Add1
logo
பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை - வி.கே.சிங் || கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை உயர்வு || மேட்டூர் அனல் மின்நிலையத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து || திமுக நடத்தும் மனிதச்சங்கிலி போராட்டத்துக்கு சமக ஆதரவு || ராம்நாத் கோவிந்த் ஜனாதிபதியாக பதவியேற்பு || வானொலி நிலையங்களை மூடக்கூடாது - ஜி.கே.வாசன் || ரூ. 8 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் || திருவண்ணாமலையில் இருதரப்பினர் மோதல் தொடர்பாக 9 பேர் கைது || குஜராத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கிய 250 மீட்பு || சென்னை - மலேசியாவுக்கு புதிய விமான சேவை || ரெட் புல் ஏர் ரேஸ் போட்டியில் அமெரிக்க வீரர் சாம்பியன் || சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழகத்தில் வேளாண்மை படிப்புக்கு சேர்க்கை கடிதம் வழங்கல் || அப்துல் கலாமின் நினைவிடம்(படங்கள்) ||
சிறப்பு செய்திகள்
எம்எல்ஏக்கள் சம்பள உயர்வு! (EXCLUSIVE)
 ................................................................
பாடாய்ப்படுத்தும் 5 ஸ்டார் ஜெயில் விவகாரம்... அமைச்சர்கள் டெல்லிக்கு போவது ஏன்?
 ................................................................
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல் வச்சதுதான் சட்டமாம்!
 ................................................................
வாய்ச்சொல் வீரரா மோடி?
 ................................................................
ஓவியாதான் நிஜமான மனுஷி! பிக்பாஸ் குடும்ப உறுப்பினர்களின் குணாதிசயங்கள்!
 ................................................................
என்னடா இது எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய திட்டத்துக்கு வந்த சோதனை?
 ................................................................
வாய்க்கொழுப்பா? தெனாவெட்டா? தமிழர்களை என்ன நினைத்திருக்கிறார் நிர்மலா சீத்தாராமன்?
 ................................................................
தமிழக அரசியலில் திமுகவுக்கு எதிரான வெற்றிடத்தை நிரப்புவது யார்? ரஜினியா, கமல்ஹாசனா?
 ................................................................
பாழாகும் எம்.ஜி.ஆர். பங்களா! பரிதவிக்கும் அண்ணன் குடும்பம்! "நினைத்ததை முடிப்பவன்' என்பது எம்.ஜி.ஆ
 ................................................................
வரலாறு படைக்குமா இந்திய அணி?
 ................................................................
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் ஜி.எஸ்.டி. - கதறும் பொள்ளாச்சி சந்தை!
 ................................................................
ஒரு கலை இயக்குநரின் கலைஞர் படைப்புகள்! பேசாத மேடையிலும் பேசப்படும் கலைஞர்!!
 ................................................................
எல்லாவற்றுக்கும் ஒரு விலை உண்டு! சசியின் சொகுசான சிறை வாழ்க்கை!!
 ................................................................
எண்ணூரில் ஆற்றைக் காணோம்!
 ................................................................
குடிசையிலிருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு..!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 4, ஜனவரி 2017 (17:14 IST)
மாற்றம் செய்த நாள் :4, ஜனவரி 2017 (18:26 IST)



முன்னோடி சுற்றுச்சூழல்வாதி ஜே.சி. குமரப்பா

ஜோசப் செல்லத்துரை கார்னேலியஸ் செல்லப்பா என்றால் பலருக்கும் உடனடியாகப் புரியாது- மாறாக, ஜே.சி. குமரப்பா என்றால் புரியும். காந்தியின் நெருங்கிய நண்பர், சுற்றுச்சூழல்வாதி, பசுமை காந்தியவாதி, இந்தியாவின் தொடக்க கால திட்டக் குழுவில் பங்கெடுத்தவர் என பல பெருமைகள் ஜே.சி. குமரப்பாவுக்கு உண்டு.

ஜனவரி 4, 1892-ல் பிறந்த ஜே.சி. குமரப்பா காந்தியின் பிரியத்துக்குரியவராகவும், சுற்றுச்சூழலியவாதியாகவும், கிராமிய பொருளாதார அறிஞராகவும் மாறியது தனிக்கதை.

தேசத்தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்திக்கு தமிழகத்தின்மீது தனி அபிப்ராயம் உண்டு. தென்னாப்பிரிக்காவில் நடந்த போராட்டத்தில் உறுதியுடன் தில்லையாடி வள்ளியம்மை பங்குபெற்று, தனது இன்னுயிரை இழந்தது ஒரு காரணம்.
அதேபோல் தமிழகத்தின்மீது அபிப்ராயம் பெருகக் காரணமாக இருந்த இன்னொருவர் ஜே.சி.குமரப்பா.

தஞ்சாவூரில் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவர் ஜே.சி.குமரப்பா. சாலமன் துரைசாமி-எஸ்தர் ராஜநாயகம் தம்பதியின் ஆறாவது மகன். பிரிட்டனுக்குச் சென்று பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) படிப்பை முடித்த அவர், பொருளாதாரம் மற்றும் வியாபார நிர்வாகத்தில் மேற்படிப்பை முடிக்க அமெரிக்கா சென்றார்.

இந்தியா திரும்பிய குமரப்பாவை வணிகம் ஈர்க்கவில்லை. ஆங்கிலேயர் இந்தியாவைச் சுரண்டியது அவரது இதயத்தை உறுத்தியது. ஆங்கிலேயரின் வரிக் கொள்கை, இந்தியப் பொருளாதாரத்தை எப்படியெல்லாம் சுரண்டுகிறது என விளக்கி ஒரு கட்டுரை எழுதினார்.
காந்தியின் மீது நம்பிக்கைவைத்து, அவரைச் சென்றடைந்தார். காந்தி குஜராத்தின் கிராமப் பொருளாதாரத்தைக் குறித்து ஒரு சர்வே எடுத்துத் தருமாறு கேட்டார். அந்த சர்வே, காந்திக்கு கிராமப் பொருளாதாரத்தைப் புரிந்துகொள்ள உதவியது. கூடவே, குமரப்பாவுக்கும் கிராமத்தின் யதார்த்த சித்திரம் பிடிபட்டது.

காந்தியின் மதிப்பீடுகளையும் கிறித்துவ அற மதிப்பீடுகளையும் கலந்து தனது பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்கிக்கொண்டார். சமூக- பொருளாதார முரண்கள், வேலையில்லாத் திண்டாட்டம், ஏழ்மை இவற்றை அகற்றி மனிதனின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் ஒரு பொருளாதாரத்தை குமரப்பா கனவுகண்டார்.

உப்புச் சத்தியாக்கிரக போராட்டம் நடைபெற்ற காலத்தில், அவர் யங் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்டு வந்ததோடு, அகமதாபாத்தின் குஜராத் வித்யாபீடத்தில் பொருளாதாரப் பேராசிரியராகவும் செயல்பட்டுவந்தார். 1935-ல் அவர் நிறுவி செயல்படுத்திய அனைத்திந்திய கிராமத் தொழில் கூட்டமைப்பு குமரப்பாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.

காந்தியின் முக்கிய சீடர்களில் சிலர் ஒருங்கிணைந்து சுற்றுச்சூழல்வாதம் குறித்த சிந்தனையை இந்தியாவில் ஏற்படுத்தினர். இதற்காக 1930-40 காலகட்டத்தில் சில நூல்களை எழுதியுள்ளார் குமரப்பா. மாபெரும் அணைகளைவிடவும் சிறியளவிலான அணைகள், கால்வாய்களே பாதுகாப்பானவை, நலம்பயப்பவை, வேதியியல் உரங்களைவிடவும் இயற்கை உரங்களே பலன்மிக்கது, வருவாய்ப் பெருக்கத்துக்காக காடுகளை வளர்ப்பதைவிடவும் நீர்ப் பாதுகாப்பு நோக்கிலே வளர்க்கவேண்டும் போன்ற சிந்தனைகளுக்கு இந்தியச் சூழலில் வித்திட்டவர் குமரப்பாதான்.

சுதந்திரத்துக்குப் பின், இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவித்த திட்டக் குழுவில் பங்குபெற்று விவசாயம் மற்றும் கிராம மேம்பாட்டுக்கான தேசியக் கொள்கைகளை உருவாக்கியதில் குமரப்பாவின் பங்கு முக்கியமானது.

வாழ்வின் கடைசிக் கட்டத்தில் மதுரை டி.கல்லுப்பட்டி அருகிலுள்ள காந்தி நிகேதன் ஆசிரமத்தில் தங்கி கிராம பொருளாதாரத்தை முன்னெடுக்கும் சிந்தனைகளை பரிசோதித்துவந்தார். ஜனவரி 30, 1960-ல் மறைந்த ஜே.சி. குமரப்பாவை கெளரவிக்கும்விதமாக குமரப்ப கிராம சுயராஜ்ய தொழில்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

க. சுப்பிரமணியன்
matrimony

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Rajesh Country : India Date :1/11/2017 5:54:05 PM
இப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் இருந்த தமிழகம் தற்போது உள்ள நிலைமையை நினைத்து வேதனை படுவதை தவிர வேறொன்றும் செய்ய முடியாது. இவள்ளவு நாளாக இவரை தெரியாமல் இருந்ததர்காக கேவலமாக உணர்கிறேன்.