Add1
logo
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்! || நான் விரும்பி வெடிக்கும் வெடி... நாஞ்சில் சம்பத் தீபாவளி சிறப்புப் பேட்டி! || அந்தக் கால தீபாவளி! இந்தக் கால தீபாவளி! || தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி || தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம் || தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும் || சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து || மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார் || நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை || தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல் || டெல்லியில் டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை || சபரிமலையில் முதல்வர் பினராயி விஜயன் ஆய்வு || ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக சோனியா முடிவு ||
தமிழகம்
முதல்வரை மிரட்டுவதா? தமிழக பாஜக தலைவர்களுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!
 ................................................................
தீபாவளியையொட்டி தியேட்டர்களில் 5 காட்சிகள் அனுமதி
 ................................................................
தீபாவளி சிறப்பு பஸ்கள் மூலம் அரசுக்கு 5 கோடி வருமானம்
 ................................................................
தீபாவளிக்கு வண்டலூர் பூங்கா திறந்திருக்கும்
 ................................................................
சேலம் அருகே மதுபான லாரி கவிழ்ந்து விபத்து
 ................................................................
மருத்துவம், கல்விக்கு 2 லட்சம் கலைஞர் வழங்கினார்
 ................................................................
நீதிபதி வீட்டில் தங்கம் மற்றும் வெள்ளிபொருட்கள் கொள்ளை
 ................................................................
தமிழகம் முழுவதும் அதிரடி சோதனை: 7.03 லட்சம் பறிமுதல்
 ................................................................
உடன்பாட்டின்படி பணம் தர மறுக்கும் தனியார் சர்க்கரை ஆலைகளை கண்டித்து கருப்புக் கொடி
 ................................................................
கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டுவதா? பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராசனுக்கு CPIM கண்டனம்
 ................................................................
திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
 ................................................................
முதல்வரிடம் நன்றி கூறிய விஜய்
 ................................................................
நடிகை பாவனாவின் திருமணம் தேதி மாற்றம்
 ................................................................
மதுரையில் ரவுடி வெட்டிக்கொலை
 ................................................................
சஞ்சீவிராய பெருமாள் கோவில் சுற்றுச் சுவரை சுற்றத்தடை
 ................................................................
தீபாவளிக் கூட்டத்தை தினறடிக்கும் மணல் லாரிகள் : போதையில் தாறுமாறான வேகம்
 ................................................................
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை பணத்தை தராததை கண்டித்து விவசாயிகள் கருப்பு கொடி!
 ................................................................
அதிமுக தொடக்க விழா கொண்டாடுவதைவிட மூடு விழா கொண்டாடுவதே நல்லது: சீமான்
 ................................................................
வருமானவரித்துறை துணை ஆணையர் மாயம்! குடும்பத்தினர் புகார்!
 ................................................................
அதிமுக 46வது ஆண்டு விழா கொண்டாட்டம்!
 ................................................................
தீபாவளி நேரத்தில் திருச்சி மாநகராட்சிக்கு பீதியை உண்டாக்கிய இலஞ்ச ஒழிப்பு துறை..!
 ................................................................
அங்கன்வாடி மையங்களை மூடக்கூடாது: தமிமுன் அன்சாரி வேண்டுகோள்
 ................................................................
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேர் கைது!
 ................................................................
கலர் ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுக்களை கொடுத்து ஆடு வாங்கிய இளைஞர்களுக்கு போலீசார் வலை
 ................................................................
தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தவர் இரயில் மோதி பலி..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2017 (10:41 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2017 (10:41 IST)



இரும்பு சங்கிலி!
கைது படலம்!
ஆண்டவர் உத்தரவு | கொங்கு மண்டலம் பரபரப்பு!


திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது சிவன்மலை இந்த மலையில் முருகன் கோயில் உள்ளது. கோயிலுக்கு முன்பாக ஆண்டவர் உத்தரவு என்ற பெட்டி இருக்கிறது. பக்தர்களின் கனவில் வந்து ஆண்டவர் சொல்லும் பொருள் இதில் வைக்கப்படும். அந்த பொருள் சம்பந்தமான விஷயம் சமூகத்தில் நல்லதும் நடக்கும் அழிவு போன்ற கெட்டதும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்க!



இனி அக்கோயிலைப் பற்றி பார்ப்போம்.

நடக்கப்போகும் விசயத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வதென்றால் யாருக்குத்தான் ஆசை இருக்காது? அப்படி முன்கூட்டியே சொல்லும் வல்லமை படைத்தது சிவன்மலை.

சிவ வாக்கிய சித்தர் பூஜித்த மலை தான் சிவன்மலை. கொங்கு நாட்டின் சிங்க நகரான காங்கயத்திற்கு அருகில் காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சிவன்மலை. இந்த மலை மீது கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு, பட்டாலிமலை என்று வழங்கப்பட்டதாம். பிறகு, அங்கு வந்து சித்தர் சிவவாக்கியர் முயற்சியில் திருப்பணிகள் நடந்தன. அதன் பிறகு இந்த மலை சிவன் மலை என்று பெயர் பெற்றதாம்.

இன்னொரு தகவலும் உண்டு. அக்காலத்தில் இந்த மலையை சுற்றி பசுக்கள் சூழ்ந்தும் மேய்ந்தும் வர வளம் பெற்றுள்ளது. பசுக்களை சேய் என்று கூறுவது தமிழ் வழக்கில் உள்ளது. இதனால் சிவனின் சேயான குகன் வந்து அமர்ந்து அருள்பாலிப்பதால் சேமலை என்று அழைக்கப்பட்டது. கால சுழற்சியில் அது சிவன்மலை என மருவியதாம்.

கொங்கு பகுதி மக்களுக்கு இந்த சிவன்மலைதான் எல்லாமே. இது குறித்து இவர்கள் சொல்வதாவது:

"சிவன் மலை என்றாலும், இங்கு வீற்றிருக்கும் முருகன்தான் எங்கள் செல்லமான தெய்வம். திடீரென யாரேனும் ஒரு பக்தரின் கனவில் வந்து, தான் விரும்பும் ஒரு பொருளை சொல்வார். அந்த பொருளை, கோயிலில் இருக்கும் பெட்டியில் வைப்போம். அந்த காலகட்டத்தில் அந்த பொருளால் மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படும். அதாவது தண்ணீரை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தால், அந்த காலகட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அல்லது பஞ்சம் தீர்ந்து பெருவெள்ளம் ஏற்படும். அப்படி ஒரு முறை தண்ணீரை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தபோதுதான் சுனாமி ஏற்பட்டது.

அடுத்து மஞ்சள் வைக்கச்சொல்லி உத்தரவு வந்தது. அந்த நேரத்தில்தான் மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. முன்பு ஒரு பக்தரின் கனவில் வந்து மண் வைத்து பூசை செய்ய உத்தரவு வந்தது. அப்போதிலிருந்து இந்த பகுதியைச் சுற்றி  நிலத்தின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

அதன்படி இப்போது இரும்புச் சங்கிலியை வைத்து வழிபடச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது. இதையடுத்து சிவன்மலை கோயிலில் இரும்புச்சங்கிலி இன்று வைக்கப்பட்டது" என்று கூறும் கொங்கு பகுதி மக்கள்,

அடுத்து சொல்வதுதான் பகீர் செய்தி:

"இரும்புச் சங்கிலி வந்திருப்பதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள்.. அதாவது அரசியல், சினிமா, விளையாட்டு என்று புகழின் உச்சத்தில் இருப்பவர்கள் வழக்குகளில் சிக்கி, கைது செய்யப்படுவார்கள்" என்று பகீர் கிளப்புகிறார்கள். இன்னும் சிலர், "பொதுவாகவே நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும். ஆகவே கைது படலங்களும் அதிகமாகும்" என்று பீதி கிளப்புகிறார்கள்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக உள்ள சசிகலா மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு நெருங்கும் நேரத்தில் சிவன்மலை கோயிலில் "இரும்பு சங்கிலி" வைத்து வழிபடுவது அ,தி,மு.க.வினர் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

- ஜீவாதங்கவே
ல்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :