Add1
logo
மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம் || 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் || ’மேலேயும் ஆபத்து - கீழேயும் ஆபத்து’ என்ற நிலையில் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளோ?:ஸ்டாலின் || அமர்நாத் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! பெ.மணியரசன் கோரிக்கை || பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி! || தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வரவேற்கத்தக்கது! ராமதாசு || அரசு மருத்துவமனைகளில் இயங்கும் தனியார் அமரர் ஊர்திகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரிக்கை || மதுரையில் SDPI மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! (படங்கள்) || மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் போராட்டம் அறிவிப்பு || நாகர்கோவிலில் கல்லூரி வேன் விபத்தில் அப்பளமாக நொறுங்கியது - 4 மாணவிகள் பலி! (படங்கள்) || தீபா மனு ஏற்பு - உற்சாகமாக கோஷமிட்ட ஆதரவாளர்கள் (படங்கள்) || தினகரன் மனு ஏற்பு - தேர்தல் அதிகாரியின் ஆணையை காண்பித்த ஆதரவாளர்கள் (படங்கள்) || டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் விஷால், பிரகாஷ்ராஜ் பங்கேற்பு! ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (9:31 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (9:31 IST)


தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவரது படகில் சென்ற மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தனர். தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தியதாகவும், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும் கூறி 10 பேரையும் கைது செய்த இலங்கை கடற்படையினர், படகுடன் அவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இலங்கை கடற்படையால் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து, பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மீனவர்கள், கடந்த சில நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :