Add1
logo
நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை சந்தைகளில் விற்க தடை! || தாலுக்கா பிரிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் || உரிய அனுமதி இல்லமால் வீட்டில் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து || தமிழகத்தில் புதிய வட்டங்கள் (தாலுக்காக்கள்) உதயம் || சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் குழப்பம் - மாணவர்கள் கடும் பாதிப்பு! || கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் || ஒருவர்க்கு இரட்டை பதவி முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் || ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அடித்து உதைத்த நெடுவாசல் மக்கள் (படங்கள்) || ரஜினி கருத்து தவறுமில்லை, வித்தியாசமானதுமில்லை: கமல் பேட்டி || பள்ளிகள் திறப்பு ஜூன் 7க்கு தள்ளிவைப்பு: செங்கோட்டையன் பேட்டி || ஆதாயம் பெறுவதற்கான முயற்சியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு குறித்து விஜயகாந்த் அறிக்கை || தூத்துக்குடி பெரியசாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்) || சென்னை கமலாலயத்தில் மத்திய பாஜக அரசின் 4ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம் ||
தமிழகம்
தாலுக்கா பிரிப்புக்கு எதிர்ப்பு: 1000க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்
 ................................................................
உரிய அனுமதி இல்லமால் வீட்டில் இயங்கி வந்த தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
 ................................................................
தமிழகத்தில் புதிய வட்டங்கள் (தாலுக்காக்கள்) உதயம்
 ................................................................
கபடி போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை வைகோவைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்
 ................................................................
ஒருவர்க்கு இரட்டை பதவி முறையை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஒ.என்.ஜி.சி நிறுவனத்தை அடித்து உதைத்த நெடுவாசல் மக்கள் (படங்கள்)
 ................................................................
ஆதாயம் பெறுவதற்கான முயற்சியா? அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு குறித்து விஜயகாந்த் அறிக்கை
 ................................................................
தூத்துக்குடி பெரியசாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
சென்னை கமலாலயத்தில் மத்திய பாஜக அரசின் 4ஆம் ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்
 ................................................................
சென்னை தி.நகரில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு
 ................................................................
FC அபராதத் தொகையை ரத்து செய்யக்கோரி ஆட்டோ - டாக்சி ஓட்டுநர் சங்கம் ஆர்ப்பாட்டம்
 ................................................................
என்.பெரியசாமி மறைவு: திருநாவுக்கரசர் இரங்கல்
 ................................................................
என்.பெரியசாமி மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்
 ................................................................
நாமக்கல் ஒப்பந்தாரர் தற்கொலை - சிபிசிஐடி விசாரணை
 ................................................................
தூத்துக்குடி மாவட்ட திமுக செயலாளர் என்.பெரியசாமி மறைவு! வைகோ அஞ்சலி
 ................................................................
என்.பெரியசாமி மறைவு: திமுக சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
வேலூர் அருகே கோயிலில் குழந்தை கடத்தல்
 ................................................................
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு லஞ்சம் - உறவினர்கள் குற்றஞ்சாட்டு
 ................................................................
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்விற்க்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மறுப்பு
 ................................................................
வங்கக் கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு
 ................................................................
குன்னூரில் கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக நாளை பழக்கண்காட்சி
 ................................................................
கேரளாவிற்கு பஸ்சில் புகையிலை கடத்தியவர் கைது
 ................................................................
சுவாதி கொலையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தொடர்பு வழக்கறிஞர் ராமராஜ் குற்றச்சாட்டு
 ................................................................
உரத்திற்க்கு 12% வரி விதிப்பை மத்திய அரசு கைவிட வேண்டும்- பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 21, மார்ச் 2017 (0:45 IST)
மாற்றம் செய்த நாள் :21, மார்ச் 2017 (0:45 IST)


தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின்
கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுக! - வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கையில்,

தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.50 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்ட 01.09.2013 நாளிலிருந்து நிர்வாகத்தால் ஓய்வூதியருக்கான பி.எப். தொகை, பணப் பயன்கள், விடுப்பு தொகை போன்றவற்றின் நிலுவைத் தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. முந்தைய ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், எந்தவித பணப் பயனும் கிடைக்கப் பெறாமலேயே இறந்து போனார்கள் என்ற தகவல் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது. 

இந்த மாதம் மார்ச்சில் இதுவரையில் ஓய்வூதியருக்கு ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருவது கண்டனத்துக்கு உரியது. போக்குவரத்துத்துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதாக உயர்நிலை அலுவலர்கள் காரணம் கூறுகின்றனர்.

டீசல் விலை உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவைவிட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்துத்துறை ஒரு நாளைக்கு ரூ.6.58 கோடி இழப்பை சந்திக்க வேண்டிய அவல சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. 

இதனை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவு இனங்களுக்கு இடையிலான இழப்புத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஓய்வூதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அக்கோரிக்கைகளை கவனத்தில்கொள்ளவில்லை.

உரிய நிதி ஆதாரம் இன்றி தத்தளிக்கின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நியாயமானது ஆகும். நடப்பு 2017-18 நிதிநிலை அறிக்கையில், 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

ஆனால், போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பணப் பலன்கள் உள்ளிட்ட 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த சுமார் 5500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் போக்குவரத்துத்துறையில் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை இந்த மாதம் வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அறைகூவல் விடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றன. 

தமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்கள், பேருந்து பணிமனைகள் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் மூன்று நாட்களாக அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். 

ஓய்வூதியருக்கான பணப் பயன்களை உடனடியாக வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் போக்வரத்துத்துறைத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான நிதி ரூ.5500 கோடியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :