Add1
logo
நெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( படங்கள் || நெடுவாசலுக்காக கறம்பக்குடி கல்லூரி மாணவர்கள் போராட்டம்( படங்கள் || பத்திரப்பதிவுக்கு தடை நீடிப்பு - தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்! || ஜெ.வுக்கு பொது இடத்தில் அரசு பணத்தில் நினைவிடம் கட்ட தடை கோரி வழக்கு! || நெடுவாசல் போராட்டத்திற்கு வரும் மக்களை தடுக்கும் போலீசார்! || 3,500 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கோரிக்கை || மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு அன்புமணி இரங்கல் || நெடுவாசல் காக்க கத்ததாரில் போராட்டம்( படம் || நெடுவாசல் மக்கள் போராட்டத்தை ஒடுக்க அரசு துடிக்கக் கூடாது! : ராமதாஸ் || சசிகலா மீது ஆத்திரம் குறையாத மக்கள் - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மீது கல்வீச்சு || தமிழக மீனவர்கள் மீது 7வது நாளாக தாக்குதல் || 89-வது ஆஸ்கர் விருது விழா - ’கவுரவ ஆஸ்கார்’ விருது பெற்றார் ஜாக்கிசான் || லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் 89-வது ஆஸ்கர் விருது விழா ||
தமிழகம்
நெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( படங்கள்
......................................
நெடுவாசலுக்காக கறம்பக்குடி கல்லூரி மாணவர்கள் போராட்டம்( படங்கள்
......................................
நெடுவாசல் போராட்டத்திற்கு வரும் மக்களை தடுக்கும் போலீசார்!
......................................
3,500 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கோரிக்கை
......................................
மணப்பாடு படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு அன்புமணி இரங்கல்
......................................
நெடுவாசல் காக்க கத்ததாரில் போராட்டம்( படம்
......................................
தமிழக மீனவர்கள் மீது 7வது நாளாக தாக்குதல்
......................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
......................................
நெடுவாசலில் கல்லூரி மாணவ, மாணவிகள் வருகையால் போராட்டம் தீவிரம் அடைகிறது
......................................
பிப்., 28ல் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் போராட்டம்
......................................
ரூபெல்லா தடுப்பூசி போட்டுக்கொண்ட பள்ளி மாணவி பலி
......................................
புதுக்கோட்டையில் மார்ச் 1ம் தேதி கடையடைப்பு போராட்டம்
......................................
மணப்பாடு படகு விபத்து : முதல்வர் பழனிசாமி இரங்கல்
......................................
கோட்டைகாட்டிலும் வெடித்தது இயற்கை எரிவாயு போராட்டம்
......................................
மாட்டு வண்டி பந்தயம் - சீறிபாய்ந்த காளைகள்: விருதுநகர், தூத்துக்குடி மாடுகள் முதலிடம்
......................................
பகவதியம்மன் கோயில் கொடைவிழா
......................................
திருவள்ளுர் மாவட்டத்தில் பல இடங்களில் மயானகொள்ளை திருவிழா நடைபெற்றது (படங்கள்)
......................................
தடை செய்யப்பட்ட பகுதியில் சுற்றுலா பயணம் பலி உயரும் என அச்சம்
......................................
குடும்ப ஆதிக்கம் கட்சியில் இருக்காது என டிடிவி தினகரன் கூறியிருக்கிறாரே? ஒ.பி.எஸ். பதில்
......................................
ஓ.பி.எஸ். எப்போதும் தற்காலிகம்தான்...: நாஞ்சில் சம்பத்
......................................
மார்ச் 1-ல் புதுக்கோட்டை முழுவதும் கடையடைப்பு
......................................
மு.க.ஸ்டாலினை முதல்வராக்க கூட்டு சதி செய்தவர் ஓ.பன்னீர்செல்வம்: கடம்பூர்.செ.ராஜீ குற்றச்சாட்டு.
......................................
தீபா பேரவையில் இருந்து 1000 பேர் ஓ.பி.எஸ். அணிக்கு தாவல்
......................................
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கக்கூடாது: வைகோ
......................................
அரசு மேல்நிலைப்பள்ளியில் டிஇடி தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம்
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (11:36 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (11:36 IST)



தமிழ் அறிஞர் ச.வே.சு. மறைவு
வைகோ புகழ் மாலை


மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிக்கையில்,

தமிழ் அறிஞர் ச.வே.சுப்பிரமணியம் (88) இன்று காலை இயற்கை எய்திய செய்தி அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.



ஆங்கிலம், மலையாளம் உட்பட மொத்தம் 200 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தொல்காப்பியத்தில் முழுமையாக ஊறித் திளைத்து, அது தொடர்பாகப் பல நூல்கள் எழுதுவதற்கு அடித்தளம் அமைத்தவர். கவிக்கோ அப்துல் ரகுமான், க.ப. அறவாணன் உள்ளிட்ட 44 அறிஞர் பெருமக்கள் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்று விட்டாலும் கூட, தென்காசி ஆலங்குளம் சாலையில், ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி, காலமெல்லாம் தமிழுக்கு அரும்பணி ஆற்றிக்கொண்டு இருந்தார். ‘உலகத் தமிழ்க் கல்வி இயக்ககம்’ என்ற அமைப்பை, இறுதி வரை நடத்திக் கொண்டு இருந்தார்.

31 டிசம்பரில் பிறந்த இவர், ஆண்டுதோறும் தாம் பிறந்த நாளை நெருங்கி வரும் சனி, ஞாயிறுகளில் தமிழூரில் கருத்து அரங்குகள் நடத்தி, தமிழ் விருந்தும் அறுசுவை விருந்தும் அனைவருக்கும் பரிமாறி விருந்தோம்பி வந்தார். தமிழ் ஆய்வு நூல்களை தம்முடைய கருத்து அரங்குக்கு அனுப்பச் செய்து இலவசமாகப் பதிப்பித்துக் கொடுத்தவர். கடைசியாக பாரதி முதல் தற்காலக் கவிஞர்கள் வரை என்கின்ற தலைப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களைப் பற்றிய ஆய்வு நூலைத் தம் பிறந்த நாள் பரிசாக இலவசமாக வழங்கியவர். இளம் தமிழ் ஆர்வலர்கள் வளர்வதற்கு அளப்பரிய ஊக்கம் அளித்து வந்தார்.

தொடக்கக்கல்வியை விக்கிரமசிங்கபுரம் திரு இருதய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி, திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பை முடித்தவர். அருணாசலக் கவுண்டர், வித்துவான் சேது ரகுநாதன் போன்ற அறிஞர் பெருமக்களிடம் தமிழ் பயின்றவர். இவர் எழுதுவதை எல்லாம் வேதமாகக் கருதி அவருடைய நூல்கள் முழுமையும் மெய்யப்பர் பதிப்பகத்தார் அச்சிட்டு வந்தார்கள்.

தமிழ்ச் சித்தர்கள் போன்று, தம்முடைய இல்லத்திலேயே ஒரு கல்லறையை உருவாக்கி, தம்மை அடக்கி அதன்மேல் திருவள்ளுவர் சிலையை வைக்க வேண்டும் என உயில் எழுதி வைத்தவர்.

வீரகேரளம்புதூரில் பிறந்த ச.வே.சு., உலகெங்கும் வாழும் தமிழர் உள்ளம் எல்லாம் நிறைந்தவர். அவரது பிரிவால் துயருறும் தமிழ் உணர்வாளர்களுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.  

‘தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவது இல்லை’ என்ற பாவேந்தர் கூற்றுக்கு ஏற்ப, ச.வே.சு. தமிழில் சாகா வரம் பெற்றவராகத் திகழ்வார்!”

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :