Add1
logo
அர்ஜீன் சம்பத்தை சமூக நீதி அடிப்படையில் புதிய சங்கராச்சாரியாக நியமிக்க கோரிக்கை || ஸ்ரீரங்கத்தில் தி.க. சார்பில் நக்கீரன் ஆசிரியருக்கு பாராட்டு விழா || துப்பாக்கி சூடு நடத்தி ரவுடிகள் கைது || பொதுமக்களிடம் வசூல் செய்த வெளிமாநிலத்தவர்களிடம் போலீசார் விசாரனை || நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்த ’சாத்தியமாகும் கனவு பயணம்’ குழு! || நாட்டுமாடுகள் கண்காட்சி: 100க்கும் மேற்பட்ட மாடுகள், குதிரைகள், நாய்கள், ஆடுகள் பங்கேற்பு || 29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
கன்னி
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
2018 புத்தாண்டுப் பலன்கள்-மேஷம்
 ................................................................
நவம்பர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
பக்தனுடன் சென்ற துவாரகை கண்ணன்!
 ................................................................
கட்டிக்குளம் மகாசித்தர் மாயாண்டி சுவாமிகள்!
 ................................................................
வியாசர் பிறப்பின் விந்தை!
 ................................................................
சனி ஜெயந்தி!சனி அமாவாசை
 ................................................................
நவம்பர் மாத ராசிபலன்கள்
 ................................................................
யாதுமாகி நின்றாள்!
 ................................................................
மறுவாழ்வு பெற்ற மாற்றுத் திறனாளி!
 ................................................................
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
 ................................................................
வீடு தேடிவந்து வசூலிக்கும் அதிசய தெய்வங்கள்!
 ................................................................
தெய்வத்தை மகிழச்செய்யும் உற்சவங்கள்
 ................................................................
பயம் போக்கும் பைரவர்!
 ................................................................
01-11-17முடவன் முழுக்கு- 17-11-2017

பூமியில் எப்படி தாவரங்கள், புழு, பூச்சிகள், விலங்குகள் பிறக்கின்றனவோ அப்படி மனிதனும் பிறக்கிறான். இறையுணர்வு என்பது தாவரங்கள், புழு, பூச்சிகள், விலங்குகளுக்குக் கிடையாது. ஆனால் மனிதனுக்கு மட்டும் உண்டு. தென்னை, பனை மரங்களுக்குக் கிளைகள் இல்லை. ஆனால் பல மரங்களுக்குக் கிளைகள் உள்ளன. சில செடிகளில் இலை மட்டுமே இருக்கும்; மலர்கள் இருப்பதில்லை. இதற்காகக் கிளை இல்லாத மரங்களோ, மலரில்லாத செடிகளோ வருத்தப்படுவதில்லை. கடல் நிறைய நீரிருந்தாலும் அது நம் தாகத்துக்குப் பயன்படுவதில்லை. ஏரி, குளம் ஆகியவை கடலைவிடச் சிறியவைதான். ஆனால் அதிலுள்ள நீர் நமக்குத் தேவைப்படுகிறது. மனிதன் நம்மை அருந்துவதில்லையே என்று கடல் வருந்துவதில்லை. கோடையில் ஏரி, குளம் வற்றினாலும் கடல் வற்றுவதில்லை. இதற்காக ஏரியும் குளமும் கடலைப்பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. வற்றாத கடல் மழையை எதிர்நோக்கி இருப்பதில்லை.

ஆனால் ஏரி, குளங்கள் மழைக்காக ஏங்குகின்றன.

இப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொன்றை இழந்தாலும் அவை அதற்காக வருத்தப் படுவதில்லை. ஆனால் மனிதன் மட்டும் ஒன்றை இழந்து, இன்னொன்று இல்லாமல் வாழ விரும்புவதில்லை. பணம் இல்லாதவன் பணக்காரனைப் பார்த்துப் பொறாமைப்படுகிறான். நன்றாகத் தூங்குபவனைப் பார்த்தால் தூக்கம் வராதவனுக்கு அவன்மீது எரிச்சல் வருகிறது. ஒருவன் எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்தால், "அவன் நிம்மதியாக வாழ்கிறானே...

நான் இப்படி படாதபாடு படுகிறேனே... என்று வயிற்றெரிச்சல் படுகிறான்.

ஞானிகளும், மகான்களும் ஒன்றைத்தான் திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். "நீ துன்பப்பட்டாலோ, துயரமடைந்தாலோ, இருப்பதை யெல்லாம் இழந்துவிட்டாலோ அது உன் பூர்வஜென்ம கர்மா- முன்வினைப் பயன். அதை நீ அனுபவித்துதான் ஆகவேண்டும். இந்த அல்லலும் அவதியும் படாமல் இருக்க வேண்டுமென்றால் இப்பிறவியிலாவது நல்ல மனிதனாக வாழ்ந்தால் அடுத்த பிறவி இன்பமாக இருக்கும். எனவே தர்மத்தைக் கடைப்பிடி. இறைவனை நினை. அவனை சரணடை' என்பதுதான் அவர்களின் அறிவுரை.

இதற்காக இந்த கலிகாலத்தில் பகவான் நாமத்தைச் சொல்லி பாவத்தைத் தொலை- நன்மையை நாடு என்கிறார்கள். இதில் சிறந்த பகவத் நாமம் "ஹரே ராம ஹரே ராம ராமராம ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே' என்பது.

இந்து மதத்தில் மனிதன் செய்த பாவங்களைப் போக்குவதற்கென்று பல விழாக்களும், பரிகாரங்களும் சொல்லப்பட் டிருக்கின்றன. அதை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒரு கைகால் இல்லாத முடவன். யாராலும் மதிக்கப்படாதவன். பாவப்பட்ட பிறவி. தன் ஊனம் பற்றி அவன் வருத்தப்படவில்லை. அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படவில்லை. மாறாக அவன் இறைவன்மீது பக்தி செலுத்தினான். எங்கெல்லாம் கோவில் உள்ளதோ அங்கேபோய் இறைவனை வழிபட்டான். பாவம் தீர்க்கும் குளம் என்றால் அந்த குளத்து நீரில் மூழ்கி எழுந்துவிடுவான். கோவில் வாசலில் இவனைப் பார்த்து சிலர் இரக்கப்பட்டு அவனுக்குப் பிச்சை போட்டனர். ஆனால் அவன் பிச்சை எடுக்க கோவிலுக்கு வரவில்லை. தன் பாவத்தைத் தீர்த்துப் பரிகாரம் தேடி வந்திருக்கிறான் என்பதை அந்த மக்கள் அறியவில்லை. அதை இறைவன் தனக்களித்த பிச்சை என்று ஏற்றுக்கொண்டான்.அவன் பெற்ற பிச்சையில் அன்னம் இருந்தால், அதனுடன் எள்ளைக் கலந்து காக்கைக்கு இட்டபிறகே அவன் உண்பான். அப்படியொரு பழக்கத்தை அவன் நீண்ட நாட்களாகவே கடைப்பிடித்து வந்தான். தன்னைப்போலவே அந்த சனீஸ்வரனும் முடமென்பதால், அந்த காக்கையை சனீஸ்வரனாக நினைத்து அந்த எள் சாதத்தை இட்டுவந்தான். "சனீஸ்வரா! அடுத்த பிறவியிலாவது நான் எல்லா அவயவங்களுடனும் பிறந்து வாழ வேண்டும்' என்பதே அவனது வேண்டுகோள்.

எவனொருவன் சனீஸ்வரன்மீது உண்மை யான பக்தி செலுத்துகிறானோ அவனுக்கு சனி அள்ளிக்கொடுத்து விடுவான்.

ஐப்பசி அருமையான மாதம். நதிகளில் நீராடி நம் பாவத்தைப் போக்கிப் புண்ணியத் தைத் தேடிக்கொள்ள வேண்டிய மாதம். ஐப்பசி மாதத்தில் அத்தனை புண்ணிய நதிகளும் காவேரியிலே வந்து சேர்கிறது என்பது ஐதீகம். இப்படிப் பெருமை வாயந்த ஐப்பசி மாதத்தில் காவேரி நதியில் நீராடி புண்ணியத்தைத் தேடிக்கொள்ள அந்த முடவன் மயிலாடுதுறையிலுள்ள காவேரி நதியைத் தேடி வந்துகொண்டிருந்தான். நன்றாக நடப்பவனுக்கே நான்கு கல் தூரம் நடக்க நாளொன்று ஆகிவிடுகிறது. பாவம்! முடவனால் முடியுமா? எப்படியோ காவேரி நதியைத் தேடி நகர்ந்து நகர்ந்து வந்ததிலேயே ஐப்பசி மாதம் போய்விட்டது. கார்த்திகை மாதம் முதல் நாள் அன்றுதான் மயிலாடுதுறை காவேரி நதிக்கரையை வந்தடைந்தான்.

"ஐப்பசி மாதத்தில் காவேரியில் மூழ்கி யெழுந்து பாவத்தைப் போக்கிக்கொள்ள எவ்வளவோ சிரமப்பட்டு வந்தேன். என் முயற்சி வீணாகிப்போய்விட்டதே! இனி இதேபோல நான் இங்கு வந்து நீராட வேண்டுமென்றால் இன்னும் ஒருவருடம் காத்திருக்க வேண்டுமே... ஈஸ்வரா! நான் என்ன செய்ய?' என்று வேதனைப்பட்டான்.

எத்தனை ஈஸ்வரன் கோவில்கள், எத்தனை புண்ணிய குளங்கள் என்று இந்த முடவன் போயிருப்பான். ஈஸ்வரன்மீது இவன் காட்டிய உண்மையான பக்திதான் கொஞ்சமா, நஞ்சமா? உண்மையான பக்திக்கு ஈஸ்வரன் எப்போதும் கருணை காட்டுவான். முடவன் மனம் வருந்தியதைப் பார்த்து மனமிரங்கிய ஈஸ்வரன் அவன்முன் தோன்றினான். ""பக்தா! வருந்தாதே! இன்று கார்த்திகை முதல் நாளானாலும் நீ இந்தக் காவேரி நதியில் மூழ்கி எழு. இது ஐப்பசியில் குளித்ததற்கு ஒப்பாகும். உனக்குப் பாவ விமோசனம் தந்தோம்...'' என்று கூறி மறைந்தான்.

ஈஸ்வரனை நேரிலே கண்ட முடவன் செய்வதறியாது திகைத்தான். அவன் கருணையை எண்ணிக் கண்ணீர்விட்டான். ஈசனின் கட்டளையை ஏற்று காவேரி நதியில் மூழ்கினான். மூழ்கும்போது முடவனாக இருந்தவன் வெளியே வரும்போது முழு மனிதனாக வந்தான். முகத்தில் தேஜஸ். நல்ல உயரம், உடற்கட்டு. ஈஸ்வரனை நினைத்து நெடுமரம்போல் காவேரிக்கரையில் கிழக்கு நோக்கி வீழ்ந்தான்.

""பரமேஸ்வரா! மகேஸ்வரா! மகாதேவா! உன் கருணையே கருணை. எனக்குக் கிடைத்த இந்த பாக்கியம் பூமியிலுள்ள அனைவருக்கும் கிடைக்கவேண்டும். ஐப்பசி மாதத்தைத் தவறவிட்டவர்கள், கார்த்திகை முதல் நாள் காவேரியில் நீராடி பாவத்தைக் கழிக்க அருள் புரிய வேண்டும். கார்த்திகை முதல் நாளில் நீராடுபவர்கள் நோய் நொடியின்றி நல்ல ஆரோக்கியத்தோடு இருக்கவேண்டும். அதற்கு நீ அருள்புரிய வேண்டும்'' என்று வேண்டினான்.

அப்போது ஆகாயத்திலிருந்து அசரீரி வாக்கு, ""நீ கேட்ட வரத்தை அளித்தோம்'' என்றது.

எனவே ஐப்பசி மாதத்திலும், கார்த்திகை முதல் நாளிலும் காவேரி நதியில்  மூழ்கி எழுந்தால் செய்த பாவம் தொலைகிறது. நல்ல ஆரோக்கியம் அமைகிறது. அன்றைய தினம் காவேரி நதியில் நீராடி, நெற்றியில் திலகம் அல்லது விபூதி தரித்து, புத்தாடை அணிந்து, பரமேஸ்வரன்- பார்வதியை வழிபட்டு ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவேண்டும். குறிப்பாக ஊனமுற்றோருக்கு அன்னதானம், ஆடை தானம் செய்யவேண்டும்.

இப்படி தான, தர்மம் செய்தால் ஈசன் நமக்கு எல்லா நன்மைகளையும் அள்ளித்தருவான். இப்பிறவியில் நம் வாழ்வு எப்படி இருந்தாலும், அடுத்த பிறவியிலாவது அருமையான வாழ்வு அமையும்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :