Add1
logo
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் பதவியிலிருந்து - கருணாஸ் நீக்கம் || பன்றிக்காய்ச்சலில் ஒரு பெண் பலி || ஐகோர்ட்டு உத்தரவில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது - செங்கோட்டையன் || பராமரிப்பு பணியால் தடங்கல் - சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு || ஆளுநர் வித்யாசாகர் - யுகாதி தின வாழ்த்து || விவசாயிகள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு - ஸ்டாலின் ஆதரவு || மணல் கடத்த முயன்ற லாரி ஓட்டுநர் கைது || பத்திரப்பதிவு செய்ய புதிய விதிகள் வகுக்கப்படும் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் || பிரதமருக்கு - வைகோ கடிதம் || குடியிருப்பு பகுதிக்கு முதலை வந்ததால் பரபரப்பு (படங்கள்) || ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு முதல்வர் தடை செய்ய வேண்டும் விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் || வாரிய தலைவர் பதவி யாருக்கு? தூத்துக்குடி மாவட்டத்தில் குடுமிபிடி சண்டை || தனியார் கல்லூரி மாணவி கழிவறையில் மர்மமாக இறந்துகிடந்தார் ||
முக்கிய செய்திகள்
ஆளுநர் வித்யாசாகர் - யுகாதி தின வாழ்த்து
......................................
திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரித்து - மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் (படங்கள்)
......................................
மெரினாவில் தீவிர கண்காணிப்பு!
......................................
ஆபாச வீடியோ : சீமான் விளக்கம்
......................................
தஞ்சையில் வெடித்தது விவசாயிகள் காத்திருப்பு தொடர் போராட்டம் (படங்கள்)
......................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக குறைதீர்ப்பு கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு (படம்)
......................................
ஹைட்ரோ கார்பன் திட்டம்: மத்திய அரசு கடித விவரங்களை ஒளிவுமறைவின்றி வெளியிட வேண்டும்: ஸ்டாலின்
......................................
டெல்லியில் தமிழக விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக குவியும் வட இந்திய விவசாயிகள்
......................................
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இந்தியாவின் குடிமக்கள் அல்லவா? மோடி அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
......................................
அடாவடியில் இறங்கும் மோடி: வேல்முருகன் கண்டனம்
......................................
டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக திருச்சியில் விவசாயிகள் உண்ணாவிரதம்
......................................
தினகரனுக்கு தோல்வி பயம்: ஓ.பன்னீர்செல்வம்
......................................
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுடன் சீத்தராம் யெச்சூரி சந்திப்பு
......................................
நம்பிக்கை பெற்றவர் யார்? விரட்டியடிக்கப்பட்டவர் யார்? ஓ.பி.எஸ். தாக்கு
......................................
ஆதார் அட்டையை கட்டாயமாக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்
......................................
ஆர்.கே.நகர் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகிறார்
......................................
ஆர்.கே.நகரில் தீபா படகு சின்னத்தில் பிரசாரம் தொடங்க உள்ளார் (படங்கள்)
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (11:7 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (11:14 IST)


டி.டி.வி. தினகரன் வேட்பு மனுவை ஏற்க தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அபராதம் விதிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் வேட்புமனுவை ஏற்க, தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். அன்னிய செலாவணி மோசடி வழக்கில் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட அவரது வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அந்த  மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 8வது பிரிவுபடி குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கிறது. ஆனால், அன்னிய செலவாணி மேலாண்மை சட்டம், சுங்கவரிச் சட்டப் பிரிவுகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டவர்களுக்கு அதுபோல எந்த தடையும் விதிப்பதில்லை. துறை ரீதியிலான நடவடிக்கையில் அபராதம் விதிக்கப்பட்டு, குற்ற வழக்குகளில் விடுவிக்கப்பட்டால், துறைரீதியான நடவடிக்கையை புறந்தள்ளி விட முடியுமா என்ற சட்டரீதியான கேள்வி எழுகிறது. ஆகவே, குற்ற வழக்குகளில் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

மேலும், அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கப் பிரிவினரால் 28 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் தாக்கல் செய்யும் வேட்புமனுவை ஏற்க தேர்தல் ஆணையத்திற்கு தடை விதிக்க வேண்டும்" எனவும் கோரியுள்ளார்.

அமலாக்கப் பிரிவு விதித்த 28 கோடி ரூபாய் அபராதத்தை சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதேபோல, இதுசம்பந்தமான குற்ற வழக்கில் இருந்து தினகரனை விடுவித்து எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஜீவா பாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Jeyasekar S Country : India Date :3/21/2017 12:45:16 PM
மக்கள் செல்வன் தினகரன் அவர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்