அண்மைச் செய்திகள்
கலாம் உடலுக்கு அண்ணன் அஞ்சலி || மருத்துவமனையில் பரவை முனியம்மா - மருத்துவச் செலவை ஏற்றார் நடிகர் விஷால் ( படம் ) || கலாம் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து வருவதை ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் : ரஜினிகாந்த் || குஜராத்தில் பெய்த கன மழைக்கு 22 பேர் பலி || மாட்டு கொட்டகையை ஆராய்ச்சி கூடமாக மாற்றிய கலாம் || பனை கதிரில் ராக்கெட் விட்ட கலாம் || கார் டிரைவரை பேராசிரியராக மாற்றிய கலாம் || அப்துல் கலாமின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி. || கலாம் மறைந்தும் வாழ்கிறார் : விஜயகாந்த் (படங்கள்) || கலாமுக்கு திண்டுக்கல் மாணவிகள் கண்ணீர் அஞ்சலி ( படங்கள் ) || தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை || அப்துல் கலாம் மறைவுக்கு பிரசிடன்ஸி கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்) || அப்துல் கலாமை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை: சல்மான் கான் ||
தமிழகம்
கலாம் உடலுக்கு அண்ணன் அஞ்சலி
......................................
மருத்துவமனையில் பரவை முனியம்மா - மருத்துவச் செலவை ஏற்றார் நடிகர் விஷால் ( படம் )
......................................
கலாம் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்து வருவதை ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன் : ரஜினிகாந்த்
......................................
மாட்டு கொட்டகையை ஆராய்ச்சி கூடமாக மாற்றிய கலாம்
......................................
பனை கதிரில் ராக்கெட் விட்ட கலாம்
......................................
கார் டிரைவரை பேராசிரியராக மாற்றிய கலாம்
......................................
அப்துல் கலாமின் உடலுக்கு கவிஞர் வைரமுத்து அஞ்சலி.
......................................
கலாம் மறைந்தும் வாழ்கிறார் : விஜயகாந்த் (படங்கள்)
......................................
கலாமுக்கு திண்டுக்கல் மாணவிகள் கண்ணீர் அஞ்சலி ( படங்கள் )
......................................
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் நாளை விடுமுறை
......................................
அப்துல் கலாம் மறைவுக்கு பிரசிடன்ஸி கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
அப்துல் கலாம் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி(படம்)
......................................
அப்துல் கலாம் பெயரில் அறிவியல் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க வேண்டும்: அழகிரி கோரிக்கை
......................................
அப்துல் கலாம் உடலுக்கு மத்திய அமைச்சர்கள் அஞ்சலி
......................................
நாளை காலை 10.30 மணிக்கு ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி: வெங்கையா நாயுடு பேட்டி
......................................
அப்துல் கலாம் உடலுக்கு வைகோ அஞ்சலி
......................................
ராமேஸ்வரம் செல்கிறார் ரஜினி?
......................................
ராமேஸ்வரத்தில் அப்துல் கலாம் உடல்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி மற்றும் ஊர்வலம் (படங்கள்)
......................................
அப்துல் கலாமுக்கு ஆத்திச்சூடியால் ஓர் அஞ்சலி மாலை
......................................
நாக்கில் அப்துல் கலாம் ஓவியம் (படங்கள்)
......................................
அப்துல் கலாம் மறைவுக்கு சட்டக்கல்லூரி மாணவர்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
அப்துல் கலாம் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி
......................................
அப்துல் கலாம் அண்ணனுக்கு நடிகர் விவேக் ஆறுதல் (படம்)
......................................
கலாம் உடல் அடக்கம் செய்யும் இடத்தில் சிறப்பு பாதுகாப்பு படையினர் ஆய்வு
......................................
வெள்ளிக்கிழமை, 6, டிசம்பர் 2013 (11:8 IST)விவசாயிகளை வறட்சியிலும் வாழவைக்கும் குதிரைவாலி

 


மறைந்துபோன தானியங்களான குதிரைவாலி, வரகு, கேழ்வரகு, சோளம், கம்பு, சாமை, தினை போன்ற சிறுதானியங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது பயிரிடப்பட்டுவருகின்றன.

புதுக்கோட்டையை அடுத்த முத்துக்காடு கிராமத்தில் அப்பாவு பாலாண்டார் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள சிறுதானியங்களில் ஒன்றான குதிரைவாலியை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். குதிரைவாலி மற்றும் பாரம்பரிய நெல் இரகங்களும் புல் வகையைச் சேர்ந்தது, அதனால் வறட்சியைத் தாங்கி குறைந்த தண்ணீரில் வளர்ந்து விடும் என்று கூறினார்.  

விவசாயி அப்பாவு பாலாண்டார் கூறுகையில், குறைந்த அளவில் கிடைக்கும் மழையிலேயே மானாவாரி நிலத்தில் சிறப்பாக 90 நாட்களில் வளரக்கூடியப் பயிர் தான் குதிரைவாலி. வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது 350 மி.மீ தண்ணீர் போதுமானது, பூச்சி நோய் தாக்குதல் இல்லாதது, ஒரு மழை பெய்தபின், 45 நாட்கள் வரை மழை இல்லாவிட்டாலும், தாக்குப் பிடிக்கும் வளரும் தன்மை கொண்டது. இதற்கு மண்ணுக்கும், இயற்கை சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்த இரசாயண உரமும், பூச்சி மருந்தும் தேவையில்லை.

ஒரு ஏக்கரில் 800 கிலோ முதல் 1000 கிலோ வரை மகசூல் கிடைக்கும். ஒரு கிலோ குதிரைவாலி தானியம் தற்போது சந்தையில் ரூ.15 முதல் ரூ.20 வரை விலைபோகிறது.  உழவு, விதை, அறுவடை என பார்த்தால் ஒரு ஏக்கர் குதிரைவாலி பயிரிடுவதற்கு மொத்தம் ரூ. 2500 செலவாகும். 90 நாட்களில் மானாவாரி நிலத்தில் நிகர லாபமாக ரூ.11000 முதல் 15000 வரை பெறலாம். ரோஸ் தொண்டு நிறுவனத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அன்னவாசல், அரிமழம், அண்டக்குளம் பகுதிகளில் உள்ள 150 விவசாயிகள் மத்தியில் குதிரைவாலி, வரகு, சாமை, தினை, கேழ்வரகு போன்ற சிறுதானிய விதைகள் கொடுக்கப்பட்டு பயிரிடப்பட்டுள்ளன.

என்னுடைய 3 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள குதிரைவாலியை அரசாங்க (அடங்கல்) அ பதிவேட்டில் ஏற்றிவிட்டனர். அதே போல் மற்ற விவசாயிகள் நிலங்களில் உள்ள சிறுதானியங்களையும் பதிவேட்டில் ஏற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிறுதானியங்களையும், பாரம்பரிய நெல் இரகங்களையும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் மத்தியில் பரவலாக்கம் செய்து வரும் ரோஸ் தொண்டு நிறுவன பொறுப்பாளர் அகிலா கூறுகையில், மகசூல் இலாபம் அதிகரிப்பதோடு மட்டுமல்ல, குதிரைவாலியில் இருந்து கிடைக்கும் அரிசியில் குறைவான கலோரிகள், அதிகமான புரதச்சத்து, நார்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் அடங்கியுள்ளது.  உடலைச் சமநிலைப்படுத்துகிறது.  சர்க்கரை அளவைக் குறைக்கிறது.  ஆண்டி ஆக்ஸிடன்ட் ஆக வேலை செய்கிறது.  கோதுமையைவிட 6 மடங்கு நார்ச்சத்து உள்ளது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது சிறப்பான உணவு. குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைத்து வயதினரும்; சாப்பிடலாம்;.  சிறுதானியங்கள் நிலங்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, மண்ணிற்கும், மனிதனுக்கும், கால்நடைகளுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பல நன்மைகளை செய்து வருகிறது. மனிதனின் உணவுத்தேவையோடு, கால்நடைகளின் உணவுத்தேவையையும் பூர்த்தி செய்ய வல்லது.

சிறுதானியங்களால் மட்டுமே பருவகால மாற்றங்களுக்கு ஏற்றாற் போல் சமாளித்து வளர முடியும்.  இப்பொழுது நிலவும் உணவுப் பற்றாக்குறை, சத்துக்குறைபாடு, புவி வெப்பமடைதல், பருவநிலைமாற்றம்; போன்றவற்றிற்கெல்லாம் இச்சிறுதானியங்களே மாற்று என்று தெரிவித்தார்.

-ரா.பகத்சிங்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :