Add1
logo
கருகிய பயிரைக் கண்டு உயிரை விட்ட விவசாயி! -அரசாங்கத்தின் அலட்சியம்! || ரேஷன் கடைகளில் குழப்பம் நீடித்தால் திமுக சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்: ஸ்டாலின் || நெடுவாசல் போராட்டத்திற்கு காங்கிரஸ் குரல் கொடுக்கும், துணை நிற்கும் : திருநாவுக்கரசர் || நெடுவாசலில் நாம் தமிழர் உண்ணாவிரத போராட்டம் (படம் || ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் முதல்வர், தலைமைச்செயலாளருக்கு நோட்டீஸ்! || நாளை திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் || சிதம்பரத்தில் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம்(படங்கள் || நெடுவாசலை காக்க 100 கிராமங்கள் திரண்டனர் ( படங்கள் || நெடுவாசலுக்காக கறம்பக்குடி கல்லூரி மாணவர்கள் போராட்டம்( படங்கள் || பத்திரப்பதிவுக்கு தடை நீடிப்பு - தமிழக அரசுக்கு 4 வாரம் அவகாசம்! || ஜெ.வுக்கு பொது இடத்தில் அரசு பணத்தில் நினைவிடம் கட்ட தடை கோரி வழக்கு! || நெடுவாசல் போராட்டத்திற்கு வரும் மக்களை தடுக்கும் போலீசார்! || 3,500 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப ஆசிரியர்கள் சங்க மாநில பொதுக்குழு கோரிக்கை ||
சிறப்பு கட்டுரை
எதிர்க்கட்சிகள் மொத்தமாக ராஜினாமா!
......................................
ஈஷா மகா சிவராத்திரி விழாவின் பாதிப்புகள் (வீடியோ)
......................................
அடாவடி! டெல்லி டூ சென்னை! சாதிக்கும் ஈஷா! நெட்வொர்க் ரகசியம்!(EXCLUSIVE)
......................................
அதிரவைக்கும் ஈஷா மோசடிகள்! அசைக்க முடியாத ஆதாரங்கள்!(EXCLUSIVE)
......................................
பெங்களூரு சிறை... ஏர்கூலர்- டி.வி. -செல்ஃபோன்...
......................................
சர்வதேச தாய்மொழி தினம்
......................................
ஒரு கைதியின் கதறல்...!
......................................
தமிழக சட்டமன்றத்தில் பலப்பரீட்சை : அன்றும்…… இன்றும்…
......................................
ஹீரோ குன்ஹா...
......................................
ஜெ. சாவை விட டாக்டர்கள் பேசுறது ... ராதாரவி
......................................
பெண்கள் அறிவியல் துறைகளில் பங்குபெறுவதற்கான சர்வதேச தினம்
......................................
பன்னீருக்கு ஜெட்லி! சசிகலாவுக்கு சாமி!
......................................
சசிகலாவிற்கு எதிராக ஓபிஎஸ் - வலுக்கும் எதிர்ப்பு குரல்.. (வீடியோ)
......................................
செம்மொழித் தமிழ் பொற்காலத் திறவுகோல் -மணவை முஸ்தபா
......................................
நிழல் நிஜமானது! மோடி-சசிகலா டீல்!
......................................
Facebook Twitter Google Plus
பதிவு செய்த நாள் : 4, ஜனவரி 2017 (15:5 IST)
மாற்றம் செய்த நாள் :5, ஜனவரி 2017 (11:8 IST)





மிழகத்தின் தலைநகரம் சென்னை என்றாலும், குட்டித் தலைநகரமாக மன்னார்குடி இருக்குமோ என்ற அளவுக்கு அங்கேயும் சைரன்கார்கள் வலம் வர ஆரம்பித்துவிட்டது. சசிகலா தம்பி திவாகரனோட மன்னார்குடி வீட்டின் முன் மிகப்பெரிய பந்தல் போடப்பட்டு புத்தாண்டு தினத்துக்கு முதல்நாளே சேர்களை அடுக்கிவிட்டார்கள். புத்தாண்டு தினமான ஞாயிற்றுக்கிழமை காலையில் இருந்தே சைரன் கார்களும் அரசு வாகனங்களும் அணிவகுக்க ஆரம்பித்துவிட்டது. அதைப் பார்த்த திவாகரன், "இனி எல்லோரும் நம்மைத் தேடி வருவாங்கனு சொன்னேனே. சொன்ன மாதிரியே வந்துட்டாங்க பார்த்தீங்களா'ன்னு, தன் குடும்பத்தினர்க்கிட்ட பெருமிதமா சொல்லியிருக்கார்.''



கடந்த 5 வருடமாக அரசின் உயர் அதிகாரிகள் அவர் பக்கமே நெருங்க பயந்தார்கள். இந்த நிலையில் "உயரதிகாரிகள் தரப்பில் திருவாரூர் கலெக்டர் நிர்மல்ராஜ் சால்வை போர்த்திட்டுப் போனார். திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட அதிகாரிகள் பலரும் வந்துள்ளனர். அமைச்சர்கள் துரைக்கண்ணு, ஓ.எ.ஸ்.மணியன், ஆர்.காமராஜ் ஆகியோர் திவாகரன் காலில் விழுந்து ஆசி வாங்கினார்கள். கட்சியின் மூத்த உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பூம்புகார் விஜயபாலன் மட்டும் காலில் விழாமல் வாழ்த்துச் சொன்னார். எல்லா இடங்களிலும் மன்னார்குடி குடும்பத்தினரின் தலையீடுகளும், அதிகார தர்பாரும் தொடங்கிவிட்டது.'' 

"அரசுத் துறைகளான பொதுப்பணி, நெடுஞ்சாலை, போக்குவரத்து, தொழில், மின்சாரம் போன்ற முக்கியத் துறைகளில், விடப்பட வேண்டிய பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான  காண்ட்ராக்ட்டுகள், ஏலம் விடப்படாமலே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுக்குக் காரணம் மேலிடங்களுக்குப் பர்சண்டேஜ் கொடுக்கும் அளவுக்கு, ஒப்பந்ததாரர்கள் பலரிடமும் புதிய ரூபாய் நோட்டுகள் இல்லை. இதுபற்றி ஏற்கனவே நக்கீரன்ல செய்தி வந்துள்ளது. அப்படிப்பட்ட காண்ட்ராக்ட்டுகளில் டி.டி.வி.தினகரன், திவாகரன், பாஸ்கரன், வெங்கடேசன், விவேக் போன்ற மன்னார்குடி வகையறாக்களைச் சேர்ந்தவர்களின் தலையீடுகள் அதிகமாக இருப்பதாக கோட்டை அதிகாரிகள், புதிய தலைமைச் செயலாளரான கிரிஜா வைத்தியநாதனிடம் புலம்பிக்கிட்டிருக்கிறார்கள். இதேபோல் இளவரசியின் மகன் விவேக் தன்னோட மாமனார் பாஸ்கரன் வசிக்கும் வியாசர்பாடியில் உள்ள கோவிலில் இரண்டு நாட்கள் யாகம் நடத்தியிருக்கார். சசிகலா சொந்தங்களில் கட்சிக்கான வெளிவட்ட வேலைகளை நடராஜன் பார்த்துக்கிறார். உள்வட்ட வேலைகளில் இதுவரை திவாகரன் முன்னணியில் இருந்தார். இப்ப டி.டி.வி. தினகரனுக்கு முக்கியத்துவம் அதிகமா இருக்கிறது.'' 



"கட்சியின் நம்பர் ஒன்னாக சசிகலா அதிகாரப்பூர்வமா தேர்வான நிலையில், நம்பர்டூவுக்கு நடந்த போட்டியில் திவாகரனை தினகரன் ஓவர்டேக் பண்ணிக்கிட்டிருக்கார். முதல்வராக ரெடியாயிட்ட சசிகலா,  ஜெ. மரணத்தால காலியா இருக்கிற ஆர்.கே.நகரைவிட, தென்மாவட்டத்தில் ஒரு தொகுதியை செலக்ட் பண்ணுவதில் கவனமாக இருக்கிறார். மதுரை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வான அமைச்சர் செல்லூர் ராஜு, திருமங்கலம் எம்.எல்.ஏ.வான அமைச்சர் உதயகுமார், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வான தங்க. தமிழ்ச்செல்வன் மூவரும் இப்பவே ராஜினாமாக் கடித்தத்தை, சசிகலாகிட்டே கொடுத்துவிட்டார்கள். எம்.ஜி.ஆரையும் ஜெ.வையும் முதல்வராக்கிய ராசியான  தொகுதியான ஆண்டிப்பட்டிதான் சசிகலாவின் முதல் சாய்ஸ்னும், அடுத்த சாய்ஸ் திருமங்கலம்னும் பேசப்படுது. தென்மாவட்ட கட்சிக்காரர்களை ஒருங்கிணைச்சி தேர்தல் வேலை பார்க்கிற பொறுப்பு டி.டி.வி.தினகரனிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெண்கள் கிட்டே சசிகலாவுக்கு கடுமையான எதிர்ப்பு இருப்பதால, முதல்வர் பதவியேற்றால் மது விலக்கு, ஸ்கூட்டின்னு பெண்கள் தொடர்பான வாக்குறுதிகளில் கவனம் செலுத்தவும் ஆலோசிக்கப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : nalami Date :1/12/2017 1:18:51 PM
மன்னார் குடி நாதாரிகள் நாசமா போகட்டும்
Name : Murugan M Country : Japan Date :1/12/2017 10:47:12 AM
wait and see the tamasha.
Name : baal Date :1/9/2017 5:54:49 PM
தமிழ்நாட்டு மக்கள் அப்படி
Name : Mani Bharathi Date :1/9/2017 1:52:10 PM
அதிமுக, திமுக இந்த இரண்டு கட்சிகளும் ஒழியாதவரை தமிழ்நாட்டிற்கு விடிவு இல்லை. ஆனால் இவ்விரு கட்சிகளுக்கும் முடிவுரை என்பதும் அசாதாரணம் ஆகும். ஏனெனில் பணம்தான் அரசியல் நடத்துவதற்கும், வாக்குகளை வாங்குவதற்கும் பிரதானம் என்றாகிவிட்ட இன்றைய சூழலில் அதிமுக, திமுக களின் சாம்ராஜ்யம் தொடரத்தான் செய்யும்.
Name : karikalan1 Country : United Kingdom Date :1/5/2017 7:46:25 PM
தமிழர்களையும் தமிழ்நாடடையும் பார்க்க பரிதாபமாயிருக்கு ....சிங்க தமிழ்நாடு ...இன்றுதான் சிறுநரியாகி போயிருக்கிறது