அமர்ந்து ஆலோசனை நடத்தலாம். தயவு செய்து தமிழகத்தின் நிர்வாக சின்னமாக இருக்கும் தலைமைச் செயலகத்தை அரசியல் கட்சிக்குள் நடக்கும் சண்டை சச்சரவுகளை தீர்ப்பதற்கான இடமாக மாற்றாதீர்கள் என்று கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : pathman Country : Canada Date :4/22/2017 10:39:14 AM
ராஜிவ் காந்தியின் கொலையில் தேவை இல்லாமல் கலைஞரின் பெயரை களங்கப்படுத்தி,இப்போது கலைஞரின் காலே தஞ்சம் என்று கிடக்கும் காங்கிரஸ்கரங்களின் நிலையே வெட்கக்கேடானது.