Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
Logo
பொது அறிவு உலகம்
இந்தியாவின் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
 ................................................................
புதிய கிராம நலத்திட்டங்கள்
 ................................................................
பொருளாதார ஆய்வறிக்கை இரண்டாம் பகுதி
 ................................................................
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வு - கோவி. லெனின்
 ................................................................
01-10-17மியான்மர்

அண்மையில் மியான்மர் நாட்டிற்கு சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, "நிர்வாகம், சட்டம் இயற்றும் அமைப்பு, தேர்தல் ஆணையம் மற்றும் பத்திரிகை கவுன்சில் போன்ற அமைப்புகளை வலுப்படுத்துவதில் நம்மிடையே உள்ள விரிவான ஒத்துழைப்பால் நாங்கள் பெருமையடைகிறோம். பாதுகாப்பு விவகாரத்தில் எங்களது நிலையும், அண்டை நாட்டைப் போன்றது தான். நமது நீண்ட எல்லை மற்றும் கடலோர எல்லைகளில் நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கு நாம் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுதல், எரிசக்தி துறையில் இணைப்பு, தொடர்பை ஊக்குவிப் பதற்கான நமது முயற்சிகள் ஆகியவை, சிறந்த எதிர்காலத்துக்கான பாதையில் செல்கிறோம் என்பதை வெளிப்படுத்துகின்றன. கலடான் திட்டத்தில் (Kaladan project)  சிட்வே துறைமுகம் (Sittwe port),, பலெட்வா உள்நாட்டு நீர்வழிப் பாதை (Paletwa Inland Waterways Terminal)  முனையம் ஆகியவற்றுக்கான பணிகளை நாம் முடித்துள்ளோம். சாலை கட்டுமானத் துக்கான பணிகள் தொடங்கியுள்ளன. மியான்மரின் மேல் பகுதியில் உள்ள மக்களின் தேவைகளை நிறைவுசெய்ய, இந்தியாவிலிருந்து அதிவேக டீசல் வாகனங்களுக்கான இருவழிப் போக்குவரத்து தொடங்கியுள்ளது. மகிழ்ச்சிக்காக மியான்மரில் உயர்தர சுகாதாரம், கல்வி, ஆய்வு வசதிகளை மேம்படுத்து வதற்காக, நமது வளர்ச்சி ஒத்துழைப்பின்கீழ் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், மியான்மர் தகவல் தொழில்நுட்ப நிறுவனம், வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான அதிநவீன மையம் ஆகியவற்றை குறிப்பிடுவது முக்கியத்துவம் வாய்ந்தது. இவை இரண்டுமே, கல்விக்கான முக்கிய மையங்களாக திகழ்கின்றன. எதிர்காலத்தில், மியான்மரின் தேவைகள் அடிப்படையிலும், மியான்மருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் மட்டுமே நமது திட்டங்கள் இருக்கும். நமது இரு நாடுகளுக்கும் இடையே இன்று கையெழுத்தான ஒப்பந்தங்கள், நமது பல்முனை இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.

இந்தியாவுக்கு வர விரும்பும், மியான்மர் குடிமக்கள் அனைவருக்கும் இலவச விசா வழங்க நாங்கள் முடிவுசெய்துள்ளோம். இந்திய சிறைகளில் தற்போது அடைக்கப்பட்டுள்ள மியான்மர் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் 40 பேரை விடுவிக்க முடிவு செய்யப்பட்டது. என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். அவர்களால், மியான்மரில் தங்களது குடும்பத்தினரை விரைவில் சந்திக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என மியான்மரில் அரசுமுறை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

*    கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

*    இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையே 2017-ஆம் ஆண்டு முதல் 2020 வரை கலாச்சார பரிமாற்றத் திட்டம்

*    மியான்மரின் யமிதின் மகளிர் காவல் பயிற்சி மையத்தை மேம்படுத்துவதற்காக ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

*    வர்த்தக கப்பல்கள் நகர்வு மற்றும் அடையாளம் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்திய கடற்படை மற்றும் மியான்மர் கடற்படை இடையேயான புரிந்துணர்வு உடன்படிக்கை

* கடலோர கண்காணிப்பு அமைப்பை வழங்குவதற்காக இந்திய குடியரசு அரசுக்கும், மியான்மர் ஒன்றிய குடியரசு அரசுக்கும் இடையே

*    மருந்துப் பொருட்கள் ஒழுங்குமுறையில் ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசு சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்புக்கும்,  மியான்மர் சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் உணவு மற்றும் மருந்துகள் அமைப்புக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

*    சுகாதாரம் மற்றும் மருத்துவத் துறையில்  ஒத்துழைப்புக்காக இந்திய குடியரசின் சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்துக்கும் மியான்மர் குடியரசு ஒன்றியத்தின் சுகாதாரம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

*    எம்ஐஐடி-யை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடித பரிமாற்றம்

*    தகவல் தொழில்நுட்பத் திறனை வலுப்படுத்துவதற்காக இந்தியா-மியான்மர் மையத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையை நீட்டிப்பதற்கு கடிதப் பரிமாற்றம்

*    தேர்தல்கள் துறையில் இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், மியான்மரின் மத்திய தேர்தல் ஆணையத்துக்கும் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

*    மியான்மர் பத்திரிகை கவுன்சிலுக்கும், இந்திய பத்திரிகை கவுன்சிலுக்கும் இடையே ஒத்துழைப்புக் காக புரிந்துணர்வு உடன்படிக்கை

நேபாளம்


*    50,000 வீடுகள் கட்டுவதற்கு இந்தியா அளிக்கும் வீட்டுவசதி நிதியை பயன்படுத்தும் வழிவகைகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

*    நேபாள கல்வித் துறையில் நில நடுக்கத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத் திட்டத்தினை இந்திய நிதியுதவியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

*    நேபாள கலாச்சார பாரம்பரியத் துறையில் நில நடுக்கத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத் திட்டத்தினை இந்திய நிதியுதவியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

*   நேபாள சுகாதாரத் துறையில் நில நடுக்கத்திற்குப் பிந்தைய மறுகட்டுமானத் திட்டத்தினை இந்திய நிதியுதவியை பயன்படுத்தி செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

*    இந்திய அரசு நிதியுதவியுடன், ஆசிய வளர்ச்சி வங்கியின் சாசெக்  (SASEC)  சாலை இணைப்பு (ட்ரான்செ 2) திட்டத்தின் கீழ் கட்டப்பட உள்ள மெச்சி பாலக் கட்டுமானத்திற்கான செலவு பகிர்வு, காலக்கெடு, பாதுகாப்பு விசயங்கள் செயலாக்கம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்

*    போதை மருந்துகள், உளவியல் பிரச்சினைகளுக்கான மருந்துகள் மற்றும் இரசாயனப் பொருட்களுக்கான தேவை குறைப்பு மற்றும் சட்ட விரோதக் கடத்தல் மற்றும் இது தொடர்பான விசயங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்

*    தர நிலை மற்றும் ஒத்த நிலை மதிப்பீடு துறையில் ஒத்துழைப்பிற்கான உடன்படிக்கை

*    இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் மற்றும் நேபாள பட்டய கணக்காளர்கள் நிறுவனங்களுக் கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பான்

   
ஜப்பான் நாட்டுடன் இந்தியா சில முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அவை,

*    இந்திய அஞ்சல் மற்றும் ஜப்பான் அஞ்சல் இடையே குளிரூட்டப்பட்ட விரைவு அஞ்சல் சேவையை செயல்படுத்துவதற்கான நிர்வாக அறிவுரைகள் வழங்குவதற்கான ஏற்பாடு

*    டீ.ஐ.பி.பி. மற்றும் எம்.இ.டி.ஐ. இடையே இந்திய-ஜப்பான் முதலீட்டு ஊக்குவிப்பிற்கான நடைமுறை வரைபட தயாரிப்பு

*    எம்.இ.டி.ஐ.  மற்றும் குஜராத் மாநிலம் இடையே இந்தியாவில் உருவாக்குவோம் திட்டத்திற்கான ஜப்பான்-இந்தியா சிறப்புத் திட்டத்தின் கீழ் குஜராத்தில் மண்டல் பெக்ராஜ்-கோராஜ்

*    இந்தியா-ஜப்பான் இடையú தடையின்றி விமானங்களை இயக்குவதற்கு அனுமதிக்கும் வகையில், இருநாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் மூலம், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள், தங்களது விமானங்களை ஜப்பானில் உள்ள சில குறிப்பிட்ட நகரங் களுக்கு அளவின்றி இயக்க முடியும். இதேபோல் ஜப்பானில் உள்ள விமான நிறுவனங்களும் இந்திய நகரங்களுக்கு தடையின்றி விமானங்களை இயக்க முடியும்.

*    2016-ஆம் ஆண்டின் தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கையின்படி, சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுடன், தில்லியில் இருந்து 5,000 கி.மீ சுற்று வட்டாரத்தில் உள்ள நாடுகளுடனும் தடையற்ற விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும்.

*    பன்முகபடிப்பு தத்துவார்த்த மற்றும் கணித அறிவியல் திட்டம் (ஐ.டி.எச்.இ.எம்.எஸ்.), ஆர்.ஐ.கே.இ.என். மற்றும் உயிரியல் அறிவியல்களுக்கான தேசிய மையங்கள் (சிமென்ஸ் என்.சி.பீ.எஸ்.) இடையே சர்வதேச கூட்டு பரிமாற்ற திட்டத்திற்கான ஒப்பந்தம்

*    ஜப்பான், உயரிய தொழிற்சாலை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய நிறுவனம் & உயிர்தொழில்நுட்பத் துறை (டீ.பீ.டி.) இடையேயான கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தம்

*    டீ.பீ.டி. மற்றும் உயரிய அறிவியல் & தொழில்நுட்பத் திற்கான தேசிய மையம் (ஏ.ஐ.எஸ்.டி.) இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

*    உடற்கல்விக்கான லட்சுமிபாய் தேசிய நிறுவனம் (எல்.என்.ஐ.பி.இ.) மற்றும் நிப்பான் விளையாட்டு விஞ்ஞான பல்கலைக்கழகம், ஜப்பான் (என்.எஸ்.எஸ்.யூ.) இடையே சர்வதேச கல்வி மற்றும் விளையாட்டு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

*    இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் நிப்பான் விளையாட்டு விஞ்ஞான பல்கலைக்கழகம், ஜப்பான் (என்.எஸ்.எஸ்.யூ.) இடையே சர்வதேச கல்வி மற்றும் விளையாட்டு பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை

*    உடற்கல்விக்கான லட்சுமிபாய் தேசிய நிறுவனம் (எல்.என்.ஐ.பி.இ.) மற்றும் ஜப்பான், பல்கலைக்கழகம் இடையேயான விருப்பக் கடிதம்

*   இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் ஜப்பான், ட்சூகூபா பல்கலைக்கழகம் இடையேயான விருப்பக் கடிதம்

*    ஆர்.ஐ.எஸ். மற்றும் ஐ.டீ.இ.-ஜெ.இ.டி.ஆர்.ஓ. இடையே ஆராய்ச்சி தொடர்பான நடவடிக்கை களுக்கான கூட்டுறவை ஊக்குவிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கைதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :