Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
Logo
பொது அறிவு உலகம்
தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்!
 ................................................................
அமைதி
 ................................................................
பொருளாதார அறிவியல்
 ................................................................
மருத்துவம்
 ................................................................
இலக்கியம்
 ................................................................
வேதியியல்
 ................................................................
இயற்பியல்
 ................................................................
நோபல் பரிசு
 ................................................................
01-11-17*     பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் ""கசோ இஸிகுரா'' அவர்களுக்கு 2017-ஆம் ஆண்டு இலக்கியத்துக் கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

ஜப்பானில் பிறந்து, பிரிட்டனில் குடியேறியவர் கசோ இஸிகுரா ஆவார்.

*     ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், இலக்கியத்துக்கான நோபல் பரிசுக் குழுத் தலைவர் சாரா டேனியல் இதனை அறிவித்தார். ஸ்டாக்ஹோம் நகரில், வரும் டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், இஸிகுராவுக்கு நோபல் விருதும், 11 லட்சம் டாலர் (சுமார் ரூ. 7.1 கோடி) பரிசுத் தொகையும் வழங்கப்படும்.

*     62 வயதாகும் கசோ இஸிகுரா, ஜப்பான்நாட்டில் நாகசாகி நகரில் 1954-ஆம் ஆண்டு பிறந்தவர். ஐந்து வயதிலேயேபிரிட்டனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இவர் ஆங்கிலத்தில் ஏராளமான சிறுகதைகள் மற்றும் ஐந்து நாவல்களை  எழுதியுள்ளார்.

*     இவரது முதல் ஆங்கில நாவலான "எ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்' 1982-ஆம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து "அன் ஆர்ட்டிஸ்ட் ஆஃப் ஃபுளோட்டிங் வேர்ல்டு' என்ற நாவலையும் அவர் 1986-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

*     1986-ஆம் ஆண்டு அவர் எழுதிய "தி ரிமெயன்ஸ் ஆஃப் த டே' நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. நாவல்கள் தவிர, திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு இஸிகுரோ திரைக்கதை எழுதியுள்ளார்.

*     கசோ இஸிகுரா, தனது எழுத்துக்கள் மூலம், மனித மனங்களின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் கற்பனை உணர்வுகளுக்கு உலகத்துடன் உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வரும் எழுத்தாளர் கசோ இஸிகுரா, 2017-ஆம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெறுகிறார்.

*     இவரது நாவல்களின் கருப்பொருள்கள் அனைத்தும், சமுதாயத்தில் அனைவரிடமும் காணப்படும் நினைவுகள், நேரம் மற்றும் கற்பனை எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. அவர் எழுதிய பிரசித்தி பெற்ற "தி ரிமெய்ன்ஸ் ஆஃப் த டே' நாவலில் இவற்றை மிக நன்றாக உணர முடியும்.

*     இவரது படைப்புகளில் எந்த வகையான நிகழ்வுகளைப் பற்றிக் கூறினாலும், அந்த நிகழ்வுகள் குறித்து மிகவும் எச்சரிக்கை யான தொனியில் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களைப் பயன்படுத்தியே அவர் விவரிப்பார் என்று நோபல் தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :