Add1
logo
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி || போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன் || சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி! || வருமான வரித்துறையை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: தீபா ஆவேசம் || ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன் || நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் ||
தமிழகம்
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா
 ................................................................
போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்)
 ................................................................
அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின்
 ................................................................
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுகை புத்தக திருவிழா!ஆட்சியர் பேச்சு! (படங்கள்)
 ................................................................
டிரீம் கேர்ள்! துபாயில் நடிகை ஹேமமாலினி வெளியிட்ட நூல்! (படங்கள்)
 ................................................................
விசாரணை முடிந்து வெளியே வரும் ஷகிலா, ராஜராஜன்,நரசிம்மன், பூங்குன்றன்!(படங்கள்)
 ................................................................
முல்லைப்பெரியாறு; பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும்:ராமதாஸ்
 ................................................................
பயிர்காப்பீடு செய்ய அலைக்கழிக்கப்படும் விவசாயிகள்! வெயிலில் மயங்கிய 5 பேர் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் காங். தலைவர் வி.மகேஸ்வரன்!
 ................................................................
தமிழக மீனவர்கள் அடுத்தடுத்து கைது! இந்திய இலங்கை கடற்படைகளின் கூட்டுசதியா? திருமாவளவன் கேள்வி
 ................................................................
நலிந்தோருக்கு 2 லட்சம் நிதி உதவி வழங்கினார் கலைஞர்!
 ................................................................
22ல் அனைத்து ரேஷன் கடைகளின் முன்பு திமுக கண்டன ஆர்ப்பாட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு
 ................................................................
வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு வந்த இளவரசி மருமகன்
 ................................................................
அரசு ஒரு தெளிவான நிலைப்பாட்டோடு தெளிந்த நீரோடை போல் உள்ளது; ஜெயக்குமார் பேட்டி
 ................................................................
டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு
 ................................................................
தமிழகத்தில் இதுவரை 800 போலி மருத்துவர்கள் கைது; விஜயபாஸ்கர்
 ................................................................
கண்டதுகளும் வந்து மேயும் புறம்போக்கு நிலமா தமிழ்நாடு? - பண்ருட்டி வேல்முருகன்
 ................................................................
திருச்சி விமான நிலையம் விரிவாகத்திற்காக 42 வீடுகள் இடித்து அகற்ற நோட்டிஸ்!
 ................................................................
அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சிக்கு அடிகோலிடும் மத்திய அரசு! - இரா.அதியமான் கண்டனம்
 ................................................................
சென்னை நகைக்கடையில் பட்டப்பகலில் கொள்ளை!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (9:21 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (9:21 IST)


விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

டெல்லியில் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார். 

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

''நம் நாடு விவசாய நாடு. விவசாயத்தை நம்பித்தான் ஒட்டு மொத்த மக்கள் வாழ்கிறார்கள்.

எனவே விவசாயம் செழிப்பாக நடைபெற்றால்தான் மக்கள் செழிப்பாக வாழ முடியும், நாடும் வளர்ச்சிப் பாதையில் செல்லும்.

ஆனால் போதிய மழையின்மை, கடும் வறட்சி, புயல் பாதிப்பு, அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை முறையாக, முழுமையாக தர மறுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் விவசாயம் படிப்படியாக செழிப்பிழந்து வருகிறது.

இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி, மனமுடைந்து உயிரிழந்திருக்கிறார்கள்.

இச்சூழலில் தமிழக அரசு உயிரிழந்த அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவில்லை.

தமிழக வறட்சிக்கும், புயல் பாதிப்புக்கும் மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை. மேலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் அனைத்துவிதமான விவசாயக் கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை.

குறிப்பாக மத்திய அரசு நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் அண்டை மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெற்றுத் தரவில்லை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை, காவிரி நதிநீர் ஒழுங்காற்று குழு அமைக்கவில்லை.

இது போன்ற சூழலில் தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி போராடினார்கள்.

எந்தவித பலனும் கிடைக்கப்பெறாத சூழலில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் டெல்லியில் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக தங்களை வருத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் விதவிதமான முறைகளில் விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகிறார்கள்.

முக்கியமாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிடாமல் இருப்பதோடு, வருகின்ற தண்ணீரின் அளவைக் குறைப்பதற்காக அணை கட்டும் முயற்சிக்கு அனுமதி அளிக்கக் கூடாது, வறட்சி நிவாரணம் முழுமையாக கொடுக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக போராடி வருகிறார்கள்.

நம் நாட்டின் தலைநகரமான டெல்லியில் தமிழக விவசாயிகள் - ஆண்களும், பெண்களும் பல சோதனைகளைத் தாங்கிக்கொண்டு தமிழக விவசாயிகளுக்காக, பொது மக்களுக்காகப் போராடுவதைப் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.

தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதுமான விவசாயிகள் நலன் காக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான் இந்தப் போராட்டம் நடைபெறுகிறது.

எனவே மத்திய பாஜக அரசு இனியும் பொறுமை காக்க வேண்டாம், காலம் தாழ்த்த வேண்டாம் - உடனடியாக தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் மத்திய அரசு விவசாயத்தொழிலைக் காப்பாற்றிடவும், விவசாயிகள் நலன் காத்திடவும் இன்னும் பல்வேறு நலத்திட்டங்களையும், சலுகைகளையும் அறிவித்து, செயல்படுத்தி மாநில மக்கள் நலன் காத்து, நாட்டின் வளர்ச்சி மேம்படச் செய்ய வேண்டும்'' இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :