Add1
logo
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன் || பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம் || தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு || ஷாப்பிங் மாலில் சசிகலாவை பார்த்தேன்: கர்நாடக காங்கிரஸ் முத்துமாணிக்கம் || தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள் || சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர் || ஜெகன் மீது வழக்குப்பதிய தேர்தல் ஆணையம் உத்தரவு || கோவா, டெல்லி, ஆந்திர மாநில சட்டசபை இடைத்தேர்தல்கள்: வாக்குப்பதிவின் சதவீதங்கள் || அமெரிக்கா தேசிய பூங்காவில் பாண்டா கரடியின் பிறந்தநாள் உற்சாகம் || உலக பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் தொடர்: அடுத்த சுற்றுக்கு முன்னேறிய சிந்து || காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்) || பாஜக நெருக்கடி; பாண்டி to பெங்களூரு செல்லும் தினகரன் எம்.எல்.ஏ.க்கள்! || திவாகரன் தலைமையில் எஸ்.காமராஜ் வீட்டில் திடீர் ஆலோசனை! ||
தமிழகம்
நீட் தேர்வு விவகாரம்: தமிழக மாணவர்கள் மீது மத்திய-மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை - ஜி.கே.வாசன்
 ................................................................
பதிவு துறை ஐ.ஜியாக குமரகுருபரன் நியமனம்
 ................................................................
தபால் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம்: பணிகள் பாதிப்பு
 ................................................................
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்
 ................................................................
சின்னசேலத்தில் டிராக்டர் மீது ரயில் மோதிய விபத்து: 300 பேர் உயிர் தப்பினர்
 ................................................................
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தினகரன் கொடும்பாவி எரிப்பு (படங்கள்)
 ................................................................
மயிலாப்பூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
விநாயகர் சதுர்த்தி விழா; விதிகளை வகுக்க ஐகோர்ட் உத்தரவு
 ................................................................
அமைச்சர்கள் சென்னை வர அவசர உத்தரவு!
 ................................................................
திவாகரனுக்கு சொந்தமான பேருந்து கண்ணாடி உடைப்பு!
 ................................................................
திமுக போராட்டத்துக்கு திவாகரன் ஆதரவு
 ................................................................
தினகரன் - காமராஜ் ஆதரவாளர்கள் மோதல் தடுத்து நிறுத்தம்
 ................................................................
திருவாரூரில் தினகரன் உருவபொம்மை எரிப்பு
 ................................................................
மாநில அரசு இனியும் தலையாட்டிப் பொம்மைதானா?: கி.வீரமணி
 ................................................................
தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது:விஜயகாந்த்
 ................................................................
திருவள்ளுர் மேற்கு மாவட்ட செயலாளர் மாற்றம் - டிடிவி அறிவிப்பு!
 ................................................................
சென்னையில் மின்சார பஸ் சோதனை ஓட்டம் (படங்கள்)
 ................................................................
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி முற்றுகை
 ................................................................
போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் - தினகரன் உருவபொம்மை எரிப்பு!
 ................................................................
டி.டி.வி. தினகரனுடன் நடிகர் விஷால் சந்திப்பு
 ................................................................
எடப்பாடி அரசு மெஜாரிட்டியை இழந்து விட்டது: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கவர்னருக்கு கடிதம்
 ................................................................
வங்கிகள் 3562 சிறப்பு அதிகாரி வேலைக்கான விண்ணப்பிக்கும் நேரம் இது!
 ................................................................
முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்; எஸ்.டி.பி.ஐ
 ................................................................
நீட் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை; தமிழக மாணவர்கள் தலையில் பேரிடி; பழ.நெடுமாறன் கண்டனம்
 ................................................................
புதுச்சேரி அருகே டி.டி.வி.தினகரன் உருவ பொம்மை எரிக்க முயற்சி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (17:48 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (18:10 IST)


தீப்பெட்டித் தொழிற்சாலைகள் மூடல்!
4 லட்சம் பேர் தவிப்பு!

வானம் பார்த்த பூமியான விருதுநகர் மாவட்டத்திலிருந்து அய்ய நாடார், சண்முக நாடார் ஆகிய இரண்டு இளைஞர்கள் 1922-இல் கல்கத்தா சென்றார்கள். அங்கு 8 மாத காலம் தங்கியிருந்து, தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொண்டு சிவகாசி திரும்பினார்கள்.

ஜெர்மனியிலிருந்து சில இயந்திரங்களை இறக்குமதி செய்து, 1923-இல் முதல் தீப்பெட்டி தொழிற்சாலையை தொடங்கினார்கள்.

வராத மழையை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை. விளையுமா, விளையாதா என்ற பயத்தில் பருத்தியையும், கம்பையும் விதைத்து எத்தனை காலத்துக்குத்தான் கஷ்டப்படுவது? யதார்த்தத்தை உணர்ந்த மக்கள் தீப்பெட்டித் தொழிலின் பக்கம் திரும்பினார்கள். விருதுநகர் மாவட்டம் - சிவகாசியில் ஆரம்பித்த தீப்பெட்டித் தொழில், திருத்தங்கல், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், ஏழாயிரம்பண்ணை, தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கயத்தாறு, நெல்லை மாவட்டத்தில் திருவேங்கடம், சங்கரன்கோவில், கடையநல்லூர், வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம், தர்மபுரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் என தமிழகம் முழுவதும் வளர்ச்சி கண்டது.



94 வருடங்களுக்கு முன் தன்னெழுச்சியாக உருவான தீப்பெட்டித் தொழில், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து காட்டி வரும் அலட்சியத்தால், இப்போது முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. காரணம் – குச்சி, மெழுகு, பேப்பர், அட்டை போன்ற தீப்பெட்டி தயாரிப்புக்கான மூலப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டதுதான். அரசு தரப்பிலிருந்து, உரிய சலுகைகள் எதுவும் கிடைக்காத நிலையில் உற்பத்தி செலவு என்பது பன்மடங்காகி விட்டது. வட மாநிலங்களில், தமிழகத்தில் உற்பத்தியாகும் தீப்பெட்டிகளின் விலை வீழ்ச்சி அடைந்தது. இதனால், ரூ.150 கோடி பெறுமான தீப்பெட்டி பண்டல்கள், வியாபாரம் செய்ய முடியாமல் இங்குள்ள கிட்டங்கிகளில் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், தீப்பெட்டி தயாரிப்பாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருக்கின்றனர். இந்த நிலையில், மூலப் பொருட்களின் விலையைக் குறைக்கும்படி வலியுறுத்தியும், சலுகைகள் வழங்கக் கோரியும், தமிழகத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளை, வரும் 26-ஆம் தேதி வரை மூடுவதாக அறிவித்து, மூடியும் விட்டார்கள். இந்த ஒரு வார கால அடையாள வேலை நிறுத்தத்தால், தீப்பெட்டித் தொழிலை நம்பியிருக்கும் சுமார் 4 லட்சம் பேர் வேலையை இழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கின்றனர்.

‘செய்யும் தொழிலே தெய்வம் – அந்தத்
திறமைதான் நமது செல்வம்!’

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் இப்படி எழுதுவதற்கு முன்பாகவே, தொழிலை நேசித்து, திறமையை வெளிப்படுத்தி, கடுமையாக உழைத்து, வெற்றி வாகை சூடினார்கள் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள். இன்றோ, அவர்கள் நொந்து நூலாகிக் கிடக்கின்றனர்.

-சி.என்.இராமகிருஷ்ணன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :