Add1
logo
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம் || சென்னையில் பல்வேறு இடங்களில் மழை || இந்தியா திட்டத்திற்கு சாம்சங் ஆதரவு || ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயால் 150 ஏக்கர் வனப்பகுதி எரிந்து சாம்பலானது || மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பேரூராட்சி ஊழியர் சங்கம் தீர்மானம் || சாலையில் யானை நின்றதால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு || அலுவல ஊழியர்களின் அலட்சியத்தால் கை மாறிய உதவி தொகை || என் நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா || ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு -கூலித்தொழிலாளி கைது || விவசாய நிலங்களில் மின்சார டவர்கள் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை || சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திருநங்கைகள் || காவிரி குண்டாறு இணைக்க கோரி காந்தியிடம் மனு கொடுத்த விவசாயி || நெடுவாசல் போராட்டம் - நாளை 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் ||
தமிழகம்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி தப்பியோட்டம்
 ................................................................
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை
 ................................................................
மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - பேரூராட்சி ஊழியர் சங்கம் தீர்மானம்
 ................................................................
சாலையில் யானை நின்றதால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு
 ................................................................
அலுவல ஊழியர்களின் அலட்சியத்தால் கை மாறிய உதவி தொகை
 ................................................................
என் நாடி நரம்புகளில் ஓடுவதெல்லாம் கண்ணதாசனின் வரிகள் : இளையராஜா
 ................................................................
குற்றாலத்தில் மீண்டும் சீசன் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
 ................................................................
ஆட்டோ டிரைவருக்கு அரிவாள் வெட்டு -கூலித்தொழிலாளி கைது
 ................................................................
விவசாய நிலங்களில் மின்சார டவர்கள் - உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
 ................................................................
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திருநங்கைகள்
 ................................................................
காவிரி குண்டாறு இணைக்க கோரி காந்தியிடம் மனு கொடுத்த விவசாயி
 ................................................................
நெடுவாசல் போராட்டம் - நாளை 70 கிராம பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம்
 ................................................................
மத்திய அரசு மாநில அரசு காலில் மண்டியிட்டு கிடக்கிறது- நெடுவாசலில் நூதன போராட்டம்
 ................................................................
சேற்றில் சிக்கி 12 வயது சிறுவன் பலி!
 ................................................................
சுயம்பீஸ்வரர் ஆலயத்தில் விலை உயர்ந்த மரகத லிங்கம் சிலை திருட்டு! (படம்)
 ................................................................
இந்தியில் கடவுச்சீட்டு வழங்கினால், தமிழிலும் வழங்க வேண்டும்: ராமதாஸ்
 ................................................................
கையடக்க செயற்கைகோள் உருவாக்கிய ரிபாத் ஷாரூக் ரூ.10 லட்சம் பரிசு
 ................................................................
உள்ளாட்சி அமைப்புகளின் தனி அதிகாரிகளின் பதவிகள் 6 மாத காலத்துக்கு நீட்டிப்பு!
 ................................................................
மாநிலப்பாட மாணவர்களுக்கு 85% ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது: அன்புமணி ராமதாஸ்
 ................................................................
உருண்டு, புரண்டு மனு அளிக்கும் போராட்டம்: தீபா ஆதரவாளர்கள் கைது! (படங்கள்)
 ................................................................
அ.தி.மு.க பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!
 ................................................................
கடலூர் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி 10 கிராம மக்கள் போராட்டம்!
 ................................................................
கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை உடனே செயல்படுத்துக: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
 ................................................................
பிரேத பரிசோதனை செய்ய பணம் கேட்ட மருத்துவரை கண்டித்து சாலை மறியல்
 ................................................................
செயற்கைக்கோளில் புதுமை படைத்த முகமது ரிஃபோத் ஷாரூவுக்கு வேல்முருகன் பாராட்டு!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (10:8 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (10:8 IST)


கேள்வி எழுப்பாமல் வாய் மூடி மவுனம் காப்பது ஏன்? தமிழக அரசுக்கு வேல்முருகன் கண்டனம்

தமிழக மீனவர்கள், விவசாயிகள் மற்றும் ஹைட்ரோ கார்பன் பிரச்சனைகளில் மத்திய அரசு உறுதியளித்தபடி எந்த   நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை! தமிழக அரசு இதுகுறித்து கேள்வி எழுப்பாதது ஏன்? இதில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய தமிழக அரசு, வாய் மூடி தொடர்ந்து மவுனம் காப்பதன் காரணமும் புரியவில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: 

மத்திய, தமிழக அரசுகளின் விரும்பத் தகாத இந்தப் போக்கை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை மத்திய அரசு தான் உறுதியளித்தபடி மேற்கண்ட பிரச்சனைகளில் விரைந்து மேல்நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலுமிருந்து போராட்டத்திற்கு ஆதரவு குவிந்தது.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கரும் அங்கு வந்தனர்.

தமிழக அரசு இந்தத் திட்டத்தை அனுமதிக்காது என முதலமைச்சர் உறுதியளித்திருக்கிறார் என்றார் விஜயபாஸ்கர்.

மக்கள் விரும்பாததை மத்திய அரசு செயல்படுத்தாது என்றும் போராட்ட பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரை சந்திக்க வைப்பதாகவும் சொன்னார் ராதாகிருஷ்ணன்.

இருவரின் வாக்குறுதிகளை வைத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

ஆனால் நேற்று இது குறித்த ஒரு கேள்விக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளிக்கையில், அந்தத் திட்டத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது, இதை மக்களை சந்தித்து அவர்களிடம் எடுத்துச் சொல்வோம் என்றுதான் கூறினார். இதன் மூலம் நெடுவாசல் மக்களுக்கு வெற்று வாக்குறுதிதான் வழங்கப்பட்டதோ என்றே நினைக்கத் தோன்றுகிறது.

நெடுவாசலைச் சுற்றியுள்ள ஊர்களில் போராட்டம் இன்றளவும் தொடர்வதும் இதனால்தானோ என்றும் ஆகிறது.

கடந்த ஆறாம் தேதியன்று 21 வயது இளைஞரான தமிழக மீனவர் பிரிட்ஜோவை இந்தியக் கடற்பரப்புக்குள்ளேயே வந்து கொடூரமாக சுட்டுக் கொன்றது இலங்கைக் கடற்படை.

சுட்டுக் கொன்ற இலங்கைக் கடற்படையினரைக் கைது செய்து கொண்டுவந்து விசாரணை மேற்கொள்ளுமாறும் மீனவர் பிரச்சனையை நிரந்தரமாகத் தீர்க்குமாறும் தங்கச்சிமடத்தில் போராட்டம் நடைபெற்றது.

மத்திய அமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்மலா சீதாராமன் போராட்ட களத்திற்கு வந்தனர்.

இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இனி தமிழக மீனவர் மீது கைவைப்பதில்லை என்று இலங்கை சொல்லியிருப்பதாகவும் மீனவர் பிரதிநிதிகளை டெல்லிக்கு அழைத்துச் சென்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுடன் பேச வைப்பதாகவும் அமைச்சர்கள் உறுதியளித்ததன் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

11 நாட்கள் கழித்து மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் சென்றனர். ஆனால் மத்திய அமைச்சர்கள் சொன்னதற்கு நேர்மாறாகவே நடந்தது.

400 படகுகளில் சென்றிருந்த 3000 மீனவர்களையும் கற்களை வீசியும் தடிகளைக் கொண்டு தாக்கியும் வலைகளை அறுத்தும் வெறியாட்டம் ஆடியது சிங்கள கடற்படை. இதனால் லட்சக்கணக்கில் உடமை சேதம் ஏற்பட்டதுடன் தொழிலையே செய்ய முடியாமல் திரும்ப வேண்டியதானது.

இதற்கிடையில் பொன்.ராதாகிருஷ்ணன் தான் கூறியபடி மீனவர் பிரதிநிதிகளை டெல்லிக்கும் அழைத்துச் சென்றார். அங்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்கும் முன்பாகவே இலங்கை வெளியுறத்துறை அமைச்சர் மங்கள சமரவீராவின் செய்தி ஊடகங்களில் வெளியானது.

அந்தச் செய்தியில் அவர், பிரிட்ஜோ கொல்லப்பட்டதில் இலங்கைக்குத் தொடர்பில்லை, இலங்கை கடற்கடையினர் துப்பாக்கிப் பிரயோகமே செய்யவில்லை என்கிறார்.

மங்கள சமரவீராவின் இந்தப் பேச்சுக்கு இந்தியத் தரப்பிலிருந்து எந்த எதிர்வினையும் இல்லை. எனவே பிரிட்ஜோ படுகொலையில் நடவடிக்கை எடுப்பதாக மத்திய அரசு சொல்வதை எப்படி புரிந்துகொள்வது?

டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிரே கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் தமிழக விவசாயிகள். நேற்று அங்கும் ஆஜரான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மறுநாள் வேளாண்துறை அமைச்சரோடு பேச வைப்பதாகக் கூறி போராட்டத்தை முடித்துக் கொள்ளச் செய்தார்.

ஆனால் அமைச்சரவைச் செயலர், விவசாயிகளிடம் கடனை திருப்பிச் செலுத்துமாறு கண்டிப்பு காட்ட வேண்டாம் என்று கடிதம் அனுப்பியிருக்கிறோம் என்று மட்டுமே சொல்கிறார்.

இதுதான் விவசாயிகளின் பிரச்சனைக்கான தீர்வா என்பதுதான் நமது கேள்வி.

அதேநேரம் இங்கு தமிழகத்தில் ஜெயம்கொண்டம் அருகே ஒஎன்ஜிசியின் ஆழ்துளை எரிவாயுக் குழாயிலிருந்து எண்ணெயும் புகையும் கசிந்து பீறிட்டதைக் கண்டு அச்சமுற்று, அத்திட்டத்தினை அகற்றக் கோரி போராடிய விவசாயிகளை தமிழக காவல்துறை கைது செய்கிறது.

இப்படி தமிழகம் தொடர்பான எல்லாப் பிரச்சனைகளிலுமே உறுதியளித்தபடி நடவடிக்கை எடுக்காமல் வாய் வார்த்தைகளால் போக்குக் காட்டிக் காட்டியே போய்க்கொண்டிருப்பதுதான் மத்திய அரசின் வாடிக்கையாயிருக்கிறது.
இது மாறியாக வேண்டும். மத்திய அரசு தன் வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும்.

உயிரிழப்பு மற்றும் வாழ்வாதாரப் பிரச்சனைகளில்கூட செயலற்றிருப்பதென்றால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி அதை வன்மையாகக் கண்டிக்கிறது. பாரபட்சம் பார்க்காமல் தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க ஆவன செய்ய வேண்டுமாய் வலியுறுத்துகிறது.

தமிழக அரசும் தன் பொறுப்பை உணர்ந்து பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதையும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துக் கொள்கிறது. 





தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :