Add1
logo
இன்றைய(14.12.2017) டாப்-10 நிகழ்வுகள்! || கும்கி மண்ணி ஆற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்; நாகை விவசாயிகள் சாலைமறியல் || பேசின் பாலம் தெரு நாய்கள் காப்பகத்தின் அவலநிலை! அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு || சென்ட்ரல் முதல் பூந்தமல்லி சாலை விரைவில் சீரமைக்கப்படும் : ஐகோர்ட் நம்பிக்கை || அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி || எமதர்மராஜாவுக்கு ஒரு ஆலயம்! || கவர்னர் வருகையினால் அவசர கோலத்தில் பணிகள்; மக்களின் வரிப்பணம் வீணடிக்கும் அரசுக்கு கண்டனம் || தினகரன் அணிதான் தமிழகத்தின் எதிர்கட்சி! - புகழேந்தி பேட்டி || கடலூருக்கு வரும் ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்டப்படும்: திருமாவளவன் அறிவிப்பு || மதுசூதனுக்கு ஆதரவாக தண்டையார் பேட்டையில் இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ். பிரச்சாரம் (படங்கள்) || ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல் : ஆர்.கே.நகரில் லத்தி சார்ஜ்! || பட்டர்ஃப்ளை விற்பனை நிலையத்தில் வருமான வரித்துறையினர் சோதனை (படங்கள்) || மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினி ||
Logo
ஓம்
மீனம்
 ................................................................
கும்பம்
 ................................................................
மகரம்
 ................................................................
தனுசு
 ................................................................
விருச்சிகம்
 ................................................................
துலாம்
 ................................................................
சிம்மம்
 ................................................................
கடகம்
 ................................................................
மிதுனம்
 ................................................................
ரிஷபம்
 ................................................................
மேஷம்
 ................................................................
சனிப் பெயர்ச்சிப் பலன்கள் 2017-2020
 ................................................................
கிரகண காலத்தில் உற்சவம் நடத்தலாமா?
 ................................................................
அக்டோபர் மாத ராசிபலன்கள்
 ................................................................
நீண்ட ஆயுள் தரும் சத்தியவான்- சாவித்திரி ஆலயம்!
 ................................................................
ஆறிலும் சாவு... நூறிலும் சாவு...
 ................................................................
செந்தில் ஆண்டவனுக்கு தீபாவளி சீர்!
 ................................................................
அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்
 ................................................................
அருள் தருவான் அலைவாய்ப் பெருமான்!
 ................................................................
மனபாரம் தீர்க்கும் தாமேஷ்வர்!
 ................................................................
பார் புகழும் வாழ்வு தரும் பனையூர் பரமன்
 ................................................................
மகாயோகி சதாசிவ பிரம்மேந்திரர்!
 ................................................................
ஆலயங்களின் அறிவியல் நுட்பம்!
 ................................................................
ஸ்ரீராகவேந்திர விஜயம்!
 ................................................................
வேதாந்த நாயகன்!
 ................................................................
கங்கா புராணம்!
 ................................................................
01-10-17


தீபாவளி- 18-10-2017
டி.ஆர். பரிமளரங்கன்


தீபாவளி என்றாலே அதிகாலை நீராடலான கங்கா ஸ்நானமே நினைவு வரும். அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடும் தீபாவளி தருணத்தில் கங்கை புராணம் சற்று காண்போமா?

வசிஷ்டருக்கும் அருந்ததிக்கும் திருமணம் நடந்த ஐந்தாவது நாள், "அவப்ருத ஸ்நானம்' என்ற புனித நீராடலுக்காக தம்பதிகள் மானச மலைக்குச் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது ஆகாயத்திலிருந்து நீர்த்திவலைகள் விழுந்து அவர்களை முழுக்காட்டின. வசிஷ்டர் மேல்நோக்கிப் பார்த்தார். தங்கள்மீது விழுந்த நீர் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் கைகழுவிய நீர் என்பதையறிந்து, தம் தவத்துக்காகக் கிடைத்த பெரும்பேறு என்றெண்ணி மகிழ்ந்தார். கரங்களைக் கூப்பி வணங்கினார்.

வசிஷ்டர், அருந்ததி தலைமீது விழுந்தது போக, சிதறுண்ட அந்தப் புனித நீர் பாய்ந்தோடி ஏழு நதிகளாயின. அவற்றுள் ஒன்று கங்கை என்பது புராணக்கூற்று. மற்ற நதிகள் நர்மதை, சரஸ்வதி, யமுனை, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி ஆகியவையாகும். இதில் கங்கை சொர்க்கத்தில் ஓடிக்கொண்டிருந்தது.

இன்னொரு செய்தி...

பார்வதிதேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடினாள். அப்போது அவளது கைகளின் வழியாகத்தோன்றிய  நீர்தான் கங்கை எனவும், அது வெள்ளமாக வழிந்தோட, தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி, சிவபெருமான் தனது சடையில் தரித்துக்கொண்டார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.

வைகுண்டத்தில் கங்கைஸ்ரீமன் நாராயணரின் நாபியில் பிரம்மதேவன் தோன்றினார். அவர் அண்டசராசரங்களையும், சகல உலகங்களையும், பஞ்சபூதங்களையும், எல்லா ஜீவராசிகளையும் சிருஷ்டித்தார். அதன்பின்னர், தன்னைப் படைத்த ஸ்ரீநாராயணருக்குப் பாதபூஜை செய்ய பவித்திரமான கலசம் ஒன்றைப் படைத்து, அதில் தன் தவசக்தியால் உருவான புனித நீரை நிரப்பினார்.

அதனை பகவான் நாராயணன் பாதக் கமலங்களில் சேர்த்தார். அந்த பவித்ர நீர்த்தாரை கங்காதேவியாகி விஷ்ணுவின் பத்தினியானாள். அவள், விஷ்ணு சேவையிலேயே தன்னை அர்ப்பணித்துக்கொண்டாள் என்பது ஒரு வரலாறு.

இன்னொரு தகவல்...

காக்கும் கடவுளான மகா விஷ்ணு, வைகுண்டத்தில் யோகநித்திரையில் ஆழ்ந்திருந்தார். அப்போது சிவபெருமான் இனிய இசையைத் தோற்றுவித்தார். நாராயணன் அதில் லயித்து தன்னை மறந்த சமயத்தில் அவருள்ளிருந்த மென்மை மெதுவாய் நீர் உருவம் பெற்றது. நாராயணனின் நாபிக்கமலத்தில் வீற்றிருந்த பிரம்மதேவன் அந்த நீரைத் தன் கமண்டலத்தில் அடைத்து கங்கை என்று பெயரிட்டார். பரமேஸ்வரனின் நாதத்தால் நாராயணசக்தியே கங்கையாக மாறி, பிரம்மனால் பாதுகாக்கப்பட்டு உருவானதால், படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று ஆற்றல்களையும் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது கங்கை.

அடுத்து...

மகாபலி என்ற அசுரன் தன் தவவலிமையை மேன்மேலும் பலப்படுத்திக்கொள்ள யாகம் ஒன்றை மேற்கொண்டான். யாகம் முடிந்ததும் அங்கு வந்தவர்களுக்கு தானம் வழங்கிக்கொண்டிருந்தான். அவனது யாகம் வெற்றி பெற்றால், தேவலோக இந்திர பதவிக்கு அச்சுறுத்தலாக விளங்குவான் என்பதை தேவர்கள் அறிந்தார்கள். உடனே அவர்கள் மகாவிஷ்ணுவை வேண்டி, யாகம் பூர்த்தியடையாமல் தடுக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். தேவர்களுக்கு அருள்புரிய மகாவிஷ்ணு, மகாபலியின் யாகசாலைக்கு வாமன அவதாரத்தில் குள்ள வடிவில் சென்றார். மகாபலியிடம் மூன்றடி நிலம் தானமாகக் கேட்டார். அவர் காலடியால் அளந்து எடுத்துக்கொள்ளுமாறு கூறினான் மகாபலி. உடனே வாமனரான மகாவிஷ்ணு திரிவிக்ரம அவதாரமெடுத்து பூமியை வலதுகாலால் ஓரடியாக அளந்தார்.

ஆகாயவிரிவை இடதுகாலால் இரண்டாவது அடியாக அளந்தார். அப்போது கால் நகம்பட்டு, சுவர்க்கத்திலிருந்து நீருற்று தோன்றி விஷ்ணுவின் பாதங்களைக் கழுவியது. அதுவே கங்கையானது.

மகாவிஷ்ணுவான திரிவிக்கிரமன் விண்ணை அளந்தபோது, பிரம்மதேவன் தமது கமண்டல நீரால் அவரது திருப்பாதத்தைக் கழுவிப் பூஜிக்க, அந்த நீர் ஆகாய கங்கையாகப் பரிணமித்தது என்றும் புராணம் கூறுகிறது.

பகீரதன் என்பவன் தன் முன்னோர்கள் புனிதம் பெறுவதற்காக, தேவலோகத்தில் ஓடிக்கொண்டிருந்த கங்கையை பூலோகத்திற்கு கொண்டுவர கடும் தவமிருந்தான். அதன்பயனாக கங்கை பெரும் வேகத்தோடு பூமி நோக்கி இறங்க, அதை பூமி தாங்காது என்பதால், பகீரதன் சிவபெருமானை வேண்டினான். ஆவேசத்துடன் வந்த கங்கையை சிவபெருமான் தன் முடியிலேற்று அங்கேயே தங்கி இருக்கும்படி பணித்தார். பிறகு ஏழு துளிகளை மட்டும் பூமியில் விழும்படிச் செய்தார். அவை ஹலாதினி, பாவனி, நளினி என மூன்று பிரிவுகளாகக் கிழக்கிலும், சுசக்ஷீ , சீதா, சிந்து என மூன்று பிரிவுகளாக மேற்கிலும் ஓடத் தொடங்கின. ஏழாவதான "அலகநந்தை' பகீரதனைத் தொடர்ந்தாள். பகீரதன் வழிகாட்ட அவன் பின்சென்ற கங்கையானவள், வழியில் ஜன்னு மகரிஷியின் யாகசாலையை மூழ்கடிக்கவே, அவர், கங்கை நீரை மும்முறை ஆசமனம் செய்யவே அந்நதி மறைந்தது.

இதனையறிந்த பகீரதன் முனிவரை வேண்ட, அவர் தன் காது வழியாக கங்கை நீரை விடுவித்தார். அதன்பிறகு பகீரதன் வழிகாட்ட, அவனது முன்னோர்களின் சாம்பல் (அஸ்தி) இருந்த பகுதியில் (பாதாளத்தில்) நுழைந்து அவர்களைப் புனிதப்படுத்தியது என்று கூறும் புராணம், அதற்குப்பின் இமயமலைக்குச் சென்று, அங்கிருந்து புறப்பட்டு சமவெளி நோக்கிப் பாய்ந்தது என்றும் கூறுகிறது. கங்கை நதி,

சொர்க்கத்திலிருந்து பூமிக்கு அழைத்து வரப்பட்டது என்று புராணங்கள் கூறும் அதேவேளையில், இமயவேந்தன் குமரியான கங்கை புண்ணிய நதியுரு

வானவள்; வெண்ணிறமுடை
யவள்; வலதுகையில் கருநெய்
தலும் இடதுகையில் பூர்ணகும்

பமும் உடையவள்; முதலையை வாகனமாகக் கொண்டவள் என்றும் புராணம் வர்ணிக்கிறது.

மும்மூர்த்திகளின் அருளால் பிறவியெடுத்த கங்கை வானுலகம், பூலோகம், பாதாளம் எனும் மூவுலகிலும் பாய்ந்து தேவர் கடன், பித்ரு கடன், மாந்தர் கடன் எனும் முக்கடன்களையும் தீர்க்கும் சக்திகொண்டு திகழ்வதால், இந்நதி "திரிபத்ராகங்கா' என்று போற்றப்படுகிறது. மேலும், சுவர்க்கத்தில் மந்தாகினி, பூமியில் கங்கை, பாதாளத்தில் "போகவதி' என்றும் பெயர் பெறுகிறது.

வானுலகத்திலிருந்து வெகுவேகமாக பூமி நோக்கி வந்த கங்கையின் உக்கிரகத்தை சிவபெருமான் மந்தப்படுத்தியதால் "மந்தா கினிகங்கா' என்று பெயர் பெற்றாள். இதேபோல் ஜன்னு மகரிஷி (ஜஹ்ணு) காது வழியால் கங்கை நீரை வெளியிட்டதால் ஜானவி (ஜாஹ்னவி) என்ற பெயரையும் கங்கை பெற்றாள். மேலும், தேவிஸ்ரீமதி, உலோகமாதா, சுபர்த்துனி, மேருசம்பவை, திரிலோசனை, சடோற்பூதை, சத்ததாரா, சுபாவாகை என கங்கைக்குப் பல பெயர்கள் உள்ளன.

அறிவியல் கூற்றின்படி, இமயத்தில் கோமுக பனிச்சிகரத்தில் சுமார் 22,000 அடி உயரத்தில் உற்பத்தியாகிறது கங்கை. உற்பத்தியாகும் இடத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தூரத்தில் கங்கைக்கு ஒரு கோவில் அமைந்துள்ளது. இதற்கு கங்கோத்ரி என்று பெயர். இங்கிருந்து 250 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து ஹரித்துவாரை அடையும் கங்கை, அங்கிருந்து சுமார் 785 கிலோமீட்டர் பாய்ந்து அலகாபாத் நகரை அடைகிறது. அங்கே யமுனையுடன் கலக்கிறது. மேலும், அந்தர்யாமியாக இருக்கும் சரஸ்வதியும் அங்கே கலக்க, திரிவேணியாகிறது. அங்கிருந்து சுமார் 2,500 கிலோமீட்டர் தூரம் பயணித்து, வங்காளத்தில் நுழைந்ததும் பத்மாநதி என்ற பெயருடன் ஷிவாலயா என்ற நகரம் வரையில் பாய்கிறது.

அதன்பிறகு மீண்டும் பாகீரதியாக வங்கக்கடலில் கங்கை கலக்கிறது என்று வரலாறு கூறுகிறது.

கங்கை நதி மிகவும் போற்றப்படும் தலம் வாரணாசி என்னும் காசி திருத்தலம் என்றால் மிகையல்ல. இத்தலம் சிவபெருமானின் சூலத்தால் உருவாக்கப்பட்டது. இங்கு அன்னபூரணியாக பார்வதிதேவி எழுந்தருளி, யாரும் பசியால் வாடாமலிருக்க ஆசியருள்கிறாள்.

காசி என்றால் ஒளி தரும் தலம்; பாவங்களைப் போக்கி புண்ணியம் அருளும் தலம் என்பதால், ஒருமுறையாவது காசியில் உத்தரவாகினியாக- அதாவது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஓடும் கங்கையில் நீராடவேண்டும் என்பது இந்துக்களின் ஆவல். அந்த ஆவல் நிறைவேறாமல் இருப்பவர்களுக்காகவே, கங்கையானவள் ஐப்பசி மாத சதுர்த்தசியன்று விடியற்காலை வேளையில், அனைத்து நீர்நிலைகளிலும் எழுந்தருள்கிறாள் என்று சாஸ்திரம் கூறுகிறது. அத்திருநாளை நாம் தீபாவளி என்று கொண்டாடுகிறோம். நரகாசுரன் என்ற தீயசக்தி அழிந்த நாளான தீபாவளித் திருநாளில், தீபவிளக்குகளை வரிசையாக ஏற்றி வழிபட்டு, அதற்குக் காரணமான கிருஷ்ண பகவானை வழிபட்டுப் பேறுகள் பெறுவோம்.

குறிப்பு: இந்த வருடம் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கங்கை நதி ஓடும் திருத்தலங்களில் கங்கைக்கு "மகோற்சவம்' நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஸ்ரீலங்காவில் கங்கை

கங்கை நதி, பாரதத்தில் மட்டுமல்ல; இலங்கைத் தீவிலும் ஓடுகிறது.

அங்கு ஓடும் முக்கியமான பெரிய நதியின் பெயர் மாவலி கங்கை.

இது இலங்கையின் நடுவிலுள்ள மலைப்பகுதியிலிருந்து உற்பத்தி யாகிறது.

சிவபெருமான் தன் ஜடாமுடியிலிருந்து கங்கையின் ஏழுதுளிகளை விடுவித்தபோது, அந்த துளிகளின் சாரலில் உருவானதுதான் இந்த மாவலி கங்கை என்று புராணம் கூறுகிறது. இந்த மாவலி கங்கை அனுராதபுரம் அருகிலுள்ள அருவை என்னும் ஊர் அருகில் ஓடுகிறது. மேலும் மாணிக்க கங்கை என்னும் ஆறு கதிர்காமத்தில் ஓடுகிறது.

மேற்கண்ட நதிகளில் ஐப்பசி அமாவாசையில் நீராடினால் புனிதம் சேரும் என்பதால், அன்று மாணிக்க கங்கை மற்றும் மாவலி கங்கைக் கரையோரங்கள் விழாக்கோலம் காணும்.


 பாதாள கங்கை

தேவலோக கங்கை பூலோகத்தில் மட்டுமல்ல; பாதாளலோகத்திலும் பிரவேசித்தாள் என்கிறது புராணம்.

அந்த பாதாள உலகம் எங்கே இருக்கிறது?

இந்தியப் பூமியைத் தோண்டிக்கொண்டே போனால், இறுதியில் கீழே அமெரிக்காவைக் காணலாம் என்பார்கள். அப்படி இந்தியாவிலிருந்து நேர்கோடாக அடியில் உள்ள அமெரிக்காவைச் சேர்ந்ததுதான் "கலிஃபோர்னியா' என்னும் மாகாணம். இங்கே உள்ள ஒரு தீவின் பெயர் "ஆஷ் ஐலெண்ட்'- அதாவது "சாம்பல்தீவு'.

பகீரதனின் முன்னோர்களான சகரர்கள் ஒரு முனிவரின் சாபத்தால் சாம்பலாகிப்போனார்களே, அந்தப் பாதாள லோகம்தான் இப்போதைய கலிஃபோர்னியா சாம்பல் தீவு. இந்தச் சாம்பலை (அஸ்தி) கரைத்த கங்கை நீர்தான் இப்போது சாம்பல் தீவை (ஆஷ் ஐலெண்ட்) சூழ்ந்துள்ள நீர்ப்பகுதியாம். ஆனால், இத்தீவில் எரிமலைகளும் உண்டு. அவை கக்கும் தீப்பிழம்புகளால் உருவானதுதான் சாம்பல் படர்ந்த பகுதி. அதுவே சாம்பல் தீவு என்று அழைக்கப்படுகிறது என்பது புவியியல் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

ஆனால், பாதாள உலகிலிருந்த கபிலமுனிவரின் அக்னி ஆற்றல்தான் எரிமலையாக மாறியிருக்கிறது என்பது புராண ஆராய்ச்சியாளர்களின் கருத்து. மேலும், இந்திரன் திருடிக் கொண்டுவந்து கட்டிவைத்திருந்ததாகச் சொல்லப்படும் குதிரை கட்டப்பட்ட இடமும் கலிஃபோர்னியாவில் உள்ளது. அந்த இடம் "ஹார்ஸ் ஐலெண்ட்' (குதிரைத்தீவு) என்று அழைக்கப்படுகிறது. எனவே கலிஃபோர்னியாவே பாதாள உலகத்தின் ஒரு பகுதி எனப்படுகிறது. இந்தப் பகுதியில் நீர் நிலை என்றுமே வற்றுவதில்லையாம். காரணம் கங்கை என்றும் வற்றாது என்கிறது புராணம்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment *(500) :