Add1
logo
100 கோடி அபராத தொகையை வசூலிக்க கோரும் கர்நாடகத்தின் மனு: ஏப்.5-ல் விசாரணை || கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை || பத்ம விருதுகள் வழங்கினார் பிரணாப் || டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் || புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு || அம்மணமாய் ஆர்ப்பரிப்போம் : மதுரை முழுவதும் பரபரப்பு போஸ்டர் || நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு || ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்) || கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு || ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு || பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு || திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை! || இடைத்தேர்தலை நிறுத்த சதி! தினகரன் தரப்பு திட்டம்!! ||
தமிழகம்
கோயம்பேட்டில் 10 -ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
......................................
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து விருத்தாசலத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
......................................
புவனகிரியில் கணவன் கையால் ஓங்கி அடித்ததில் மனைவி உயிரிழப்பு
......................................
நாளை ஒரே நாள் இரு சக்கர வாகனங்களில் விலை அதிரடியாக குறைப்பு
......................................
ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக மோடி முகமூடியுடன் அடுப்புக்கரி சாம்பல் தின்று போராட்டம்! (படம்)
......................................
கிராம சபைக் கூட்டத்தில் ஹைட்ரோ கார்பனை தடை செய்ய தீர்மானம் கொண்டு வர விவசாயிகள் முடிவு
......................................
ஓபிஎஸ் சின்னத்தை முடக்க மனு
......................................
பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்! காங். சிறுபாண்மை பிரிவு
......................................
திருவாடானை அருகே குடும்ப தகராறில் ஐந்துமாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை!
......................................
தூங்கி கொண்டு இருக்கும் பா.ஜ.க எம்எல்ஏ-கள்! (படங்கள்)
......................................
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை (படங்கள்)
......................................
ஈரோடு மாவட்டத்தில் 7 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
......................................
உச்சநீதிமன்றம் சாட்டையடி: சாலையோர மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! ராமதாசு
......................................
மைல்கற்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக திணிக்கப்பட்ட இந்தியை அகற்றாவிட்டால் பா.ம.க. போராட்டம்! ராமதாசு
......................................
நல்ல நோக்கத்தை கற்றுக்கொடுத்தால் இளைஞன் தவறு செய்யமாட்டான்: கவிஞர் நந்தலாலா பேச்சு (படங்கள்)
......................................
விவசாய சங்கங்கள் நடத்துகின்ற போராட்டங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
......................................
நாக்கில் நரம்பின்றி நரகல் நடையில் எச். ராஜா தொடர்ந்து பேசி வருகிறார்: திருநாவுக்கரசர் கண்டனம்
......................................
காயிதே மில்லத் விருது வழங்கும் விழா (படங்கள்)
......................................
எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் வைகோ (படங்கள்)
......................................
ஆங்கிலத்திற்கு பதிலாக திணிக்கப்பட்ட இந்தி: மிகப்பெரிய போராட்டம்: மத்திய அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை
......................................
தஞ்சையில் 3வது நாளாக தொடர்கிறது விவசாயிகள் போராட்டம்
......................................
உச்சநீதிமன்றம் சாட்டையடி: சாலையோர மதுக்கடைகளை உடனடியாக மூடுங்கள்! ராமதாஸ்
......................................
அடக்க வேண்டிய விதத்தில் அடக்குவார்கள்: எச். ராஜாவுக்கு திருநாவுக்கரசர் எச்சரிக்கை
......................................
மதுரையில் கட்சியினருடன் வாசன் ஆலோசனை
......................................
கல்வி உதவித்தொகை வழங்க கோரிக்கை
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (15:29 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (16:3 IST)



அரசு துணிச்சலுடன் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் -ஈஸ்வரன்


கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் Er.ஈஸ்வரன் கோரிக்கையில்

"உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறக்காத கர்நாடக அரசிற்கு இருக்கின்ற துணிச்சல், ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசுக்கு இல்லையா?" என கேள்வி எழுப்பியுள்ள ஈஸ்வரன் மேலும் தனது அறிக்கையில்

"உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கைகள் மொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும், வேதனையையும் கொடுத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நிலுவையுள்ள வழக்கில் ஏதோ நேற்றுதான் இந்த வழக்கு தொடரப்பட்டதை போல தீர்ப்பு எழுதி கொண்டிருக்கிறோம் என்று உச்சநீதிமன்றம் சொல்வது மிகப்பெரிய ஏமாற்றுவேலை. ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் பொருளாதார ரீதியிலான உள்நோக்கத்தோடும், வெளிநாடுகளின் தூண்டுதலாலும் செயல்படுகிறார்கள் என்பதை உச்சநீதிமன்றம் புரிந்து கொள்ளவில்லை. உச்சநீதிமன்றத்தின் கருத்து தமிழர்கள் மீதும் தமிழக கலாச்சாரத்தின் மீதும் விழுந்த பேரிடியாகும். தண்ணீர் இல்லாமல் பயிர்களும், விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் இது கருப்பு பொங்கல் மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழகத்திற்கும் இது கசப்பு பொங்கலாய் மாறிவிட்டது.

தமிழகத்தின் பட்டிதொட்டிகளில் எல்லாம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் வெடித்திருக்கிறது. இது இளைஞர்களும், மாணவர்களும் சம்மந்தப்பட்டது. இளைஞர்களும், மாணவர்களும் மற்றும் பொதுமக்களும் தெருவுக்கு வந்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் மட்டும் நடத்துகின்ற போராட்டமல்ல. 1960 -களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் போல ஒரு வேகமும், எழுச்சியும் தமிழகம் பூராவும் உருவாகியிருக்கிறது. மத்தியில் ஆளுகின்ற அரசு வருட கணக்கில் இதற்கான சட்டத்திருத்தத்தை கொண்டு வராமல் ஏமாற்றுகிறார்கள். இதற்கான சட்டத்திருத்தத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிவிட்டால் உச்சநீதிமன்றம் எப்படி தடுக்க முடியும். தமிழக அரசு ஜல்லிக்கட்டு விஷயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்பதையும் உணர முடிகிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை மத்திய அரசு என்ன செய்துவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகும் கர்நாடக முதலமைச்சர் காவிரியில் தண்ணீரை திறக்க முடியாதென்று உறுதிப்பட பேசுகிறார். அந்த துணிச்சல் தமிழக அரசுக்கு வராதா, தமிழக முதலமைச்சருக்கு வராதா?. அந்த துணிச்சல் நமக்கு இருக்குமென்றால் தமிழக அரசு வாய் பேச்சு பேசாமல் நடவடிக்கைகளில் இறங்கி, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். தமிழக பூராவும் ஒரு இடம் பாக்கி இல்லாமல் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு ஊக்கத்தை இப்போது நடக்கின்ற போராட்டங்கள் கொடுத்திருக்கின்றன. இதை தமிழக அரசு முன்னெடுத்து செல்ல வேண்டும்." என இவ்வாறு கூறினார்.

-ஜீவாதங்கவேல்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :