Add1
logo
தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ் || இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன் || தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார் || தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார் || தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன || சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி || டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது || மணப்பாறையில், வீடு வீடாக சென்று கமிஷனர் வரி வசூலிக்கிறார் || பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கும் இந்திய கடற்படை பெண்கள் || 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன் - டோனி || ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யமாகவும் சவாலானதாகவும் இருக்கும் - ஜி.கே.வாசன் பேச்சு || காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! கலெக்டருக்கு குவியும் வாழ்த்து! || 25000 மெட்ரிக் டன் எடை தாதுமணல் பறிமுதல் (படங்கள்) ||
தமிழகம்
இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன்
......................................
தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார்
......................................
தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார்
......................................
தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன
......................................
சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி
......................................
டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது
......................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யமாகவும் சவாலானதாகவும் இருக்கும் - ஜி.கே.வாசன் பேச்சு
......................................
காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! கலெக்டருக்கு குவியும் வாழ்த்து!
......................................
25000 மெட்ரிக் டன் எடை தாதுமணல் பறிமுதல் (படங்கள்)
......................................
தாமதமாகி வரும் புதுக்கோட்டை முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக கூடுதல் கட்டிட பணிகள்
......................................
பத்திரிக்கைகளுக்கு - பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை
......................................
வடகாடு கிராம மக்கள் அடையாள அட்டைகளை தூக்கி எரிந்து போராட்டம் ஈடுப்பட்டனர்
......................................
இளஞ்சாவூர் முத்துமாரியம்மன்கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டிப்பந்தயம். (படங்கள்)
......................................
சத்துணவு ஊழியர்கள் 2-வது நாளாக சாலைமறியல்; பெண் மயங்கியதால் பரபரப்பு. புதுக்கோட்டையில் 249 பேர் கைது
......................................
சீமான் தலைமையில் நாம் தமிழர் மாணவர் பாசறை முன்னெடுத்த இளநீர் குடிக்கும் திருவிழா
......................................
மருந்தாளுநர் பதவி உயர்வு மற்றும் காலி பணியிடங்களை நிரப்ப கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ல் பொது விடுமுறை
......................................
பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன் காலமானார்
......................................
தினகரன், மதுசூதனன், தீபா, கங்கை அமரன், அந்தோணி சேவியர் வேட்பு மனுதாக்கல் ( படங்கள்
......................................
சேப்பாக்கத்தில் தமிழ்நாடு இளையோர் விவசாய எழுச்சி சங்கம் ஆர்ப்பாட்டம் ( படங்கள் )
......................................
சத்துணவு பணியாளர்களின் மூன்றாவது நாள் போராட்டம் ( படங்கள்
......................................
நூதன முறையில் 5 டன் ரேசன் அரிசி கடத்தல்(படங்கள்
......................................
சீராய்வு மனு வேலையில் திவாகரன் மகன்
......................................
தமாகா வாசன் முடிவுக்குப் பின்னணி?
......................................
மு.க.ஸ்டாலின் பேரவையில் ஆற்றிய உரை!
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (12:3 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (12:3 IST)


போக்குவரத்து தொழிலாளர் போராட்டத்தில்
 தமிழக வாழ்வுரிமை கட்சியும் பங்கேற்பு - வேல்முருகன் அறிவிப்பு

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’நிர்வாகக் குளறுபடி மற்றும் நிதி நெருக்கடியால் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் தள்ளாடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. இதனால் பொதுமக்களும் போக்குவரத்துத் தொழிலாளர்களும் என்றுமில்லாத அளவுக்குப் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பணி ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கெல்லாம் தீர்வு காணும் பொருட்டு கோரிக்கைகளை முன்வைத்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஏப்ரல் முதல் வாரத்தில் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கவுள்ளனர். அதில் தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் பங்கேற்கின்றன.

கிட்டத்தட்ட 60,000 ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அவர்களின் வைப்புத்தொகை, பணிக்கொடை, ஓய்வூதியத்தொகை ஆகியவை மூன்று ஆண்டுகள் கடந்தும் இன்னும் வழங்கப்படவில்லை. அவர்களின் ஓய்வூதியமும் மாதத்தின் முதல் நாளில் அதாவது 1ந் தேதியன்று வழங்கப்படுவதில்லை. 15ந் தேதி, 20ந் தேதி வழங்குகிறார்கள். அதுவும்  பாதி தொகைதான். மீதித் தொகை வந்து சேர பல நாட்கள் ஆகும். இந்த மாதம் இதுவரை ஓய்வூதியம் வரவேயில்லை.

இதற்காக பலமுறை போராட்டம் நடத்தியும் பலனில்லை. பணியில் உள்ள ஒன்றரை லட்சம் தொழிலாளர்களின் பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களுக்கான புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படும். 12ஆவது ஊதிய ஒப்பந்தம் முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. அப்படியிருந்தும் 13ஆவது ஊதிய ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையைக்கூட இன்னும் தொடங்கவில்லை. அவ்வளவு ஏன், 12ஆவது ஒப்பந்தத்திலுள்ள பெரும்பாலான கோரிக்கைகளைக்கூட இன்றுவரை நிறைவேற்றவில்லை.

தினக்கூலி அடிப்படையிலான ஒப்பந்தத் தொழிலாளர்களின் நிலையோ அவலத்திலும் அவலம். அவர்களை நிரந்தரம் ஆக்காததோடு தினக்கூலியாக அவர்களுக்கு ரூ.671 வழங்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதைக்கூட நடைமுறைப்படுத்தவில்லை. ரூ.256தான் வழங்கப்படுகிறது.

வரி செலுத்தியே அரசின் சேவையைப் பெற்றுவரும் பொதுமக்களின் நிலையும் பரிதாபம்தான். நேரத்திற்கு பேருந்து சேவை இல்லை. ஓட்டை உடைசலான பேருந்துகள். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பழுதடைந்து பாதிவழியிலேயே நின்றுவிடலாம். டீலக்ஸ் பஸ்களாக விட்டு அதிகப் பணம் பிடுங்குதல் வேறு. பெட்ரோல் – டீசலுக்கும் வாட் வரியை உயர்த்தி அதன் மூலம் பஸ் கட்டணத்தையும் உயர்த்தி வாக்களித்த மக்களையே வாட்டி வதைக்கும் கொடுமை.
இத்தகைய நிலைகளுக்கெல்லாம் காரணமாக, போக்குவரத்துத் துறை 35 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கியிருப்பதாகவும் ஒரு நாளுக்கு 6.58 கோடி ரூபாய் என்ற கணக்கில் ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய் இழப்பைச் சந்திப்பதாகவும் சொல்லப்படுகிறது.

எனவே இப்படியான நெருக்கடியில் சிக்கியிருப்பதால், போக்குவரத்துத் துறைக்கென்று பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்குமாறு தொழிற்சங்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக அரசு அதை காதில் வாங்கிக் கொள்வதாகவே தெரியவில்லை.

இதனால் போக்குவரத்துத் துறைக்கு 5,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தை போக்குவரத்துத் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கவுள்ள இந்த வேலைநிறுத்தத்தில் அண்ணா தொழிற்சங்கம் தவிர்த்து அனைத்து சங்கங்களும் பங்கேற்கின்றன.

தமிழக தொழிலாளர் வாழ்வுரிமைச் சங்கமும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் தோழமைச் சங்கங்களுடன் இணைந்து களம் காணும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.’

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :