Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
பொது அறிவு உலகம்
உலக அழகி - 2017 : மானுஷி ஷில்லார்
 ................................................................
பேராசிரியர் மா. நன்னன்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரி மறுத்திருத்தம்
 ................................................................
டெங்கு காய்ச்சல் : புதிய கண்டுபிடிப்பு
 ................................................................
மாற்றம் காணும் இந்தியப் பொருளாதாரம்
 ................................................................
01-12-17

பேராசிரியர் மா. நன்னன்

மூத்த தமிழறிஞர், முதிர்ந்த சிந்தனையாளர், அன்பு கனிந்த உள்ளமும் அறச் சீற்றமும் கொண்டவரான மா.நன்னனின் மறைவு தமிழருக்கும், தமிழ் மொழிக்கும் ஈடுசெய்ய இயலாத பேரிழப்பு. வழக்கமாகச் சொல்லுகின்ற வார்த்தையல்ல இது. உண்மை.

ஸ்ரீமுஷ்ணம் அருகில் காவனூர் எனும் சிற்றூரில் 1924 ஜூலை 30-,ல் பிறந்தவர் நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தில் புலவர் ஆகி, பின் ஆய்வுகள் பல செய்து சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகக் பணி தொடங்கி, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஆசிரியராக, பயிற்சிக் கல்லூரிப் பேராசிரியராக, கலைக் கல்லூரிகளில் பேராசிரியராக, நிறைவாக மாநிலக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எனினும், இறுதிவரை அவரது தமிழ்ப் பணி ஓயவில்லை.

    தமிழ் வளர்ச்சி இயக்ககத்தின் இயக்குந ராகவும் மூன்று ஆண்டுகள் பணியாற்றி யிருக்கிறார்.

    வாழ்நாள் முழுவதும் தமிழ்ப் பணியாற்றி யிருப்பினும் தூர்தர்ஷன் தொலைக்காட்சி யில் (இன்றைய பொதிகை) "எண்ணும் எழுத்தும்' என்ற கல்வி ஒளிபரப்பு மிக முக்கியமானது. 17 ஆண்டுகள் ஒளிபரப் பான அந்த நிகழ்ச்சி மூலம் நேயர்களுக்குத் தமிழைச் சிறப்பாகக் கற்றுக்கொடுத்தார்.

    வகுப்பில் மாணவரோடு பேசி, பாடம் நடத்துதல்போல் நடித்து எளிமையாக அந்தப் பெரும் பணியைச் செய்தார். அந்த நிகழ்ச்சி வாயிலாகப் பெரும் புகழ் பெற்றார்.

    மிகச் சிறந்த ஆசிரியராகவும், நல்ல உரைநடை எழுத வேண்டுமா?, தவறின்றித் தமிழ் எழுதுவோம், திருக்குறள் தொல்காப்பியம் உரை விளக்கங்கள், பெரியாரியல் நூல்கள் என 60-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய எழுத்தாள ராகவும், சிறந்த மேடைப் பேச்சாளராகவும் நன்னன் விளங்கினார்.

    பெரியாரின் கருத்துகளைக் கால வரிசை யிலும், பொருள் வரிசையிலும் திரட்டி, அவர் எழுதிய "பெரியார் கணினி' நூல் மிகவும் முக்கியமானது. அழுத்தமான கடவுள் மறுப்புக் கொள்கையராக, தந்தை பெரியார் வழியில் நின்றார்.

    நாட்டு விடுதலைக்கு முன் வெள்ளையனே வெளியேறு போராட்டத்திலும், தமிழிசைக்கான கிளர்ச்சிப் போராட்டங் களிலும், இந்தி எதிர்ப்புப் போராட்டங் களிலும் பங்கேற்றுள்ளார்.

    தமிழ்ச் செம்மல் விருது, தமிழக அரசின் பெரியார் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பெற்றுள்ளார்.

    மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்ப் பண்ணை, அறிவோம் அன்னை மொழி தொடர் நிகழ்ச்சிகள் வாயிலாக நல்ல தமிழை வளர்த்தார். அவையெலாம் தமிழ் வளர்ச்சிக்கு உறுதுணையாயின.

    பொதிகை, மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பாடம் கற்பித்து தனி முத்திரை பதித்தவர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :