Add1
logo
முன்னாள் காங். எம்எல்ஏ மரணம் || EXCLUSIVE - நத்தம் கோயில்பட்டியில் ஜல்லிக்கட்டை துவங்கி வைக்கிறார் ஓபிஎஸ் || EXCLUSIVE முதல்வர் ஓபிஎஸ் திண்டுக்கல்லில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம் || தமுக்கம் மைதானத்தில் 5வது நாள் போராட்டம் || தமிழகத்தின் மிக உயர்ந்த கலாச்சாரம் குறித்து மிகுந்த பெருமை கொள்கிறேன்: மோடி || சாலையில் பள்ளம் தோண்டி, மணல் மூட்டைகளை அடுக்கி முதல்வர் ஓ.பி.எஸ்க்கு எதிர்ப்பு || வாடி வாசல் முன்பு போராட்டம் || விடிய விடிய போராட்டம் || பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன் || போலீஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள் || மெரினா இரவில் ஆடி பாடி மணலில் சிற்பம் வரைந்து போராடும் இளைஞர்கள் (படங்கள்) || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || அலங்காநல்லூரில் தடியடியா? ||
தமிழகம்
முன்னாள் காங். எம்எல்ஏ மரணம்
......................................
தமுக்கம் மைதானத்தில் 5வது நாள் போராட்டம்
......................................
வாடி வாசல் முன்பு போராட்டம்
......................................
விடிய விடிய போராட்டம்
......................................
பிரதமர் உறுதியளிக்கும் வரை போராட்டத்தைத் தொடர வேண்டும் - திருமாவளவன்
......................................
போலீஸ் அதிகாரிகளை திருப்பி அனுப்பிய கிராம மக்கள்
......................................
மெரினா இரவில் ஆடி பாடி மணலில் சிற்பம் வரைந்து போராடும் இளைஞர்கள் (படங்கள்)
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
அலங்காநல்லூரில் தடியடியா?
......................................
குடியரசு தினத்தை கருப்பு நாளாக அனுசரிக்க-புதுச்சேரி பொதுநல அமைப்புகள் முடிவு!
......................................
அவசர சட்டத்தில் என்ன திருத்தம் செய்யப்பட்டது?
......................................
நாளை கண்டிப்பாக வாடிவாசல் திறக்கப்படமாட்டாது : போராட்டக்காரர்கள் உறுதி
......................................
வரலாற்றில் இருந்து ஒருநாள் ஜல்லிக்கட்டு அகற்றப்படும் : பீட்டா இந்தியா
......................................
காந்தியப் போராட்ட முறை காலாவதியாகிவிடவில்லை-தமிழருவி மணியன்
......................................
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி: மாணவர்களுடன் பேச்சுவார்த்தை தோல்வி!
......................................
பாண்டியன் ஓட்டலில் ஓபிஎஸ்
......................................
ஓபிஎஸ் சென்ற விமானம் ஒரு மணி நேரம் தாமதம்
......................................
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - 2500 போலீசார் பாதுகாப்பு
......................................
மதுரையில் இளைஞர்கள் தீப்பொறி போராட்டம்
......................................
திருப்பி அனுப்பப்படும் காளைகள்
......................................
கொட்டும் மழையிலும் மாணவர், பொதுமக்கள் ரயில் மறியல் (படங்கள்)
......................................
ஜல்லிக்கட்டு நிச்சயம் நடக்கும் : ஓபிஎஸ் திட்டவட்டம்
......................................
”மாணவர்கள், இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்தும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ மு.க.ஸ்டாலின் பேச்சு
......................................
மதுரை ஏர்போர்ட்டில் போலீஸ் குவிப்பு
......................................
போராட்டத்தில் இருப்பவர்கள் வீடுகளூக்கு திரும்புவார்கள் என்று நம்புகிறேன்: ஆளுநர்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (12:0 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (12:11 IST)



ஜல்லிக்கட்டு: மாணவர்களின் போராட்டங்கள்
மிகப்பெரிய அளவில் வெடிக்கும்: மு.க.ஸ்டாலின் பேட்டி


”ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்கள் மேற்கொண்டுள்ள போராட்டங்கள், 1965 ஆம் ஆண்டு தமிழ்மொழியை பாதுகாக்க மாணவர்கள் திரண்டு போராடியதை நினைவூட்டுகிறது”. “ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்குவதில் தொடர் அலட்சியம் காட்டினால் மாணவர்களின் போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் என மத்திய, மாநில அரசுகளை எச்சரிக்க விரும்புகிறேன்” என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று (12-01-2017) ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக்கோரி புது கல்லூரி மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, அவர்களுக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.
 
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

தமிழர்களின் வீர விளையாட்டாக இருக்கக்கூடிய ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு உடனடியாக அனுமதி தர வேண்டும் என்று மத்திய அரசையும், அதேபோல மத்திய அரசுக்கு அழுத்தம் தரக்கூடிய வகையில் மாநில அரசையும் கேட்டுக் கொள்ளும் வகையில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு கட்சிகளின் சார்பிலும், பல்வேறு தமிழ் அமைப்புகளின் சார்பிலும், ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்தக்கூடிய வீரர்களின் அமைப்புகள் சார்பிலும் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதுவரையிலும் ஜல்லிக்கட்டு விளையாட்டுகளை நடத்துவதற்கான அனுமதியை வழங்க முடியாத நிலையில் மத்திய அரசு இருந்து கொண்டிருக்கிறது.
 
ஒவ்வொரு முறையும் மத்தியில் இணை அமைச்சராக இருக்கக்கூடிய பொன்.ராதாகிருஷ்ணன், அதேபோல தமிழக பா.ஜ.க.வின் தலைவராக இருக்கக்கூடிய தமிழிசை சவுந்திரராஜன் பத்திரிகையாளர்களிடத்தில் பதில் சொல்கின்றபோது, நிச்சயமாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும், உறுதியாக நடைபெறும் என்று தொடர்ந்து, ஏறக்குறைய சென்ற ஆண்டிலிருந்து இந்த நிமிடம் வரையில் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் இதுவரையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி வழங்க முடியாத நிலைதான் இருந்து வருகிறது.

அண்மையில் கடந்த 10, 15 நாட்களாக தமிழகத்தில் இருக்கக்கூடிய மாணவர்கள் கிளர்ந்தெழுந்து, தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்களை பேரணியாக, சாலை மறியலாக, ஆர்ப்பாட்டங்களாக தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆக, மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கக்கூடிய இந்தக் காட்சிகளை பார்க்கின்றபோது, எனக்கு நினைவுக்கு வருவது, நமது தமிழ்மொழிக்கு ஆபத்து ஏற்பட்ட நேரத்தில், 1965 ஆம் ஆண்டும் நம்முடைய மொழியை காப்பாற்றுவதற்காக ஒரு மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று, அந்தப் போராட்டம் எந்தளவிற்கு வெற்றி பெற்றது என்பது வரலாற்றில் தெளிவாகப் பதிவாகி இருக்கின்றது. ஆகவே, இப்போது மாணவர்கள் இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு, இதற்குரிய அனுமதியை தர வேண்டும் என்று போராடும் காட்சியை பார்க்கின்றபோது, உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன். அதேநேரத்தில் அவர்களுடைய உணர்வுகளுக்காக எனது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனவே, புதுக்கல்லூரி மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இந்த நேரத்தில், என்னுடைய பாராட்டையும், நன்றியையும், எனது ஆதரவையும் தெரிவிப்பதற்காக இங்கு நான் வந்திருக்கிறேன்.

இந்த நேரத்தில் மத்திய, மாநில அரசுகளை நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, வலியுறுத்த விரும்புவது, உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை அணுகி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கான ஒரு சூழ்நிலையை உருவாக்கித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேநேரத்தில் தனியாக ஒரு அவசர சட்டத்தை கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆக, இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், மாணவர்களுடைய போராட்டம், மிகப்பெரிய போராட்டமாக வெடிக்கும். அப்படி மாணவர்களின் போராட்டம் வெடிக்கும் என்று சொன்னால், நிச்சயமாக நான் கூறுகிறேன், இன்றைக்கு மத்தியில் இருக்கும் ஆட்சியாக இருந்தாலும், மாநிலத்தில் இருக்கக்கூடிய ஆட்சியாக இருந்தாலும், அவர்களுடைய வீழ்ச்சியாகத்தான் இது அமைந்திட முடியும் என்று எச்சரிக்க கடமைப்பட்டு இருக்கின்றேன்.

கேள்வி: தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவோம் என சில கட்சிகள் தெரிவித்து இருக்கின்றன. ஒருவேளை அனுமதி வழங்கப் படவில்லை என்றால் திமுக தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துமா?

மு.க.ஸ்டாலின்: இன்றைக்கு மாணவர்கள் கிளர்ந்தெழுந்திருக்கக் கூடிய காட்சிகளை பார்க்கின்றபோது, நிச்சயமாக அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. இல்லையென்று சொன்னால், தலைவர் கலைஞர், பொதுச்செயலாளர்  கலந்து பேசி, மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தருவதா அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடத்துவதா என்பதை அறிவிப்போம். இவ்வாறு கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :