Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
Logo
பொது அறிவு உலகம்
உலக அழகி - 2017 : மானுஷி ஷில்லார்
 ................................................................
பேராசிரியர் மா. நன்னன்
 ................................................................
ஜி.எஸ்.டி. வரி மறுத்திருத்தம்
 ................................................................
டெங்கு காய்ச்சல் : புதிய கண்டுபிடிப்பு
 ................................................................
மாற்றம் காணும் இந்தியப் பொருளாதாரம்
 ................................................................
01-12-17

    கறுப்புப் பணத்தை ஒழிப்பது என்ற நல்ல நோக்கத்தில் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது வரவேற்கத் தக்கது. ஆனால், மொத்தக் கணக்கில் வராத சொத்துக்களில் கறுப்புப் பணத்தின் அளவு மிகக் குறைவு. கறுப்புப் பணம் உருவாவதைத் தடுப்பதற்கு பணமதிப்பு நீக்க நடவடிக்கை எந்த வகையிலும் உதவி செய்யாது என்று ஆய்வு முடிவில் கூறியிருந்தது. தற்போது எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையும் தோல்வியில் முடிந் திருக்கிறது என்பது தெளிவாகியுள்ளது. 99% பணம் வங்கிக்கே திரும்பியிருக்கிறது. வங்கிக்குத் திரும்பிய ரூபாய் நோட்டுகளில் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது என்கிறது ரிசர்வ் வங்கி.

    பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பொருளாதாரத்தில் குறுகிய காலத்துக்கு இடையூறுகள் ஏற்படலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி முன்கூட்டியே கூறியது. ஆனால், பணமதிப்பு நீக்க நடவடிக்கை அமலானபோதுதான் அதன் தீவிரத்தை உணர முடிந்தது. சில்லறை வணிகம், உணவு விடுதிகள், ஹோட்டல்கள், சுற்றுலா ஆகிய துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அமைப்புசாராத் தொழிலாளர்கள் பாடுபடும் துறைகளில் அதிகமான பாதிப்பு. ஒரு புறம் உற்பத்தியும் வேலை வாய்ப்பும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மறுபுறம் நுகர்வுக்குப் பணம் கிடைக்காத தால், அன்றாடம் தேவைப்படும் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் தவித்தனர். கிராமப்புறங்களில் இது அதிகமாக உணரப்பட்டது.

    பணமதிப்பு நீக்கம் குறித்து (நவம்பர் 7)அகமதாபாத்தில் வர்த்தகர்கள் மத்தியில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ""பணமதிப்பு நீக்க நடவடிக்கையானது இந்தியப் பொருளாதாரம் மற்றும் ஜனநாயகத்தின் கறுப்பு தினம். இந்த உலகில் எந்த ஒரு ஜனநாயக நாடும் இத்தகைய நிர்பந்தத்தை திணித்ததில்லை. மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் எடுக்கப்பட்டுள்ள பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரிலான முயற்சிகள் அனைத்தும் சீனாவுக்கே சாதகமாக அமைந்துள்ளன. ஏனெனில், சீனாவின் ஏற்றுமதி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் சூரத், வாபி, மோர்பி போன்ற வர்த்தக மையங்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜிஎஸ்டி இப்பகுதி களை இன்னமும் மோசமான நிலைமைக்கு தள்ளியிருக்கிறது. குஜராத் போன்ற மாநிலங்களில், பணமதிப்பு நீக்கமும் ஜிஎஸ்டியும் சிறு வணிகங்களின் முதுகெலும்பை நொறுக்கியுள்ளது. உள்நாட்டில் தொழில்முனைவோர் மனங்களில் ஜிஎஸ்டி வரி தீவிரவாத மாகவே பதிந்துள்ளது. நான் ஏற்கெனவே ராஜ்யசபாவில் கூறியதை இங்கே மீண்டும் வலியுறுத்துகிறேன், பணமதிப்பு நீக்க நடவடிக்கை திட்டமிட்ட திருட்டு; சட்டபூர்வ கொள்ளை'' இவ்வாறு அவர் பேசினார்.

 ஒரு பக்கம் பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணம் என்றால், இன்னொரு பக்கம் பொதுச் சரக்கு - சேவை வரி விகித அமல் செய்யப்படும் முறை காரணமாக இருக்கிறது. கடந்த சில காலாண்டுகளாகப் பொருளாதார வளர்ச்சி வீதம் சரிந்துகொண்டே வருவது அரசின் நிர்வாகத் திறமையைப் பறை சாற்றுகிறது.

    கடந்த முப்பதாண்டுகளில் இருந்திராத அளவு, வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் குறைந்திருக்கிறது. அரசின் நிதிப் பற்றாக்குறையோ வரம்புக்குள் இருக்கிறது. இப்படி பணம் கையில் இருந்தும், பற்றாக்குறை கட்டுக்குள் இருந்தும், ஜிடிபியை உயர்த்தவோ, தனியார் முதலீட்டுக்கு ஊக்குவிப்பு தரவோ, ஏற்றுமதிகளுக்குப் புத்துயிர் ஊட்டவோ, நுகர்வை அதிகப்படுத்தவோ முடியாமலிருக்கிறது மத்திய அரசு.

    மன்மோகன் சிங் ஆட்சியில் இதே காலகட்டத்தில் நேரடி வரிகள் மூலமான வருவாய் ரூ.1,05,089 கோடியிலிருந்து ரூ. 6,38,543 கோடி டாலர்களாக உயர்ந்தது. வரலாற்றிலேயே முதல் முறையாக நேரடி வரிகள் மூலமான வருவாய், மறைமுக வரிகள் மூலமான வருவாயை விட அதிகமாக இருந்தது. (நேரடி வரிகள் பணக்காரர்களும் நிறுவனங்களும் செலுத்துவது. மறைமுக வரி வருவாய் எல்லோரும் நுகர்வின்போது செலுத்துவது.) இதற்கு நேர்மாறாக இப்போது மறைமுக வரிகள் மூலமான வருவாய்தான் அதிகமாக இருக்கிறது. மொத்த உற்பத்தி மதிப்பில் 10.5% அளவுக்கு மறைமுக வரி வருவாய் மதிப்பு உயர்ந்து விட்டது. பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்ந்துகொண்டே வருகிறது.

    ஏற்றுமதி சரிந்துவிட்டது. வங்கிகளிட மிருந்து தொழிலதிபர்களும் வியாபாரி களும் பெறும் கடன் அளவு சுருங்கி விட்டது.தனியார் முதலீடு அருகி

விட்டது. பணமதிப்பு நீக்கமும், அவசர அவசரமாகக் கொண்டுவரப்பட்ட பொது சரக்கு - சேவை வரி திட்டமும் பொருளாதார வளர்ச்சியை மேலும் வீழ்த்திவிட்டன.

    நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங் களின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது மத்தியப் புள்ளிவிவர அலுவலகம். அதன் அடிப்படையிலான ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் (ஜி.டி.பி.), ஒட்டுமொத்த மதிப்பு சேர்ப்பு (ஜி.வி.ஏ.) மதிப்பீடுகள், இந்தியாவின் பொருளா தார வளர்ச்சி வேகம் குறைகிறது என்றே சொல்கின்றன. கடந்த ஆண்டின் வளர்ச்சி வீதம் 7.6%. இது 7.1% ஆகக் குறையும். ஒட்டுமொத்த மதிப்புச் சேர்ப்பு கடந்த ஆண்டு 7.2%. இந்த ஆண்டில் 7% ஆகக் குறைகிறது. பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்ட தொய்வு இதில் சேர்க்கப்படவில்லை.

    கனிமம் - சுரங்கம் வெட்டுதல் துறையில் 1.8% உற்பத்தி குறைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இது 7.4% வளர்ச்சி கண்டது. மின்சாரம், எரிவாயு, தண்ணீர் வழங்கல், இதர பயன்பாட்டுச் சேவைகள் துறையில் 6.6%-லிருந்து 6.5% ஆகக் குறைவு. இவை பொருளாதார இயந்திரத்தின் கண்கள் போன்றவை. இவற்றின் வளர்ச்சிக் குறைவு அரசு எதிர்பார்த்ததைவிட அதிகம் என்பதே உண்மை.தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :