Add1
logo
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி || போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன் || சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி! || வருமான வரித்துறையை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: தீபா ஆவேசம் || ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன் || நளினி தப்பித்து விடுவார் என தமிழக அரசு கூறியிருப்பது மனித நேயமற்ற செயல் : ஜவாஹிருல்லா || தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம் || போயஸ்கார்டனில் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் கைது! ( படங்கள்) || இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்! || போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு! || அமைச்சர்கள் எந்த உணர்வோடு பேசுகிறார்கள் என்பதை புரியவில்லை:ஸ்டாலின் ||
முக்கிய செய்திகள்
ஜெ. அறையை சோதனை செய்ய அனுமதிக்கவில்லை: விவேக் பேட்டி
 ................................................................
போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட சோதனை மத்திய அரசின் திட்டமிட்ட சதி: தங்க தமிழ்ச்செல்வன்
 ................................................................
போயஸ் தோட்டத்தில் சோதனை செய்தது மிகுந்த மன வேதனை அளிக்கிறது: மைத்ரேயன்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜன் மருத்துவமனையில் அனுமதி!
 ................................................................
வருமான வரித்துறையை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: தீபா ஆவேசம்
 ................................................................
ஜெ. ஆன்மாவுக்கு செய்யப்படும் துரோகத்தின் பின்னணியில் ஈபிஎஸ், ஓபிஎஸ்: தினகரன்
 ................................................................
தினகரன் அணி மாஜி எம்.எல்.ஏ மாரடைப்பால் மரணம்
 ................................................................
இன்றைய(17.11.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை! போலீஸ் குவிப்பு!
 ................................................................
கோட்சேவுக்கு தமிழ்நாட்டில் வீர வணக்க விழாவா? அரசு அனுமதிக்கிறதா?வீரமணி கண்டனம்
 ................................................................
சசிகலா கணவர் நடராஜனுக்கு 2 ஆண்டு சிறை; உறுதி செய்த ஐகோர்ட்!
 ................................................................
டி.டி.வி.தினகரனை அதிர்ச்சியடைய வைத்த தீர்ப்பு!
 ................................................................
‘மோடியால் இந்தியப் பொருளாதாரம் ஒற்றைக் காலில் நிற்கிறது!’ - யஷ்வந்த் சின்கா
 ................................................................
பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின்
 ................................................................
ஆளுநரின் செயல்பாடு குறித்து கவலைப்பட வேண்டியவர்களே கவலைப்படவில்லை: தமிழிசை
 ................................................................
ஸ்டாலின் வேண்டுமென்றே குறை கூறுகிறார்: அமைச்சர் தங்கமணி
 ................................................................
ஆளுநருக்கு வந்த மத்திய அரசின் உத்தரவு!
 ................................................................
குட்கா முதலாளிகளைக் காப்பாற்றிய போலீஸ் உயரதிகாரிகள்!
 ................................................................
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்துவிட்டதோ? நாஞ்சில் சம்பத்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (18:1 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (18:1 IST)


வீட்டில் சிட்டுகுருவிகளின் சத்தம், குழந்தையின் மழலைபோல் இருக்கும் (படங்கள்)
 
பறவைகள் சத்தம் என்றாலே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான மனதை மகிழ்விக்கும் நிகழ்வாக இருக்கும். இதில் சிட்டுகுருவி மனிதனின் வாழ்விடத்திலே கூடுகட்டி வாழ்வதும் அதனுடைய சத்தங்கள் மனதுக்கு இனிமையாகவும் அமையும். இப்படியாக மனதை கொள்ளை கொண்ட சிட்டுகுருவிகள் கடந்த சில ஆண்டுகளாக நம்மிடையே விலகி சென்று கொண்டு இருப்பதுதான் பறவை,இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் வேதனையடைய செய்துள்ளது.



நம்நாட்டில் 1300க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் வாழ்ந்து வந்தது. தற்போது உலக நாடுகளில் 34 வகையான பறைகள் மட்டுமே வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அழிந்து வரும் பறவை இனங்களில் சிட்டு குருவியும் ஒன்று. இதனால் (மார்ச்20 உலகச்சிட்டுகுருவிகள் தினம்)அனுசரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் 100க்கும் மேற்பட்ட பறவைகள் 20க்கும் மேற்பட்ட சிட்டுகுருவிகளை வீட்டிலே வைத்து வளர்த்து கொண்டு அதன் இன்பமொழிகளை தினம் தினம் கேட்டு ரசித்து வரும்  சிதம்பரம் கொத்தங்குடி ஊராட்சியில் சரஸ்வதி அம்மாள் நகரில் வசிக்கும் ஹரிகுமார்  கூறுகையில் நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது எனது அப்பா கிளி உள்ளிட்ட பறவைகளை வளர்த்து வந்தார். அப்போதிலிருந்தே எனக்கு இந்த பறவைகளின் பேச்சு,பழக்கங்கள் பிடித்துவிட்டது. தற்போது நான் 100க்கும் மேற்பட்ட பறவைகளை வளர்த்து வருகிறேன். வீட்டில் இருக்கும் போது இந்த பறவைகளின் சத்தம் குழந்தைகளின் மழலை போல் இருக்கும். வெளியே சென்று வீட்டுக்கு வரும் போது என் வண்டி சத்தம் கேட்டாலே எல்லா பறவைகளும் என்னை வரவேற்பது போல் ஒரு சத்தமிடும். இது மனதுக்கு ரம்மியமாக இருக்கும். ஒரு நிமிடத்தில் அனைத்து கவலையும் மறக்கசெய்துவிடும். மற்றவர்கள் வந்தா இதுபோல செய்யாது.

இதிலே சிட்டுகுருவிகள் சரியாக தங்காமல் வந்துபோய்விடும் அதற்கு பல இடங்களில் ஆலோசனைகளை கேட்டேன் சிலர் செல்போன் கோபுரங்கள் என்றனர். பின்னர் அதே கோபுரத்தில் சிட்டுகுருவி கூடுகட்டி வாழ்வதை பார்த்தேன். தற்போது நகரிய வளர்ச்சியில் சிட்டுகுருவிகளுக்கும் பறவைகளுக்கும் சரியான உணவு கிடைக்கவில்லை அதனால் தான் அவைகள் வீடுகளுக்கு வருவது இல்லை என்று இறக்கை ஆர்வலர்கள் கூறினார்கள். இதனால் என் வீட்டுக்கு அருகில் இருந்த காலி இடத்தை விலைக்கு வாங்கி அதில் மா,வாழை,கொய்யா,சாத்துகுடி,மாதுளை,தென்னை உள்ளிட்ட கன்றுகளை வைத்து கெமிக்கல் மருந்து இல்லாமல் இயற்கை உரங்ளை கொண்டு வளர்த்து வருகிறேன். தற்போது மண்ணில் அதிக புழு காணப்படுகிறது, இயற்கையாக மரங்களிலே பழுக்கும் பழங்களை ருசிக்க பழம்திண்ணி வவ்வால் உள்ளிட்ட பல விதபறவைகள் வந்து செல்கிறது. இந்த பறவைகள் வருகையை பார்த்துதான் பழங்கள் பழுத்து உள்ளது என்று எங்களுக்கு தெரியும்.

பின்னர் அதன் பிறகு சிட்டுகுருவிகள் பல தோட்டத்தில் உள்ள புழுக்களை வந்து சாப்பிட்டு சென்றுவிடும். அதன்பிறகு வீட்டில் அதிகம் தங்குவது இல்லை. பின்னர் வீட்டில் உள்ள மூளைகளில் பானைகளை ஓட்டை போட்டு வைத்து டப்பாகளில் கம்பு உள்ளிட்ட தாணியங்களையும் அதன் அருகிலே தண்ணீர் வைத்துவிடுவேன், மேலும் விவசாயிகளிடம் நெல் பதறுகள் கட்டு  வாங்கிவந்து கட்டியுள்ளேன். பின்னர் நெல்லை தண்ணீரில் 10தினங்கள் ஊரவைத்து அந்த தண்ணீயை மட்டும் வைப்பேன் இது சிட்டுகுருவிகளுகு நன்கு பிடிக்கும் இதனால் தின்தோறும் இதனை குடிக்க அதிக சிட்டுகுருவிகள் இங்கு வந்து செல்லும் 20பதுக்கும் மேற்பட்ட சிட்டுகுருவிகள் இங்கேயே குஞ்சுபொறித்து சென்றுள்ளது.

பறவைகள் இயற்கை வளச்சிக்கும்,விவசாயஅபிவிருத்திக்கும் உறுதுணையாக உள்ளது. தற்போது தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வறட்சியான நிலை தான் உள்ளது. இதனால் பறவைகளுக்கு தேவையான உணவு தண்ணீ கிடைக்காமல் சிறமம் அடைகிறது. எனவே பறவைகளை காக்கும் விதமாக நகரம்,கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் வீட்டுக்கு மேல் அல்லது சுவரில் தாணியங்களை ஒரு தட்டில் வைத்து அதன் அருகிலே பாத்திரத்தில் தண்ணீ வைக்கவேண்டும் என்றார்.

-அ.காளிதாஸ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :