Add1
logo
அகவிலைப்படி உயர்வை 6 சதவீதமாக திருத்த வேண்டும் - ராமதாஸ் || திமுக பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் - மு.க.ஸ்டாலின் ஆலோசனை || நாளை முதல் டிஇடி தேர்வு நடைபெறுகிறது || மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்துக்கும் விடுமுறை || இந்தியா - வங்கதேச எல்லைப் பகுதியில், ரகசிய சுரங்கப் பாதை கண்டறியப்பட்டது || அரசு மருத்துவமனை பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு || பொது இடத்தினை ஆக்கிரமிப்பு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க தாலூகா அலுவலகத்தை முற்றுக்கை || நிறுத்தப்பட்ட மினி பஸ்களை இயக்க கோரிக்கை வட்டார போக்குவரத்து அலுவலகம் முற்றுக்கை || சீல் வைக்கப்பட்டுள்ள தாது மணல் குடோன்களில் சிறப்பு அதிகாரி ஆய்வு || கத்தாரில் முதன் முறையாக கண்டு ரசித்த பட்டம் விடும் திருவிழா || வடசென்னை அனல் மின் நிலையத்தில் உற்பத்தி தொடங்கியுள்ளது || புதுக்கோட்டையில் அமைச்சரமீது கோபம் காலியாகும் அதிமுக (அ) அணி || பெற்றோரிடமிருந்து குழந்தைகள் பிரிந்து வாழலாம்: உச்சநீதிமன்றத்தின் விநோதத் தீர்ப்பு! ||
முக்கிய செய்திகள்
திமுக பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்களுடன் - மு.க.ஸ்டாலின் ஆலோசனை
......................................
நாளை முதல் டிஇடி தேர்வு நடைபெறுகிறது
......................................
டெல்லி.. டெல்லி.. டெல்லி.. டெல்லி.. டெல்லி.. : நேரலையில் கத்திய நாஞ்சில் சம்பத் (வீடியோ)
......................................
அடையாறு : தினகரன் வீட்டில் வைத்து டெல்லி போலீசார் விசாரணை (வீடியோ)
......................................
டி.டி.வி.தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டது ஏன்? (வீடியோ)
......................................
வைகோவுக்கு மீண்டும் சிறை - ஜூன்- 2வரை காவல் நீட்டிப்பு
......................................
விவசாயிகள் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்: சென்னையில் நக்மா பேட்டி (படங்கள்)
......................................
தமிழகத்தில் அ.தி.மு.க. அழிந்துவிட்டது: ராமதாஸ்
......................................
சென்னை ஜார்ஜ் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மாஃபா பாண்டியராஜன் சரண்
......................................
தமிழக அரசு தூங்கிக் கொண்டிருக்கிறதா? அன்புமணி கண்டனம்
......................................
லோக்பால் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த உத்தரவு!
......................................
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு போதுமானதல்ல!: ராமதாஸ்
......................................
தினகரனுடன் டெல்லி போலீசார் சென்னை புறப்பட்டனர்!
......................................
அரசு டாக்டர்கள் போராட்டத்துக்கு - மு.க.ஸ்டாலின் ஆதரவு
......................................
அரசு ஊழியர்கள் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு - முதல்வர் பழனிசாமி அறிக்கை
......................................
Facebook Twitter Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (12:29 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (12:44 IST)


எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: ராமதாஸ் அதிரடி

இனியும் ஏன் தாமதம்... ஜல்லிக்கட்டுக்கு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும், அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிப்பதையும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவது குறித்த வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. இதனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த விஷயத்தில் மத்திய அரசு இன்னும் மவுனம் கடைபிடித்து, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயம் போல ஒதுங்கியிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு கடந்த நவம்பர் மாதம் 28&ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளித்து கடந்த ஆண்டு மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பு தான் ஜல்லிக்கட்டு போட்டியின் தலைவிதியை தீர்மானிக்கும். பலவாரங்களுக்கு முன்பே விசாரித்து முடிக்கப்பட்ட அந்த வழக்கில் தீர்ப்பளிப்பதற்கான அறிகுறி தென்படாத நிலையில், அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் முன் இன்று நேர்நின்ற தமிழக தரப்பு வழக்கறிஞர், உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள் பொங்கலுக்குள் தீர்ப்பளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏற்கனவே தெரிவித்த சில கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது, அவர்கள் நிச்சயம் தமிழகத்திற்கு சாதகமாக இருக்க மாட்டார்கள்  என்பது ஏற்கனவே தெரியும். அதனால் இத்தீர்ப்பு அதிர்ச்சியோ, வியப்போ அளிக்கவில்லை. எனவே தான் உச்சநீதிமன்றத்தைப் பற்றிக் கவலைப்படாமல், காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இதே கோரிக்கையை  வலியுறுத்தி மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு இதையெல்லாம் கண்டு கொள்ளாமல், உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள சூழலில் ஜல்லிக்கட்டுக்காக அவசரச்சட்டம் பிறப்பிக்க முடியாது  என்று கூறியிருப்பது தான் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அளிக்கிறது. 

ஜல்லிக்கட்டுப் போட்டியை இந்த ஆண்டும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்கு தமிழக அரசின் கையாலாகாத  தனமும்,  திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளின் துரோகங்களும் தான் காரணமாகும். ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை விதிக்கும் வகையில், காளைகளை காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்து துரோகம் செய்தது காங்கிரஸ் அரசு தான். இதற்குக் காரணமான காங்கிரஸ் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், ஜல்லிக்கட்டுப் போட்டிகள் காட்டுமிராண்டித் தனம் என்று கூறினார். அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங்கோ இன்னும் ஒருபடி மேலே போய், ஜல்லிக்கட்டு கொடூரமான பொழுதுபோக்கு என்றும், அதற்கு எதிரான அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் கூறினார். இந்த துரோகங்கள் அனைத்துக்கும் மவுனசாட்சியாக திமுக இருந்தது. 

இன்னொருபுறம் பாரதிய ஜனதாக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ்  ஜவதேக்கர் முதல் தமிழக பாரதிய ஜனதா தலைவர்கள் வரை அனைவரும் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்று தொடர்ந்து 3 ஆண்டுகளாக கூறி மக்களை ஏமாற்றி வந்தனர். இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாது என மத்திய அரசு கூறியிருப்பது நம்பவைத்து கழுத்தை அறுக்கும் செயலாகும். அதிமுக, திமுக, காங்கிரஸ், பாரதிய ஜனதா ஆகிய கட்சிகளின் துரோகங்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

 உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதற்கு ஏராளமான முன்னுதாரணங்கள் உள்ளன. எனவே, சாக்குப்போக்கு கூறாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வசதியாக அவசரச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழகம் முழுவதும் தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதையும், அதற்கு அனைத்து தரப்பு மக்களும் ஆதரவு அளிப்பதையும் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : antony Country : Australia Date :1/12/2017 7:51:21 PM
அய்யா அறிக்கை விட்டா எதுவும் நடக்காது.
Name : ASEER Date :1/12/2017 6:26:53 PM
நீ இன்னும் மத்தவங்கள குறை சொல்லியே காலத்தை ஓட்டுறா.நடக்க கூடியத பாரு .கடந்ததை பற்றியே பேசினால் உன் காலமும் முடிந்து போகும் .