Add1
logo
கோதாவரியிலிருந்து காவிரிக்குத் தண்ணீர் என்று திசை திருப்புகிறது நடுவண் அரசு! பெ. மணியரசன் || ஐநூறு பேர் கூட கூடாத கூட்டத்திற்கு ஏன் இந்த அலப்பரை? || கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை; 3 மாணவிகள் பலி || ஓட்டுக்கு பணம் .. தேர்தல் ஆணையத்திடம் என்ன திட்டம் உள்ளது ...? கொ.ம.தே.க.ஈஸ்வரன் கேள்வி || அன்புச்செழியன் என்னை தொந்தரவு செய்ததாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை : தேவயானி || தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலையில் 20% முன்னுரிமை! - ஐகோர்ட் உத்தரவு || ஒஎன்ஜிசி கிணறு அமைக்கும் பணியினை தடுத்த நிறுத்தகோரி முற்றுகை போராட்டம்! || டெல்லியில் இருந்து திரும்பிய விவசாயிகள் சென்ட்ரலில் தர்ணா போராட்டம்! || காணாமல் போன 500 குழந்தைகள் ஆதார் உதவியால் மீட்பு! || துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன் || டிச. 21-ல் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு || EXCLUSIVE - டிடிவி அணியில் இருந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணிக்கு தாவும் எம்.எல்.ஏ., எம்.பிக்கள்..! || இந்திய பந்துவீச்சில் சுருண்டது இலங்கை அணி! ||
சிறப்பு செய்திகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஒரு பார்வை!
 ................................................................
தமிழகத்தின் ட்ரெண்டாகியிருக்கும் நாயகன் ஷின்சான்...
 ................................................................
அதே டான்ஸ், அதே பாட்டு, அதே மேளத்துடன்
 ................................................................
எம்ஜியார் மரணம்… இரண்டானது அதிமுக!
 ................................................................
சினிமாவிலிருந்து சந்தை வரை - வகைவகையான வட்டி!
 ................................................................
அடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.:
 ................................................................
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிக்கே இரட்டை இலை
 ................................................................
ஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு...
 ................................................................
பொறுப்பாசிரியர் லெனின் மனைவி காலமானார்!
 ................................................................
அன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்?
 ................................................................
டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!
 ................................................................
யார் இந்த பைனான்சியர் அன்புச்செழியன்...
 ................................................................
முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து?
 ................................................................
மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை!
 ................................................................
பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு...
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 9, மார்ச் 2017 (11:27 IST)
மாற்றம் செய்த நாள் :9, மார்ச் 2017 (11:27 IST)
ம்பதாண்டுகால திராவிட ஆட்சி என்று நாம் பெருந்தன்மையாக சொல்லிக்கொள்ள விழைந்தாலும் திராவிடத்தின் வெளிச்சத்தை தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் சமமாகப் பகிர்ந்து கொடுக்க முடியுமா? திராவிட இயக்கத்தின் சுயமரியாதை மரபிற்கும் மதச்சார்பற்ற அடையாளத்திற்கும் மாறாக எம்.ஜி.ஆர். காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி வழிபாட்டுக் கலாச்சாரமும் தனிமனித துதியும் பெருமளவுக்கு தமிழக அரசியல் பண்பாட்டு வாழ்க்கையை ஆக்கிரமித்துக்கொண்டன.

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப் பட்ட மத மாற்றத் தடைச்சட்டம், கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்கான தடைச்சட்டம், ஜனநாயக விரோத எதேச்சதிகாரப் போக்கு ஆகிய வற்றை 50 ஆண்டுகால திராவிட ஆட்சி என்று சொல்லி அ.தி.மு.க.வின் பாவச்சுமைகளை திராவிட இயக்கத்தின் மேல் ஏற்றவேண்டுமா? இதை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த ஐம்பதாம் ஆண்டு என்று அழைப்பதன் மூலமே இந்த இயக்கம் சமூக நீதி-சமூக நலம் சார்ந்து செய்திருக்கும் சாதனைகளின் அடிப்படையில் ஒரு நியாயமான வரலாற்றை எழுத முடியும்.தி.மு.க. ஆட்சிக்கு வந்த இந்த ஐம்பதாண்டுகளை தமிழர்கள் கொண்டாடுகிற இந்த நேரத்தில் திராவிட இயக்க வசவாளர்கள் திராவிட இயக்கத்தின் மேல் தங்கள் மூர்க்கமான தாக்குதலை தீவிரப் படுத்தியிருக்கிறார்கள். தமிழக அரசியலில் பா.ஜ.க.வும் இடதுசாரிகளும் தமிழ் தேசியர்களும் சாதிக்கட்சிகளும் ஒன்று சேரும் வினோதப் புள்ளி திராவிட எதிர்ப்பு என்பது. இந்தப் புள்ளியை இணைத்து கோலமாக்குகிற முயற்சியில் நடுநிலை போர்வையில் இருக்கும் ஊடகங்களும் அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாரும் ஒரு மாற்று அரசியல் குறித்த முழக்கங்களை அவ்வப்போது முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த மாற்றுக்குரலை முன்வைக்கும் எல்லா கட்சிகளுமே 2014 வரை தி.மு.க., அ.தி.மு.க. என்ற இரண்டு குதிரைகளிலும் மாறிமாறி சவாரி செய்து, திராவிடத்தின் நிழலில் வளர்ந்தவர்கள், திடீரென ஒருநாள் கண்விழித்து திராவிட அரசால்தான் தமிழகம் சீரழிந்தது என்கிறார்கள். மேலும் திராவிட அரசு உருவாக்கிய சமூக நல-சமூக நீதி திட்டங்களைத் தாண்டக்கூடிய எதையும் இவர்களால் மக்களிடம் முன்வைக்க முடியவில்லை. திராவிட ஆட்சிக் கால பிறழ்வுகள் சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு திராவிடம் உருவாக்கிய மறுமலர்ச்சியை இருளில் தள்ளிவிடலாம் என்பது இவர்கள் கனவு.

திராவிட இயக்கத்தை சிறுமைப்படுத்த விரும்புகிறவர்கள் அதற்கு மாறாக அடிக்கடி காட்டும் ஒரு உதாரணம், "காமராஜர் காலஆட்சி ஒரு பொற்காலம்' என்ற சித்திரம். அதற்குச் சொல்லப்படும் காரணம் காமராஜர்  எளிமையானவர், நேர்மையானவர், கல்வி நிலையங்களைத் திறந்தவர் என்பது. இதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சமூகப் பொருளாதார நிலை என்ன என்பதை யாரும் ஆதாரத் துடன் பேசுவதில்லை.உதாரணமாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய காலத்தில் தமிழ்நாட்டில் பெரும் பஞ்சம் நிலவியது. பட்டினிச்சாவுகள் பரவலாக இருந்தன. அரிசி இல்லாமல் இறக்குமதி செய்யப் பட்ட கோதுமையையும் ரவையையும் மக்கள் உண்ட காலம் அது. விவசாயிகள், தொழிலாளிகள் நிலை மிக அவலமானதாக இருந்தது. ஆனால் காம ராஜர் போட்ட கல்வி விதையைப் பெரும் ஆலமரமாக்கியது தி.மு.க. அரசு. குக்கிராமங்கள் தோறும் அரசுப்பள்ளிகள் மூலம் பொதுக்கல்வி கொண்டு சென்றது மிகப்பெரிய சமூகப் புரட்சியை உண்டாக்கியது. உயர்கல்விக்காக ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களில் முதல் தலைமுறை படிப்பாளிகளும் பட்டதாரிகளும் உருவானார்கள். இன்று அரசியல் வேண்டாம், திராவிட கட்சிகள் வேண்டாம் என்று சொல்லும் இளைஞர்கள் தங்களுக்கான சமூகப், பொருளாதார விடுதலையை எந்த இயக்கத்தின் வழியாக அடைந்தோம் என்பதை மறந்து பேசுவதுதான் வரலாற்று அவலம்.

முக்கியமாக வட மாநிலங்களோடு ஒப்பிட்டால் பெண் கல்வியில் மிகப்பெரிய சாதனையை தமிழகம் எட்டியது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் இலட்சக் கணக்கான பெண்களை சுயசார்பு கொண்டவர்களாக மாற்றியது. பெண்களுக்கு சொத்துரிமையை உத்திரவாதப்படுத்தியது என பெண்கள் தினம் கொண்டாடப்படும் தருணத்தில் நினைக்கப்பட வேண்டியவை ஏராளம்.

இன்றும் தமிழகத்தில் சில இடங்களில் இரட்டைக் குவளை முறை இருக்கின்றன. இன்றும் ஆங்காங்கே ஆணவப் படுகொலைகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்க ஆட்சிதான் என்று கூக்குரலிடுபவர்கள் இருக்கிறார்கள். சாதியை திராவிட இயக்கமா உருவாக்கியது? இந்தக் குற்றச்சாட்டை கூறும் இடதுசாரிகள் மேற்கு வங்கத்திலும் கேரளாவிலும் திரிபுராவிலும் சாதியை ஒழித்துவிட்டார்களா? ஆனால் இந்தியாவில் எங்கும் இல் லாத அளவு தமிழகத்தில் தான் 69 சதவிகித இட ஒதுக் கீடு சாத்தியப்படுத்தப்பட்டது. அருந்ததியர்க்கும் சிறுபான்மையினருக்கும் உள் ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினர் தலைநிமிர்ந்து மேல் எழுந்து வந்தார்கள்.

"மெட்ராஸ் ஸ்டேட்' என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலத்திற்கு "தமிழ்நாடு' என்று பெயர் சூட்டிய அண்ணா, தமிழகப் பள்ளிகளிலும் நிர்வாகத்திலும் இந்தித் திணிப்பைக் கொண்டுவந்த மும்மொழிக்கொள்கைக்கு எதிராக ஆங்கிலம் -தமிழ் என்ற இருமொழிக் கொள்கையை நிலைப்படுத்தி னார். சடங்குகளற்ற சுயமரியா தைத் திருமணங்களுக்கு அண்ணாவின் ஆட்சி சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்கியது. அவரது ஆட்சிக்காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞரால் இந்தியாவிலேயே முதல்முறையாக பேருந்துகள் நாட்டுடமையாக்கப்பட்டன. அண்ணாவின் மறைவுக்குபின் தமிழக முதல்வரான கலைஞர் ஆட்சியில் கைரிக்ஷாக்கள் ஒழிக்கப்பட்டு சைக்கிள் ரிக்ஷாக்கள் வழங்கப்பட்டன. குடிசை மாற்று வாரியம் என்பது இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொடங்கப்பட்டு எளியமக்களின் வாழ்விடம் சார்ந்த தரம் உயர்த்தப்பட்டது. மாநில சுயாட்சி, மொழி உரிமை சார்ந்து இடையறாத போராட்டங்களை தி.மு.க. நடத்தி வந்திருக்கிறது. இந்திராகாந்தி நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து மிகப்பெரிய ஜனநாயக படுகொலையை நிகழ்த்தியபோது அதை எதிர்த்தார் கலைஞர். அதற்காக அதிகாரத்தையும் இழந்தார். மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வின் தலைவர்களும் தொண்டர்களும் சொல்லொண்ணாத துயரங்களை சிறைச்சாலைகளில் அனுபவித்தனர்.

1972-இல் இந்திய சுதந்திர வெள்ளிவிழா கொண்டாடப்பட்டபோது, சுதந்திர நாளில் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை அந்தந்த மாநில முதல்வர்களுக்கு வழங்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திப் பெற்றார் கலைஞர். அதுவரை, சுதந்திர தினம்-குடியரசு தினம் இரண்டு நாட்களும் மாநில ஆளுநரே  கொடியேற்றும் வழக்கம்  இருந்து வந்தது. ‘"நீராரும் கடலுடுத்த'‘ எனத் தொடங்கும் பாடலை அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக பாடும் வழக்கத்தைக் கொண்டுவந்ததும் அவர்தான் கண்ணொளித் திட்டம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவசக் கல்வி, நில உச்சவரம்புச் சட்டம், விவசாயத்  தொழிலாளர்களுக்கான கூலி நிர்ணயம், பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளிகள் மறுவாழ்வுத் திட்டம், விதவைகள் மறுமணத்திற்கு நிதியுதவி, கலப்புத் திருமணத்  தம்பதிகளுக்கு ஊக்கத் தொகை, விவசாயிகள் கடன் தள்ளுபடி, இலவச மின்சார திட்டம், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள், உழவர் சந்தை, காவல்துறையில் மகளிர் காவலர், தொழிற்கல்வி பயிலும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கட்டண இலவசம், பள்ளி களில் சமச்சீர் பாடத்திட்டம், அமைப்புசாரா  தொழிலாளர்கள் நலவாரியம், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் எனும் சட்டம் என தி.மு.க. ஆட்சிக் காலத்தில் செய்யப்பட்ட மாற்றங்களும் சீர்திருத்தங்களும் தமிழ் சமூக அமைப்பில் படிந்த இருளைத் துடைத்தது. மிகச் சிறப்பான பொது வினியோக திட்டத்தின் மூலம் மக்களின் அடிப்படை வாழ்வுரிமை பாதுகாக்கப்பட்டது. 4500 நூலகங்களைக் கொண்ட பிரம்மாண்டமான பொது நூலகக் கட்டமைப்பு அண்ணா நூற்றாண்டு நூலகம் என தி.மு.க.வின் எண்ணற்ற பங்களிப்புகள் அறிவியக்கத்திற்கு இருக்கின்றன.

ஐம்பதாண்டுகளாக நடந்த இந்த சமூக நீதி மற்றும் சமூக நலத்திட்டங்கள் வழியாக தமிழகம் இன்று மனிதவளக் குறியீட்டிலும் தொழில் வளர்ச்சியிலும் மிக மேலான இடத்தைப் பெற்றி ருக்கிறது. குழந்தைகளின் இறப்பு விகிதம், ஊட்டச்சத்து பற்றாக்குறை விகிதம் பெருமளவு தமிழகத்தில் குறைந்துவிட்டது. சாலை வசதிகள் போக்குவரத்து வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளில் தமிழகம் எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாத வளர்ச்சி கண்டிருக்கிறது.

 இவை வெறும் பட்டியல்கள் அல்ல. ஒரு பேரியக்கம் மக்களுக்கு ஆற்றிய, ஒரு மாநில வளர்ச்சிக்கு ஆற்றிய மகத்தான பங்களிப்பு. இந்தியாவில் பல மாநிலங்களில் மதவாத மோதல்கள் மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிகள் இருக்கின்றன. சாதிய-இன மோதல்கள் மூலம் ஆட்சிக்கு வந்த கட்சிகள் இருக்கின்றன. அரசியல் படுகொலைகளை நிகழ்த்திய கட்சிகள் இருக்கின்றன. எந்த வளர்ச்சியையும் கொண்டுவராமல் வெறும் கோஷங்களிலேயே வாழ்ந்த கட்சிகள் இருக்கின்றன. ஆனால் திராவிட இயக்க 50 ஆண்டுகால ஆட்சி ஒரு நவீன இந்தியாவில் தமிழகத்தின் மாண்பை தனித்து திகழச் செய்யும் ஒன்றாக இருந்திருக்கிறது. திராவிட ஆட்சியின் நூறாவது ஆண்டும் வரும்.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(24)
Name : sank Date :4/3/2017 2:48:44 AM
ஐம்பது ஆண்டுகள் முழு மெஜாரிட்டியுடன் இருந்த திராவிடக் கட்சிகள் , தமிழர்களை ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஆசைப் பட்டு தரமில்லாதவரை பதவியில் அமரவைக்கும் கேவலத்தை தான் சாதித்துள்ளன.
Name : sank Date :4/3/2017 2:47:35 AM
திராவிட ஆட்சி மட்டும்தானே நடந்தது ஐம்பது ஆண்டுகளாக ?/ ஜாதி ஒழிந்து விட்டதா தமிழகத்தில் ? தலித்துகள் முன்னேறி விட்டார்களா? பொதுக் கிணறில் தலித்துகள் தண்ணீர் எடுக்கலாமா? ஒன்று பட்ட தமிழர்களை தேவராகவும் நாடாராகவும் கவுண்டராகவும் வன்னியராகவும் சிறுபான்மையினராகவும் தலித்துகளாகவும் மாற்றியது மட்டுமே திராவிட கட்சிகளின் சாதனை.
Name : sank Date :4/3/2017 2:45:51 AM
திராவிட ஆட்சி மட்டும்தானே நடந்தது ஐம்பது ஆண்டுகளாக ?/ ஜாதி ஒழிந்து விட்டதா தமிழகத்தில் ? தலித்துகள் முன்னேறி விட்டார்களா? பொதுக் கிணறில் தலித்துகள் தண்ணீர் எடுக்கலாமா? ஒன்று பட்ட தமிழர்களை தேவராகவும் நாடாராகவும் கவுண்டராகவும் வன்னியராகவும் சிறுபான்மையினராகவும் தலித்துகளாகவும் மாற்றியது மட்டுமே திராவிட கட்சிகளின் சாதனை. ஐம்பது ஆண்டுகள் முழு மெஜாரிட்டியுடன் இருந்த திராவிடக் கட்சிகள் , தமிழர்களை ஐநூறுக்கும் ஆயிரத்திற்கும் ஆசைப் பட்டு தரமில்லாதவரை பதவியில் அமரவைக்கும் கேவலத்தை தான் சாதித்துள்ளன.
Name : raja Country : Australia Date :3/30/2017 9:44:50 AM
சூப்பர் நல்ல கட்டுரை பயனுள்ளது
Name : K. Ramachandran Country : Australia Date :3/14/2017 4:10:58 PM
69% இட ஒதுக்கீடு தந்தது தி மு க அல்ல. தி மு க உம் காங்கிரஸும் சேர்ந்து தந்தது ஜல்லிக்கட்டுக்கு தடை , கச்சத்தீவை தாரை வார்த்தல் மற்றும் விளை நிலங்களை தரிசாக்கும் திட்டங்களே.
Name : இந்தியன் Date :3/13/2017 11:03:50 PM
வட இந்தியாவையும் திராவிடர்கள் ஆட்சி செய்திருந்தால் நாம் சீனாவையும் விஞ்சியிருப்போம் . வட இந்தியர்கள் வேலைதேடி தமிழ் நாட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கில் வந்து இறங்கிக் கொண்டிருக்கின்றனர் . சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்று ஒரு நாள் எத்தனை ஹிந்திக்காரர்கள் வந்திறங்குகிறார்கள் என்று கணக்கெடுத்தால் ,விரைவில் தமிழ் நாட்டில் நாம் சிறுபான்மை ஆகிவிடுவோம் என்று உணர முடிகிறது . ஆரியத்தால் அங்கு அழிந்த ஹிந்திக்காரர்கள் இங்கு திராவிடத்தால் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களின் வேலை வாய்ப்பினை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறார்கள் . அகில இந்தியாவையும் திராவிடர்கள் ஆண்டால் தான் ஹிந்திக்காரர்களுக்கும் வட மாநிலங்களில் வாழ்வு பிறக்கும். ஆகவே வட மாநிலங்களின் இந்த அவலநிலை மாறி தமிழ் நாடு அளவிற்கு சமூக பொருளாதார நிலைகளில் முன்னேற திமுக அகில இந்திய அளவில் தேர்தலில் போட்டியிட்டு ஜெயித்து இந்தியாவை திராவிடத்தால் முன்னேற்ற முயற்சிக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களைக் கரம் கூப்பி வேண்டுகிறேன்.
Name : Murali Country : Indonesia Date :3/12/2017 9:05:58 AM
திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் ஆதிசங்கர்ர் பயன் படுத்தினார். காஷ்மீரத்திற்கு சென்ற போது வடக்கைக் சேர்ந்தவர்கள், நீ எங்கிருந்து வருகிறாய் என்பதற்கு பதிலாக நான் மூன்று கடலால் சூழப்பட்ட த்ராவிடத்திலிருந்து வருகிறேன் என்றார். சமஸ்க்ருத்த்தில் த்ர என்ற சொல் மூன்று என்பதாகும். எனவே த்ராவிடம் என்ற சொல் வடமொழி சொல்
Name : ARU GOPALAN Date :3/12/2017 8:55:21 AM
மதிப்புக்குரிய எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் வணக்கம் வெண்மணி படுகொலை, மற்றய படு கொலைகளைப் பற்றி ஏன் எழுதவில்லை? ஈழத்து தமிழர் எழுப்பதினாயிரம் பேர் தி மு க ஆசியுடன் காங்கிரஸ், ராஜபக்ஸ்ஸ அரசால் கொலை செய்யப்பட்ட்து பற்றி ஏன் எழுதவில்லை? தமிழ் நாட்டில் அறுபத்தி ஐந்து வீதம் எழுதத்த தெரியாதவர்கள் , அரசில் தலைவர்கள் கொள்ளை அடயத்தையும் எழுத் வில்லை ஸ்டாலின் தங்களுக்கு அடுத்த முறை மந்திரி பதவி தருவார். நீங்கள் நீடுழி வாழ்க
Name : Thanga Country : Canada Date :3/12/2017 1:21:07 AM
சாதனைப் பட்டியலில் உள்ள உழவர் சந்தை ஆண்டுகளாக இல்லை. அண்ணா நூற்றாண்டு நினைவு நுாலகம் மூடிக் கிடக்கிறது. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற சட்டம் நீதிமன்றத்தில் தூங்குகிறது. சாதி ஒழிக்கப்படவில்லை. இரட்டைத் தம்ளர் நாட்டுப்புறங்களில் இன்றும் இருக்கிறது. நகரத் தெருக்களில் பெயர்ப்பலகைகள் தமிழில் இல்லை. தமிழில் எழுத எடுத்த முயற்சி தோல்வி கண்டது. இந்தி படிப்போர் தொகை அதிகரித்துள்ளது. இலஞ்சம் ஊழல் ஆல்போல் தளிர்த்து அறுகு போல் வேரோடியுள்ளது. அரச அலுவலகங்களில் இலஞ்சம் கொடுக்காமல் ஒரு இறப்புச சான்றிதள் பெறமுடியாது. சாதனைகளை விட சாதிக்காதவை அதிகம்.
Name : Raja Date :3/11/2017 11:01:26 AM
நாம் தமிழர் ( திராவிடம் வீழ்ந்தது தமிழகத்தில் )
Name : anand Country : United States Date :3/10/2017 9:19:13 PM
தமிழால் வாழ்ந்தோம்.
Name : Raj Country : Indonesia Date :3/10/2017 6:07:36 PM
It's important to register the works of dravidian movement in the minds of people .
Name : R BALAKUMAR Date :3/10/2017 9:10:10 AM
சில அறிவிலிகள் அதிமுகவையும் திராவிட இயக்கம் என்று கூறுவது. தனிப்பட்ட திமுகவின் பேரில் எந்த குற்றமும் சொல்ல இயலாது என்பதால் அதிமுகவையும் இணைத்தே தான் பேசவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் திமுகவின் மேல்வைத்தால் அதற்கு பதில் சொல்லலாம் அதை விடுத்து அதிமுகவையும் இணைத்து குற்றம் சொல்பவர்கள் நோக்கம் திமுகவின் மீது எந்த குற்றமும் சட்ட முடியாது என்பதால்தான். சுத்தம் என்ற வார்த்தைக்கு முன்னால் அ வை சேர்த்தால் அசுத்தம் ஆகிறது. இதைத்தான் இரண்டும் ஒன்று என்கின்றனர் தேசியம், சர்வதேசியம் பேசுபவர்கள். சைவம் என்பதின் எதிர் அசைவம் இரண்டும் ஒன்று தானா? VEGETARIAN என்பதற்கு எதிர் NONVEGETARIAN . VEG - NONVEG . திமுக எதிர் அதிமுக . DMK - NONDMK NON என்பதற்கு அர்த்தம் அறிவாளிகளுக்கு தெரியாதா?
Name : Kannan Date :3/10/2017 4:47:53 AM
அதே திராவிடத்தால் அழிந்தோம்.
Name : Superusa Date :3/10/2017 3:11:10 AM
காமராஜர் ஒன்னும் பெரிய நல்ல தலைவர் கிடையாது. அவர் கதர் வேட்டி கட்டிக்கொண்டு , நாடார் மக்களுக்கு மட்டும் விருதுநகர் அருகில் எப்படி சிறு சிறு அணை கட்டி கொடுத்து , பல வசதிகள் அவர் மக்களுக்கு மட்டும் ஒரவஞ்சனையாக செய்து இருக்கார் என்று போய் பாருங்கள். திராவிடர்கள் இருப்பதால் தமிழர்கள் மத்தியில் போட்டி அதிகமாகிறது. நம்மை Kerala, andra , கர்நாடகாவில் திராவிடர்களாக நினைப்பதில்லை. நாமும் நினைக்க வேண்டாம். அவர்கள் இருப்பால், நம் பிரிவு அதிகம் ஆகிறது. தேவை இல்லை.
Name : Poovikko Date :3/9/2017 8:39:01 PM
வட இந்தியா சுற்றி வந்தவர்களுக்கு தெரியும் தமிழ் நாட்டின் வளர்ச்சி சில தவறுகளை வைத்துக்கொண்டு ஆற்றிய பல நன்மைகளை சீர் தூக்கி பார்க்காமல் தமிழகத்தின் நலன்களை தேசிய பார்வையில் புறக்கணிக்கும் 4 தேசிய கட்சிக்களுக்கு காவடி தூக்க இந்த மாற்று அரசியல் பேச்சு
Name : Poovikko Date :3/9/2017 8:38:47 PM
வட இந்தியா சுற்றி வந்தவர்களுக்கு தெரியும் தமிழ் நாட்டின் வளர்ச்சி சில தவறுகளை வைத்துக்கொண்டு ஆற்றிய பல நன்மைகளை சீர் தூக்கி பார்க்காமல் தமிழகத்தின் நலன்களை தேசிய பார்வையில் புறக்கணிக்கும் 4 தேசிய கட்சிக்களுக்கு காவடி தூக்க இந்த மாற்று அரசியல் பேச்சு
Name : eswaran Date :3/9/2017 8:14:24 PM
உண்மையான திராவிட இயக்கம் என்றால் அது தி.கவும் , தி.மு.க மட்டுமே. இன்று அரசியல் வேண்டாம், திராவிட கட்சிகள் வேண்டாம் என்று சொல்லும் இளைஞர்கள் தங்களுக்கான சமூகப், பொருளாதார விடுதலையை எந்த இயக்கத்தின் வழியாக அடைந்தோம் என்பதை மறந்து பேசுவதுதான் வரலாற்று அவலம். இந்த உண்மையை அறியாமல் இருக்கும் மக்களுக்கு திராவிடமுன்னேற்றக்கழகம் தொடர்ந்து பரப்புரைகளை செய்யவேண்டும்.
Name : Ravi-Swiss Country : Switzerland Date :3/9/2017 7:55:56 PM
தமிழகத் தமிழர்கள் தங்கள் இனத்தில் ஓர் முதல்வரை தேர்வு பண்ணாததே, இன்றைய தமிழக அழிவுக்குக் காரணம், பெரியார் கலைஜர் எம் ஜி ஆர் ஜெயா ராஜாஜி காமராஜர் போன்றோரை, தமிழர்கள் நம்பியதன் விளைவை இன்று அனுபவிக்கின்றார்கள், கூடங்குளம் மீதேன் கல்பாக்கம் நெய்வேலி தேனி கெயில் நெடுவாசல் மீனவர் டாஸ்மார்க் சினிமா சிலை வணக்கம் தண்ணீர் நதி காடழிப்பு மண்கொள்ளை ஊழல் தமிழக மத்திய அரசின் வேலை வாய்ப்பு தமிழர்களுக்கு இல்லாமை போன்ற அனைத்துக் காரணங்களுக்கும் திராவிட அரசே முழுக் காரணம், தமிழர்கள் இனியும் சிந்திக்காமல் விட்டால், ஒட்டுமொத்தமாக அழிவது உறுதி,
Name : Ravi-Swiss Country : Switzerland Date :3/9/2017 7:41:16 PM
இன்றைய தமிழக தமிழர்களின் அழிவுக்கு திராவிட ஆட்சிகளே முழுக் காரணம், திராவிடர்கள் தமிழர்களுக்கு எதிராகப் பண்ணிய துரோகங்களை வார்த்தைகளில் வடிக்க முடியாது, இந்தப் பண்டாரங்கள் அதாவது மனுஷபுத்திரன் வைரமுத்து வீரமணி சுப போன்ற திராவிட அல்லைக்கைகள் கூறியவுடன் சரி என்று நாம் எடுக்க முடியாது, இவர்களுக்கு திராவிடர்கள் ஊழல் பண்ணிய பணத்தில், ஒவ்வொரு மாதமும் சம்பளம் போகின்றது, எதனை வேண்டுமானாலும் கூறுவார்கள், ஆனால் இதனை உலகத் தமிழர்கள் நம்பவேண்டிய அவசியமில்லை,============
Name : selvamani g Country : Australia Date :3/9/2017 4:13:47 PM
We failed in our children's brought up without teachings of Dravidian movement also our youngsters are believing mass media's anti dravidian propaganda future of these youngsters and their kids worried me lot
Name : raghavan mageswary Date :3/9/2017 3:43:37 PM
திராவிட ஆட்சியில் விளைந்திட்ட நன்மைகளை விளக்கிய விதம் மிக அருமை. இத்தனை நன்மைகளை தமிழத்திற்கு கொடுத்த ஆட்சி அதன் புனிதம் மாறாமல் தொடர்ந்திருந்தால் திராவிட ஆட்சிக்கு மாற்று என்ற விமர்சனத்திற்கு ஆட்பட்டிருக்காது . ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில் ஐம்பது வருடங்களில் வளர்ச்சி என்பது இன்றியமையாதது. திராவிட ஆட்சியாளர்கள் முழுக்க முழுக்க பொதுநலத்துடன் ஆட்சியை தொடர்ந்திருந்தால் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டிருக்க முடியும்.காரணம் திராவிட ஆட்சியாளர்களின் அறிவுத்திறன் அப்படி. அறிவுத்திறனை ஆட்சிக்கு பயன்படுத்தியத்திற்கு இணையாக தனிப்பட்ட நலனுக்கு பயன்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சியில் சிறிது பின்தங்கிதான் இருக்கிறோம், எளிமைக்கும் நேர்மைக்கும் திரு காமராஜரையும் , திரு அண்ணாவையும் மேற்கோள் காட்டி பேசவேண்டிய நிலையில்தான் நாம் இன்றும் இருக்கிறோம். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மன்னர்களுக்கு இணையாக தங்களை பொருளாதார ரீதியில் வளர்த்துக்கொண்டுள்ளார்கள் என்பதையும் மறுக்க முடியாது. தேசிய கட்சிக்கு மாற்றாக உருவாகிய திராவிட கட்சி அதனோடு தன்னை ஒப்பிட்டு கொள்ளவும்கூடாது .
Name : Athiveeran Country : United States Date :3/9/2017 2:46:57 PM
நம் தமிழ் நாடு தன்னிகரில்லா மாநிலம் , மாற்று கருத்தில்லை கடந்த 50 ஆண்டுகளில் திராவிட ( திமுக ) கட்சிகளின் ஆட்சியில் , பெரும் வளர்ச்சி அடைந்திருக்கின்றோம் உண்மையுளும் உண்மை இந்த ஆட்சினால் கல்வியிலையும், வேலைவாய்ப்பிலையும் பயன் அடைந்தவர்கள் தான் ' திராவிட கட்சிகளை குறை கூறுகின்றார்கள் , என்பது தான் வேடிக்கையாக உள்ளது . =================== ஊழலை குறைத்து , எல்லோருக்குமான முன்னேற்றதே நோக்கி செல்ல ....
Name : sahadat paris Country : France Date :3/9/2017 1:33:58 PM
முற்றிலும் உண்மை