Add1
logo
தமிழ் மொழியை காக்க 26–ந்தேதி கலந்தாய்வு - ராமதாஸ் || இலவச மின்சாரம் வந்தது எப்படி? - குமரிஅனந்தன் || தேர்தல் கமி‌ஷன் திறமையாக செயல்பட்டால் பண பட்டுவாடாவை முடக்கலாம் - சரத்குமார் || தொப்பி அணிந்து ஆர்.கே.நகரில் - தினகரன் பிரசாரம் தொடங்கினார் || தமிழகத்தில் 11 முக்கிய அணைகள் வறண்டன || சீமைக்கருவேல மரம் அகற்றும் பணிக்காக ரூபாய் 10 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தினார் ஐகோர்ட் நீதிபதி || டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து 30ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் 4 லட்சம் லாரிகள் ஓடாது || மணப்பாறையில், வீடு வீடாக சென்று கமிஷனர் வரி வசூலிக்கிறார் || பாய்மரப் படகு மூலம் உலகை சுற்றி வர இருக்கும் இந்திய கடற்படை பெண்கள் || 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடுவேன் - டோனி || ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சுவாரஸ்யமாகவும் சவாலானதாகவும் இருக்கும் - ஜி.கே.வாசன் பேச்சு || காணாமல் போன ஏரியைக் கண்டுபிடித்தார்! கலெக்டருக்கு குவியும் வாழ்த்து! || 25000 மெட்ரிக் டன் எடை தாதுமணல் பறிமுதல் (படங்கள்) ||
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 20, மார்ச் 2017 (0:43 IST)
மாற்றம் செய்த நாள் :20, மார்ச் 2017 (0:43 IST)


வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்க அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் இருந்து வருவோர்க்கு தடை விதித்தது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க பாதுகாப்பு துறையையும் இதுவரை இல்லாத அளவுக்கு பலப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், நேற்று அதிபரின் வசிப்பிடமான வெள்ளை மாளிகையில் உள்ள கார் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாகவும், இன்னும் சில நேரங்களில் வெடிக்கும் எனவும் வெள்ளை மாளிகையில் கார் டிரைவராக பணியாற்றும் ஊழியருக்கு மிரட்டல் வந்துள்ளது. இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. அங்கு சோதனை மேற்கொண்ட போலீசார் அப்படி வெடிகுண்டு எதுவும் இல்லை எனத் தெரிவித்தனர். இருப்பினும் வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :