Add1
logo
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவு! || 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி || நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா வெற்றி || சிரியா வான்வழி தாக்குதலில் 17 பேர் பலி! || சிஸ்டம் சரியில்லை என ரஜினி கூறியது கண்டிக்கத்தக்கது: திண்டுக்கல் சீனிவாசன் || மேற்பனைக்காடு கிராமத்தில் மின்னல் தாக்கி பெயிண்டர் படுகாயம் || செயற்கைக்கோள் போன்: பி.எஸ்.என்.எல். அதிரடி || பைக் மீது மினிபேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு || திண்டிவனத்தில் இளைஞர் குத்திக்கொலை || சட்ட சபையில் ஜெ. படத்தை திறப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு || மதுக்கடையை அகற்றும் போராட்டத்தை அறிந்து கடையை அகற்றிய அதிகாரிகள் || மும்பையில் தொடங்கியது 'காலா' படத்தின் படப்பிடிப்பு: படங்கள் வெளியாகின! || ரஜினிக்கு உத்தரவிடும் ஆண்டவனுக்கும் எனக்கும் நேரடி தொடர்பு இல்லை : பார்த்திபன் ||
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (16:21 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (17:1 IST)


இளையராஜா காப்புரிமை கேட்பது வரவேற்கதக்கது; 
கலைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார் -
 மிஸ்கின் பேச்சு




இளையராஜா பாடல்களுக்கு காப்புரிமை பிரச்சனையை நாங்கள் வரவேற்கிறோம் என்று திருச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் விஷால் அணியினர் தெரிவித்தனர். 

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி விஷால் அணியினர்  தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டிய அவர்கள் அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது கௌரவ செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஞானவேல்ராஜா பேசும் போது, ’’தேர்தலில் நிற்கும் நாங்கள் 12 வாக்குறுதிகளை தந்துள்ளோம். இதனை 1 வருடத்திற்குள் நிறைவேற்றவில்லை என்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம்’’ என்றார்.

துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் பிரகாஷ்ராஜ் பேசும்போது,  ‘’இதுவரை பதவியில் இருந்தவர்கள் வேலை செய்யவில்லை. குறிப்பிட்டவர்களே பதவி வகித்து வந்தார்கள். தவறு நடக்கும் போது பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. எனவேதான் போட்டியிட வந்தோம் என்று கூறினார்.  இளையராஜவை வைத்து மிகப்பெரிய பாடல் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறும்’’ என்றும் கூறினார்.

கௌரவ செயலாளர் மிஷ்கின் கூறும்போது, ‘’200 தயாரிப்பாளர்கள் வறுமையில் உள்ளனர்.  இவர்களுக்கு நல்லது செய்யாவிட்டால் பொறுப்பில் இருந்து நாங்கள் விலகி கொள்வோம்.  இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை பெற்றுள்ளதை நாங்கள் பாராட்டுகிறோம்.  சினிமா கலைஞர்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார். இளையராஜாவை பொறுத்தை வரையில் அவர் பாடல்களுக்கு அவர் மட்டுமே சொந்தம். அவர் கலைஞர்களுக்காகத் தான் இதை பேசியிருக்கிறார். இளையராஜா சார் சொன்ன மாதிரி நடந்திருந்தால் ஒவ்வொரு தயாரிப்பாளரும் கோடிஸ்வராக இருந்திருப்பார். வின்னார் ஒரு படம். அதில் நடித்த வடிவேல் காட்சியை எத்தனை முறை போட்டிருப்பார்கள். அந்த தயாரிப்பாளருக்கு தினம் ஒரு ரூபாய் கொடுத்திருந்தால் அவர் கோடிஸ்வரராக இருந்திருப்பார்.  காப்பிரைட் என்பது முக்கியமானது. அதற்கு இளையராஜா கையில் எடுத்திருப்பதை வரவேற்கிறோம்.   

 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் பாண்டிராஜ் பேசம் போது,  ‘’உறுப்பினர்கள்  அனைவரையும் தாய்மாமன்களாக நினைத்து நேரில் சென்று ஆதரவு திரட்டி வருகிறோம். விஷால் அணியில் நான் இருந்து போட்டியிட்டாலும், இந்த அணியை அதிகம் கேள்வி கேட்பவன் நானாகதான் இருப்பேன் என்று கூறினார்.  தயாரிப்பாளராக, இயக்குநர்களாக இருந்து பண்ண முடியாததை நடிகராக இவர்கள் சாதிக்கிறார்கள். நடிகராக மட்டும் இல்லை தயாரிப்பாளர் இயக்குநர்  இருக்கிறார்கள்  இவர்கள் எல்லோரும் சேர்ந்து தான் சாதிப்பார்கள். . 

தலைவர் பதவிக்கு போட்டியிடும் விஷால் பேசும்போது,  ‘’தமிழகத்தில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறோம். வாக்கு கேட்கவில்லை. இது திரைப்படதுறையை காப்பாற்ற வேண்டிய தேர்தல். அனைத்து திரைப்பட தயாரிப்பிற்கும் நாங்கள் வழிகாட்டுவோம். எல்லோரும் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இனி தயாரிப்பா ளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் இணைந்து செயல்படுவோம். நலிவடைந்த தயாரிப்பாளர்களை மீண்டும் படமெடுக்க வைப்பதே எங்களின் குறிக்கோள்’’ என்று கூறினார்.

 - ஜெ.டி.ஆர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : pathman Country : Canada Date :3/21/2017 5:20:16 AM
சம்பளத்துக்கு இசை அமைத்தவர்கள் காப்புரிமை கேட்பது நியாயம் என்றால் பாட்டை எழுதியவர்,கோடிகோடியாக பணத்தை இறைத்து படம் எடுத்த தயாரிப்பாளர் ,டைரக்டர் ஆகியரின் நிலை என்ன?
Name : murhu Country : United States Date :3/20/2017 4:52:16 PM
தினம் ஒரு ரூபாய் கொடுத்திருந்தா...அப்போ கோடி நாள் போட்டுட்டு காசு தர்றோம் .
Name : loganathan Date :3/20/2017 4:49:57 PM
ஹீரோ நடிகர்கள் சம்பளம் அதிகமாக வாங்குவதாலதான் தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுகிறார்கள் நீங்கள் சம்பளத்தை குறைத்து வாங்குவீர்களா ????? பில்டிங் கட்டுவதற்கு மக்களிடம் கிரிகேட் பார்க்க வாங்க என்று கூப்பிடறீங்களே வெட்கமா இல்ல ஒரு ஹீரோ 1 கோடி கொடுத்தால் எவளோ வரும் கஷ்டப்படும் மக்களிடம் கேட்பது நியாயமா விஷால் அவர்களே ......