Add1
logo
தேர்தல் ஆணையம் நியாயமான தீர்ப்பை வழங்கியுள்ளது: ஈபிஎஸ் மகிழ்ச்சி || பள்ளிகளில் பாடமாகும் ராணி பத்மாவதியின் வரலாறு! - மபி. முதல்வர் அறிவிப்பு || Online Video || இரட்டை இலை விவகாரம்: தீர்ப்பு வழங்கவில்லை: தேர்தல் ஆணையம் || ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கே இரட்டை இலை? || விவேக் கைதாகிறாரா? || திரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம்! - இயக்குனர் சுசீந்திரன் || சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு || நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார் || தர்மயுத்தம் நடத்திய அமைச்சரின் தலையீடு: அன்புச்செழியன் மீது வழக்கே பாயாது: ராமதாஸ் || கந்துவட்டி கொடுமையை சட்டமும், சினிமாத்துறையும் தடுத்தாக வேண்டும்: கமலஹாசன் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்! ||
தமிழகம்
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்!
 ................................................................
தூத்துக்குடி டவர் லைனில் ஏறி தற்கொலை மிரட்டல்! - உண்மைப் பின்னணி என்ன?
 ................................................................
நடிகையுடன் வீடியோவில் இருப்பது நித்யானந்தா என தடயவியல் துறை உறுதி!
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபா மனு!
 ................................................................
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குக! - விஜயகாந்த்
 ................................................................
நீதிபதி கிருபாகரனை விமர்சித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய ஆசிரியர்கள்!
 ................................................................
பிற மாநிலத்தவரை தமிழக அரசுப் பணிகளில் அனுமதிக்கக் கூடாது: திருமாவளவன்
 ................................................................
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக ஆர்.கே.நகர் தேர்தல்?
 ................................................................
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: கடலோர காவல்படை மறுப்பு
 ................................................................
சர்க்கரை விலையேற்றத்தை கண்டித்து திமுக சார்பில் மாநிலம் தழுவிய முற்றுகை போராட்டம்
 ................................................................
“அடித்தே கொன்று விட்டது போலீஸ்..” -இருவரின் சாவுக்கு நியாயம் கேட்கும் கிராமம்!
 ................................................................
தமிழகம் வெகுவிரைவில் பாலைவனமாகி விடும்! அன்புமணி
 ................................................................
கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் போராட்டம்
 ................................................................
அரசு போக்குவரத்துத் துறையை மீட்குமாறு விஜயகாந்த் வலியுறுத்தல்
 ................................................................
ஆந்திராவுக்கு செல்லும் கரும்பு: தமிழக அரசுக்கு ராமதாஸ் கண்டனம்
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (17:53 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (18:11 IST)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி, 
நெடுவாசல் போராட்டக்குழுவினர் 10 பேர் டெல்லி பயணம் 

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை 22 ந் தேதி  சந்திக்க போராட்டக்குழுவினர் 10 போ் டெல்லி செல்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்க கடந்த பிப்ரவரி 15 ந் தேதி மத்திய அரசு கர்நாடகாவைச் சேர்ந்த ஜெம் என்ற தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுத்து ஒப்புதல் அளித்தது. 

இந்த அறிவிப்பு வெளியான மறுநாள் இந்த திட்டத்தால் நெடுவாசல் சுற்றியுள்ள 100 க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் குறைந்து சுற்றசூழல் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்றும் அதனால் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். 22 நாட்கள் வரை நெடுவாசலில் நடந்த போராட்டம் மத்திய, மாநில அரசுகளின் அமைச்சர்களின் சமாதான பேச்சுவார்த்தைக்கு பிறகு பள்ளி மாணவர்களின் தேர்வு பாதிக்கப்படுவதாலும் மத்திய மாநில அரசுகள் கேட்டுக் கொண்டதாலும் தற்காலிகமாக போராட்டம் ரத்து செய்யப்படுவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர் ஆனால் அருகில் உள்ள நல்லாண்டார்கொல்லை கிராமத்தில் 33 நாட்களாகவும் வடகாடு கிராமத்தில் 16 நாட்களாகவும் இரவு பகலாக பல்வேறு வடிவங்களில் போராட்டம் தொடர்கிறது.

இந்த நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நெடுவாசல் போராட்டக் களத்திற்கு வந்த போது.. மக்களைப் பாதிக்கும் எந்த திட்டத்தையும் மோடி அரசு செய்யாது அதனால் போராட்டத்தை கைவிட்டு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க வாருங்கள் நல்ல தீர்வோடு வரலாம். என்று போராட்டக்குழுவினருக்கு அழைப்பு கொடுத்தார். அதன்படி நாளை 22 ந் தேதி டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரை நெடுவாசல் போராட்டக்குழுவினர் சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதற்காக 21 ந் தேதி மாலை 10 பேர்கள் கொண்ட போராட்டக்குழுவினர் டெல்லி செல்கின்றனர். 

போராட்டக்குழுவினர் கூறும் போது.. நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் மட்டுமல்ல வேறு எங்கும் இந்த திட்டம் செயல்படுத்தக் கூடாது. அதனால விவசாயம் பாதிக்கப்படும் என்பதை மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவோம். அதற்காக  நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள பல கிராமங்களின் பிரதிநிதிகள் சுமார் 10 பேர்கள் கொண்ட குழுவினர் டெல்லி செல்கிறோம். நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறோம் என்றனர்.

-இரா.பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :