Add1
logo
கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு! பெ. மணியரசன் || ஐநூறு பேர் கூட கூடாத கூட்டத்திற்கு ஏன் இந்த அலப்பரை? || கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை; 3 மாணவிகள் பலி || ஓட்டுக்கு பணம் .. தேர்தல் ஆணையத்திடம் என்ன திட்டம் உள்ளது ...? கொ.ம.தே.க.ஈஸ்வரன் கேள்வி || அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! ||
சிறப்பு செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு பார்வை!
 ................................................................
தமிழகத்தின் ட்ரெண்டாகியிருக்கும் நாயகன் ஷின்சான்...
 ................................................................
அதே டான்ஸ், அதே பாட்டு, அதே மேளத்துடன்
 ................................................................
எம்ஜியார் மரணம்… இரண்டானது அதிமுக!
 ................................................................
சினிமாவிலிருந்து சந்தை வரை - வகைவகையான வட்டி!
 ................................................................
அடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.:
 ................................................................
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிக்கே இரட்டை இலை
 ................................................................
ஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு...
 ................................................................
பொறுப்பாசிரியர் லெனின் மனைவி காலமானார்!
 ................................................................
அன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்?
 ................................................................
டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!
 ................................................................
யார் இந்த பைனான்சியர் அன்புச்செழியன்...
 ................................................................
முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து?
 ................................................................
மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை!
 ................................................................
பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 18, ஏப்ரல் 2017 (20:5 IST)
மாற்றம் செய்த நாள் :18, ஏப்ரல் 2017 (20:44 IST)


விஜய் மல்லையா!
கடன், கைது, விடுதலை!!



தினேழு வங்கிகள்,  ஹைதராபாத் , மும்பை, உச்சநீதிமன்றம் ஆகிய நீதிமன்றங்கள்,  அமலாக்கப்பிரிவு, இந்திய அரசு, அதற்கும் மேல் அவரை நம்பி இருந்த இந்திய  இந்திய 'குடி'மகன்கள்,  அத்தனை பேரும் தேடிக்கொண்டிருந்த ஒற்றை மனிதன்... இன்று கைது செய்யப்பட்டார். 

 கடந்த ஆண்டு மார்ச் மாதம், இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு, 'விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியே  செல்லத் தடை விதிக்க வேண்டுமென  உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. ஆனால் அதற்கு முன்பே, மார்ச் 2ஆம் தேதி விஜய் மல்லையா நாட்டை விட்டு வெளியேறிவிட்டார். "இது தானா உங்க டக்கு ?" என்று  மக்கள் வங்கிகளை கவனிக்கத் தொடங்கிய பொழுது  தான் தெரிந்தது, விஜய் மால்யா மொத்தம் ஒன்பதாயிரம்  கோடி ரூபாய்  கடன் வாங்கிட்டு கட்டாமல் தப்பியிருக்கிறார் என்று. 

ஸ்டேட் பேங்க், பஞ்சாப் நேஷனல் பேங்க், IDBI வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யுனைட்டெட் பேங்க் ஆப் இந்தியா, சென்ட்ரல் பேங்க், UCO பேங்க், கார்ப்பொரேஷன் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், பெடரல் பேங்க், பஞ்சாப் அண்ட் சிந்த் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் என இவருக்கு கடன் தராத வங்கியே இல்லை.  

பிறந்த போதே தொழிலதிபராக பிறந்த விஜய் மல்லையா, தனது இருபத்தி எட்டாவது வயதில் தனது தந்தை விட்டல் மல்லையாவின் 'யுனைட்டட் பிரூவரீஸ்' நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றார். பொறுப்பேற்ற பின், பல நிறுவனங்களை வாங்கி, அறுபது நிறுவனங்கள் கொண்ட மிகப்பெரிய குழுமமாக UB குரூப்பை வளர்த்தார். பின்னர், இதிலும் கை வைப்போம் என்று தனது ராசியான 'கிங்பிஷர்' பெயரில் விமான சேவை நிறுவனத்தை 2003இல்  துவங்கி, 2005 இல் விமானங்களைப் பறக்க விட்டார். ஆரம்பத்தில் உயரப்பறந்து இந்தியாவின் இரண்டாவது பெரிய விமான சேவை நிறுவனமாகத் திகழ்ந்ததை அனைவரும் வியப்புடன் பார்த்தனர். போகப்போகத் தான், பல்வேறு வங்கிகளிலும் கடன் வாங்கித்தான்  ராட்சச பலூனை விஜய் மல்லையா ஊதுகிறார் என்று தெரிந்தது. 2012 ஆம் ஆண்டு, அந்த பலூன் வெடித்து சிதறிய போது தான், உள்ளே இருந்தது வெறும் காற்றுதான் என்று அனைவருக்கும் தெரிந்தது. தொடக்கத்தில் இருந்தே ஒரு வருடம் கூட நிறுவனத்தின் கணக்கு லாபத்தில் முடியவில்லை. ஆண்டுக்கு ஆண்டு, நஷ்டம் கூடிக்கொண்டே போனது. விஜய் மல்லையாவும் வித விதமான வங்கிகளில், கடன் கேட்டு வாங்கினார். 2010 இல் மூடுகிற நிலைமையில் இருந்த போதும், மேலும் கடனை அள்ளிக் கொடுத்திருக்கின்றன வங்கிகள். அது தொடர்பாக சில வங்கி அதிகாரிகளும், முன்னாள் அதிகாரிகளும் பின்னர் கைது செய்யப்பட்டனர்.   

 ஒரு பக்கம், எத்தனை ரணகளம் ஆனாலும், இன்னொரு பக்கம் கிளுகிளுப்பாகவே இருந்தார் மல்லையா. IPL அணி வாங்குவது, போட்டிகளை அழகிகளுடன் கண்டுகளிப்பது, கிங்பிஷர் காலெண்டருக்கு போஸ் கொடுப்பது என்று தன் பாணியில் தொடர்ந்தார். இவர், சில வருடங்கள் சுப்ரமணிய சுவாமியின் ஜனதா கட்சியிலும் இருந்தார். விவசாயிகளையும் மாணவர்களையும் துரத்தி துரத்தி கடனை திருப்பி வாங்கும் வங்கிகள், இவரை ஊரை விட்டுப் போகும் வரை ஒதுங்கி நின்று பார்த்துவிட்டு, ஊரை விட்டுப் போனதும், பூட்டிய வீட்டில் சத்தம் போட்டன.  SBI, ஒரு படி மேலே சென்று, இவர் வாங்கியதில் ஆயிரத்தி இருநூறு கோடியை  AUCA ( Advance under collection accounts) வகையில் போட்டு, வராக்கடன் என்றே முடிவு செய்து விட்டது. 

பல வருடங்களாகவே லண்டனில் சொத்து வாங்கிவைத்து, ஒரு நல்ல நாளாய்ப்  பார்த்து, மல்லையா  அங்கு குடி போய்விட, இந்தியாவில் மிச்சம் வைத்துச் சென்றிருக்கும் சொத்தை விற்று பணம் திரட்ட முயல்கின்றன வங்கிகள். அதை வாங்கவும் ஆள் இல்லாமல், பல முயற்சிகளுக்குப் பிறகு சமீபத்தில் தான் கோவாவில் உள்ள கிங்பிஷர் வில்லாவை எழுபத்தி மூன்று கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. அவர் வாங்கியதற்கும் இதற்கும் பொருந்துமா ?   இதையெல்லாம் பார்த்து, விஜய் மல்லையாவிடம் பணம் இல்லை என்றெண்ணிவிட வேண்டாம். பல்வேறு நிறுவங்களின் பங்குகள், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் அனைத்தும் இருக்கின்றன. அவரே வந்து, பெரிய மனது வைத்தால் தான் வங்கிகள்  கடனைத் திரும்பப் பெற முடியும் என்ற நிலையில், இன்று லண்டனில் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசாரால்   கைது செய்யப்பட்டார் விஜய் மல்லையா. பணம் வசூலிக்கப்பட்டுவிடுமோ என்று அனைவரும் நினைக்கத்  தொடங்கும் முன்னரே, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிவிட்டது .       

 வடக்குப்பட்டி ராமசாமிக்குக் கொடுத்த கடன்.... ???   

- வசந்த் பாலகிருஷ்ணன் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :