Add1
logo
அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த பாராளுமன்ற நிலைக்குழுவினர் || கொள்ளையடிக்க நினைக்கிறார்கள்: தமிழக அரசுக்கு என்.ஆர்.தனபாலன் கண்டனம் || வாக்கு சேகரிக்கும் போராட்டம் || மாட்டு வண்டியில் ஏறி போராட்டம் || சரத்பிரபு மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்: ஜான்சிராணி || கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்கள் தேவை! ராமதாஸ் || கருத்து வேறுபாடு இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன் || கருவறையில் புகுந்து அம்மன் தாலியைத் திருடிய கில்லாடிப் பெண் || கமல்ஹாசன் எனக்கு போன் செய்து வரலாற்றை தெரிந்துகொள்ளலாம்: ஜெயக்குமார் || தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா ||
முக்கிய செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா
 ................................................................
நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு!
 ................................................................
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (17:33 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (17:33 IST)
 ‘சீனி சர்க்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா’ 
: சட்டப்பேரைவையில் ஸ்டாலின் உரை- கழக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் உரை.


திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (20-03-2017) சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஆற்றிய உரை விவரம்:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

மாண்புமிகு அமைச்சர்  அளித்த பதிலில் இந்த மருத்துவமனை தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு இருப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் சிறப்பு மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் இதுவரை ஏற்படுத்தவில்லை. அது வெறும் அறிவிப்போடு நின்று கொண்டிருக்கிறது. பெரியார் நகர் அரசு பெருநகர் மருத்துவமனையில் தினமும் 1300 க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 80 முதல் 85 வரை உள்நோயாளிகள் தங்கி அங்கிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த மருத்துவமனைக்கு சோலார் மின்கருவி பொருத்த வேண்டும் என்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 5 இலட்சம் ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதைத் தொடர்ந்து, இந்த பெரியார் நகர் பெருநகர மருத்துவமனையில் நான் பலமுறை நேரடியாகச் சென்று ஆய்வு செய்திருக்கின்றேன்.

ஆய்வு செய்தபோது என்னிடத்தில் பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. உதாரணமாக, மருத்துவமனையை சுற்றி சுற்றுச்சுவர் கட்டித்தர வேண்டும், இந்த மருத்துவமனைக்கு தனியாக ஒரு சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டும். அதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் மோசமான நிலையில் இருக்கின்றன, எனவே அதை உடனடியாக இடித்து விட்டு புதிதாக கட்டித்தர வேண்டும் என பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டிருக்கிறன. இவைகளை எல்லாம் உடனடியாக கவனித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க முன் வருமா என்பதை தங்கள் மூலமாக நான் அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

பெரியார் நகர் அரசு பெருநகர் மருத்துவமனையில் செவிலியர்கள் பற்றாக்குறை இருக்கின்றது. எனவே போதுமான அளவில் அவர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதேபோல மருத்துவமனையில் எலும்பு, மூட்டு மற்றும் சர்ஜன் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருக்கின்றது. எனவே உரிய மருத்துவர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

- இவ்வாறு அவர் உரையாற்றினார்.

இதனைத்தொடர்ந்து, மீனவர் இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்த  மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை :

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,

மீனவர் இளைஞர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து நான் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்திருக்கிறேன். அதை எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இந்திய கடல் எல்லையில் ஆதம் பாலம் பகுதியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, கையெறி குண்டுகளை வீசி, அதில் ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர் பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார். அதேநேரத்தில் சாரோன் என்ற மீனவ நண்பர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது எல்லோருக்கும் தெரியும். ஆகவே தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கை மீனவர்களோடு, இந்திய - இலங்கை அமைச்சர்கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.

27-01-2014 அன்று முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து இன்றுவரை இலங்கை அரசு  அடம்பிடித்து கொண்டிருக்கிறது. பேச்சு வார்த்தையின் போது, தமிழக அரசின் முக்கிய கோரிக்கைகள் எதையுமே இலங்கை அரசாங்கமும், இலங்கை மீனவர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. பேச்சுவார்த்தை தொடர்ந்தாலும் தமிழக மீனவர்கள் மீதான  தாக்குதலும் அவர்களின் மீன்பிடி உபகரணங்கள் பறிமுதல் செய்வதும் நிற்கவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாக இருக்கின்றது. அதையும் தாண்டி இப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி மீனவ இளைஞர் பிரிட்ஜோ கொல்லப்படக் கூடிய ஒரு சூழ்நிலையை இலங்கை கடற்படை உருவாக்கி இருக்கின்றது. எனவே தமிழக அரசின் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ளவில்லை, மீனவர்களையும் கைது செய்யும் நிலைமை. இந்த மாதத்தில் மட்டும்,

· 04.03.2017 அன்று நாகப்பட்டினத்தில் இருந்து சென்ற அக்கரைப்பேட்டை மீனவர்கள் 8 பேரை கைது செய்திருக்கின்றனர்.

· அதேநாளில் ராமேஸ்வரத்தில் இருந்து சென்ற 15 மீனவர்களை கைது செய்திருக்கிறார்கள்.

· 05.03.2017 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

· அதற்குப் பிறகு 06.03.2017 அன்று தங்கச்சி மடத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இதில் சுரேன் என்ற மீனவரும் படுகாயம் அடைந்திருக்கிறார்.

இருநாட்டு மீனவர்கள் மற்றும் அரசுகள் மட்டத்தில் நடக்கும் பேச்சுவார்த்தைகள் முடிவு தீர்மானமாக எட்டப்பட்டும், அதை இலங்கை அரசு அலட்சியப்படுத்தி உதாசீனப்படுத்திக் கொண்டிருக்கிறது. உதாரணமாக மீனவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்தக்கூடாது. 05.11.2011 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இவைகளெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அதையும் மீறி இலங்கை அரசு இராணுவத்தின் மூலமாக தமிழக மீனவர்களை சுட்டுக்கொன்று மனித உரிமைகளை வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 128 பேருக்கு மேல் கைது செய்யப்பட்டு சிறைபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அண்மையில் அங்குள்ள சிறைகளில் இருந்து 85 மீனவர்களில் இப்போது 77 பேர் விடுதலையும் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.  இதுவரை படகுகளை திருப்பிக் கொடுத்து மீனவர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற இலங்கை அரசு முன்வரவில்லை, மத்திய அரசும் இதுகுறித்து ஒரு உறுதியான நடவடிக்கையை எடுக்கவில்லை. இதற்கெல்லாம் ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும். நிரந்தர தீர்வு என்றால், கச்ச தீவை நாம்  மீட்டால் ஒழிய இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வை காண முடியாது. இதையெல்லாம் அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டு, அதற்குரிய நடவடிக்கை என்ன எடுத்திருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து அமைகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

நான் இதில் அரசியலை கலந்து பேசவில்லை. மீனவர்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வை எட்டிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கின்றேன். ஆனால் அமைச்சர் அவர்கள் பதில் சொல்லக்கூடிய நேரத்திலே 74 ஆம் ஆண்டு தாரை வார்க்கப்பட்டது என்று சொன்னார். 74 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்திருக்கின்றது. எனவே அதுகுறித்து விளக்கம் சொல்ல நீங்கள் அனுமதி தரவேண்டும். இல்லையெனில் அது இந்த அவையிலே தவறாக அமைந்து விடும்.

06.01.1974 அன்று கச்சத்தீவு பிரச்சினை எழுந்தபோதே, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அவர்களுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார். அதில் கச்சத்தீவு போகக்கூடாது என்றும், இந்தியாவின் ஒரு பகுதி என்றும் பல ஆதாரங்களோடு முதலமைச்சர் என்றமுறையில் அவர் எடுத்து வைத்திருக்கிறார். அதுமட்டுமல்ல, வெளியுறவுத்துறை அமைச்சரிடத்திலும், அதிகாரிகளிடத்திலும் தமிழக அரசின் சார்பில் தலைவர் கலைஞர் அவர்கள் கடுமையான எதிர்ப்பை அன்றைக்கு பதிவு செய்திருக்கிறார். அதையும் மீறி, அதிகாரம் மத்திய அரசிடம் இருப்பதால், கச்சத்தீவை இலங்கையிடம் மத்திய அரசு வழங்கியது.

09-06-1974 அன்று இதே சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, அதில் கச்சத்தீவு பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. அந்த தீர்மானத்தின் நகலை, கடிதத்தை முதல்வராக இருந்த நமது தலைவர் கலைஞர் அவர்கள், பிரதமருக்கு அனுப்பி இருக்கிறார். கச்சத்தீவு பற்றி நாடாளுமன்றத்தில் அன்றைக்கு மக்களவை உறுப்பினராக இருந்த திரு செழியன் அவர்கள், ’கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்’, என்று திமுகவின் சார்பில் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்.

அதேபோல மாநிலங்களவையில் உறுப்பினராக இருந்த எஸ்.எஸ். மாயசாமி அவர்களும் கச்சத்தீவு பிரச்சினையை பதிவு செய்திருக்கிறார். அதேபோல, கச்சத்தீவை தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் 24.07.1974 அன்று கண்டனப் போராட்டமே நடத்தப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, 22-09-2006 அன்று தமிழக சட்டசபையில் தீர்மானமே நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையெல்லாம் மூடி மறைக்கக்கூடிய வகையில், ஏதோ ஒரு செய்தியை தவறாக பதிவு செய்திருக்கிறார்கள். இதுவே நான் அவருக்கு சொல்லக்கூடிய பதில் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,

கச்ச தீவு தாரை வார்க்கப்பட்டாலும், தலைவர் கலைஞர் அவர்களின் வற்புறுத்தல் காரணமாகத்தான் பல உரிமைகள் கிடைத்தன. ஆனால், நெருக்கடி நிலை அமுலுக்கு வந்த பிறகு, அதிமுக ஆதரவால் தான் அவை பறிக்கப்பட்டன என்பதை நான் இங்கு பதிவு செய்கிறேன். அதுமட்டுமல்ல, இன்னொரு முக்கியமான ஒன்று, 29-06-1974 அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதை கண்டித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை அன்றைக்கு முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் கூட்டியபோது, அந்த கூட்டத்தில் போடப்பட்ட தீர்மானத்திற்கு கையெழுத்துப் போட மறுத்தவர்கள் அதிமுகவினர் என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் மூடி மறைத்து தவறான தகவலை இங்கு அமைச்சர் அவர்கள் தந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.
 
ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள் வழங்காமல் இருப்பது குறித்த விவாதத்தில் பங்கேற்ற தளபதி அவர்கள் ஆற்றிய உரை விவரம்:

மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,

சட்டமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் அவர்கள் பேசிய பிறகு, உணவுத்துறை அமைச்சர் அவர்கள் விளக்கங்கள் அளித்துக் கொண்டு இருக்கிறார். நான் அந்தப் பிரச்சினைக்குள் செல்ல விரும்பவில்லை. இருந்தாலும், அவர் பேசுகிறபோது, ‘இந்த அவையில் நீங்கள் எப்படி நடந்து கொண்டீர்கள்? அதேபோல நீங்கள் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் எப்படி நடந்து கொண்டார்?’, என்றெல்லாம் சொன்னார். நாங்கள் எப்படி நடந்து கொண்டோம் என்பதை தயவுகூர்ந்து அமைச்சர் அவர்கள் விளக்கிட வேண்டும். ஏனெனில் தேவையில்லாத இந்த வார்த்தைகள், சர்ச்சையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. எங்களை கேவலப்படுத்தும் வகையில் அவர் அந்த வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். எனவே, அவர் ஒன்று அதனை திரும்பப்பெற வேண்டும் அல்லது விளக்கமளிக்க வேண்டும். அவர் விளக்கமாக சொன்னால், நாங்கள் பதில் அளிக்கிறோம்.
 
மாண்புமிகு பேரவைத்தலைவர் அவர்களே,

3 மாதங்களாக பாமாயில் இல்லை. 2 மாதங்களாக பருப்பு வகைகள் கிடையாது. ஆனால், எல்லாவற்றையும் ’வாங்கியாயிறு, வாங்கியாயிற்று’, என்று சொல்கிறீர்கள். ’ஆர்டர் கொடுத்தாயிற்று’, என்று சொல்கிறீர்கள். ஒரு பழமொழி, ‘சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா’, என்று சொல்வார்கள். அதுபோல இங்கு அமைச்சர் அவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்.

- இவ்வாறு தளபதி அவர்கள் சட்டப்பேரவையில் விவாதம் மேற்கொண்டார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :