Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
தமிழகம்
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர்
 ................................................................
கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம்
 ................................................................
வாக்கு சேகரிக்கும் போராட்டம்
 ................................................................
மாட்டு வண்டியில் ஏறி போராட்டம்
 ................................................................
சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி
 ................................................................
கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ்
 ................................................................
கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்
 ................................................................
கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண்
 ................................................................
கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார்
 ................................................................
தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை
 ................................................................
துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது
 ................................................................
பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை
 ................................................................
நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு
 ................................................................
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (19:16 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (19:16 IST)


“கெட்டதை மட்டுமே தேடித் தேடிக் கெட்டுப் போகிறார்கள்!”
-சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை!

“காலம் கெட்டுக் கிடக்கிறது..” என்று நொந்து போய்ச் சொன்னார் ஆமத்தூர் காவல் நிலையத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்த ஒரு பெரியவர். அதற்குக் காரணம், விருதுநகர் மாவட்டம் - செங்குன்றாபுரத்தில் 11 வயதே ஆன கோகுல்நாத்துக்கு நடந்த கொடுமைதான்.

செங்குன்றாபுரத்தைச் சேர்ந்த ராணி என்பவர் வருவாய்த்துறையில் உதவியாளராகப் பணியாற்றுகிறார். இவரது மகன் கோகுல்நாத் 6-ஆம் வகுப்பு படிக்கிறான். பள்ளியிலிருந்து திரும்பிய அவன், இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக, வீட்டுக்குப் பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்குச் சென்றிருக்கிறான். அப்போது, செல்வகணேஷ் என்ற 20 வயது இளைஞன் கோகுல்நாத்தை நெருங்கியிருக்கிறான். “என்னோட போன்ல சூப்பரான வீடியோ இருக்கு.. பாருடா..” என்று வற்புறுத்திக் காட்டியிருக்கிறான். அந்த வீடியோவில், ஓரினச் சேர்க்கை எனப்படும் ஆண்களுக்கிடையிலான உறவுக் காட்சிகள் இருந்திருக்கின்றன. இதைப் பார்த்து பயந்துபோன கோகுல்நாத், செல்வகணேஷிடமிருந்து தப்பிக்கப் பார்த்திருக்கிறான். செல்வகணேஷோ, “வீடியோல்ல பார்த்தல்ல.. இதெல்லாம் தப்பே இல்ல.. நாஞ் சொல்லுறத கேளு..” என்று முரண்டுபிடித்து, சிறுவனிடம் அத்துமீறியிருக்கிறான். அதன் பிறகு, அழுதுகொண்டே வீட்டுக்கு வந்த கோகுல்நாத், நடந்ததை அம்மா ராணியிடம் கூறியிருக்கிறான். இதனைத் தொடர்ந்து, செல்வகணேஷ் மீது புகார் தரப்பட்டு, அவன் கைதாகி இருக்கிறான்.



செல்வகணேஷ் குறித்து செங்குன்றாபுரம் வாசிகள் இப்படிச் சொல்கிறார்கள் -
“செல்வகணேசுக்கு அப்பா இல்ல.. அம்மா மட்டும்தான்.. தண்ணியடிப்பான்.. கஞ்சா குடிப்பான்.. அப்பப்ப ஆடு மாடு மேய்ச்சிக்கிட்டிருப்பான்.. கிடைச்ச வேலைக்குப் போவான்.. எந்த நேரமும் போனை நோண்டிக்கிட்டிருப்பான். இந்தக் கருமத்த பார்த்துப் பார்த்துத்தான் வெறிபிடி பிடிச்சி இப்படி பண்ணிட்டான் போல.” என்றார்கள் ஆவேசத்துடன்.

காவல்துறையின் உயர் அதிகாரியோ “ஓரினச் சேர்க்கையாளர்கள் பரஸ்பர சம்மதத்துடன் உறவு வைத்துக் கொண்டது நிரூபணம் ஆனாலே, சட்ட விரோதமானது என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் 377-வது பிரிவின் படி நடவடிக்கை எடுக்க முடியும். ஓரினச் சேர்க்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. இங்கு நடந்ததோ, சிறுவன் மீதான பலாத்காரம். இது கொடூரமானது. இண்டர்நெட்டில் கண்டதையும் பார்த்துக் கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள் இளைஞர்களில் பலரும்.” என்று சீறலாகச் சொன்னார்.

இன்னொரு காவல்துறை அதிகாரியோ, “எங்கும் இண்டர்நெட் என்றாகி விட்டது. இந்த அதி நவீன தொழில்நுட்பத்தால் மனித சமுதாயம் அடைந்து வரும் பலன்கள் கணக்கில் அடங்காதவை. ஆடு மேய்ப்பவர் கையிலும் செல்போன் என்பதை அறிவியல் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியாகவே கருத வேண்டும். நல்லது, கெட்டது என்பது அனைத்திலும் உண்டு.

இண்டர்நெட்டிலும் உண்டு. கெட்டதை மட்டுமே தேடித் தேடி கெட்டுப் போனவர்கள், இண்டர்நெட் இல்லாத காலத்திலும் இருந்திருக்கிறார்கள். இப்போதும் இருக்கிறார்கள்.” என்று யதார்த்தத்தைச் சொன்னார்.

நம் நாட்டில் எதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அறியாதவர்களாக இருக்கிறார்கள் அனேகம் பேர். இண்டர்நெட்டுக்கு மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :