Add1
logo
மத்திய தொலை தொடர்பு இணை அமைச்சர் மனோஜ் சின்ஹாவுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம் || 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் || ’மேலேயும் ஆபத்து - கீழேயும் ஆபத்து’ என்ற நிலையில் இந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளோ?:ஸ்டாலின் || அமர்நாத் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! பெ.மணியரசன் கோரிக்கை || பண்ருட்டி அருகே மின்சாரம் தாக்கி 3 மாடுகள் பலி! || தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசியல் சட்ட அங்கீகாரம் வரவேற்கத்தக்கது! ராமதாசு || அரசு மருத்துவமனைகளில் இயங்கும் தனியார் அமரர் ஊர்திகளுக்கான கட்டணத்தை அரசே நிர்ணயிக்க கோரிக்கை || மதுரையில் SDPI மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! (படங்கள்) || மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மார்க்சிஸ்ட் போராட்டம் அறிவிப்பு || நாகர்கோவிலில் கல்லூரி வேன் விபத்தில் அப்பளமாக நொறுங்கியது - 4 மாணவிகள் பலி! (படங்கள்) || தீபா மனு ஏற்பு - உற்சாகமாக கோஷமிட்ட ஆதரவாளர்கள் (படங்கள்) || தினகரன் மனு ஏற்பு - தேர்தல் அதிகாரியின் ஆணையை காண்பித்த ஆதரவாளர்கள் (படங்கள்) || டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் விஷால், பிரகாஷ்ராஜ் பங்கேற்பு! ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (3:22 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (3:22 IST)


பாக்.,கில் மாயமான இந்திய மத குருக்கள் தாயகம் வந்தனர்

டெல்லி ஹஸ்ரத் நிஜாமுதீன் ஆலியா தர்காவில் தலைமை குருவாக இருப்பவர் சையத் ஆசிப் நிசாமி (வயது 80). இவரும், அவரது உறவினரான மற்றொரு மத குரு நசிம் அலி நிசாமியும் கடந்த 8–ந் தேதி பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றனர். ஆசிப் நிசாமியின் சகோதரியை பார்ப்பதற்காக சென்ற அவர்கள் கடந்த வாரம் அங்கு மாயமாகினர்.

இது குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். அதன்படி வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் பிரதமரின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அசிசிடம் இந்த பிரச்சினையை எடுத்துவைத்தார். 2 மத குருக்களையும் கண்டுபிடித்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்குமாறு அவர் வேண்டுகோள்வைத்தார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் அதிகாரிகள் 2 மத குருக்களையும் கண்டுபிடித்து டெல்லிக்கு அனுப்பி வைத்தனர். டெல்லி விமான நிலையத்தில் நேற்று வந்து இறங்கிய அவர்களை உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வரவேற்றனர். இருவரையும் பத்திரமாக மீட்டதற்காக மத்திய அரசுக்கு நன்றி கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :