Add1
logo
தமிழகத்திலும் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்:வேல்முருகன் || பிரதீபா மறைவு : திருநாவுக்கரசர் இரங்கல் || அதிமுக பிளவு...கட்சி தொடங்கிய கால மாஜி எம்.எல்.ஏவை மரணத்திற்கு தள்ளியது! || மேற்பனைக்காட்டில் குழந்தை கடத்தலா? போலீசார் விசாரனை || ராமநாதபுரத்தில் சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி || விருத்தாசலம் அருகே 3 கிராமப்புற கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு || போஸ்னிய தளபதிக்கு தண்டனை! ராஜபக்சேவுக்கு எப்போது? அன்புமணி || வெளிச்சத்துக்குவந்த நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள்! சட்டங்கள் பாயட்டும்!கி.வீரமணி || டாஸ்மாக் பார் க்கும் சீல் வைத்த சார் ஆட்சியர் || அமைச்சரின் பாதுகாவலரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் || ஜெ., நினைவிடத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி (படங்கள்) || அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு: கி.வீரமணி || ஜெ. மரணம் தொடர்பாக இன்று விசாரணையில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்) ||
தமிழகம்
தமிழகத்திலும் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்:வேல்முருகன்
 ................................................................
பிரதீபா மறைவு : திருநாவுக்கரசர் இரங்கல்
 ................................................................
மேற்பனைக்காட்டில் குழந்தை கடத்தலா? போலீசார் விசாரனை
 ................................................................
ராமநாதபுரத்தில் சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி
 ................................................................
விருத்தாசலம் அருகே 3 கிராமப்புற கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு
 ................................................................
போஸ்னிய தளபதிக்கு தண்டனை! ராஜபக்சேவுக்கு எப்போது? அன்புமணி
 ................................................................
டாஸ்மாக் பார் க்கும் சீல் வைத்த சார் ஆட்சியர்
 ................................................................
அமைச்சரின் பாதுகாவலரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஜெ., நினைவிடத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி (படங்கள்)
 ................................................................
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு: கி.வீரமணி
 ................................................................
ஜெ. மரணம் தொடர்பாக இன்று விசாரணையில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்)
 ................................................................
விடுதிக்குள் அனுமதித்திருந்தால் என் சகோதரியை காப்பாற்றி இருக்கலாம்; ராக மெளனிகா சகோதரர் பேட்டி!
 ................................................................
பள்ளி மாணவர்களுக்காக ஏன் தனிப்பேருந்து இயக்கக் கூடாது: உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
 ................................................................
சின்னம் வந்தாச்சு.. இனி எல்லா தேர்தலும் நடந்துரும்! - ராமதாஸ் ட்வீட்
 ................................................................
சத்தியபாமா பல்கலை. மாணவி தற்கொலை - நிர்வாகம் மீது பெற்றோர் குற்றச்சாட்டு
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார் உடல் தகனம்!
 ................................................................
தூத்துக்குடி டவர் லைனில் ஏறி தற்கொலை மிரட்டல்! - உண்மைப் பின்னணி என்ன?
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (17:39 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (17:43 IST)


சீமைக்கருவேல மரங்கள் ஒழிப்பை விரைவுபடுத்த வேண்டும் :
மதுரை உயர்நீதிமன்ற விசாரணையில் வைகோ

ம.தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை; “தமிழ்நாடு முழுமையும் சீமைக்கருவேல மரங்களை அகற்றக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வைகோ தொடுத்த ரிட் மனுவை விசாரித்த நீதியரசர் செல்வம். நீதியரசர் கலையரசன் ஆகியோர், சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்றிட மாவட்ட ஆட்சியர்களும், அரசு அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று கடந்த அமர்வுகளில் ஆணை பிறப்பித்து இருந்தனர்.

அந்த வழக்கு தொடர்பான இன்றைய (20.3.2017) அமர்வில், வைகோ கூறியதாவது:

இந்த நீதிமன்றம் கடந்த அமர்வில் பிறப்பித்த ஆணையின்படி, நானே பல கிராமங்களுக்குச் சென்று, மக்களைத் திரட்டி, சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளைச் செய்தேன். சங்கரன்கோவில் தாலுகாவில், ஐம்பது விழுக்காடு அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருக்கின்றன.

பொதுப்பணித்துறைக் கண்மாய்களில் இந்தப் பணியைச் செய்வதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்புத் தரவில்லை என்று, பல மாவட்டங்களில் ஆய்வுக்குச் சென்ற வழக்குரைஞர்கள் கூறுகின்றார்கள்.

நீதிபதி செல்வம்: உங்கள் கட்சிக்காரர்கள் இந்தப் பணியில் இன்னும் முழுமையாக ஈடுபட வேண்டும். அப்போதுதானே தமிழ்நாட்டுக்கு மறுமலர்ச்சி வரும்.

வைகோ: கட்சிக் கொடிகள், கட்சி அடையாளங்கள் இல்லாமல், மக்களை ஒருங்கிணைத்து இந்தப் பணியைச் செய்ய வேண்டும் என்று நான் எங்கள் கட்சிக்காரர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளேன். அவ்வாறு எங்கள் கட்சிக்காரர்கள் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தற்போது தேர்வுகள் நடப்பதால், மாணவர்கள் இந்தப் பணிகளில் ஈடுபட முடியவில்லை. தேர்வு முடிந்தபின்பு, மாணவர்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துகின்ற வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டமிட்டு இருக்கின்றேன்.

நீதிபதி செல்வம்: தமிழகத்தில் இதுகுறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கின்றது. இந்த நச்சு மரங்களை முற்றாக அகற்றினால்தான் தமிழ்நாட்டைப் பாதுகாக்க முடியும்.

வைகோ: சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதற்கு தமிழக அரசு உடனடியாக சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அதற்குத் தேவையான நிதியைத் தாராளமாக வழங்க வேண்டும் என்றும், கடந்த அமர்வில் தாங்கள் பிறப்பித்த ஆணையில் குறிப்பிட்டு இருந்தீர்கள்.  ஆனால், இன்றுவரை தமிழக அரசு சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான சட்டம் இயற்றிட எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

செய்தியாளர்கள், தொலைக்காட்சி ஊடக நண்பர்களை நான் சந்தித்தபோது, நீதிபதி அவர்கள் கூறிய கருத்தை வலியுறுத்தி ‘தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் காய்ந்து கிடந்த சீமைக்கருவேல மரங்களில் சில விஷமிகள் தீ வைத்ததால் சில குடிசைகள் தீப்பற்றிக் கொண்டன. அதில் சிக்கி, 40 வயதான பிரேமா என்ற பெண்மணி இறந்து போனார். அவரது பத்து வயது மகன் பரமேஷ் அநாதை ஆகி விட்டார். அந்தக் குடும்பத்திற்குத் தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரி இருந்தேன். ஏற்கனவே தாக்கல் செய்த ரிட் மனுவோடு அதை இணைத்துள்ளேன்’ என்று வைகோ கூறினார். 

நீதிபதி செல்வம் அவர்கள், ‘அதற்குத் தனியாக ஒரு ரிட் மனு தாக்கல் செய்யுங்கள்’ என்று கூறினார். வழக்கு விசாரணை ஏப்ரல் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

வைகோவுடன், வழக்கறிஞர் கதிரேசன், வழக்கறிஞர் ஆசைத்தம்பி, மதிமுக சட்டத்துறைச் செயலாளர் அமல்ராஜ், வழக்கறிஞர் சுப்பாராஜ், வழக்கறிஞர் மனோகரன், வழக்கறிஞர் குமரதேசிகன், வழக்கறிஞர் சீமைராஜ் ஆகியோர் ஆஜர் ஆனார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :