Add1
logo
தமிழகத்திலும் மண்ணின் மக்களுக்கே வேலை என்ற சட்டத்தை இயற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம்:வேல்முருகன் || பிரதீபா மறைவு : திருநாவுக்கரசர் இரங்கல் || அதிமுக பிளவு...கட்சி தொடங்கிய கால மாஜி எம்.எல்.ஏவை மரணத்திற்கு தள்ளியது! || மேற்பனைக்காட்டில் குழந்தை கடத்தலா? போலீசார் விசாரனை || ராமநாதபுரத்தில் சாலையில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி || விருத்தாசலம் அருகே 3 கிராமப்புற கோவில்களில் பூட்டை உடைத்து திருட்டு || போஸ்னிய தளபதிக்கு தண்டனை! ராஜபக்சேவுக்கு எப்போது? அன்புமணி || வெளிச்சத்துக்குவந்த நித்யானந்தா - ராம் ரகீம்களின் சரச லீலைகள்! சட்டங்கள் பாயட்டும்!கி.வீரமணி || டாஸ்மாக் பார் க்கும் சீல் வைத்த சார் ஆட்சியர் || அமைச்சரின் பாதுகாவலரைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் || ஜெ., நினைவிடத்தில் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அஞ்சலி (படங்கள்) || அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடு: கி.வீரமணி || ஜெ. மரணம் தொடர்பாக இன்று விசாரணையில் கலந்துகொண்டவர்கள் (படங்கள்) ||
சிறப்பு செய்திகள்
சினிமாவிலிருந்து சந்தை வரை - வகைவகையான வட்டி!
 ................................................................
அடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.:
 ................................................................
ஓ.பி.எஸ். - ஈ.பி.எஸ். அணிக்கே இரட்டை இலை
 ................................................................
ஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு...
 ................................................................
பொறுப்பாசிரியர் லெனின் மனைவி காலமானார்!
 ................................................................
அன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்?
 ................................................................
டிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை!
 ................................................................
யார் இந்த பைனான்சியர் அன்புச்செழியன்...
 ................................................................
முட்டைக்கும் வந்துருச்சா ஆபத்து?
 ................................................................
மூன்று பெண்களின் மகனான விவேக்கின் கதை!
 ................................................................
பூனைகளுக்குப் பதவி தரும் ஆங்கிலேய அரசு...
 ................................................................
ஜெயலலிதாவை ஒன்னும் தெரியாத குழந்தையாக்கும் மீடியா!
 ................................................................
சிசுக்களின் உயிர்! தனியார் மருத்துவமனைகளின் தரம்!
 ................................................................
இந்தியாவின் உலக அழகிகள்!
 ................................................................
கலைஞரின் சரியான முடிவும், தவறான முடிவும்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 6, ஜனவரி 2017 (16:21 IST)
மாற்றம் செய்த நாள் :6, ஜனவரி 2017 (16:21 IST)


அதிகாரப்பூர்வமான கட்சி எது- தேர்தல் ஆணையம் எப்படி தீர்மானிக்கும்?

‘சண்டையில் கிழியாத சட்டை எங்க இருக்கு’ என வடிவேல் ஒரு படத்தில் கேட்பார். அதுபோல பிரச்சினையில்லாத அரசியல் கட்சிகள் சாத்தியமில்லை. பல சமயங்களில் இத்தகைய உட்கட்சி பிரச்சினைகள், கட்சியையே இரண்டாக உடைத்துவிடும். தமிழகத்தில் அத்தகைய காட்சிகளை நிறையவே நாம் கண்டிருக்கிறோம். இப்படி ஒரு கட்சி இரண்டாகப் பிளவுறும்போது, அந்த இரண்டு பிரிவுகளில் எந்த பிரிவுக்கு கட்சியின் பெயர், சின்னம் போன்றவை கிடைக்கும்? அதை தேர்தல் ஆணையம் எப்படி முடிவுசெய்யும்? தேர்தல் ஆணையம் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் கட்சியின் சின்னம், பெயர் தொடர்பான பிரச்சினைகளில் முடிவடுக்கிறது?

1968-ஆம் ஆண்டு தேர்தல் சின்னங்கள் (நிறுத்திவைத்தல் மற்றும் வழங்கல்) ஒழுங்குபடுத்தல் விதிமுறையானது, தேர்தல் ஆணையத்துக்கு அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கவும் சின்னங்களை ஒதுக்கவும் அதிகாரமளிக்கிறது.

அந்த விதிமுறையின் 15-வது பத்தியில், ஆணையமானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் எதிரெதிர் குழுக்கள் அல்லது பிரிவுகள் கட்சிப் பெயர் அல்லது சின்னத்தை உரிமைகோரும்போது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரமளிக்கிறது.

இந்த 15 வது பத்தி, கட்சியில் பிளவு அல்லது இணைப்பு குறித்து தீர்மானிப்பதற்கான ஒரே அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உண்டென்கிறது. உச்சநீதிமன்றமும் 1971-ல் நடந்த இத்தகையதொரு விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உறுதிசெய்தது.

கட்சியின் ஒரு பிரிவு அல்லது குழுவை அதிகாரப்பூர்வமானதாக முடிவுசெய்யும்முன், அந்த அரசியல் கட்சியின் அமைப்புரீதியான உறுப்பினர்கள் மற்றும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் இவர்களின் பெரும்பான்மை ஆதரவு யாருக்கென தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்திக்கொள்ளும்.

கட்சி தோற்றுவிக்கப்பட்டபோது சமர்ப்பிக்கப்பட்ட அலுவல் உறுப்பினர்கள் பட்டியலை ஆய்வுசெய்யும். அந்த அமைப்பிலுள்ள உச்ச குழுவுக்கு அலுவல் உறுப்பினர்கள், பிரதிநிதிகள் எத்தனை பேர் ஆதரவு, எதிர்க் குழுவுக்கு எத்தனை பேர் ஆதரவு என ஆராயும். எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களில் எத்தனை பேர் ஒரு குழுவை ஆதரிக்கிறார்கள் என்று பார்க்கும். இந்த உறுப்பினர்கள் அளித்த உறுதிச் சான்றிதழையும் கணக்கிலெடுத்துக்கொள்ளும்.

இரண்டு குழுக்களில் எந்த குழுவுக்கு அலுவல் உறுப்பினர்கள் மற்றும் சட்டப்பேரவைக் குழுக்களின் ஆதரவு பெரும்பான்மையாக இருக்கிறதோ, அதையே அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக முடிவுசெய்யும். கட்சிப்பெயரும் சின்னமும் அதற்கே கிடைக்கும். மற்ற பிரிவை தனிக் கட்சியாகப் பதிவுசெய்யும்.

கட்சியிலிருந்து பிரிந்துவந்த இரண்டு குழுக்களில் எதுவொன்றையும் பெரும்பான்மை ஆதரவுடையதாக தேர்ந்தெடுக்கமுடியாத குழப்பமான சூழல் நிலவும்பட்சத்தில், தேர்தல் ஆணையும் கட்சிப் பெயரையும் சின்னத்தையும் முடக்கிவிட்டு, இரண்டு குழுக்களையும் தனிக் கட்சியாகப் பதிவுசெய்துகொள்ளும். பழைய கட்சிப் பெயருடன் முன்னாலோ பின்னாலோ ஏதோ ஒரு அடைமொழிசேர்த்து புதுக் கட்சிப் பெயரை உருவாக்கிக்கொள்ளலாம். ஒருவேளை கட்சியில் பிளவேற்பட்ட சமயத்தில் தேர்தல் இருந்து உடனடியாக முடிவெடுக்கமுடியாத சூழலில், இரு பிரிவையும் தனித்தனி பெயரில், வெவ்வேறு சின்னத்தில் போட்டியிட சிபாரிசுசெய்யும்.

நன்றி:The Hindu

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :