Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
Logo
இனிய உதயம்
சொல்ல மறக்காத கதை -7
 ................................................................
தஞ்சை பிரகாஷ் விருதுவிழா
 ................................................................
கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் மதவாதம்!
 ................................................................
ஆற்றுப் படையும் பழந்தமிழர் வாழ்வும்
 ................................................................
தரிசனம்! -சந்திரிகா
 ................................................................
கவிக்கோ
 ................................................................
பழநிபாரதி கவிதைகள்
 ................................................................
வெட்கக்கேடு!
 ................................................................
01-10-2017நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் இந்தத் தேசத்தின் தலைவர்கள் ரத்தம் சிந்தியது. வெள்ளையரை வெளியேற்றுவதற்காக மட்டுமன்று; எதிர்காலத்தில் யாரையும் இரத்தம் சிந்தவிடக்கூடாது என்பதற்காக வும் தான். ஆனால், இன்று பாரதத்தாயின் முகத்தில் இரத்தத்துளிகள் விழாத நாளில்லை. 1992-ல் இருந்து போராளிகள், படைப்பாளிகள், பதிப்பாளர்கள் என்ற வகையில் நாற்பது பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் 27 பேர் எழுத்தாளர்கள்- பத்திரிகையாளர்கள் ஆவர். 28 பேராக இப்பொழுது பெங்களூரு வில் கௌரி லங்கேஷ் கொல்லப்பட்டிருக்கிறார்.

சங்க காலத்தில் நன்னன் என்றொரு மன்னன் வாழ்ந்தான். வீராதி வீரன்; தேடி வருபவர்களுக்கும் நாடி வருபவர்களுக்கும் வரையாது வழங்கிய வள்ளல். என்றாலும், அவன் தோட்டத்து மாம்பழம் ஒன்றை ஒரு கன்னிப்பெண் பறித்துவிட்டாள் என்பதற்காக அவளைக் கொலை செய்துவிட்டான். இன்றுவரை "பெண்கொலைபுரிந்த நன்னன்' எனப் பழிக்கப்படுகிறான். அவன் செய்த பாதகத்தால், அவனுடைய வம்சமே அழிந்துபோயிற்று. இன்று கர்நாடக மண்ணில் 55 வயது சமூகப் போராளி கௌரி லங்கேஷ் சனாதனவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறாள். இதன் விளைவு என்ன ஆகுமோ?

இராமாயணத்தில் மாற்றுத்திறனாளியாகிய கூனிமேல் மண்உருண்டை அடித்தான் இராமன்.

அதனால் அவனுக்கு மண்ணே இல்லாமல் அடித்தாள், கூனி. இதே இராமாயணத்தில் வேகவதி எனும் தவசியை இராவணன் வன்முறைக்கு உட்படுத்தி, அவள் தீக்குளித்துச் சாகும்படியாகச் செய்தான். அதனால்,

அடுத்த காலத்தில் இலங்கையே எரிமூழ்கிப் போயிற்று. இன்று கௌரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்; விளைவு என்ன ஆகுமோ?

"மதம் எனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்' என்றார்,

வள்ளலார். ஆனால் இன்று மதமாகிய பேயும் பிசாசும் முற்போக்குச் சிந்தனையாளர்களை முழுசாகக் கொன்றுகொண்டிருக்கிறது. "மதம் மக்களுக்கு ஓர் அபின்' என்றார் கார்ல்மார்க்ஸ். அந்த அபின் இன்று குடித்தவனைக் கொல்லாமல், குடிக்காதே என்று சொன்னவர்களைக் கொன்று கொண்டிருக்கிறது. நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி ஆகியோரைக் கொல்வதற்கு 7.65 எம்.எம். அளவுள்ள துப்பாக்கியையே பயன்படுத்தியுள்ளனர்.

கௌரி லங்கேஷைச் சுடுவதற்கும் அதே துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். எனவே நான்கு கொலைகளையும் ஒரே மதவெறி பிடித்த கூட்டமே நிகழ்த்தியிருக்கிறது. காவிக்கரை ஏறிய ஆட்சியில் இதுவரை எந்தக் குற்றவாளியும், கொலையாளியும் பிடிபடவில்லை என்பதுதான் விந்தை.

காலஞ்சென்ற பி. லங்கேஷ் பகுத்தறிவுவாதி, போராளி, பத்திரிகையாசிரியர் எழுத்தாளர். முற்போக்குக் கொள்கைகளைப் பரப்புவதற்கென்றே "லங்கேஷ் பத்திரிகை' எனும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். அரசாங்கத்திடமிருந்தும், முதலாளிகளிடம் இருந்தும் எந்த விளம்பரத்தையும் பெறாமல், ஒடுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை ஈடேற்றம் செய்வதற்கென்ற பத்திரிகை நடத்தினார். அவருக்கு இந்திரஜித் என்ற மகனும் கௌரி, கவிதா எனும் மகள்களும் உண்டு. லங்கேஷ் அவர்களின் மறைவிற்குப் பின் இந்திரஜித் மதவாதத்திற்குப் பின்னால் போனார்; கௌரியும் கவிதாவும் இடதுசாரிகளின் பக்கம் சென்றார்கள்.

கௌரி லங்கேஷ் ஒரு போராளி முகாமை நடத்துவதற்காகவே "கௌரி லங்கேஷ்' எனும் பெயரில் ஒரு பத்திரிகையைத் தொடங்கினார். குஜராத்தில் நடந்த கோத்ரா கொலைவெறிகளைத் தோண்டியெடுத்து, எதேச்சதிகாரச் சக்திகளைத் தோலுரித்துக் காட்டினார். கௌரியினுடைய பாட்டி திருமதி சிநேகலதா ரெட்டி, இந்திராகாந்தி அம்மையாரால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலைமையைக் கடுமையாக எதிர்த்துப் போராடி, சிறைக்கும் சென்றார். நெருக்கடி கால கொடுங்கோன்மையினால், மரணத்தையும் தழுவினார். பாட்டியினுடைய மரபணுக்கள் பேத்தியாகிய கௌரியிடம் இயற்கையாகவே அமைந்துகிடந்தன. அதனால் கொடுமைகளை எதிர்த்து நிற்பதில் கூர்வாளாக நின்றார்.

கர்நாடக மாநிலத்தில் தலித் மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் விலங்குகளிலும் கீழாக நடத்தப் பட்டபோதெல்லாம், கௌரியின் லங்கேஷ் பத்திரிகை போர்வாளாகவும் கேடயமாகவும் சுழன்றது. ஏற்கனவே பசவரும் அம்பேத்காரும் தாங்கிப் பிடித்த முரசை ஓங்கிப் பிடித்தவர், கௌரி. அதிலும் மலம் அள்ளும் சமூகத்தினரை, அப்பணியிலிருந்து மீட்டெடுப்பதற்கு நேரடியாகக் களத்தில் இறங்கினார். தம்முடைய அறப்போராட்டங்களுக்கு மேனாள் விடுதலைப் போராட்ட வீரர் எச்.எஸ். துரைசாமி அவர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டது சனாதனவாதிகளை வெகுவாக ஆத்திரம் கொள்ள வைத்தது.

சங்-பரிவாரத்தினர் குறுஞ்செய்திகள் மூலமாகவும், முகநூலின் வாயிலாகவும் பலமுறை கொலை
அச்சுறுத்தல் செய்திகளை அனுப்பியபோதும், அவற்றை எல்லாம் எதிர்த்து வீராங்கனையாக விளங்கினார். கௌரி நக்சலைட்டுகளை மாற்றுவதற்கு எடுத்த அரும்பணி, அதிகார வர்க்கத்தை வெகுவாக ஆத்திரங்கொள்ளவைத்தது. நம் நாட்டில் நக்சலைட்டுகளை அடியோடு ஒழிக்கவேண்டுமென்று ஒரு கூட்டம் முழுமூச்சோடு செயல்படுகிறது. இன்னொரு கூட்டம் அவர்களைத் திரைமறைவில் இருந்து ஆதரித்து வருகிறது. ஆனால், கௌரி நக்சலைட்டுகளிடம் நேரடியாகப் பேசி, அவர்களுடைய தீவிரவாதத்தையும் வன்முறைச் செயல்களையும் கைவிடும்படி வேண்டினார். மனம் திருந்தி வருகின்ற நக்சலைட்டுகளுக்கு அரசாங்கம் மன்னிப்பு வழங்கவேண்டும் என்றும் கோரினார். ஆனால், மதவெறியர்கள் கௌரியையே ஒரு நக்சலைட் ஆக்கிக் கொன்று அழித்துவிட்டனர்.பெண்ணுரிமைகளுக்குப் போராடுவதில் கௌரியின் பேனாமுனை, வாள்முனையைக் காட்டிலும் கூர்மையாக நின்றது. தமிழ்நாட்டில் ஒரு திருநங்கை தம்முடைய சுயவரலாற்றைத் தமிழில் எழுதினார். அதனைக் கௌரி கன்னடத்தில், "பதுக்குப் பயலு' எனும் தலைப்பில் மொழிபெயர்த்தார். பாட்டாளி வர்க்கத்தை ஊதிய உயர்வுக்காகப் போராடுவதை விடுத்து உரிமைகளுக்குப் போராடும்படி மார்க்சீயப் பார்வையில் வேண்டினார்.

8-9-2017 அன்று "யுவமார்ச்சா' எனும் பெயரில் பெங்களூருவில் ஒரு கண்டனப் பேரணி நடத்த கோட்சே குழுவினர் தீர்மானித்திருந்தனர். சிலநாட்களுக்கு முன்னர் கர்நாடகக் கடலோரப் பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சங்- பரிவாரத்தினர் கொலை செய்யப்பட்டனர். அதனைக் கண்டித்து, "மங்களூரு சலோ' எனும் பேனரில் கண்டனப் பேரணிக்கு திட்டமிட்டிருந்த னர். ஆனால், அதனை மாநில அரசு தடைவிதித்து நிறுத்திவிட்டனர். அதனால், ஆவேசம் கொண்ட பேரணியினர் "ப்ரீடம் பார்க்கில்' கூடி  வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். அன்று மாலைதான் கௌரி கொலைவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2009-ஆம் ஆண்டு கோவாவில் குண்டுகளை வெடிக்கச் செய்த அதே கும்பல்தான், கௌரியின் கொலையிலும் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் நரேந்திர தபோல்கர் ஒரு நாத்திகவாதி. மதப்போர்வையில் மடமைகளை வளர்த்த வேடதாரிகளை எல்லாம் தம் பிரச்சாரத்தால் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தவர். அவர் காலை "வாக்கிங்கில்' இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடிக்காரர்கள் ஈவுஇரக்கமின்றிக் கொன்று குவித்தனர். 21-8-2013 அன்று நடந்த கொடூரக் கொலைக்குக் காரணமானவர்களை இன்று வரையில் கண்டுபிடிக்கவில்லை.

அதே மராட்டிய மாநிலத்தில் மார்க்சீயவாதியாகத் திகழ்ந்த கோவிந்த் பன்சாரே, ஆண்ட மாவீரன் சிவாஜியின் போர்த்தப்பட்டிருந்த மதவேடங்களை எல்லாம் தம் எழுத்தால் கிழிந்து எறிந்தவர், பன்சாரே. தபோல்கரைக் கொன்ற அதே பாணியில், மோட்டார் சைக்கிளில் வந்த முகமூடிக் கொலைக்காரர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டார். 19-2-2015 அன்று நடந்த கொலைக்குக் காரணமானவர்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த சமத்துவப் போராளி எம்.எம்.கல்புர்கி. அவர் வீட்டுக்குள் நுழைகின்றபோது, முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிள் கொலைகாரர்கள் கொடூரமாகச் சுட்டுக் கொன்றனர். 30-8-2015 அன்று நடந்த கொலைக்குக் காரணமானவர்கள் இன்று வரை அகப்படவில்லை. மேற்சொன்ன மூன்றுபேரையும் கொன்ற அதே பாணியில் கௌரி தம் ராஜேஸ்வரி நகரிலுள்ள வீட்டிற்குள் நுழைகின்றபோது, 5-9-2017 அன்று மாலை சரியாக 7.45 மணிக்கு அதே போன்ற மோட்டார் சைக்கிள் முகமூடிக்காரர்கள், ஒரு புறா வைச் சுடுவது போல் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.

கொலை ஈடுசெய்யமுடியாத- ஓர் அநியாயக் கொலை என்றாலும், அதனை அடுத்து மாநில அரசு எடுத்த நடவடிக்கைகள் பாராட்டும்படியாக அமைந்துள்ளன. மாநில முதலமைச்சர் சித்தராமையா, "இதனைச் சனநாயகப் படுகொலை' எனக் கண்டித்திருக்கிறார்.

மேலும், கௌரியின் புகழுடம்ûம் இராணுவ மரியாதையோடு அடக்கம் செய்யும்படியாக ஆணையிட்டிருக்கிறார். மேலும் தாமே அவருடைய புகழுடம்புக்கு மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தியுள்ளார். கௌரியைச் சுட்டுக் கொன்ற கொலையாளிகளைப் பற்றி துப்பு தருபவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் வழங்குவதாக மாநில உள்துறை அமைச்சர் இராமலிங்க ரெட்டி அறிவித்திருக்கிறார்.

மேலும், கர்நாடகத்தில் வாழும் 25 எழுத்தாளர்கள்- பத்திரிகையாளர்கள்- போராளிகளுக்குத் தகுந்த பாதுகாப்பு வளையம் வழங்குவதற்கு மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. உலகப்புகழ் பெற்ற "கார்டியன்' பத்திரிகை இதனைக் கண்டித்து, "இந்தியா வன்முறையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கிறது' என்று ஓர் எச்சரிக்கை மணியையும் அடித்திருக்கிறது. கௌரியின் இரத்தத் துளிகள், சிலப்பதிகாரக் கண்ணகியின் கண்ணீரைக் காட்டிலும் வலிமை படைத்தவை. அறம் நின்று கொல்லும்! நீதி அன்று வெல்லும்!


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :