Add1
logo
பேருந்து கட்டண உயர்வால் தமிழகத்தில் அசாதாரணமான சூழல்: மு.க.ஸ்டாலின் || மூன்றாவது வழக்கிலும் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார் லாலு! || பேருந்து கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் இல்லம் முற்றுகை! || கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு || தவறுகளைப் புரியவைக்க தகுதியான யாருமே கோலியுடன் இல்லை! - சேவாக் கருத்து || தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது விஜயேந்திரர் தியானத்தில் இருந்தார்; காஞ்சி சங்கரமடம் விளக்கம் || கேரள அரசின் உத்தரவை மீறி தேசியக்கொடியை ஏற்ற இருக்கும் மோகன் பாகவத்! || சங்கராச்சாரியார் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும்! கி.வீரமணி கண்டனம்! || பேருந்து கட்டண உயர்வு விவகாரத்தில் தலையிட முடியாது: உயர்நீதிமன்றம் திட்டவட்டம்! || மோடிக்கு ரத்தக் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுமி! || நித்தியானந்தா, எச்.ராஜா மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்! || முதன்முறையாக பதிவு திருமணம் செய்துகொண்ட திருநங்கை! || இடைத்தேர்தலை சந்திக்க தயார்! தங்கதமிழச்செல்வன் ஆவேச பேச்சு!! ||
Logo
இனிய உதயம்
வசீகரப் பாடல் தந்த வல்லபன்!
 ................................................................
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகமே!
 ................................................................
மு.வ.வின் கடித இலக்கியம்
 ................................................................
சந்திரிகாவின் மாவீரர் நாள் சிறப்புக் கவிதை!
 ................................................................
அகராதி கவிதைகள்
 ................................................................
கருத்துச் சுதந்திரம் எங்கே?
 ................................................................
01-11-2017ன்று எங்கு பார்த்தாலும் "மெர்சல்' திரைப்படம் குறித்த பேச்சாகவே இருக்கிறது.

தீபாவளி அன்று, அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்த "மெர்சல்', பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. வெளியான அன்றே... "மெர்சல்' திரைப்படத்தில் புதிதாக என்ன இருக்கிறது?  அது பல படங்களில் வந்த காட்சிகளை உருவி  எடுக்கப்பட்ட படம்  போலிருக்கிறதே...? என்றெல்லாம் சமூக ஊடகங்களில் சற்று எதிரான விமர்சனங்களே முதலில் வெளிப்படத் தொடங்கின.

இதனால் படம் ஓடுமா? ஓடாதா என்ற விவாதங்களும் அப்போது எழுந்தன.

இந்த நேரத்தில்தான் பா.ஜ.க. தரப்பு, "மெர்சலு'க்கு எதிராகத் தனது நெருப்பைப் பற்ற வைக்க, அந்த நெருப்பால் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மக்கள் மத்தியில் சூடுபிடித்திருக்கிறது "மெர்சல்'.

மோடிக்கு எதிராகவும், அவரது அரசுக்கு எதிராகவும் அந்தப் படத்தின் வசனங்கள் இருக்கிறது என்றும், அத்தகைய வசனங்களை உடனே நீக்க வேண்டும் என்றும் பா.ஜ.க.வினர் போர்க்கொடி தூக்கினார்கள். குறிப்பாக "மெர்சலு'க்கு எதிராக முதலில் திருவாய் மலர்ந்தவர்  பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசைதான். எடுத்த எடுப்பிலேயே, "மோடி அரசுக்கு எதிரான வசனங்களை நீக்காவிட்டால் கோர்ட்டுக்குப் போவோம்' என்று மிரட்டல் விடுத்தார். அடுத்து, சர்ச்சை நாயகரான பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச். ராஜாவும், "மோடியை அவதூறு செய்யும் படம்' என்று கடுமையாக விமர்சித்தார்.  மத்திய  அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணனும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

இதனால், படத்துக்குத் தடை வாங்கிவிடுவார்களோ? என்று "மெர்சல்' படத்தரப்பினரும், விஜய்  ரசிகர்களும் பதட்டமானார்கள். இதனால்தான் -

"திரைப்படத்தில் எந்த ஒரு கருத்தையுமே  சொல்லக்கூடாதா?' என்ற கேள்வி மக்கள் மத்தியில் விறுவிறுவெனக் கிளம்பியது. இது பா.ஜ.க.வின் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அடாவடி என்கிற எண்ணம்,  இந்திய அளவில் ஒரு சூறாவளியாக எழுந்தது. இதனால், கமல், ரஜினி போன்ற சினிமாத்துறை ஜாம்பவான்கள் மட்டுமல்லாது; அனைத்துத் தரப்பினரும் "மெர்சலை'த் தாங்கிப்பிடிக்கத் தொடங்கினார்கள்.  தமிழக அரசியல் வாதிகள் தொடங்கி, அகில இந்திய அரசியல்வாதிகள் வரை, அத்தனை பேரும் "மெர்சலு'க்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் நிலைமையை, இந்த எதிர்ப்பின்மூலம் பா.ஜ.க. ஏற்படுத்தியது.

"மெர்சல்' ஸ்ள் மோடி- என்கிற அளவிற்கு  இதன்மூலம் ஒரு யுத்தத்தைத் தொடங்கி வைத்துவிட்டது பா.ஜ.க. முன்னாள் மத்திய மந்திரி ப.சி.யே "இனி படத்தயாரிப்பாளர்கள், அரசைப் பாராட்டி டாக்குமெண்டரிதான் எடுக்கவேண்டும் என்று குறும்பாக தன் விமர்சனத்தை வைத்தார்.

திரைப்பட விவகாரங்களில் அதிகம் மூக்கு நுழைக்காத  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியே, "திரு மோடி அவர்களே, சினிமா என்பது தமிழ்மொழி மற்றும் கலாச்சாரத்தின் வெளிப்பாடு. "மெர்சல்' பட விவகாரத்தில் தலையிட்டு, தமிழின் தன்மானத்தை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள்' என்று மோடிக்கு வேண்டுகோள் வைக்கிற நிலையும் ஏற்பட்டது.

இல்லையென்றால் மோடியும் தன் பங்கிற்கு "மெர்சலு'க்கு எதிராகப் பேசியிருப்பாரோ என்னவோ?

இப்படி பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும் அளவிற்கு "மெர்சலில்' அப்படி என்னதான் இருக்கிறது?

"மெர்சல்' படம் தீவிரவாதத்தைப் பேசியதா? இந்தியாவைத் துண்டாடவேண்டும் என்று துர்போதனை செய்ததா? வடநாடு தொடர்ந்து வஞ்சிப்பதால், தமிழகத் தைத் தனியே பிரித்துக்கொடு என்று போர்க்குரல் எழுப்பியதா?

எல்லாத் தரப்பையும் வஞ்சிப்ப தால், மத்திய மாநில அரசுகளைக் கவிழ்க்கவேண்டுமென்று அது வெடிகுண்டுக் கருத்துக்களை வீசியதா?

அப்படி எதுவுமே இல்லை.

"டீவியும் மிக்சியும் இலவசமாகக் கொடுக்கும் அரசால், ஏன் இலவசமாக மருத்துவம் தரமுடியாது?' என்று நம் பொதுமக்கள் எழுப்பும் நியாயமான கேள்வியைத்தான் விஜய் தனது "மெர்சல்' வசனத்தில் கேட்டார்.  இதிலென்ன தவறு? ஓட்டு அறுவடைக்காக காயலான்கடை லட்சணத்தில் இலவசப் பொருட்களை வழங்கும் அரசுகளை விமர்சிப்பதில் என்ன தவறு?

"7 பர்சன்ட் ஜி.எஸ்.டி வாங்கும் சிங்கப்பூர், இலவச  மருத்துவம் வழங்கும்போது,  28 பர்சன்ட் வரி வாங்கும் இந்தியா ஏன் மருத்துவ சேவையை இலவசமாகக் கொடுக்கக்கூடாது?' என்று பொதுமக்கள்  வீதிக்கு வீதி மத்திய அரசைப் பார்த்துக் கேட்கும் கேள்வியைத்தானே "மெர்சலில்', விஜய் வசனமாகப் பேசியிருக்கிறார். இதிலென்ன தவறு? இலவச மருத்துவம் வேண்டுமென்று இதே பா.ஜ.க.வினர் கேட்டதே இல்லையா?

 ""மெடிசனுக்கு 12 பர்சன்டாம். பல தாய்மாரோட தாலியை அறுக்குற சாராயத்துக்கு ஜி.எஸ்.டி. இல்லையாம்''-

என்று தமிழகப் பெண்கள், சாபக் குரல் எழுப்புவதைத்தானே, விஜய் அந்தப் படத்தில் எதிரொலித்திருக்கிறார் அதிலே என்ன தவறு இருக்கிறது? இதையும் தாண்டி, பெண்கள் அணி அணியாய் புறப்பட்டுப்போய் டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கித் தங்கள் கோபத்தைக் கொட்டுவதையே நாம் நம் கண்ணெதிரில் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.

இப்படி மக்களின் குரலையும், எண்ணத்தையும் வசனமாக வெளிப்படுத்துவது என்பது, பஞ்சமா பாதகமா? 

"மெர்சல்' படத்தில் இப்படி ஜி.எஸ்.டி. பற்றியும், டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் பற்றியும் பேசப்பட்ட வசனங்கள் ஒன்றும், "மெர்சல்' டீமே சிந்தித்து உருவாக்கிய வசனங்கள் அல்ல. இதுபோன்ற விமர்சன வசனங்கள், முகநூல், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. பொதுமக்களும் இளைஞர்களும் அன்றாடம் இப்படி மத்திய மாநில அரசுகளையும், மோடி, எடப்பாடி அரசுகளையும் விமர்சித்து... கோபமான வார்த்தைகளை நெருப்பாய்க் கொட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.  அதில் ஆயிரத்தில் ஒரு பகுதி சூடுகூட  "மெர்சல்' பட வசனங்களில் எதிரொலிக்கவில்லை.

தங்கள் அவஸ்தையையும், வரிச்சுமையையும் "மெர்சல்' வசனம் எதிரொலிப்பதைக் கண்டவர்கள்,  தியேட்டர்களில் அதை ரசித்து ஆரவாரம் செய்கிறார்கள். கை தட்டுகிறார்கள். இதை மக்களின் நாடித்துடிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அதிபுத்திசாலிகள், கோபத்தைக் கொட்டுகிறார்கள்.

"மெர்சலை' எதிர்த்துக் கோர்ட்டுக்குப் போவேன் என்று மிரட்டுகிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள், அந்த வசனத்தை கைதட்டி ரசிக்கும் ரசிகர் களையும் கோர்ட்டுக்கு இழுப்பார்களா?  

இந்தப் படத்தை விமர்சித்த ஹெச். ராஜா, "அந்தப் படத்தை இணையத்தில் பார்த்தேன்' என்று பகிரங்கமாகவே  உளறிக்கொட்டினார்.

இதைப் பார்த்த நடிகர் சங்கத் தலைவர் விஷால், "ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர், நான் திருட்டுத்தனமாக இணையத்தில் படத்தைச் சட்டவிரோதமாகப் பார்த்தேன் என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஹெச். ராஜா அவர்களே, மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? எனக்கு அதிர்ச்சியாக உள்ளது' என காட்டமாகக் கண்டனம் தெரிவித்தார்.

அவர் கண்டித்த  மறுநாளே  வருமான வரித்துறையின் டி.டி.எஸ். பிரிவினர், விஷாலின் சினிமா நிறுவனத்தில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும்மேல் ரெய்டு நடந்தது. தன்னை எதிர்க்கும் அரசியல் கட்சிப்பிரமுகர்களைப் படியவைக்க, ரெய்டு நடத்துவதை வழக்கமாகக் கொண்ட பா.ஜ.க. அரசு, விஷாலையும் இதே பாணியில் மிரட்டியிருக்கிறது.

அதோடு விடாத ஹெச். ராஜா, "மோடியை இதே விஜய்தான் தேடிப்போய் கோவையில்  சந்தித்தார்' என்று சொன்னார். அவரை, ஜோசஃப் விஜய் என்று விளிப்பதன்முலம் அவரை கிறிஸ்துவராகவும் காட்டி, தனது  மத துவேசத்தை வெளிப்படுத்தினார். இதுபற்றி, நம் "நக்கீரன்' தனது டுவிட்டர் பக்கத்தில்...

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளிக் கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே "மெர்சல்' என்று ஹெச். ராஜா சொல்லியிருந்ததை குறிப்பிட்டுவிட்டு, மோடியும் விஜயும் கோவையில் சந்தித்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டு, தமிழகத்திற்கு வந்து ஜோசப் விஜயை சந்தித்து, மோடி ஓட்டுக் கேட்டபோது... என்று டிவிட்டை வெளியிட்டது.

இதை ஒரு பத்திரிகையின் கருத்தாக எண்ணாத ஹெச். ராஜா, தனிப்பட்ட முறையில்... "மிஸ்டர் கோபால், கோவையில் விஜய் பிரதமரிடம் நேரம் பெற்று சந்தித்தார். பிரதமர் அவரை அழைத்து ஆதரவு கேட்கவில்லை' என்று குறிப்பிட்டுவிட்டு, "மோடி வெறுப்புக்கு எல்லை இருக்கட்டும்' என்றும் எச்சரிக்கை தொனியில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதான் பா.ஜ.க.வின் நாகரிகம் போலும்.

"புதிய தலைமுறை' தொலைக்காட்சி, ஹெச். ராஜவிடம் "மெர்சல்' விவகாரம் தொடர்பாகப் பேட்டி எடுத்தபோது அவரிடம், 2016-ல், நடிகர் விஜய், மோடியைத் தானாக நேரம்கேட்டு கோவையில் சந்தித்ததாகக் கூறுகிறீர்கள்; ஆனால், மோடி விரும்பி அழைத்ததால்தான் அவரை கோவையில் சந்தித்தேன் என்று அப்போதே நடிகர் விஜய் டிவிட்டரில் சொல்லியிருக்கிறாரே' என ஆதாரப்பூர்வமாகக் கேட்டபோது, அசடுவழிந்தார் ஹெச். ராஜா. 

"மெர்சல்' விவகாரம் குறித்து கருத்துரைத்த சிறுத்தைகள் திருமாவளவன், "ரஜினி, கமல், விஜய் போன்ற நடிகர்களை வளைத்துப் போட்டு, தமிழகத்தில் காலூன்ற முயல்கிறது பா.ஜ.க.' என்றார்.

இதைப் பொறுக்கமுடியாத தமிழிசை, "சிறுத்தைகள் இடங்களை வளைத்துப்போட்டும் கட்டைப் பஞ்சாயத்து செய்தும் வருகிறார்கள்' என அரசியலைத் தாண்டி, தனிப்பட்ட புகார்களை வைத்தார்.

தமிழிசையின் விமர்சனத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை உள்ளிட்ட பல இடங்களிலும் ஆர்ப்பாட்டப் போராட்டங்களை நடத்திவருகின்ற னர். இதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், டெல்லியில் தங்கள் ஆட்சியும், தமிழகத்தில் தங்கள் அடிமைகளின் ஆட்சியும் இருக்கும் தைரியத்தில், போராட்டம் நடத்தும் சிறுத்தைகளை, அடியாட்களை வைத்து தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் கரூர், மயிலாடுதுறை போன்ற இடங்களில் கலவரம் வெடித்திருக்கிறது. இப்படி வன்முறைக் கலாச்சாரத்தை தைரியமாக பா.ஜ.க. கையில் எடுத்திருப்பதைப் பார்த்து பொதுமக்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.

இப்படியாக  தங்களுக்கு எதிரான கருத்தை, யாரும் எங்கும் வெளிப்படுத்தக் கூடாது என்று மிரட்டலையும் தாக்குதலையும்  ஆரம்பித்திருக்கும் பா.ஜ.க., கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தையும் நெறித்துவருகிறது. இதை எப்படி, பேசாமல் நம்மால் வேடிக்கை பார்க்கமுடியும்? 

இது தனிப்பட்ட விஜய்க்காக நாம் கொடுக்கும் குரல் அல்ல. விஜய் பற்றி நமக்கும் விமர்சனங்கள்
உண்டு. இருந்தும், கருத்துச் சுதந்திரம் பறிபோகக் கூடாது என்பதற்காகத்தான் நாம் கவலையோடு குரல் கொடுக்கிறோம்.

தங்களைப் பற்றிய விமர்சனம் வருகிறபோது, அது குறித்துப் பரிசீலித்து தங்களைத் திருத்திக் கொள்வதுதான் ஜனநாயகப் பண்பு. ஆனால், விமர்சனங்களை வைப்பவர்களை மிரட்டுவதும், தாக்குவதும் பக்குவப்பட்டவர்களின் அடையாளம் ஆகாது.

 இப்படிப்பட்டவர்களைப் பார்த்துதான் திருவள்ளுவர்- அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அண்மை புறஞ்சொல்லும் புன்மையாற் காணப் படும் -என்கிறார். அதாவது,  ஒருவர் பிறரைப் பற்றிப் புறம்பேசும்  சிறுமைத்தனத்தைக் கொண்டே அவர் எப்படிப்பட்டவர் என்பது தெரிந்துவிடும் என்கிறார் வள்ளுவர்.

ஆன்மிகம் என்றும், தேசியம் என்றும் பேசிய படியே, மற்றவர்களை இழித்தும்  பழித்தும் பேசி, தாக்கியும் வருகிற இவர்களின் யோக்கியதையை மக்களே அறிவார்கள்.

ஆதங்கத்தோடு...

நக்கீரன் கோபால்தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :