Add1
logo
தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ் || இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன் || தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார் || தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார் || தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன || சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி || டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது || மணப்பாறையில், வீடு வீடாக சென்று கமிஷனர் வரி வசூலிக்கிறார் || பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கும் இந்திய கடற்படை பெண்கள் || 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன் - டோனி || ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யமாகவும் சவாலானதாகவும் இருக்கும் - ஜி.கே.வாசன் பேச்சு || காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! கலெக்டருக்கு குவியும் வாழ்த்து! || 25000 மெட்ரிக் டன் எடை தாதுமணல் பறிமுதல் (படங்கள்) ||
முக்கிய செய்திகள்
தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ்
......................................
மணப்பாறையில், வீடு வீடாக சென்று கமிஷனர் வரி வசூலிக்கிறார்
......................................
சேகர் ரெட்டியை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கப்பிரிவினருக்கு அனுமதி!
......................................
62 ஆயிரம் கோடி கேட்ட தமிழகத்திற்கு வெறும் 2,014 கோடி ஒதுக்கீடு!
......................................
தேர்தல் ஆணையத்தில் நடந்த காரசாரம்!
......................................
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை - ஓ.என்.ஜி.சி. விளக்கம்
......................................
தமிழகத்திற்கு 1,748 கோடி வறட்சி நிவாரணம்!
......................................
இரட்டை இலை முடக்கப்பட்டிருப்பது திமுகவுக்கு எந்தளவுக்கு சாதகமாக இருக்கும்?- மு.க.ஸ்டாலின் பேட்டி
......................................
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட ஜெ. உடல் மெழுகு பொம்மையா?
......................................
என் சமாதியில் என் ஆவி இல்லை: கனவில் வந்த ஜெ.: ஆர்.கே.நகர் வேட்பாளர் திடுக்... (படங்கள்)
......................................
வேட்புமனு தாக்கல் செய்தார் மதுசூதனன்
......................................
மதுசூதனனுக்கு இரட்டை மின்கம்பம்
......................................
டி.டி.வி. தினகரனுக்கு தொப்பி
......................................
யாருக்கும் ஆதரவு இல்லை: ரஜினி
......................................
ஜெ. நினைவிடத்தில் ஓ.பி.எஸ். அணி மரியாதை
......................................
எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவேன் -டி.டி.வி. தினகரன்
......................................
கட்சியையும், ஆட்சியையும் மீட்டெடுப்போம்: ஓ.பன்னீர்செல்வம்
......................................
நாங்கள் தான் உண்மையான அதிமுக என்பதற்கு கூடுதல் ஆதாரங்களை நிருபிக்க தயார்: மைத்ரேயன்
......................................
இருதரப்பும் ஏமாற்றம்! அடுத்தடுத்த நகர்வுகளில் ஓ.பி.எஸ். - தினகரன் தீவிரம்!
......................................
மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி
......................................
சென்னையில் ரஜினியின் ‘2.0’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு
......................................
இரட்டை இலை சின்னத்தை மீட்போம் - தினகரன்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (10:38 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (10:38 IST)


போக்குவரத்துத்துறை தொழிலாளர்களின் கோரிக்கைகளை
 உடனே நிறைவேற்றுக! வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை:

’’தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் மொத்தம் 1.50 இலட்சம் தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. 12 ஆவது ஊதிய ஒப்பந்தம் ஏற்பட்ட 01.09.2013 நாளிலிருந்து நிர்வாகத்தால் ஓய்வூதியருக்கான பி.எப். தொகை, பணப் பயன்கள், விடுப்பு தொகை போன்றவற்றின் நிலுவைத் தொகை இதுவரையில் வழங்கப்படவில்லை. முந்தைய ஒப்பந்தங்களில் கூறப்பட்டுள்ள பல கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. மேலும் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர், எந்தவித பணப் பயனும் கிடைக்கப் பெறாமலேயே இறந்து போனார்கள் என்ற தகவல் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் 65 ஆயிரம் பேருக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வூதியத் தொகை இரு தவணைகளாக வழங்கப்பட்டது. 

  இந்த மாதம் மார்ச்சில் இதுவரையில் ஓய்வூதியருக்கு ஓய்வூதியப் பணத்தை வழங்காமல் நிர்வாகம் அலைக்கழித்து வருவது கண்டனத்துக்கு உரியது. போக்குவரத்துத்துறை ரூ.35 ஆயிரம் கோடி கடனில் தத்தளிப்பதாக உயர்நிலை அலுவலர்கள் காரணம் கூறுகின்றனர்.

டீசல் விலை உயர்வு, அரசு போக்குவரத்துக் கழகங்களில் வரவைவிட செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் போக்குவரத்துத்துறை ஒரு நாளைக்கு ரூ.6.58 கோடி இழப்பை சந்திக்க வேண்டிய அவல சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆண்டுக்கு ரூ.2400 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனை ஈடுகட்டும் வகையில் போக்குவரத்துத்துறையின் வரவு மற்றும் செலவு இனங்களுக்கு இடையிலான இழப்புத் தொகையை தமிழக அரசு போக்குவரத்துத்துறைக்கு வழங்க வேண்டும் என்று கடந்த ஓய்வூதிய மாற்று ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது மறுமலர்ச்சி தொழிலாளர் முன்னணி உள்ளிட்ட பத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியது. ஆனால், தமிழக அரசு அக்கோரிக்கைகளை கவனத்தில்கொள்ளவில்லை.

உரிய நிதி ஆதாரம் இன்றி தத்தளிக்கின்ற தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத்துறைக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தொழிற்சங்க கூட்டமைப்பு தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை நியாயமானது ஆகும். நடப்பு 2017-18 நிதிநிலை அறிக்கையில், 2000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கு ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்துத்துறை ஊழியர்களின் பணப் பலன்கள் உள்ளிட்ட 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் நிர்வாகம் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நடைமுறைப்படுத்த சுமார் 5500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தால்தான் போக்குவரத்துத்துறையில் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண முடியும்.

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியத் தொகை இந்த மாதம் வழங்கப்படாததால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்து உள்ளன. ஏப்ரல் மாதம் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கும் அறைகூவல் விடுக்கப் போவதாக தெரிவித்திருக்கின்றன. 

தமிழ்நாடு முழுவதும் ஓய்வு பெற்ற போக்குவரத்துத்துறை ஊழியர்கள், பேருந்து பணிமனைகள் முன்பு தங்கள் குடும்பத்தினருடன் மூன்று நாட்களாக அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளனர். ஓய்வூதியருக்கான பணப் பயன்களை உடனடியாக வழங்கக் கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்றவும் போக்வரத்துத்துறைத் தொழிலாளர்களும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்குத் தேவையான நிதி ரூ.5500 கோடியை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 12 ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அனைத்துத் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதுடன், ஓய்வூதியத்தை நம்பி வாழும் ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்க ஆவனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.’’
‘                                                                                                        

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : R BALAKUMAR Date :3/20/2017 12:50:40 PM
போக்குவரதத்து தொழிலாளர்கள் பொழப்பிலும் மண்ணை போட்டுட்டான்யா!