Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
Logo
பொது அறிவு உலகம்
உலக அழகி - 2017 : மானுஷி ஷில்லார்
 ................................................................
பேராசிரியர் மா. நன்னன்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரி மறுத்திருத்தம்
 ................................................................
டெங்கு காய்ச்சல் : புதிய கண்டுபிடிப்பு
 ................................................................
மாற்றம் காணும் இந்தியப் பொருளாதாரம்
 ................................................................
01-12-17

    டெங்கு காய்ச்சல் தீவிரத்திற்கு முக்கிய காரணங்கள்: சுற்றுச்சூழல் மோசமாகி விட்டது. தெருச் சுத்தம் பேணுவதில்லை, திடக்கழிவு மேலாண்மை, கழிவுநீர் அகற்றுதல் போன்ற சுகாதார விஷயங்கள் மிகவும் மோசமாகிவருவது முதல் காரணம். நாட்டின் தட்பவெப்பநிலை மாற்றம் அடுத்த காரணம் ஆகும்.

    டெங்குவை ஏற்படுத்தும் கிருமிகள் மரபுரீதியில் முன்பைவிட பல மடங்கு வீரியம் பெற்றுள்ளது முக்கியக் காரணம்.

    முன்பெல்லாம் டெங்கு பாதிப்பின் காரணமாக, நோயாளி ஒரு வாரத்துக்குப் பிறகு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவது வழக்கம். ஆனால், இப்போதோ மூன்றாம் நாளில் பலரும் ஆபத்தான கட்டத்துக்குச் சென்று விடுகின்றனர்.

    டெங்கு கிருமிகள் மொத்தம் நான்கு வகை. சாதாரண வைரஸ் காய்ச்சல்போல் ஒரு வாரத்துக்கு வந்து செல்லும் வகையும் உண்டு. ஆபத்தான கட்டத்துக்கு இழுத்துச்செல்லும் வகையும் உண்டு.

    கொசு கடித்த ஒரு வாரத்தில் நோய் தொடங்கிவிடும். குழந்தைகள், பெரியவர்கள் என வயது வேறுபாடின்றி அனைவரையும் இந்த நோய் தாக்கக்கூடியது. பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் டெங்கு காய்ச்சல் அவர்களை அவ்வளவாக பாதிப்பதில்லை. இந்தக் காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே.

    திடீரென்று கடுமையான காய்ச்சலுடன் நோய் ஆரம்பிக்கும். தொடர்ச்சியான வாந்தி, வயிற்றுவலி, தலைவலி, உடல்வலி, மூட்டுவலி, களைப்பு, இருமல் ஆகிய அறிகுறிகள் சேர்ந்துகொள்ளும். மூட்டுவலி அதிகமாகும். எலும்புகளை முறித்துப் போட்டதுபோல் எல்லா மூட்டுகளிலும் வலி ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. வாந்தியும் வயிற்றுவலியும் ஆபத்தான அறிகுறிகள்.

அடுத்து உடலில் அரிப்பு இருப்பதோடு, சிவப்புப் புள்ளிகளும் தோன்றும். டெங்கு வைரஸ் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றில் துளை விழுந்து ரத்தத்தைக் கசியவிடும். இதன் விளைவால் ஏற்படும் சிவப்புப் புள்ளிகளே இவை.

    பெரும்பாலான குழந்தைகளுக்கு ஏழாம் நாளில் காய்ச்சல் சரியாகிவிடும். சிலருக்கு மட்டும் காய்ச்சல் குறைந்ததும் ஓர் அதிர்ச்சிநிலை உருவாகும். இவர்களுக்கு ஆபத்து அதிகம். கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப்போகும்; சுவாசிக்க சிரமப்படுவார்கள்; ரத்த அழுத்தமும் நாடித்துடிப்பும் குறைந்து, சுயநினைவை இழப்பார்கள்.    டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை (Platelets)   அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும்போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்பு மூட்டுகள் ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். உரிய சிகிச்சை கிடைக்கவில்லை எனில் உயிரிழப்பு ஏற்படுவதுண்டு.

    டெங்கு காய்ச்சலுக்கு எனத் தனி சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் குறைக் கவும், உடல்வலியைப் போக்கவும் மட்டுமே மருந்துகள் தரப்படும். சாதாரண டெங்கு உள்ளவர்கள் வீட்டிலேயே நன்றாக ஓய்வெடுக்கலாம். உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதால், அதிக அளவில் நீர்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; உப்பும் சர்க்கரையும் கலந்த கரைசல், பால், பழச்சாறு, இளநீர், கஞ்சி போன்ற திரவ உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். இந்தச் சிகிச்சையில் பெரும்பாலோருக்கு நோய் கட்டுப்பட்டு விடும்; சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் ஏற்றப்பட வேண்டும். அப்போது மட்டுமே நோயாளியை மருத்துவமனை யில் அனுமதிக்க வேண்டியது வரும்.

    இன்னும் சிலருக்கு தட்டணுக்கள் மோசமாக குறைந்துவிடும். அதை ஈடுகட்டத் தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்த வேண்டும் இதற்கு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.

    பொதுவாக, ஒரு முறை வைரஸ் தாக்குதல் ஏற்பட்டால் அதற்கு எதிரான நோய் எதிர்ப்புக் கூறை நமது உடல் தயாரித்து வைத்துக்கொள்ளும். அடுத்த முறை அந்த வைரஸ் வந்தவுடன், தயாரித்துவைத்திருந்த நோய் எதிர்ப்புக் கூறைக் கொண்டு நுழையவே விடாமல் வைரஸைக் கொன்றுவிடும். எனவேதான், பொதுவாகவே ஒருதடவை வைரஸ் நோய் வந்தால், அதே வைரஸ் நோய் மறுபடி வருவதில்லை.

    ஆனால், டெங்கு வைரஸ் சாமர்த்தியமானது. பல முகமூடிகளை அணிந்து தாக்குதல் தருவதால், நமது நோய் எதிர்ப்பு அமைப்பு திக்குமுக்காடிப்போகிறது. எளிதில் டெங்குவுக்குத் தடுப்பு மருந்து தயாரிக்க முடியாததன் காரணம் இதுதான்.

    இந்த வைரஸில் DENV-1, DENV#2, DENV-3, மற்றும் DENV-4 என்கிற நான்கு நுண்ணுயிர் வகைகள் (serotype) இருக்கின்றன. எனவே, ஒரு வகை நுண்ணுயிர் தாக்கி, நமக்கு நோய் எதிர்ப்புக் கூறு உருவானாலும் இரண்டாவது முறை வேறு நுண்ணுயிர் வகை வைரஸ் தாக்கும்போது நமது உடலால் தாக்குப்பிடிக்க முடிவதில்லை.

அதுமட்டுமல்ல, இந்த வைரஸின் ஒவ்வொரு நுண்ணுயிர் வகையிலும் பல மரபணு அமைப்பு(Genotype) கிளை வகைகள் உள்ளன. வைரஸின் மேல்புறத் தோலில் சிறு மாற்றம், உள்ளே உள்ள மரபணுவில் மாற்றம் என மாற்றங்கள் தோன்றி, ஒவ்வொரு வகையும் பல்வேறு மரபணு அமைப்பு கொண்ட பல்வேறு கிளை வகைகளாக உள்ளன.

மற்ற தொற்றுநோய்கள் போல விலங்குகளில் இந்த நோய் குறித்து ஆய்வு நடத்த முடியாத நிலையில் உள்ளதால், நோய் பரவும் விதம் மற்றும் வைரஸ் படிநிலை பரிணாம வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டுதான் ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது. இந்த அடிப்படையில்தான், புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனம், வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் உதவியுடன் 2012-இல் திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட திடீர் ரத்த இழப்பு சோகை தரும் டெங்கு காய்ச்சல் பரவலை ஆய்வுசெய்தது. நோய்ப் பரவல் விகிதங் களை ஆராய்ந்தபோது திருநெல்வேலிதான் நோய் மையமாக விளங்கியது என்றும் தெரியவந்தது.

    தமிழகம் மற்றும் கேரளத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்தத் திலிருந்து டெங்கு வைரஸை எடுத்து, பரிசோதித்துப் பார்த்தனர். இந்த ஆய்வு இரண்டு முக்கிய மாற்றங்களைக் காட்டியது. இதுவரை DENV-1  டெங்கு காய்ச்சலில் இந்தியாவில் பரவலாக இருந்தது ஆப்பிரிக்க - அமெரிக்கக் கிளைவகை. இப்போது உஊசய-1 ஆசிய வகைதான் தென் இந்தியப் பகுதிகளில் தாண்டவமாடும் வைரஸ் என்கிறது இந்த ஆய்வு. மேலும், இதுவரை இருந்த DENV-1  ஆசிய வகை அல்லாத புதிய மரபணு வகை உருவாகியுள்ளதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

    DENV-1  டெங்கு வைரஸின் ஆசியக் கிளைவகை மரபணு அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு, புதிய வகை உருவாகியுள்ளது என்றும் அதன் காரணமாகவே 2012-இல் தமிழகத்தில் ஏற்பட்ட டெங்கு காய்ச்சல் வீரியம் கொண்டு தாக்கியது எனவும் இந்த ஆய்வு குறிப்பிடுகிறது.

முதன்முறையாகப் புதிய மரபணு அமைப்பு உருவாகி புதிய கிளை வகை ஏற்பட்டுள்ளது என இந்த ஆய்வு கண்டுபிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :